"தொழுகை" என்பது, ஒரு நாணயத்தைப் போன்றது. நாணயத்தின் ஒரு புறமோ,அதன் பெறுமதியைக் குறிக்கிறது..அதை நாம் அறிந்திருக்கிறோம். நாணயத்தின் மறு பக்கமோ, மிகவும் முக்கியமான ஒருவருடைய சின்னம்,அல்லது ஒருவரின் தலை அடையாளமாய் இருக்கும்.தொழுகையும்,ஒரு விதத்தில் அப்படித்தான்.நாணயத்தை நாம் கையில் எடுக்கும் போது அதிகமாய் அதன் சின்னத்தையல்ல,அதன் பெறுமதியையே நாம் கவனிக்கிறோம். இதே போலவே நாம் எல்லேரும், சபையில் எப்படியாக கர்த்தரைத் தொழுது கொள்ள வேண்டும் என அறிந்துள்ளோர்! ஆயினும் நாணயத்தின் மறு பக்கத்தைக் குறித்து,அக்கறை இல்லாமல் அசதியாய் இருந்து விடுகிறோம். உலகத்தின் பல பாகங்களிலும் தேவனுடைய மக்கள், பரிசுத்த ஆவியானவரின் அநுகிரகத்தைப் பெற்று, தேவனுக்குள் புதுப்பிக்கப்பட்டும், பெலப்படுத்தப்பட்டும், வருகின்றனர்.{அப்போ3:19-21} இந்நாட்களில் சபையானாது கர்த்தருடைய .இளைப்பாறுதலில் பிரவேசிக்கும் படிக்கு, பரிசுத்தவான்களும், மனம் திரும்ப வேண்டும்.என கர்த்தர் அழைக்கிறார். சபையின் சரித்திரத்திலேயே, நாமும் வாழும் இந்நாட்களோ, மிகவும் பரபரப்பாய் இருக்கிறது. குணப்பட்ட சபையில் கர்த்தர், தம் எழுப்புதலை இறக்கி தொழுகையை, தமக்காய் இந் நாட்களில் தம் சபைகளில் மீட்டு வருகிறார். அநேகர் தொழுகையை எப்படி விளங்கிக்கொள்கிறார்கள் எனில் மூன்றோ, நான்கு பாடர்களைப் பாடி,ஒரு பாட்டின் கடைசி வரிகளை திரும்பத், திரும்பப் பாடி, கைகளை உயர்த்தி, கண்களை மூடி சிறிது நேரம் செலவிடின்,அதுவே தொழுகை என!உண்மை தான்,ஒரு வகையில் தொழுகையின் ஒரு சிறிய பாகமாகவே ஆராதனையின்போது செய்யும் தொழுகையாக இருக்கிறது.
1 .கீழ்ப்படிவின் தொழுகை
அத் தொழுகை தேவனுக்கு மிகவும் பிரியமானதொன்று.இப்பேற்பட்ட தொழுகை, பரலோகத்திற்கு நற்கந்த வாசனையை எழுப்புகிறதாக இருக்கிறது.பரலோகத்திலிருந்தும் பூமிக்கு," அவரை அறியும் அறிவு "என்கிற சுகந்த வர்க்க வாசனையைக் கொண்டு வந்து கீழ்ப்படிவோரை, வெற்றி சிறக்கப்பண்ணுகிறது. {11 கொரி 2:14 } ஆபிரகாமின் வாழ்க்கை,இப்பேற்பட்ட தொழுகைக்கு,ஆரம்ப பிதாவாய் இருந்தது.{ஆதி 22:5 } ஆபிரகாம் தன்னுடைய வேலைக்காரரை நோக்கி,"நீங்கள் இங்கே காத்திருங்கள் நானும்,பிள்ளையதண்டானும் அவ்விடம் மட்டும்போய்,தொழுது கொண்டு உங்களிடத்திற்கு திரும்பி வருவோம் என்றான் " என காண்கிறோம். இங்கு நாம் இரண்டு காரியங்களை கவனிக்கலாம்.
1 முதலாவது, ஆபிரகாம் தேவன் சொன்னபடி கீழ்ப்படிந்து, ஈசாக்கோடு கூட, பலியிடும் ஆயுதங்களுடன் மோரியா மலையை நோக்கி புறப்படுகிறான்.
2 இரண்டாவது, தனக்குண்டானது எல்லாம் தனக்கிருந்த ஒரே ஒரு மகன் ஈசாக்குத் தான்,என ஆபிரகாம் அறிந்தும்,தேவனுக்கு பலியிட ஆயத்தமானான். அவ்வேளையில்,தேவன் குறுக்கிடவில்லையாயின் ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிட்டிருப்பான்.இது தான் உண்மையான தொழுகையாகும்.
ஆகவே இது தான் நாணயத்தின் மறு பக்கம்! தொழுகையின் உண்மையான நிலை!தேவனை தொழ வரும்போது, எமக்குண்டான எல்லாமே, எம்மை சிருஷ்டித்தவருக்கு உரியது, என்ற உணர்வோடு வருவோமாயின், கீழ்ப்படிவின் சரணாகதி நிலைக்கு நாம் வருவதை, எந்த சக்தியால் தடுக்க முடியும்? ஆபிரகாம் ஈசாக்கைத் தன் சொந்த குமாரன் என்றும் பாராமல், தொழுகைக்கு என ஒப்புக்கொடுத்ததால் அல்லவா, கிறிஸ்துவிற்குள் பிறந்த அனைவருக்கும் அவன் தகப்பனானான்! ஆபிரகாமிடம் இருந்து நாம் கற்கும் காரியம் என்ன? ஒரு தனிப்பட்டவரின் கீழ்ப்படிவினால், "பூரண ஒப்புக்கொடுத்தலின்" தொழுகையின் மாதிரியைத்தான். ஆபிரகாம் தேவனைக் கனப்படுத்தினான். தேவன் ஆபிரகாமை கனப்படுத்தினார். தொழுகையானது பரபரப்பானது.
ஆனால் கீழ்ப்படிவோ கிரயம் கொடுக்க வேண்டியதொன்றாக உள்ளது. ஆகவே பூரண கீழ்ப்டிவுள்ள தொழுகையே,பரபரப்பை உண்டு பண்ணக் கூடியது. உண்மையான தொழுகையோ, தேவனை மையமாக கொண்டதும், தேவனை நோக்கியதுமாக இருக்கிறது. "கிரயம்" என்னும் பொழுது நாம் கிரயத்திற்கு கொள்ளப்பட்டோம். ஆகவே நாம் இனி கிரயம் கொடுக்க வேண்டியதில்லை.
ஆயினும் கீழ்ப்படிவு என்னும் பொழுது எமக்குண்டான யாவையும், தேவனுக்காய் கொடுக்கூடிய, அந்த விதமான சரணா கதியான நிலைதான். சிலருக்குக் :" கிரயமாக" இருக்கும். அதாவது தொழுகையின் இரகசியத்தை அறிந்த ஒருவர், கர்த்ரை பிரியப்படுத்த அறிந்தவர். இவர் எப்பேற்பட்ட சூழ்நிலையிலும், எதையம் விட்டு, தொழுகைக்கு முதலிடம் கொடுப்பார்.
2 ஜீவபலி
பவுல் அப்போஸ்தலன், தன் வாழ்க்கையின் முக்கிய பகுதியாகவே ,கர்த்தரை தொழுவதில் வாஞ்சை உள்ளவராக இருந்தார்.எந்தவொரு போராட்டமான சூழ்நிலையோ, நிர்ப்பந்தமான நிலையோ, அவமானங்களோ, கர்த்தரை தொழவோ, அவருடைய நாமத்தை துதிக்கவோ, பவுலிற்கு தடையாக இருக்கவில்லை. பவுல் சபைகளிற்கு எழுதிய நிருபங்களை வாசிக்கும் போது அக் கடிதங்களில், திடீரென கர்த்தரை தொழுது கொள்ளுவதையும், தேவனைக் குறித்து வர்ணிப்பதையும் காண்கிறோம். {ரோமர் 11 : 33-36} தேவனைப் பூரணராயும், அவர் இருக்கிறபடியே அவரை பவுல் அடையாளம் கண்டதாலும், எப்பொழுதும் வாயில் துதியும்,அவர் ஆவியிலும், தன் சரீரத்திலும், தேவனை தொழுது கொண்டே இருந்தார் {ரோ12:1} பவுல் சொல்லும் காரியம், புத்தியுள்ள ஆராதனைக்கு சரீரமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கப்படவேண்டும். என. பவுலின் சொல்லும், வேண்டுகோளும் என்னவாய் இருக்கிறது எனின், நாம் இப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேசந் தரியாதவர்களாய், மனம் புதிதாகி மறுரூபமாக வேண்டும் என்பதையை!
அப்பேற்பட்ட நிலைக்கு நாம் வந்தாலே தவிர,ஆவியில் நாம் தேவனைத் தொழுது கொள்வது என்பது கூடாத காரியம்.நாம் எதைத்தான் தேவனுக்குக் கொடுக்கப்போகிறோம். ? சிந்தித்துப்பாருங்கள்! பாதாளத்திலிருந்து எம்மை மீட்ட அந்த அன்பருக்கு உங்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பதை விட, எதைத்தான் கொடுக்கப் போகிறீர்கள்? "ஜீவபலியாக" எம்மைக் கொடுத்து தொழுது கொள்வது என்பதன் உண்மையை, நாம் சரியாக அறிந்து உணர்வடைந்துள்ளோமா? எங்களுடைய சபை ஆராதனையில், நாம் தொழுகையில் மிகவும் கெச்சிதமாய், வழி நடத்தலாம். வழி நடத்தப்படலாம். ஆயினும் எமது வாழ்க்கை முறை கர்த்தரை தொழுது கொள்ளுகிறதா? சபையில் துதி, தொழுகையை செய்வோர் மாத்திரமல்ல, எல்லா தேவ பிள்ளைகளையுமே, கர்த்தர் தொழுகைக்குரிய ஜனங்களாய் அழைத்துள்ளார்.
ஆகவே எங்களுடைய முறை தேவனைத் தொழுது கொள்கிறதா? உண்மையான தொழுகை தேவனை மகிமைப்படுத்தும். தேவனுடைய நாமத்தை பிரஸ்தாபப்படுக்கங்கள் ஆகவே தேவனை தொழுது கொள்ளும் நோக்கம் முதலாவது, சரியாக இருக்க வேண்டும்.வேறொரு எந்தக் காரணத்திற்காயும் தேவனை தொழுது கொள்ளக் கூடாது. இயேசு சொன்னார் " பரலோகத்தலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப் படுத்தும்படி ,உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது" என .{மத் 5 : 16 } பவுல் சொல்லுகிறார் { 1 கொரி 10 : 31} ஆகையால் நீங்கள் புசித்தாலும் , குடித்தாலும் எதைச் செய்தாலும் தேவனுடைய மகிமைக்கு என்றே செய்யுங்கள். தொழுகையானது, சபையோடு நின்று விடும் ஒரு காரியமல்ல, அது உங்களுடைய வேலை இடங்களிற்கும், சமையல் கூடங்களிற்கும், உங்கள் படுக்கை அறைகளிற்கும், உங்கள் நண்பர்களிடத்திலும், உங்கள் குடும்பத்திற்கும், எடுத்துச் செல்லப்பட வேண்டியது. அப்பொழுது கர்த்தரை அறிந்து கொள்ளும் படியாக கர்த்தர் எங்களிற் கூடாகக் கிரிகை செய்வார்.
* மனைவிமார் புருசரிற்குக் கீழ்ப்படிதலும், "தொழுகையே"
* கணவன்மார் தம் மனைவிமாரின் மேல், சபையில் கிறிஸ்து அன்பு கூருவது போல அன்பு கூருவதில் கீழ்ப்படிவதும்"தொழுகையே"
* பிள்ளைகள் கர்த்தருக்குள் பெற்றேருக்குக் கீழ்ப்படிவதும், "தொழுகையே "
* தகப்பன்மார் தம் பிள்ளைகளை சிட்சித்து, அப்பிள்ளைகள் செல்ல வேண்டிய வழியில் பயிற்றுவிப்பதும், தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிதலே, அதுவும் "தொழுகையே"
* ஊழியர்கள் தம் எஜமானிற்குக் கீழ்ப்படிவதும், கிறிஸ்துவின் முன்மாதிரி, இதுவும் "தொழுகையே"
* எஜமான்கள் தம் ஊழியர்களை, மதித்து இரக்கம் காட்டி அன்பு கூருவதும், "தொழுகையே"
* கொலோ 3:18-24 ,எபே 5:22 , 6 : 9 }
ஆபிரகாமைப் போல எம்முடைய வாழ்க்கையும், பூரண கீழ்ப்படிவு உடையதாக இருக்கட்டும்.அப்பொழுது எமது பரலோக பிதாவும், எம்மில் பிரியப்படுவார். கர்த்தரை அறியாதோர், கிறிஸ்துவை எம்மில் காண்பார்கள் ஆகவே நாணயத்தின் ஒரு புறத்தை சபையும், மறு புறத்தையோ உலகமும் காண்கிறது. ஆகவே சபையில் மாத்திரமல்ல,விசுவாசிகளின் வட்டத்திற்கு வெளியேயும் , நாம் முன்மாதிரியாய் இருக்கும் பொழுது, அது தேவனுக்கு உகந்த தொழுகையாக இருக்கும்!
No comments:
Post a Comment