| |||
http://www.cfcindia.com/tamil/article.php?type=artikel&name=the_real_truth |
Monday, December 21, 2009
இதுவே மெய்யான சத்தியம்
Saturday, December 19, 2009
உங்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் வீடியோ டேப் - சகரியா பூணன்
ஒரு வீடியோ டேப்பில் பதிவுசெய்த நிகழ்ச்சிகளை ஒரு திரையில் இயக்கினால், நடந்த நிகழ்ச்சிகளை அப்படியே மீண்டும் துல்லியமாகப் பிரதிபலித்துக் காண்பித்துவிடும்! நாம் அனைவரும் இறைவனுக்கு முன்பாக நம்முடைய கணக்குகளைக் கொடுக்க வேண்டிய 'ஒருநாள்' வர இருக்கின்றது என வேதாகமம் கூறுகிறது! நாம் செய்த; பேசிய; சிந்தித்த ஒவ்வொன்றையும் இறைவன் எப்படி பதிவுசெய்து வைக்கமுடியும்? என்று நாம் ஆச்சரியப்படக்கூடும்! ஆம், இந்தப் பதிவை ஒவ்வொரு மனிதனுக்குள்ளிருக்கும் வீடியோ டேப் போன்றஞாபகசக்தியிலேயே இறைவன் வைத்திருக்கிறார்! ஒருவன் இறக்கும்போது, அவன் தன்னுடைய சரீரத்தை மண்ணுக்கு விட்டுச்சென்றாலும், ஞாபகசக்தியை உள்ளடக்கிய ஆத்துமாவானது மரித்த ஆவிகள் இருக்கும் இடத்திற்கேப் போகிறது. கடைசியில், இந்த உலக நியாயத்தீர்ப்பின் நாள் வரும்போது, அவனுடைய ஆத்துமா முன்பு பூமியில் சரீரமாக இருந்த அந்த 'மண்ணோடு' இணைக்கப்படும். அப்போது அவன் தன் இயல்பான சரீரத்துடன் எழுப்பப்பட்டு இறைவனுக்கு முன்பாக தன் வாழ்க்கையின் முழு கணக்கையும் ஒப்புவிக்கும்படி நிற்பான். அந்நாளில் ஒவ்வொரு மனிதனுக்கும் நியாயத்தீர்ப்பின் முறை வரும். இறைவன் அப்போது என்ன செய்வார்? ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ஞாபகசக்தியின் வீடியோ டேப்பினைஅவனவன் பகிரங்கமாய் காணும்படி ஒரு திரையில் இயக்குவார்! அந்த மிகத்துல்லியமான 'காட்சி' குறித்து ஒருவராலும் மறு கேள்வி கேட்கவே முடியாது. ஏனெனில், அவைகள் அனைத்தும் அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த உண்மை நிகழ்ச்சிகள்தான்!! ஆம்! மனிதர்களின் மேற்பூச்சான ஒழுக்கம், தெய்வபக்தி போன்ற போர்வைகள் அன்று களைந்து எறியப்பட்டு, உண்மை உள்மனிதன் வெளிப்படுத்தப்படுவான். அந்நாளில் மதம் ஒருவரையும் காப்பாற்றவே முடியாது. ஏனெனில், அவர்கள் எந்த மதப் பழக்க வழக்கங்களை அனுசரித்தவர்களாயினும், "எல்லோரும்" பாவம் செய்தவர்கள் என்று தெளிவாய் புலப்பட்டுவிடும்! ஒருவர் செய்த நற்கிரியைகளோ, அவர்கள் கோவில்களுக்கு கொடுத்த காணிக்கைப் பணமோ அன்று அவர்களை இரட்சிக்க முடியாது. நம் பாவச்செயல்கள் இறைவனின் பார்வையிலிருந்து நிரந்தரமாய்த் துடைத்து அழிக்கப்படஒரே ஒரு வழிதான் உண்டு. நம்முடைய நற்கிரியைகள் நாம் செய்த தீயசெயல்களைத் துடைத்து அழிக்க முடியாது....... ஒருக்காலும் முடியாது ! நாம் செய்த வங்களுக்காக, இறைவனின் சட்டத்தில் ஒரே ஒரு தண்டனை வரையறுக்கப்பட்டுள்ளது என்று வேதாகமம் கூறுகிறது. அது மரணம்! நம்முடைய பாவத்திற்காக இந்த நித்திய மரணம் அடையவே நாம் பாத்திரர்களாய் இருக்கின்றோம். இந்த நித்திய மரணமாகிய தண்டனையிலிருந்து நம்மைக் காக்கவே, தேவகுமாரனாகியஇயேசு கிறிஸ்து பரலோகத்திலிருந்து இம்மண்ணுலகுக்கு மனிதனாக வந்து, 2000 வருடங்களுக்கு முன் எருசலேம் பட்டணத்திற்கு வெளியே, மனுக்குலத்தின் பாவத்திற்குரிய தெய்வீக தண்டனையை தன்மேல் ஏற்றுக்கொண்டு ஒரு சிலுவையில் மரித்தார். கல்லறையில் வைத்து அடக்கம் பண்ணப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர் மரித்தோரிலிருந்து உயிருடன் எழுந்து வந்து, உண்மையாகவே தான் தேவகுமாரன்என்றும் நிரூபித்தார். இவ்வாறு மனிதனின் மிகப்பெரிய எதிரியான மரணத்தை இயேசு ஜெயித்தார். அவர் உயிர்த்தெழுந்து பரத்திற்கு செல்லும்போது, தான் மீண்டும் பூமிக்கு குறிப்பிட்ட வேளையில் எல்லா மனிதரையும் நியாயம் தீர்க்கும்படி வருவேன் என்றும் வாக்களித்தார், இவ்வாறு வாக்களித்தது, 2000 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆம்!அவர் இந்தப் பூமிக்கு வரும் காலம் மிகவும் சமீபித்துவிட்டது!! இவ்வுலக வரலாற்றில் மனிதவர்க்கத்தின் "பாவங்களுக்கென்று மரித்த" ஒரே ஓருவர் இயேசு கிறிஸ்துவே! மேலும் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிர்த்தெழுந்தவரும் அவர் ஒருவரே! இந்த இரண்டு காரியங்களிலும் அவர் ஒப்பற்றவராய் இருக்கிறார். இன்று நாம் 'உண்மையாகவே' நம்முடைய பாவங்களை விட்டு விலகி, மனம் திரும்ப வேண்டும். மேலும், அவர் நம்முடைய பாவங்களுக்காக மரித்து, உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசித்து, இயேசு கிறிஸ்து மூலமாய் இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். இவ்வாறு செய்தால் மாத்திரமே, நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு "அவை" நமக்குள் இருக்கும் வீடியோ டேப்பிலிருந்து அழிக்கப்பட முடியும். இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தம் நம் பாவங்களைக் கழுவி நீக்கிவிடும் என வேதாகமம் கூறுகிறது. பிறகு இறைவனின் பிள்ளையாக ஓர் தூய்மையான வாழ்க்கையை நீங்கள் வாழலாம்! மனித வர்க்கத்திற்கென்று இந்த ஒரே வழியான இரட்சிப்பைத்தான் இறைவன் நியமித்திருக்கிறார். அதை இப்பொழுதே பெற்றுக் கொள்ளுங்கள். இச்சத்தியங்களை அறிந்திருப்பதினாலும் பாவிகளுக்கென்று வைக்கப்பட்டிருக்கும் 'அக்கினிக்கடலில்' தள்ளப்படும் நித்திய நியாயத்தீர்ப்பின் அபாயத்தை உணர்ந்திருப்பதினாலும் ஒவ்வொருவரையும் அன்பாய் எச்சரிக்க வேண்டியது எங்களது கடமையாய் இருக்கிறது. இனியும் காலந்தாழ்த்தாமல், 'இன்றே' நீங்கள் சரியான தீர்மானத்தை எடுங்கள். அதன்மூலம் இறைவன் உங்களுக்கு நித்திய சுகவாழ்வைக் கொடுத்து ஆசீர்வதிப்பாராக! இறைவன் அருளிய இச்செய்தியை, உண்மையான அன்பினால் நிறைந்து உங்களுக்கு வழங்குகின்றோம். தயவாய் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்!! தமிழ் வடிவம் : டி. ரத்தினகுமார் http://www.cfcindia.com/tamil/article.php?type=artikel&name=video_tape |
Wednesday, December 16, 2009
வியப்பூட்டும் உண்மைகள் - சகரியா பூணன்
|
1. அண்டசராசரத்தைப்பற்றிய வியப்பூட்டும் உண்மைகள் நிலவை மனிதன் எட்டிவிட்டபடியால், ஏதோ விண்வெளி அனைத்தையும் ஜெயித்துவிட்டதாக எண்ணிக் கொள்கிறான்! ஆனால், பரந்து கிடக்கும் விசாலமான விண்வெளி இன்னமும் நம் கற்பனைக்கு எட்டாததாகவே இருக்கிறது!! உதாரணமாய் சில நட்சத்திரங்களின் தூரத்தை சற்று எண்ணிப்பாருங்கள். நம் கண்களுக்குப் புலப்படும் சமீபமான நட்சத்திரம் "ஆல்ஃபா செண்டவுரி " ஆகும். அந்த நட்சத்திரத்தின் தூரம் 40,000 பில்லியன் கிலோ மீட்டர் ஆகும்! நீங்கள் "ஒளியின் வேகத்தில்" பயணம் செய்தால் சந்திரனை ௧/௨ செகண்டிற்குள் அடைந்துவிடலாம். சூரியனை ௮/௨ நிமிடத்திற்குள் அடைந்துவிடலாம். ஆனால் ஆல்ஃபா செண்டவுரிக்கு சென்றிட ௪/௨ ஆண்டுகள் பயணம் செய்ய வேண்டும்!! நாம் தொலைதூர கருவியின் மூலமாய் கூட்டம் கூட்டமான நட்சத்திரங்களைக் காண்கிறோமே....அவைகள் சுமார் ௬,௫00 மில்லியன் ஒளியின் பயண ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளன!! இப்போது நட்சத்திரங்களின் அளவை சற்று எண்ணிப்பாருங்கள். "ஓரியன் பெல்ட்டில்" அமைந்துள்ள "பெட்டல்கஸ்" என்ற நட்சத்திரத்தின் விட்ட அளவு 500 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும். இந்த நட்சத்திரம் வெறும் கூடாக இருந்தால் பூமி அதன் உள்ளேயே சூரியனை தன் வழக்கமான ஓட்டப்பாதையில் சுற்றிவர முடியும். ஏனெனில், சூரியனை பூமி சுற்றிவரும் சுற்றுப்பாதையின் விட்ட அளவு 300 மில்லியன் கிலோ மீட்டர் தூரமே ஆகும்!! இத்தனை மகத்துவமுள்ள விண்ணகத்து கோள்கள் தங்கள் தங்கள் ஓட்டப்பாதையில் எத்தனை நேர்த்தியாய் பிழையேதுமில்லாமல் சுற்றி வருகின்றன என்பதையும் சற்று சிந்தித்துப் பாருங்கள். நிச்சயமாய் இந்த அண்ட சராசரங்களுக்குப் பின்பாக ஓர் "மகா உன்னத அறிவுக்கூர்மை" இருக்கத்தான் செய்கிறது. அம் மகத்துவ அறிவுகூர்மையே ஒவ்வொரு நட்சத்திரத்தையும் , கிரகங்களையும் திட்டம் வகுத்து படைத்திருக்கிறது!! விண்ணின் விரிவுதான் எத்தனை விசாலமாயுள்ளது! மனிதனோ எத்தனை சிறியவன்!! பரிசுத்த வேதாகமத்தில், "நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கு அவன் எம்மாத்திரம்!" என தாவீது இராஜா என்பவர் எழுதி வைத்துள்ளார். ஒரு பொருளின் மதிப்பை அதன் 'அளவை" வைத்து மதிப்பிட முடியாது. ஒரு கோடீஸ்வரனுக்கு ஏராளமான ஏக்கர்கள் நிலம் இருக்கலாம். ஆனால், அவ்வளவு பெரிய நிலத்தைக் காட்டிலும் வீட்டில் இருக்கும் அவனுடைய சிறு குழந்தையே அவனுக்கு விலையேறப்பெற்ற பொக்கிஷம் ஆகும்! இதைப் போலவேதான் தேவனுக்கும் உள்ளது. விண்வெளி பரந்து விரிந்ததாய் இருக்கலாம். நட்சத்திரங்கள் மகாப் பெரிய அளவுடையதாக இருக்கலாம். ஆனால் தேவனோ, தான் படைத்த எதைக் காட்டிலும் மனுஷனையே அதிகமாய் நேசித்து அக்கறை காட்டுகின்றார். தேவனோடு மனிதன் ஐக்கியம் கொள்வதற்கென்றே, அவன் தேவனுடைய பிள்ளையாக சிருஷ்டிக்கப் பட்டான். இவ்வாறு தேவனோடு கொண்டிடும் ஐக்கியமே, நாம் இப்பூமியில் வாழும் நோக்கத்தை அர்த்தமுள்ளதாகச் செய்கிறது!! 2. மனிதனைப்பற்றிய வியப்பூட்டும் உண்மைகள் தேவனுடைய படைப்பில், மனிதனே கிரீடமாக விளங்குகிறான். வானவிரிவில் காணும் நட்சத்திரங்களின் வியப்பைக் காட்டிலும் அதிக வியப்புடையது மனிதனே ஆவான்! முதலாவது உங்கள் சரீரத்தைப் பார்த்து, அதை தேவன் எத்தனை ஆச்சரியமாய் சிருஷடித்திருக்கிறார் என்பதைப் பாருங்கள். உங்கள் இருதயத்தை சற்று நோக்குங்கள்! ஒரு வருடத்தில் எவ்வித விடுமுறையும் இல்லாமல் உங்கள் இருதயம் 40 மில்லியன் தடவை துடிக்கின்றது! ஒவ்வொரு நாளும் உங்கள் தலையிலிருந்து பாதம் வரைக்கும் இரத்தத்தை 100,000 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இரத்தக் குழாய்களின் மூலம் செலுத்துகிறது! ஒவ்வொரு நாளும் சேதமடைந்து அழிந்து போகும் சிவப்பு இரத்த அணுக்களுக்குப் பதிலாய் உங்கள் சரீரம் 172-பில்லியன் அளவிற்கும் மேலான சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்கின்றது. காரியம் இவ்வாறு இருப்பதால், இன்று நீங்கள் உயிரோடு வாழ்வதே ஓர் மகா அற்புதமல்லவா! இவ்வாறு மனிதனின் வியக்கத்தகு சரீரத்தைக் காட்டிலும், இன்னமும் அவனுள் காணப்படும் மாபெரும் விந்தை யாதெனில், அவனுக்குள் ஓர் ஆவி உள்ளது! இத்தன்மையே படைப்புகளுக்கெல்லாம் சிகரமாய் நம்மை விளங்கச் செய்கின்றது. நம் ஆள்த்துவத்தின் ஆழத்திற்குள் அடங்கியிருக்கும் இந்த ஆவியே, "தேவன் ஒருவர் உண்டு" என நமக்கு உணர்த்துகிறது. மானிடர்களுக்குள் இருக்கும் ஆவி, தாங்கள் கணக்கு ஒப்புவிக்க வேண்டிய ஓர் சர்வ வல்ல கர்த்தா இருக்கிறார் எனக் கூறுவதைக் கேட்கிறபடியால், ஏதாவதொரு வஸ்துவை தெய்வமாக வணங்குகிறார்கள் இவ்வித ஆவிக்குரிய கணக்கு ஒப்புவிக்கும் இயல்பான உணர்வு எந்த மிருகத்திற்கும் கிடையாது! தன் நடத்தைக்குரிய குற்ற உணர்வை மனிதன் மாத்திரமே உணர முடியும். ஏனெனில் அவன் ஒருவனுக்கே ஓர் மனசாட்சி உள்ளது!! இவனைப் போல ஓர் "பக்தியுள்ள குரங்கையோ" அல்லது ஆவிக்குரிய சிந்தை கொண்ட "ஓர் நாயையோ" நீங்கள் ஒருக்காலும் கண்டுபிடித்திட முடியாது! ஆம், மனிதன் ஓர் நித்திய ஜீவராசியாவான்! மனிதனே தேவனுடைய படைப்பில் கிரீடமாய் திகழ்கிறான். அவன் தேவனோடு ஐக்கிய உறவு கொள்வதற்கே சிருஷடிக்கப்பட்டவன்! 3. மெய்யான புரட்சிபற்றிய வியப்பூட்டும் உண்மைகள் இன்றைய உலகில் "புரட்சி" என்ற வார்த்தை மிகச் சாதாரணமாய் பயன்படுத்தப்படுகின்றது! நம் எல்லோருக்குமே தேவையான ஓர் புரட்சியைக் குறித்து சற்றே தியானிப்போம். நாம் எல்லோருமே நம் பெற்றோர் களிடமிருந்து ஓர் மதத்தை சுதந்தரித்திருக்கிறோம். அவ்வாறு சுதந்தரித்த மதத்தோடுகூட சில தவறான கீருத்துக்களையும் நாம் பெற்றிருக்கிறோம். தொன்று தொட்டு இவ்வாறு நாம் பெற்றிருக்கும் தவறான கருத்துக்களே, நாம் சிறு பிராயத்திலிருந்து கற்றவைகளை கேள்விக்கு உட்படுத்துவதற்குப் பெரும் தடையாய் உள்ளது!. ஒரு உதாரணத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள் : பல ஆயிரம் வருடங்களாய், பூமியை மையமாகக் கொண்டே அண்ட சராசரங்களும் இயங்குகின்றன என்றும், சூரியனும் நட்சத்திரங்களும் பூமியைச் சுற்றி சுற்றி வருகின்றன என்றும் மனிதன் நம்பி இருந்தான். ஆனால் சுமார் 450 வருடங்களுக்கு முன்பாக 'கோப்பர்னிகஸ்' என்ற பெயர் கொண்ட மனிதன், தன் மூதாதையரின் நம்பிக்கையை கேள்வி தொடுத்து, அதை தவறு என்றும் நிரூபித்துக் காட்டினான்! ஆனால் அந்தோ! மார்க்க உலகில் மாத்திரமே, தங்கள் பெற்றோர்களும் குருமார்களும் கற்றுத் தந்தவைகளை ஜனங்கள் கண்மூடித்தனமாய் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள்! உங்களைக் குறித்து என்ன? உங்கள் மார்க்ககோட்பாடுகள் யாவை? அவைகள் உங்கள் மூதாதையரிடமிருந்து கண்மூடித்தனமாய் சுத'ந்தரிக்கப்பட்டவைகளா? அல்லது, தெய்வத்தைப்பற்றியும், நித்தியத்தைப்பற்றியும் நீங்களாக சிந்தனை செய்து, அதைப்பற்றிய உணர்த்துதல்களை "மெய்யானது" என உறுதியாய் பற்றியிருக்கிறீகளா? இவ்வுலகில் இதுவரை நாம் கண்ட எந்தப் புரட்சியாளரைக் காட்டிலும் இயேசுகிறிஸ்துவே மகா மேன்மையானவர்! ஏனென்றால், அவர் ஒருவரே மனிதனின் உள்ளான அந்தரங்கத்தில் மாறுதலைக் கொண்டு வரும்படி இப்பூமிக்கு வந்தார்! இவ்வித அந்தரங்க மாறுதலின் புரட்சியை தன் வாழ்வில்ருசிக்கும் மனிதனின் வெளியரங்க ஜீவியமும் புரட்சியான மாறுதலடையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை! ஆம், பிரச்சனைகளுக்கெல்லாம் காரணமான வேரிலிருந்துதான் மாற்றங்கள் ( புரட்சி ) எற்பட நமக்கு அவசியமாயிருக்கிறது. 4. நம் தேவையைப்பற்றிய வியப்பூட்டும் உண்மைகள் மனிதனின் மிகப் பெரிய தேவை எது? உணவா? உறைவிடமா? வேலைவாய்ப்பா? இவ்வாறு ஒரு மனிதன் தன் முழு வாழ்க்கைக்கும் தேவையான உணவும், உறைவிடமும், உத்தியோகமும் பெற்று....அவன் மரித்தவுடன் இனி என்ன சம்பவிக்கும்? மனிதனின் ஜீவியத்திற்கு மரணம்தான் முற்றுப்புள்ளியா? இல்லவே இல்லை! இப்பூமியில் நாம் வாழும் வாழ்க்கை நித்தியத்திற்குள் பிரவேசிக்கும்படி அளிக்கப்பட்ட ஓர் அறிமுகமேயாகும். ஓர் பரீட்சைக்காகவே நாம் இப்பூமியில் வைக்கப்பட்டு இருக்கிறோம்..... அதை தேவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். நம் ஒவ்வொரு வருடைய ஜீவியத்தின் உண்மைநிலையை தேவன் அறிவார்! நல்லவர்களைப்போல் நம்முடைய நண்பர்களுக்கு முன்பாய் நடித்துவிடலாம், ஆனால் தேவனை நாம் ஒருக்காலும் ஏமாற்றிட முடியாது!! தேவனுடைய கண்களுக்கு முன்பாக நாம் அனைவரும் அவருடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தானத்தை விட்டு மிக மிக குறைவுபட்டிருக்கிறோம். ஆகிலும், மனிதனோ தேவனோடு ஐக்கியப்படுவதற்கென்றே சிருஷ்டிக்கப்பட்டான். இதுவே இன்று மனிதனின் மிகப் பெரிய தேவையாயிருக்கிறது!! காரியம் இப்படியாய் இருப்பதால், நம்முடய பாவ குற்ற உணர்வு நம்மைவிட்டு எவ்விதம் நீங்க முடியும்? இதற்கென நம்முடைய பாவங்களுக்காக வருத்தம் அடைந்தால் மட்டும் போதாது. நான் செய்த 'வங்கிக் கொள்ளைக்காக' குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிற்பதாக வைத்துக் கொள்ளுங்கள். நீதிமன்றத்தின் நியாயாதிபதியாக என் தந்தை அங்கு நிற்கிறார். அவருக்கு முன்பாக நான் என்னுடைய கொள்ளை குற்றத்திற்காக வருத்தப்படுவதால், அதைக் கண்டு என் தந்தை என்னை விடுதலை செய்ய ஒருக்காலும் முடியாது. ஓர் தந்தை என்ற ஸ்தானத்தில் அவர் என்னை நேசிக்கலாம்...... ஆனால், அவரோ இப்போது நீதிமன்றத்தில் ஓர் நீதிபதியாக அமர்ந்திருக்கிறார். எனவே என்னதான் நான் வருத்தமடைந்தாலும், என்னதான் என்னை அவர் மகனாக நேசித்தாலும், நான் செய்த குற்றத்திற்காக அவர் எனக்கு தண்டனை கொடுத்தே தீரவேண்டும்!! இவ்வாறெல்லாம் இருந்தும்கூட நீதிமன்றத்தில் எப்படியாகிலும் உதவியை என் தந்தை எனக்குச் செய்திட முடியும். சட்ட நீதியின்படி எனக்கு 1000,000 ரூபாய் அபராதத் தண்டனையாக தீர்க்கப்பட்டால், என் தந்தை பாடுபட்டு சம்பாதித்த தன்னுடைய 1000,000 ரூபாயை எனக்குத் தந்து, "மகனே, இதோ உன் தண்டனைக்குரிய பணம்! போய் உன் அபராதத்தை செலுத்திவிட்டு தலையாகிவிடு!" என அவரால் கூறிட முடியும். பார்த்தீர்களா, ஒரு நீதிபதியாக இருந்து எனக்கு தணடனை வழங்கினார்..... அதே சமயம், ஓர் அன்புள்ள தகப்பனாய் அத்தண்டனைக்குரிய கிரயத்தை தானே செலுத்திவிட்டார்!! இச்செயலைத்தான் தேவன் நமக்காக செய்து முடித்திருக்கிறார். ஓர் நீதியுள்ள நீதிபதியான தேவன், நம் பாவங்களுக்காக நம் அனைவருக்கும் "நித்திய மரணத்தை" தண்டனையாக வழங்க வேண்டியிருந்தது. ஆனால், அவர் நம்மை நேசித்தபடியால், இந்த பூமிக்கு இயேசு கிறிஸ்துவாக இறங்கிவந்து தானே அத்தண்டனையை நமக்காக செலுத்தி விட்டார்! ஆம், கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்தார்!! இத்தனை மகத்துவ செயலுக்குப் பிறகு, இப்போது நாம் செய்ய வேண்டுமென ஒன்று இருக்கிறது! என் தந்தை, நீதிமன்றத்தில் எனக்காக தண்டனை பணத்தை என்னிடம் தரும்போது, அதை நான் பெற்றுக்கொள்ளவில்லை என்றால், நான் நிச்சயமாக விடுதலையாக முடியாது! இதேபோலவே தான் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாய் தேவன் நமக்கு வழங்கும் பாவ மன்னிப்பு உள்ளது. அதை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்விதமாய் நாம் பெற்றுக்கொள்ளவில்லை என்றால், நாம் ஒருக்காலும் விடுதலையின் பலனை ருசித்திடவும் முடியாது! 5. தீய பழக்கங்களைப்பற்றிய வியப்பூட்டும் உண்மைகள் உலகமெங்கும் இன்று ஜனங்கள் இன்பத்தையும், புகழையும், செல்வத்தையும், அதிகாரத்தையும் தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவை எல்லாவற்றிற்கும் பின்பாக ஓர் பிரமாணம் அல்லது ஓர் விதி தொடர்புடையதாய் நிற்கிறது. அந்த விதியை அல்லது பிரமாணத்தை "குறைந்து சரிவடையும் சராசரி விகிதம்" எனக் கூறுவார்கள். இந்த விதியாகிய பிரமாணம் எவ்வாறு கிரியை செய்கிறது என்பதைக் காண்பதற்கு "இன்பத்தைத் தேடி ஓடுதலை" உதாரணமாய் எடுத்துக் கொள்வோம். துவக்கத்தில், ஒருவன் குறைந்த அளவில் ஈடுபாடு கொள்கையில், அவன் பெறும் இன்பம் ஓரளவு திருப்தியை அவனுக்குத் தரக்கூடும். இவ்வகையான இன்பத்தை அவன், புகையிலை போடுதல், மது அருந்துதல், ராக்மியூஸிக், போதை வஸ்துகள், பாலிய உணர்வைத் தூண்டும் ஆபாச படங்கள், சுபாவத்திற்கு விரோதமான பாலிய உறவுகள், ஆகிய ஒன்றின் மூலம் இவன் பெற்றுக் கொள்கிறான். ஆனால் இவைகளில் ஒருவன் மூழ்கும்போது, தன்னிடம் சிக்கிக்கொண்ட மனிதனை இப்பழக்கங்கள் நழுவவிடாமல் இறுகப் பிடித்துக் கொண்டு முடிவில் அவனைத் தனக்கு அடிமையாகச் செய்துவிடுகிறது! இந்நிலைக்கு வந்து விட்ட ஒருவன், இனி இவ்வித இன்ப உணர்ச்சியின் தூண்டுதல் இல்லாமல் ஜீவிக்க முடியாது என்ற அவலநிலைக்கு ஆளாகிவிடுகின்றான்! இவ்வாறு தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விட்ட ஒருவன் "கொல்லனின் இடுக்கிக்குள்" சிக்கிக் கொண்டதைப் போல அதிலிருந்து வெளியே வர முடியாமல் தவிக்கிறான்! "குறைந்து சரிவடையும் சராசரி விகித" விதிப் பிரமாணத்தை, இவ்வுலகின் அந்தஸ்தையும், மேன்மையையும் நாடி ஓடும் எல்லோர் மீதும் தேவனே வைத்திருக்கிறார். இதன் மூலமாய் "தான் ஒரு நித்திய வாசி" என்பதை மனிதன் உணர்வடையும்படிச் செய்கிறார். ஆம், மனிதன், "ஆவிக்குரிய வெற்றிடம்" உடையவனாகவே இருக்கிறான். அவ்வெற்றிடத்தை தேவன் ஒருவரே தவிர வேறெதுவும் நிறைத்திட முடியாது! ஆனால், மனிதனோ அவ்வெற்றிடத்தை இன்பம், புகழ், செல்வாக்கு, அதிகாரங்கள் ஆகியவற்றால் நிரப்பிவிட தொடர்ச்சியாய் முயற்சி செய்து கொண்டேயிருக்கிறான். அம்முயற்சி, நிச்சயம் பலனளிக்கப் போவதில்லை! ஏனென்றால், "மனிதனின் இருதயத்திற்குள் தேவன் நித்தியத்தை வைத்திருக்கிறார்" என்றே பரிசுத்த வேதாகமம் பறை சாற்றுகின்றது. ஆகவே, நம்முடைய இருதயம் தேவனிடம் இளைப் பாறுதலைக் காணும் வரை அவ்விருதயத்தில் எப்போதும் இளைப்பாறுதலற்ற சஞ்சலமே குடியிருக்கும்! எவ்வாறு ஒரு குவளையில் நல்ல பானத்தை ஊற்றுவதற்கு முன்பாக அக்குவளை சுத்தமாக்கப்பட வேண்டியது அவசியமோ, அதைப்போலவே நம் இருதயம் சிருஷடி கர்த்தர் தங்கும் ஸ்தலமாய் மாறுவதற்கு முதலில் அந்த இருதயத்திலுள்ள எல்லா பாவங்களும் கழுவப்பட வேண்டியது அவசியமாயிருக்கிறது. இவ்வாறு நம்முடைய இருதயம் பாவத்திலிருந்து கழுவப்பட்டு, சுத்தமாகி, அதில் தேவன் வந்து தங்க வேண்டும் என்பதற்காகவே, நம் ஒவ்வொருவருடைய பாவங்களுக்காகவும் கிறிஸ்து மரித்தார்! 6. நியாயத்தீர்ப்புநாளைப்பற்றிய வியப்பூட்டும் உண்மைகள் இப்பூமியில் நம்முடைய வாழ்க்கையானது மரணத்தை நோக்கி 10, 9, 8.... என ஒவ்வொரு எண்ணாக குறைந்து வருவதற்கு ஒப்பாய் இருக்கிறது ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கை குறைந்து குறைந்து........ முடிவில் நாம் மரித்து, நம் சரீரத்தைவிட்டுப் போகும் நாள் வரைக்கும் எண்ணப்படுகின்றது! ஆனால், அதற்குப் பிறகு என்ன? நம்முடைய மரணத்திற்குப் பிறகு நம் ஒவ்வொரு வருடைய ஜீவியத்தைக் குறித்ததான கணக்கை நாம் தேவனுக்கு ஒப்புவிக்க வேண்டும் என பரிசுத்த வேதாகமம் திட்டமாய் கூறுகிறது. இந்த பூமியில் வாழ்ந்த கோடானு கோடி மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் செய்த, பேசிய, சிந்தித்த, ஒவ்வொன்றையும் இறைவன் எப்படி பதிவுசெய்து வைக்க முடியும்? என்று நாம் ஆச்சரியப்படக்கூடும்! ஆம், இந்த பதிவை இறைவன் ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் "ஞாபக சக்தியிலேயே" வைத்திருக்கிறார். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இந்த ஞாபக சக்தி நாம் செய்கிற, பேசுகிற, நினைக்கிற ஒவ்வொன்றையும் அப்படியே பதிவு செய்கிற 'வீடியோ டேப்' போன்றதாகும். ஒருவன் மரிக்கும்போது, அவன் தன்னுடைய சரீரத்தை மண்ணுக்கு விட்டுச் சென்றாலும், ஞாபகசக்தியை உள்ளடக்கிய ஆத்துமாவானது மரித்த ஆவிகள் இருக்கும் இடத்திற்குப் போகிறது. கடைசியில், இந்த உலக நியாயத்தீர்ப்பின் நாள் வரும் போது, இறைவனுக்கு முன்பாக தன் முழுவாழ்க்கையின் கணக்கையும் ஒப்புவிக்கும்படி நிற்பான்! நியாயத்தீர்ப்பு நாளில் நம் பாவ தீய செயல்கள் வீடியோ டேப்பினால் வெளியரங்கமாகாமல், இறைவனின் பார்வையிலிருந்து நிரந்தரமாய் துடைத்து அழிக்கப்பட "ஒரே ஒரு வழிதான்" உண்டு! இறைவனின் சட்டத்தில் பாவத்துக்காக தண்டனை வரையறுக்கப்பட்டுள்ளது என்று வேதாகமம் கூறுகிறது. அது மரணம்! இந்த நித்திய மாணமாகிய தண்டனையிலிருந்து நம்மைக் காக்கவே, தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்து பரலோகத்திலிருந்து இம் மண்ணுலகுக்கு மனிதனாக வந்து 2009 வருடங்களுக்கு முன் ஓர் சிலுவையில் மரித்தார். அங்கே அவர் மனுக்குலத்தின் பாவங்களுக்குரிய தெய்வ தண்டனையை எல்லா மனிதரின் பாவத்திற்காகவும் தன்மீது ஏற்றுக்கொண்டார். அவர் மரித்த மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் மரணத்திலிருந்து உயிருடன் எழுந்து வந்து, உண்மையாகவே தான் தேவகுமாரன் என்பதை நிரூபித்தார். இவ்வாறு மனிதனின் மிகப் பெரிய எதிரியான மரணத்தை ஜெயித்தார்! இன்று நாம் உண்மையாகவே நம்முடைய பாவங்களை ஒத்துக்கொண்டு, அவைகளைவிட்டு மனந்திரும்பி, இயேசுகிறிஸ்து மூலமாய் இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டால், நம்முடைய பாவங்கள் அத்தனையும் மன்னிக்கப்பட்டு "அவைகள்" நமக்குள்ளிருக்கும் ஞாபகசக்தியின் சுருளாகிய 'வீடியோ டேப்பிலிருந்து' நிரந்தரமாய் அழிக்கப்பட முடியும். ஏனென்றால் இந்த இயேசுவே நமக்காக மரித்து உயிர்த்தெழுந்தவர் ஆவார்!! மனித வர்க்கத்திற்கென்று நாம் மேற்கண்ட "ஒரே வழியான" இரட்சிப்பைத்தான் இறைவன் நியமித்திருக்கிறார். இந்த வழியைக் கண்டடையாத ஒருவன், நியாயத்தீர்ப்பு நாளில் தனக்குள் பதிவாகி இருக்கும் வீடியோ டேப், தன் பாவங்களைத் திரையிடுவதைக் காண்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்! 8. வியப்பிற்கெல்லாம் சிகரமான வியப்பூட்டும் உண்மைகள் நாம் அனைவருமே, பாலைவனத்தில் பயணம் செய்து, தவிக்கும் தாகத்தினால் மாண்டுபோகும் ஜனத்திற்கே ஒப்பாயிருக்கிறோம். அந்த ஜனக்கூட்டத்தில் ஒருவர் எங்கேயாகிலும் தண்ணீரைக் கண்டு பிடித்தால், அச்செய்தியை அவர் நிச்சயமாய் மற்றவர்களுக்கும் அறிவிப்பார்! தண்ணீரைக் குடிக்கும்படி அவரால் பலவந்தம் செய்திட முடியாது. ஆனால், மற்றவர்களுக்குத் தண்ணீர் இருக்கும் இடத்தைக் காண்பித்திட முடியும்! இந்த செயலலைத்தான் நாங்கள் உங்களுக்கு இப்போது செய்கிறோம்!! நித்திய ஜீவனை அடைந்திட விருப்பம் கொண்ட யாவர்க்கும், அந்த நித்திய ஜீவன் இலவசமாய் கிடைத்திடும் இடத்தைக் காட்டுகிறோம். இவ்வுலகில் வியப்பிற்கெல்லாம் சிகரமான வியப்பூட்டும் உண்மை யாதெனில், மகா கொடிய ஒரு பாவிகூட மெய்யான வாஞ்சையோடு தேவனைத் தேடுவானென்றால் "அடுத்த கணமே" அவன் தேவனுடைய பிள்ளையாய் மாறிவிட முடியும்! என்ற உண்மைதான்!! தேவன் இயந்திர மனிதர்களை விரும்பவில்லை. அவர் தனக்கு குமாரர்களையே விரும்புகிறார். இந்த காரணத்திற்காகவே நம் எல்லோருக்கும் "ஓர் சுயாதீன சித்தத்தை" தேவன் தந்திருக்கிறார். அவருக்கு கீழ்படிவதையோ அல்லது கீழ்படியாமல் இருப்பதையோ நம் இஷடப்படி நாம் தெரிந்து கொள்ளலாம். நமக்குத் தரப்பட்ட சுயாதீன சித்தத்தை, தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதற்கு நாம் கையாண்டபடியால்தான், நாம் அனைவரும் வழி தவறித் தவிக்கிறோம். பாவம் நம் சொந்த வாழ்க்கையை மாத்திரமல்லாமல் நம் குடும்பங்களையும் அழித்துப் போடுகிறது. இப்பூமியில் நம் வாழ்வை சஞ்சலப்படுத்தும் இந்தப் பாவம் கடைசியாக நம்மை நரகத்திற்கும் நித்திய காலமாய்த் தள்ளிவிடுகின்றது! ஆனால் இன்றோ, நம்முடைய பாவ வழிகளை விட்டு தேவனிடம் திரும்பி வரும்படியாய் நம் யாவரையும் தேவன் அழைக்கிறார். இயேசுகிறிஸ்துவின் மரணத்தின் மூலமாய், நம் கடந்த கால பாவங்களுக்காக பூரண மன்னிப்பைத் தன்னிடமிருந்து பெற்றுக் கொள்ளும்படி தேவன் அன்புடன் அழைக்கிறார்! இந்த கணமே நீங்களும் தேவனுடைய பிள்ளையாய் மாறிவிடுவதற்கு தீர்மானம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை இந்த இரட்சிப்பின் மகத்துவத்தை நீங்கள் உணராதவர்களாய் இருக்கலாம். ஆனால் உண்மையிலேயே நீங்கள் எடுக்கப்போகும் தீர்மானம் வாழ்வா அல்லது சாவா என்பதற்குரிய தீர்மானமேயாகும். நீங்கள் இப்போதே தேவனிடம் கீழ்காணும் ஜெபத்தை உங்களால் சொல்லி ஜெபித்திட முடியுமா? ஜெபியுங்கள்........... "ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே, நான் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவான ஓர் பாவி என்பதை ஒத்துக்கொள்கிறேன். நீர் என்னுடைய தண்டனையை ஏற்றுக் கொண்டு, என்னுடைய பாவங்களுக்காக மரித்து, மரணத்திற்குப் பின்பு கல்லறையிலிருந்து உயிரோடு எழுந்து வந்ததற்காக, நான் உமக்கு மிகுந்த நன்றி சொல்கிறேன். நான் மெய்யாகவே என் பாவ ஜீவியத்தின் வழியை விட்டு விட விரும்புகிறேன். ஆண்டவராகிய இயேசுவே, நீர் என்னுடைய இருதயத்திற்குள் வந்து என்னையும் தேவனுடைய பிள்ளையாக மாற்றும். என் கடந்த ஜீவியத்தின் பாவங்களை என்னை விட்டு முற்றிலுமாய் அகற்றிவிட்டு, இன்றிலிருந்து நான் ஓர் புதிய வாழ்க்கையைத் துவங்க எனக்கு உதவி செய்யும். என்னுடைய எஞ்சியுள்ள ஜீவிய காலமெல்லாம் உம்முடைய புகழுக்காகவே வாழும்படி உமது வல்லமையை எனக்குத்தாரும். என் ஜெபத்தை இப்போது நீர் கேட்டதற்காக மிகவும் நன்றி." ஆம், இன்று நீங்கள் எடுத்த இந்த தீர்மானமே, நீங்கள் உங்கள் வாழ்வில் இதுவரை எடுத்த எந்த தீர்மானத்தைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் நிறைந்ததாகும். தேவன் உங்களை மட்டில்லாது ஆசீர்வதிப்பாராக! தமிழ் வடிவம் : டி. ரத்தினகுமார் |
தேவ வல்லமை
தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். - (எபேசியர் 1:19).
ஒரு ஆஸ்பத்திரியில் இன்டென்சிவ் கேர் வார்டில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் காலை 11 மணிக்கு ஒரு படுக்கையில் இருந்த நோயாளிகள் மரித்து கொண்டே இருந்தனர். அவர்களுக்கு எந்த விதமான நோயாயிருந்தாலும் அந்த படுக்கையில் வருகிற ஒவ்வொருவரும் மரித்தனர். இது ஒரு மாதத்திற்கு மேல் நடந்து கொண்டே இருந்தது. யாருக்கும் புரியவில்லை, ஏன் அந்த நேரத்தில் அப்படி நடக்கிறது என்று.
ஆகவே உலக அளவில் சிறந்த ஆய்வாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அடுத்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர்களும், எல்லா டாக்டர்களும் நர்சுகளும் அந்த வார்டிற்கு முன்பு கூடியிருந்தனர். எப்படியாவது இன்று கண்டுபிடித்து விட வேண்டும் என உறுதியுடன் எல்லாரும் அமைதியாக காத்திருந்தனர். சிலர் சிலுவைகளையும், வேத புத்தகத்தையும் ஒருவேளை பிசாசின் தந்திரமாய் இருந்தால் அதை விரட்ட வேண்டும் என்று நினைத்து தயாராக காத்திருந்தனர்.
சரியாக 11 மணியானது, எல்லாரும் என்ன நடக்குமோ என்று காத்திருந்த போது, அந்த வார்டை சுத்தம் செய்கிற கிளீனர் வந்து அந்த படுக்கையில் இருந்த நோயாளி சுவாசிக்கிற மெஷினின் பிளக்கை பிடுங்கி விட்டு, தன் மெஷினின் பிளக்கை சொருகி சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.
இந்த கதை ஒருவேளை உண்மையில்லாமல் இருக்கலாம், ஆனால், இது வெளிப்படுத்தும் ஒரு கருத்து சக்தி இல்லாவிட்டால், அதன் முடிவு மரணமே!
ஒருமுறை உயிர்த்தெழுதல் இல்லை என்ற சாதிக்கும் சதுசேயர்கள் இயேசுகிறிஸ்துவிடம் வந்து, ஒரு பெண் ஏழு பேரை மணந்து அந்த ஏழு பேரும் மரித்ததாகவும், உயிர்த்தெழுதலில் அவள் யாருடைய மனைவியாய் இருப்பாள் என்று அவரிடம் உயிர்த்தெழுதல் இல்லை என அர்த்தத்தில் அவரிடம் கேட்டனர். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.. (மத்தேயு 22:29,30) என்று கூறினார். நம்மில் அநேகர் அவருடைய வல்லமையை உணராதவர்களாக தப்பான எண்ணங் கொண்டவர்களாகவே இருக்கிறோம். தேவனுடைய வல்லமையை, பெலனை குறித்து, புதிய ஏற்பாட்டில் அநேக இடங்களில் பார்க்கிறோம். கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது (ரோமர் 1:16). கிறிஸ்துவின் சுவிசேஷம் தேவ பெலன் என பார்க்கிறோம். சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது (1 கொரிந்தியர் 1: 18) சிலுவையின் உபதேசம் நமக்கு தேவ பெலனாயிருப்பதை காண்கிறோம். தேவன் கர்த்தரை எழுப்பினாரே, நம்மையும் தமது வல்லமையினாலே எழுப்புவார் (1 கொரிந்தியர் 6:14) உயிர்த்தெழுதலின் வல்லமையை நமக்கு தேவ பெலனாயிருப்பதை காண்கிறோம்.
மட்டுமல்ல, பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்று இயேசுகிறிஸ்து கூறினார் (அப்போஸ்தலர் நடபடிகள் 1:8). இங்கு வசனத்தை பாருங்கள், பரிசுத்த உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைவீர்கள் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நாட்களில் பரிசுத்த ஆவியானவர் வரும்போது, கீழே விழுவதும் மற்றும் அநேக காரியங்களும் நடக்கிறது. ஜாக்கிரதையாய் இருப்போம்!
தேவ பெலன் வரும்போது நாம் கர்த்தருக்கு சாட்சிகளாய் இருப்போம். பரிசுத்த ஆவியானவர் நம்மை எல்லா சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவார். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில்லாமல் ஊழியம் செய்வதும் வீணானதே. ஏனெனில் கிரியை செய்கிறவர் அவரே.
இன்று யாராவது ஆவிக்குரிய வாழ்வில் மரித்தவர்களாயிருந்தால் அது அவர்கள் தேவ பெலனை பெற்று கொள்ளாததே காரணம், உடனே நாம் எந்த வல்லமையில் இருக்கிறோம் என்று பார்த்து, எல்லா வல்லமையையும் தருகிற சர்வ வல்லமையுள்ள தேவனின் மேல் சார்ந்து, அவருடைய வல்லமையை பெற்று கொள்ளுவோம். அவர் தருகிற வல்லமை நம்மை அவருக்கு நேராய், இந்த உலகத்தில் பாவமில்லாமல் வாழ வேண்டிய கிருபைகளை நமக்கு பெற்று தரும். அவருக்கு சாட்சியாய் வாழ கர்த்தர் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!
இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்
எனக்கென்ன ஆனந்தம்
எந்தன் இதயமே உம்மை பாடும்
எந்தன் நினைவுகள் உமதாகும்
ஜெபம்: எங்கள் பெலனாகிய கர்த்தாவே உம்மில் அன்பு கூறுவோம். எங்களை பெலத்தினால் நிறைக்கிறவரே உம்மை துதிக்கிறோம். பெலனில்லாதவன் ஆவிக்குரிய வாழ்வில் மரிப்பானே, உம்முடைய பெலனை பெற்றுக்கொள்ள கிருபை செய்யும். மற்றும் எங்களை பெலப்படுத்துகிற தேவ ஆவியானவரை பெற்று உமக்கென்று சாட்சியாக வாழ கிருபை செய்வீராக. நீரே எங்கள் வாழ்வின் பெலனாய் இருப்பதற்காக உம்மை துதிக்கிறோம். தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நாங்கள் அறியும்படிக்கு, நீர் எங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்று உம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
Send all your Query / Reply to :