Wednesday, December 16, 2009

தேவ வல்லமை

 

 

   

 

தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி,  அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும்நீங்கள் அறியும்படிக்குஅவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். -  (எபேசியர் 1:19).

 

ஒரு ஆஸ்பத்திரியில் இன்டென்சிவ் கேர் வார்டில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் காலை 11 மணிக்கு ஒரு படுக்கையில் இருந்த நோயாளிகள் மரித்து கொண்டே இருந்தனர். அவர்களுக்கு எந்த விதமான நோயாயிருந்தாலும் அந்த படுக்கையில் வருகிற ஒவ்வொருவரும் மரித்தனர். இது ஒரு மாதத்திற்கு மேல் நடந்து கொண்டே இருந்தது. யாருக்கும் புரியவில்லை,  ஏன் அந்த நேரத்தில் அப்படி நடக்கிறது என்று.

    

ஆகவே உலக அளவில் சிறந்த ஆய்வாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அடுத்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர்களும்எல்லா டாக்டர்களும் நர்சுகளும் அந்த வார்டிற்கு முன்பு கூடியிருந்தனர். எப்படியாவது இன்று கண்டுபிடித்து விட வேண்டும் என உறுதியுடன் எல்லாரும் அமைதியாக காத்திருந்தனர். சிலர் சிலுவைகளையும்வேத புத்தகத்தையும் ஒருவேளை பிசாசின் தந்திரமாய் இருந்தால் அதை விரட்ட வேண்டும் என்று நினைத்து தயாராக காத்திருந்தனர்.

 

சரியாக 11 மணியானதுஎல்லாரும் என்ன நடக்குமோ என்று காத்திருந்த போதுஅந்த வார்டை சுத்தம் செய்கிற கிளீனர் வந்து அந்த படுக்கையில் இருந்த நோயாளி சுவாசிக்கிற மெஷினின் பிளக்கை பிடுங்கி விட்டுதன் மெஷினின் பிளக்கை சொருகி சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.

 

இந்த கதை ஒருவேளை உண்மையில்லாமல் இருக்கலாம்,  ஆனால்இது வெளிப்படுத்தும் ஒரு கருத்து சக்தி இல்லாவிட்டால்அதன் முடிவு மரணமே!

 

ஒருமுறை உயிர்த்தெழுதல் இல்லை என்ற சாதிக்கும் சதுசேயர்கள் இயேசுகிறிஸ்துவிடம் வந்து ஒரு பெண் ஏழு பேரை மணந்து அந்த ஏழு பேரும் மரித்ததாகவும் உயிர்த்தெழுதலில் அவள் யாருடைய மனைவியாய் இருப்பாள் என்று அவரிடம் உயிர்த்தெழுதல் இல்லை என அர்த்தத்தில் அவரிடம் கேட்டனர். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும்தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்..  (மத்தேயு 22:29,30) என்று கூறினார். நம்மில் அநேகர் அவருடைய வல்லமையை உணராதவர்களாக தப்பான எண்ணங் கொண்டவர்களாகவே இருக்கிறோம். தேவனுடைய வல்லமையைபெலனை குறித்துபுதிய ஏற்பாட்டில் அநேக இடங்களில் பார்க்கிறோம்.  கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது (ரோமர் 1:16). கிறிஸ்துவின் சுவிசேஷம் தேவ பெலன் என பார்க்கிறோம். சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது (1 கொரிந்தியர் 1: 18) சிலுவையின் உபதேசம் நமக்கு தேவ பெலனாயிருப்பதை காண்கிறோம். தேவன் கர்த்தரை எழுப்பினாரேநம்மையும் தமது வல்லமையினாலே எழுப்புவார் (1 கொரிந்தியர் 6:14) உயிர்த்தெழுதலின் வல்லமையை நமக்கு தேவ பெலனாயிருப்பதை காண்கிறோம்.

 

மட்டுமல்லபரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும்யூதேயா முழுவதிலும்சமாரியாவிலும்பூமியின் கடைசிபரியந்தமும்எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்று இயேசுகிறிஸ்து கூறினார் (அப்போஸ்தலர் நடபடிகள் 1:8). இங்கு வசனத்தை பாருங்கள்பரிசுத்த உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைவீர்கள் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நாட்களில் பரிசுத்த ஆவியானவர் வரும்போதுகீழே விழுவதும் மற்றும் அநேக காரியங்களும் நடக்கிறது. ஜாக்கிரதையாய் இருப்போம்!

 

தேவ பெலன் வரும்போது நாம் கர்த்தருக்கு சாட்சிகளாய் இருப்போம். பரிசுத்த ஆவியானவர் நம்மை எல்லா சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவார். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில்லாமல் ஊழியம் செய்வதும் வீணானதே. ஏனெனில் கிரியை செய்கிறவர் அவரே.

 

இன்று யாராவது ஆவிக்குரிய வாழ்வில் மரித்தவர்களாயிருந்தால் அது அவர்கள் தேவ பெலனை பெற்று கொள்ளாததே காரணம்,  உடனே நாம் எந்த வல்லமையில் இருக்கிறோம் என்று பார்த்து,  எல்லா வல்லமையையும் தருகிற சர்வ வல்லமையுள்ள தேவனின் மேல் சார்ந்துஅவருடைய வல்லமையை பெற்று கொள்ளுவோம். அவர் தருகிற வல்லமை நம்மை அவருக்கு நேராய்இந்த உலகத்தில் பாவமில்லாமல் வாழ வேண்டிய கிருபைகளை நமக்கு பெற்று தரும்.  அவருக்கு சாட்சியாய் வாழ கர்த்தர் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

 

   இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்

   எனக்கென்ன ஆனந்தம்

   எந்தன் இதயமே உம்மை பாடும்

   எந்தன் நினைவுகள் உமதாகும்

 

ஜெபம்: எங்கள் பெலனாகிய கர்த்தாவே உம்மில் அன்பு கூறுவோம். எங்களை பெலத்தினால் நிறைக்கிறவரே உம்மை துதிக்கிறோம். பெலனில்லாதவன் ஆவிக்குரிய வாழ்வில் மரிப்பானேஉம்முடைய பெலனை பெற்றுக்கொள்ள கிருபை செய்யும். மற்றும் எங்களை பெலப்படுத்துகிற தேவ ஆவியானவரை பெற்று உமக்கென்று சாட்சியாக வாழ கிருபை செய்வீராக. நீரே எங்கள் வாழ்வின் பெலனாய் இருப்பதற்காக உம்மை துதிக்கிறோம். தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும்நாங்கள் அறியும்படிக்குநீர் எங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்று உம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறோம்.  எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

   அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

  

கர்த்தரின் பணியில்

அனுதின மன்னா குழு

Send all your Query / Reply to :

anudhinamanna@gmail.com 

No comments:

free web counter