கிறிஸ்து இல்லாமல் கிறிஸ்மஸ் இல்லை. நத்தார் தினத்திற்காய் பிறந்தவர் அல்ல.
அவர் உலகத்தின் பாடுகள் எத்தனை எத்தனையோ?
அத்தனையும் மீட்க பாடுபட்டவரே கிறிஸ்து!
கி - கிறுக்கப்பட்ட உன் பெயரை சீர்படுத்தினார்.
றி - றிமாண்டில் இருந்த உன்னை விடுதலையாக்கினார்
ஸ் - ஸ்தலம் இல்லாத உனக்கு ஸ்தானம் தந்தார்.
து - துதிக்க வைத்தார் உன்னை தகுதியாக்கினார்.
அவர் தாம் உனக்காக பிறந்த கிறிஸ்து இரக்கமுள்ள;யேகோவா, உன் சுமைகளை உன்னை விட்டு அகற்றினார். இவர்தான் இ-யே-சு.
கிறிஸ்துவோ உலகில் பிறந்தார் வாழ்ந்தார் உயிர்த்தார் மரணம் அவரை ஆட்கொள்ள முடியவில்லை.இயேசு வெறும் மனிதனாக மாத்திரம் இருந்திருந்தால்,அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருப்பார். அவருடைய சரீரம் கல்லறையிலே இருந்து அழுகி அழிந்து போயிருக்கும். எமக்கு நித்தியஜீவனை அளிக்கும்படி தம்மை ஜீவனோடு எழும்பினார். அவர் ஜீவனை கொடுத்து எமககு ஜீவன் அளித்தர். (அப் 2:24) அநேகருக்ககு ஜீவன்அளிப்பவரான கிறிஸ்து எல்லா நாமங்களுக்கும் மேலான நாமமானார். இதனால் வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரத்தையும் பெற்றவர்(மத் 28:18 ) எமக்கு அந்த அதிகாரங்களை கொடுதிதுள்ளார். பெரிய பெரிய மகான்கள், சர்வாதிகாரிகள் ஜசுவரியவான்கள் உலக புகழை தேடியம், மரித்து தம் நாமத்தை பிரஸ்தாபப்படுத்தி ஜீவனை இழந்து போனார்கள்.
"கிறிஸ்மஸ் எமக்கு பெற்றோல் மக்ஸ் அழியாத எரிபொருள் ஆன பரிசுத்த ஆவியின் வெளிச்சத்தை எம் ஜீவியத்தில் கொண்டுவரும் மக்ஸ்" ஆகும்.
கிறிஸ்துவின் பிறப்பு ஒரு மனிதனின் பழைய கால இறப்பு
கிறிஸ்துவின் இறப்பு ஒரு மனிதனின் ஆவியின் பிறப்பு
''கிறிஸ்மஸ்" இன்று உங்களுக்குள் பிறக்கட்டும்.
ஆமென்!!
Pastor. Jenny Sinnadurai

No comments:
Post a Comment