Thursday, December 10, 2009

கடவுள் யார்? வேற்றுகிரக வாசிகள் இருப்பது உண்மையா?

கடவுள் யார்? வேற்றுகிரக வாசிகள் இருப்பது உண்மையா?


அன்பானவர்களே அருகில் உள்ள படத்தைப்பாருங்கள், (Clik image For view Larger ) பூமியின் அளவும் அதில் இருக்கும் நம்முடைய அளவும் நம் மூளையின் அளவும் எவ்வளவு சிறியவை என்று நமக்குத் தெளிவாகத் தெரியும். இதை எதர்க்காக சொல்லுகிறேன் என்றால் கடவுளின் அளவை நம்மோடு ஒப்பிட்டு அவரது பிரமாண்டத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.



கடவுள் யார்?
சரி விசயத்திற்கு உருவோம், இன்றைய அறிவியல் யுகம் வின்வெளி ஆய்வின் உச்சத்தில் இருக்கிறது, ஒரு சாமான்யனுக்குக் கூட வான் அறிவு அதிகமாக இருக்கிறது அதாவது நாம் மன்னில் இருந்து பார்க்கும் நீல வானம் ஒரு முடிவல்ல அதற்குமேல் கருமையான ஒரு வானம் இருக்கிறது அங்கே சூரியக்குடும்பத்தில் பூமியும், அந்த சூரியக்குடும்பம் ஆயிரக்கணக்கான சூரியக்குடும்பங்களும் கோடிக்கண‌க்கான சூரியன்களையும்(நட்சதிரங்கள்), உள்ளடக்கிய பால்வெளி மண்டலமும் உள்ளது என்றும், இது போல ஆயிரக்கணக்கான பால்வெளி மண்டலங்கள் வின்வெளியில் இருக்கின்றன என்பதும், இவைகள் வட திசையில் உள்ள மிகப்பெரிய மற்றும் மிகப் பிரகாசமான ஒரு பால்வெளி மண்டலத்தை மற்ற பால்வெளி மண்டலங்கள் சுற்றி வருகின்றன என்பதும் சாமான்யரும் அறிந்ததே.



அதாவது நாம் பார்க்கும் நீலவானம் (பறவைகள் விமானம் பறக்கும்) வானம் முதல் வானம், கோள்களும் சூரியன்களும் அடங்கிய பால்வெளி மண்டலங்கள் அடங்கிய வின்வெளி வானம் இரண்டாம் வானம், ஆயிரக்கணக்கான பால்வெளி மண்டலங்கள் ஒன்றாகச் சுற்றி வரும் வடதிசை பிரகாசமான பால்வெளி மூன்றாம் வானம், இதை வேதம் மிக மிக அழகாகச் சொல்கிறது(சங்கீதம் 48;2, 2கொரி 12;2,3, )





இதில் 1திமோத்தி 6;16ல் சொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ சேர‌க்கூடாத‌ ஒளியில் வாச‌ம்பன்னுகிறவரும் ஒருவரும் காணக்கூடாதவருமான‌ ஒரு ச‌க்திதான் இந்த‌ ச‌க‌ல‌த்தையும் உண்டாக்கிய‌து (யோபு38;4 ம‌ற்றும் 7) அதோடு கூட‌ நிற்காம‌ல் அவைக‌ளை பெய‌ர் சொல்லி அழைத்தார், அவைக‌ள் அவ‌ருடைய‌ வார்த்தைக்குக் கீழ்ப‌டிகின்ற‌ன‌, என்றும் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து, அவ‌ர் வார்த்த‌யாக‌ இருக்கிறார் வார்த்தையாக‌வே செய‌ல்ப‌டுகிறார் என்று யோவான் 1;1ல் சொல்லப்படுகின்றது, இவ்வளவு பெரிய வார்த்தைகளால் வருனிக்க முடியாதவர்தான் கடவுள் இவருக்குப் பெயர் இல்லை, இந்த சக்திதான் நமக்குள்ளும் (வார்த்தையாய்)வாசமாய் இருக்கிறார்( நீதிமொழிகள் 18;21), இப்படி நம்முடைய மொழிகளாலும், அறிவினாலும் விவரிக்க முடியாதவர் தான் கடவுள் அவரை பைபிள் பிதா (அப்பா, தகப்பன்) என்று அழைக்கிறது.

வேற்றுகிரக வாசிகள் இருப்பது உண்மையா?

சரி அடுத்ததாக நாம் இன்று நம்முடைய அறிவியல் யுகம் முழுமூச்சாகத் தேடிக்கொண்டிருக்கும் ஒரு காரியத்தைக் குறித்து பைபிளில் ஆராய்வோம், ஆம் அது வேற்று கிரகவாசிகள் தான், அனேகமுறை நாம் வேற்று கிரகத்தவர் பற்றிப் படிக்கிறோம், ஆர்வமுடன் பேசிக்கொள்கிறோம், அவர்கள் பூமிக்கு வருவது பற்றியும், அவர்கள் நம்மை விட அறிவியல் வளர்ர்சியில் வளர்ந்தவர்கள் என்றும் பூமிக்கு அடிக்கடி வருவதாகவும் நாம் கேள்விப்படுகிறோம், ஒரு வேளை அவர்கள் பூமியில் வந்து குடியேற முயலலாம் அதனால் அவர்களோடு போர் மூளலாம் என்றெல்லாம் ஒரு பயத்தையும், பீதியையும், சிலர் உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் கட்டுக்கதை என்பார்கள், சிலர் ஆதாரங்களைக் காட்டுவார்கள், இப்படி சர்ச்சைகள் நிலவி வருவதற்குக் காரணம் அறிவியல் முறையில் நிரூபிக்கப்படவில்லை(ஒருவேளை மறைக்கப்பட்டிருக்கலாம்) என்பதால் தான். ஆனால் பைபிள் யோபு 38ம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள் இதற்கான விடை கிடைக்கும், எப்படி பூமி உருவாக்கப்படுவதற்கு முன்னதாகவே, மற்ற நட்சத்திரங்களும் அதில் வாழும் தேவ புத்திரர்களையும் உண்டாக்கியதாகவும், பூமி உருவாக்கப்படும் போது அதில் வாழும் அவர்கள் பாடி மகிழ்ச்சியடைந்து கம்பீரித்தார்கள் என்று மிக மிகத் தெளிவாகச் சொல்லப்படிருக்கிறது, கடவுள் அவர்களை விட நம்மை (மனிதர்களை) சிறிவர்களாகினார் என்று எபிரேயர் ஆகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 




இவர்களில் பலவகைகளையும் வேதம் தெளிவாக விவரிக்கிறது, அதே போல பறக்கும் தட்டில் வந்த சில வேற்றுகிரக வாசிகள் மனிதர்களைப் பிடித்து அவர்களோடு உடலுறவு கொண்டார்கள் என்றும் சில தகவல்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், இதற்கும் வேதத்தில் ஆதாரம் உள்ளது, இது பற்றி நாம் அறிந்து கொள்ளும் முன்னதாக நாம் பிசாசு யார் அந்த நாசகாரன் எங்கிருக்கிறான்? என்பது பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம், இவைகளைப்பற்றியும், பூமியில் தொல்பொருள் கண்டுபிடிப்புகள் பற்றியும், பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் சில முரன்பட்ட தகவல்கள் பற்றியும், அடுத்துவரும் கட்டுரைகளில் விரிவாகப் பார்ப்போம். காத்திருங்கள்.........................


No comments:

free web counter