Wednesday, December 16, 2009

கோதுமை மணிகள்

 

 

  

 

எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்ததுகர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. இதோஇருள் பூமியையும்காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். - (ஏசாயா 60:1-2).

 

ஹட்சன் டெய்லர் - இவருடைய பெயரைக் கேட்ட உடனே சீன உள்நாட்டு மிஷன் ஸ்தாபனத்தின் நிறுவனர் என்பது நமக்கு நினைவில் வரும். அவர் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தார். தன்னுடைய 22 வயதில் சீன நாட்டிற்கு நற்செய்தி கழகம் என்ற ஸ்தாபனத்தின் மூலம் மிஷனரியாக சென்றார். கடுமையான பாடுகள்உபத்திவங்களின் வழியாகஅநேகமாயிரம் ஆத்துமாக்களை இரட்சிப்பில் வழிநடத்தினார். தன்னுடைய வாழ்க்கையின் இறுதி நாட்களில்வாலிபர்களுக்கு இப்படியாக அழைப்பு விடுத்தார்: 'தேவனிடம் நெருப்பும் இலவசம்எண்ணெயும் இலவசம்அவருக்காக எரிந்து பிரகாசிக்க ஒரு திரியாக விளங்க யார் முன் வருகிறீர்கள்அந்த செய்தியின் மூலம்  நூற்றுக்கணக்கான  வாலிபர்கள் சீன நாட்டிற்கு மிஷனெரியாக சென்றார்கள்.

 

மற்றுமொரு உண்மை சம்பவத்தையும் பார்ப்போம். ஈக்வடார் (Ecuador) நாட்டின் அடர்ந்த காடுகளில் வாழும் காட்டு மிராண்டிகளின் மத்தியில் ஊழியம் செய்ய போனவர்களில் ஒருவரும் உயிரோடு திரும்பியதில்லை. அந்த செய்தியை அறிந்தும் ஜிம் எலியட் என்ற 28 வயது வாலிபன் தன் மனைவியை பட்டணத்தில் விட்டுவிட்டு சக ஊழியர்கள் நான்கு பேருடன் 1955ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஈக்வடார் (Ecuador) நாட்டிற்கு சென்றார். அவர் தன் நண்பர்களுடன் பிளேனில் பறந்தபடியே அநேக பரிசுகளை அந்த மக்கள் வாழ்கின்ற பகுதியில் தாழ விட்டனர். மூன்று மாதங்கள் அப்படியே செய்து வந்தனர் அப்போது அவைகளை பெற்றுக் கொண்ட அம்மக்களின் நடவடிக்கைகள் சிநேக பாவத்துடன் இருந்தபடியால் அவர்கள் தங்கள் வானூர்தியை ஒரு காட்டு பகுதியில் இறக்கினர். 1956ம் ஆண்டு ஜனவரி மாதம்8-ம் தேதி அந்த வாலிபர்கள் தங்கள் குடும்பத்தினரோடு தொடர்பு கொண்டு உற்சாகமாக பேசினர். எப்படியும் இந்த மக்களை கர்த்தருக்குள் கொண்டு வருவோம் என்று நம்பிக்கையோடு பேசினர். திரும்பவும் மாலை நான்கு மணிக்கு கூப்பிடுவதாக சொன்னார்கள். ஆனால் சடுதியில் அவர்கள் நண்பர்கள் என்று நினைத்திருந்த அந்த ஆக்கா இந்திய இன மக்கள் அவர்களை தங்கள் எதிரிகள் என்று நினைத்து அந்த ஐந்து பேரையும்தங்கள் ஈட்டிகளால் குத்தி கொன்றனர்.  Nate Saint, Ed McCully, Jim Elliot, Peter Fleming, and Roger Youderian என்னும் அந்த ஐந்து பேரில் எட் மேக்குலினின் சரீரம் அங்கிருந்த ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. மற்றவர்களின் சரீரங்கள் அவர்கள் மரித்த இடங்களிலேயே அடக்கம் பண்ணப்பட்டது.

 

இவர்களின் இரத்தமே அங்கு திருச்சபை உருவாக வித்தாக அமைந்தது. 'மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும்செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்' - (யோவான் 12:24) என்று இயேசுகிறிஸ்து கூறினார். அதன்படிஇந்த வாலிபர்கள் தங்கள் ஜீவனையும் பாராமல்அந்த ஈக்வடாரில் அதை ஊற்றியபடியால்அந்த இடத்தில் சபைகள் நிரம்பி வழிகின்றன. தற்போது ஈக்வடார் ஒரு கிறிஸ்தவ நாடாக இருக்கறது! அல்லேலூயா!

 

'தன்னிடத்தில் உள்ளதை தேவனுக்காய் இழக்க தயங்குகிறவன் தேவனுக்காய் அரும்பெரும் காரியங்களை சாதிக்க லாயக்கற்றவன்என்று ஜிம் எலியட் கூறியிருக்கிறார்.

 

ஆம்பிரியமானவர்களே! அறுவடை மிகுதிவேலையாட்களோ கொஞ்சம். இன்றைக்கும் அநேக ஆத்துமாக்கள் தேவனுடைய இரட்சிபபின் வெளிச்சத்தில் களிகூர ஆவலாயிருக்கிறார்கள். அந்த இரட்சிப்பின் வெளிச்சத்தை  ஆத்துமாக்களிடம் எடுத்து செல்ல ஆட்கள்தான் இல்லை. தேவனை நேசிக்கிற நாம் இவருடைய பணியை செய்ய முன் வரவில்லை என்றால் வேறு யார் முன் வருவார்கள்?  யோவான் ஸ்நானகனைப் போலஹட்சன் டெய்லரை போல தேவனுக்காய் எரிந்து பிரகாசிக்க நீங்கள் முன் வருவீர்களா? ஏதோ ஒரு வகையில் தேவனுக்காய் உழைக்க நாம் முன் வருவோமா?

 

   கிறிஸ்துவுக்காய் இழந்தவர் எவரும்

   தரித்திரரானதில்லை

   ராஜ்ஜிய மேன்மைக்காய் நஷ்டப்பட்டோர்

   கஷ்டப்பட்டதில்லை

 

ஜெபம்: எங்கள் கன்மலையும் துருகமுமான எங்கள் நல்ல தகப்பனேஉம்மை துதிக்கிறோம். உம்முடைய நாமத்தினிமித்தம் நாங்கள் எழும்பி பிரகாசிக்க கிருபை செய்யும். எங்களுக்கு முன்பாக எத்தனையோ பேர் தங்கள் ஜீவனையும் பாராமல்உமக்கென்று கோதுமை மணியாக தங்களை ஒப்புக் கொடுத்தார்களேஅவர்கள் ஒவ்வொருவருக்காகவும் நாங்கள் உம்மை துதிக்கிறோம். இப்போதும் சவிசேஷ வேலையினிமித்தம் பாடுபடும் எங்கள் சகோதர சகோதரிகளை நினைக்கிறோம். நாங்கள் செய்யாததை அவர்கள் உம்முடைய நாமத்தினிமித்தம் செய்கிறார்களேஅவர்களை கண்ணின் மணியை போல பாதுகாத்தருளும். இன்னும் உமக்கென்று உழைக்க அவர்களின் கைகளை திடப்படுத்தும். சோர்ந்து போகாதபடிஅவர்களை உற்சாகப்படுத்தும். அவர்களுக்காக ஜெபிக்கிறவர்களைதாங்குகிறவர்களை எழுப்புவீராக.  எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

 

இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

 

கர்த்தரின் பணியில்

அனுதின மன்னா குழு

Send all your Query / Reply to :

anudhinamanna@gmail.com

  




Friday, December 11, 2009

டைனோசர்கள் போன்ற பழைய உலக விலங்குகள் அழிந்தது எப்படி?

 




அன்பானவர்களே ஆதியாகமம் முதல் அதிகாரம் முதல் வசனத்தை வாசியுங்கள் " ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்" என்று சொல்லப் பட்டுள்ளது மேலும் பைபிளில் மிகவும் பழமை வாய்ந்த புத்தகமான யோபுவில் (38) பூமி உண்டாக்கப்பட்டபோது மற்ற நட்சத்திர மண்டலத்தில் வாழந்தவர்கள் மகிழ்ந்தார்கள் என்றும் சொல்லப் பட்டிருக்கிறது, இதுவரை முன்னுரையாக வேத அடிப்படையிலான சில அடிப்படை காரியங்களைக் குறித்து தியானித்தோம் இனிவரும் பதிவுகள் முற்றிலும் அறிவியல் அடிப்படையிலானவை சரி விசயத்திற்குச் செல்லுவோம்,

தொல்பொருள் ஆதார‌ங்க‌ள்
ஆதியில் தேவன் பூமியை உண்டாக்கிய போது மிகவும் செழிப்புடன் விளங்கியது, (காரணம் யோபு 38 விளக்கப்பட்டுள்ளது) அந்த உலகத்தில் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது, அதில் ஏராளமான காடுகள், டினோசர்கள், ப்ரண்டாசாரஸ், மமாத் என்ற யானைகளை ஒத்த வில‌ங்குகள், பல்வகையான இராட்சச பறவையிணங்கள் என்று செழிப்பாக பல இலட்சக் கணக்கான ஆண்டுகள் எவ்வித இடைஞ்சலும் இன்றி வாழ்ந்து வந்ததாக இன்று அறிவியலாலர்கள் கண்டறிந்துள்ளார்கள், அவற்றின் படிமங்கள் நாள்தோறும் கண்டறியப்பட்டு வருகின்றன,

இவைகள் மிகவும் பிரம்மாண்டமானவைகளாக இருந்தன என்றும் அறிகிறோம், உதாரண‌மாக டினோசர்கள், 40 முதல் 70 டண்கள் இருந்ததாகவும், இவைகள் நாளொன்றுக்கு சுமார் 1 டன் அள‌விலான தாவரங்களை உட்கொண்டன என அறியும்போது, அதன் பிரமாணடத்தையும் அக்கால இயற்கை வளங்களையும் அறிந்துகொள்ளலாம்,


புவியியல் ஆதாரங்கள்
இந்த உயிரினங்கள் பூமியில் ஏற்பட்ட ஓர் மிகப்பெரிய விண்கள்( வால் நட்சத்திரம்) மோதியதால் அழிந்ததாக அறிவியலாலர்கள் சொல்லுகிறார்கள், மேலும், தற்கால புவியியல் ஆய்வாளர்கள், வட ஆப்பிரிக்காவில் பரந்து விரிந்துள்ள சகாரா பாலைவனத்தை ஆராய்ந்த போது அங்கே மிகக் கடினமான பாறை வகைகள் மெழுகைப் போல உருக்கப்பட்டு, தண்ணீர் தெளிக்கப்பட்டவைகள் போல வேறு பல கடினமான பாறைகளின் மீது தெளிக்கப்பட்டு இறுகியிருப்பதாகவும், மேலும் மனலிலுள்ள சிலிக்கான்கள் அபரிபிதமான வெப்பத்தில் உருக்கப்பட்டு இயற்கைக் கண்ணாடிகளாக சகாரா பாலைவனம் முழுவதும் கிடைக்கப் பெறுகின்றன என்றும், இது மனிதன் கண்ணாடியைக் கண்டுபிடிப்பதற்கும்(5000 ஆண்டுகள்) முந்தையதானது என்றும் மிக மிகப் பழமையானது என்றும், கண்டுபிடித்திருக்கிறார்கள், மேலும் செய‌ற்கைக்கோள்க‌ள் துனையோடு ஏராள‌மான ஆறுக‌ள் இந்த‌ மிக வ‌ர‌ண்ட‌ ச‌காராவில் ஓடிய‌த‌ற்கான‌ த‌டைய‌ங்க‌ளையும் க‌ண்டுபிடித்திருக்கிறார்க‌ள்,

இது ம‌ட்டும‌ல்ல‌ இந்த பாறைத் தொட‌ர்கள் (மேற்கண்ட உருக்கப்பட்ட பாறைகளின் இறுகிய படிமங்கள்) ச‌காராவில் ம‌ட்டும‌ல்ல, பூமியில் ம‌ற்றபாக‌ங்க‌ளான தென் அமெரிக்க‌ க‌ண்ட‌த்தில் அமேசான் காடுக‌ளின் ம‌த்தியிலும், உல‌க‌த்தில் மிக உயரமான‌ அருவியான வெனிசுலாவில் இருக்கும் ஏஞ்ச‌ல்ஸ் நீர்வீச்சி இந்த‌ வ‌கைப்பாறைக‌ள் நிறைந்த‌ ம‌லைத் தொட‌ரிலும் அமைன்திருப்ப‌தாக‌ சொல்லுகிறார்க‌ள், மேலும் உல‌கின் வ‌ட‌க்கு மூளையான அலாஸ்காவின் ப‌னி சூழ்ந்த ப‌குதிக‌ளிலும், உல‌கின் கிழ‌க்குக்கோடியான‌ ஆஸ்திரேலியா க‌ண்ட‌த்தில் இருக்கும் நியூ கினி நாட்டின், வெப்ப‌ம‌ண்ட‌ல‌ காடுக‌ள் சூழ்ந்த‌ ம‌லைப்ப‌குதியிலும், அமேரிக்கா நாட்டில் கிரேன்ட் கேனிய‌ன் என்ற‌ வ‌ர‌ண்ட ப‌ள்ள‌த்தாக்குப் ப‌குதியிலும் இந்த‌ ப‌ழ‌மையான இர‌ண்டு பாறைக‌ள் உருகி ஒட்டிக் கொண்ட‌ பாறைக‌ள் காண‌ப்ப‌டுவ‌தாக‌க் க‌ண்ட‌றின்துள்ளார்க‌ள்.

இதில் ஆச்ச‌ரிய‌மான‌ விச‌ய‌ம் என்ன‌வென்றால்; இந்த‌ப் பாறைக‌ள் ப‌ல‌ கோடி ஆண்டுக‌ள் ப‌ழ‌மையான‌வைக‌ள் என்றும், ஆனால் அவைக‌ள் சுமார் ப‌த்து இல‌ட்ச‌ம் (10,00,000) ஆண்டுக‌ள் முன்ன‌தாக‌த்தான் இவைக‌ள் உருகி ஒன்றின் மேல் ஒன்றாக‌ ஒட்டி இறுகியிருக்கின்ற‌ன‌ என்றும் க‌ண்டுபிடித்திருக்கிறார்க‌ள்,



இப்பாறைக‌ள் உருக‌ எத்த‌னை டிகிரி வெப்ப‌ம் தேவை ஓர் அறிவிய‌ல் பார்வை

இப்ப‌டிப்ப‌ட்ட க‌டின‌மான‌ பாறைக‌ள் உருக சுமார், 25,000 டிகிரி வெப்ப‌ம் தேவை என்று அறிவிய‌ல் கூறுகிற‌து, அதாவது எரிமலைக் குழம்பான லாவாவை விட சுமார் ஐந்து மடங்கு அதிகமான வெப்பம், அப்ப‌டி ஒரு வெப்ப‌ம் பூமியின் மேற்ப‌ர‌ப்பின் ஏற்ப‌டும் சாத்திய‌க் கூறுக‌ள் மிக‌ மிக‌க் குறைவு என்றும், அது ஓர் வின்னிலிருந்து விழுந்த‌ ஒரு பொருளால் ம‌ட்டுமே உருவாக்க‌ முடியும் என்றும், மேலும் அப்ப‌டிப்ப‌ட்ட‌ ஓர் அழிவு உண்டான‌ போது மிக‌வும் ப‌ழைமையான ஒரே க‌ன்ட‌ம் ம‌ட்டுமே இருந்த‌தாக‌வும், அத‌னால் தான் க‌ண்டப் பிள‌வின் போது இந்த ஒத்த காலத்துப் பாறைத் தொட‌ர்க‌ள் வெவ்வேறு க‌ண்ட‌ங்க‌ளிலும் ஆயிர‌க்கண‌க்கான‌ கிலோ மீட்ட‌ர்க‌ள் தொலைவிலும் நின்று மௌன‌ சாட்சிக‌ளாக‌ நின்று கொண்டிருக்கின்ற‌ன‌ என்று அறிவிய‌ல் உல‌க‌ம் சொல்லுகிற‌து,

உயிரிய‌ல் ஆய்வாள‌ர்க‌ள் இப்ப‌டி மிக‌ மிக‌ அதிக‌மான ஓர் வெப்ப‌ம் ப‌ல‌ இல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ கிலோமீட்ட‌ர் ப‌ர‌ப்ப‌ள‌வுக‌ள் கொண்ட‌ பூமியின் மேற்புற‌ க‌டின‌மான‌ பாறைக‌ளை உருக்கி ஒன்றின‌த்திருக்குமானால், ம‌ணலின் சிலிகானை உருக்கிக் க‌ண்ணாடிக‌லாக்கியிருக்குமானால், இன்றைய‌ உல‌கின் மிக‌ப்பெரிய‌ ஆறான அமேசான் ஆற்றை விட‌ப் பெரிய ஆறுக‌ளை காய்ன்து போக‌ச் செய்திருக்குமானால், அப்போது பூமியில் வாழ்ந்த‌ வில‌ங்குக‌ள் ப‌றவைக‌ள், ம‌ட்டும‌ல்ல பூமியின் பழைய அனைத்துத் தாவர வகைகளும் ஒரே நொடியில் பொசுங்கியிருக்கும், கார‌ண‌ம் ப‌ல‌ இல‌ட்ச‌ம் ஆண்டுக‌ளுக்கு முன்னாள் வாழ்ந்த‌ வில‌ங்குக‌ள் பிர‌மாண்ட‌மான‌வைக‌ளாக‌ இருந்தாலும், அவைக‌ள் மென்மையான‌வைக‌ள், அவைக‌ளால் சுமார் 15டிகிரி முத‌ல் 40டிகிரி அள‌வுக‌ள் உள்ள‌ வெப்ப‌ நிலையை ம‌ட்டுமே தாக்குப் ப்டிக்கும் ச‌க்தியுடைய‌வை, த‌ற்போதுள்ள‌ பூம‌த்திய‌ரேகை ப‌குதியில்,அடிக்கும் வெப்ப‌த்தையோ, அல்ல‌து பாலைவன‌த்தில் மிக‌ச் சாதார‌ண‌மாக‌ த‌கிக்கும் வெப்ப‌த்தையோ கூட‌ தாங‌கியிருக்க முடியாது, என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள்,



வானவியல் ஆதாரங்கள்,

பல இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் இவ்வளவு வெப்பம் இருந்ததில்லை, காரணம் பூமி சாய்திருக்கவில்லை, ஆனால் வானத்தில் இருந்து ஓர் மிகச்சக்தி வாய்ந்த வின்கல் ஒன்று பூமியின் மீது வினாடிக்கு 23000 கிலோ மீட்டர்கள் வேகத்தில்மோதிய அழுத்தத்தால் பூமி 23.5 டிகிரி பாகை சாந்ததாகக் கண்டு பிடித்திருக்கிறாகள், கடைசியாக தொல் பொருள் ஆய்வாளர்கள், பூமியில் கன் சிமிட்டும் நேரத்தில் நடந்த ஓர் இயற்கைத் தாக்குதல் நடந்தது என்றும் ஒப்புக்கொள்கிறார்கள், இதனால் ஒரு வினாடியில் 1000த்தில் ஒரு பங்கு நேரத்தில் இந்த பூமி வெப்பத்தினாலும், ஒரு பொருள் மோதியதால் உண்டான பெரும் பள்ளம் ஏற்படுத்திய தாக்கத்தால் ஏற்பட்ட திடீர் மண்  மேடுகளாலும் விலங்குகள், பறவைகள், தாவரங்கள், ஆகியவை இருந்த நிலையிலேயே மண்ணில் புதையுண்டன அகவேதான் இப்போது  நமக்கு அவைகளின் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுகளை அவைகள் மண்னில் புதைந்த போது இருக்கும் நிலைகளை வைத்து அறிய முடிகிறது, என்றும் ஒப்புக்கொள்கிறார்கள்.

பைபிள் சொல்லுவது என்ன?
அன்பானவ‌ர்களே இப்போது ஆதியாகமம் முதல் அதிகாரம் இரண்டாம் வசனம் என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம். " பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய்க் காணப்பட்டது." பிரியமானவர்களே பூமி எப்படி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் எப்படியானது என்று நமக்கு மேற்சொன்ன அறிவியல் ஆய்வுகள் மூலம் நமக்கு விளங்குகிறது அல்லவா?

மேலும், பூமியில் ஓர் எரிகல் அல்லது வால் நட்சத்திரம் விழுந்தது என்றும், அது பூமியின் உயிர்களை நாசமாக்கியது என்றும் அறிவியல் இன்று நிரூபித்திருப்பதை, பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னதாகவே பைபிளில் ஏசாயா தீர்க்கதரிசி எழுதிய புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது ஏசாயாவின் புத்தகம் 14ம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள், பிரகாசமான நட்சத்திரமாகிய சாத்தான் பூமியில் விழத் தள்ளப்பட்டான் என்றும், அவன் உயிர் ஜாதிகளை அழித்தான் (ஈனப்படுத்தினான்) என்றும் விளக்கப்பட்டுள்ளது,

பிரியமானவர்களே சென்றப‌திவில் நாம் கண்ட சாத்தான் யார் என்ற கேள்விக்கான விடை இப்போது உங்களுக்கு அறிவியல், தொல்பொருள் ஆய்வியல், புவியியல், போன்ற தற்காலக் கண்டுபிடிப்புகள் மூலம் தெளிவாக அறிந்து கொண்டு இருப்பீர்கள் என்று விசுவாசிக்கிறேன், இப்படி விழுந்த சாத்தானால் அழிக்கப்பட்ட பூமி எப்படி புதுப்பிக்கப் பட்டது? அறிவியல் ஆதாரங்களுடன் வேத அடிப்படையில் அடுத்த பதிவில் சந்திக்கலாம் காத்திருங்கள்.......

பைபிளை அறிவியல் பொய்யாக்கிவிட்டதா?

பைபிளை அறிவியல் பொய்யாக்கிவிட்டதா?



அன்பானவர்களே
இன்று நாம் அறிவியல் யுகம் வளர்ச்சியடைந்த நாட்களில் இருக்கிறோம், இந்தக் காலகட்டத்தில் நாம் பூமி தேவனால் உண்டாக்கப்பட்டது என்று சொல்வதையும், பைபிளில் மனிதன் உருவாக்கப்பட்ட விதத்தையும், அதே போல குரங்கிலிருந்து மனிதன் தோண்றினான் என்று பரினாமக் கொள்கை பெருவாரியாக அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையில், பைபிள் சொல்வதை நம்மால் மட்டும் எப்படி நம்ப முடியும்? என்ற கேள்வி மிக மிகச் சாதாரணமானதுதான் இல்லையா?

அதே போல இந்த உலகம் படைக்கப்பட்டு ஆராயிரம்(6000) ஆண்டுகள் மட்டுமே ஆகிறது என்று பைபிள் சொல்லும் போது பல இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு புதைப்பட்ட டைனோசர்கள் போன்றவற்றின் படிமங்கள், கல்மரம், போன்ற பல தொன்மையான பொருடகள் சொல்லும் உண்மை என்ன? இந்த கேள்விகள் பைபிள் பொய் என்று தெளிவாகச் சொல்லப்பட்டு விட்டது என்று சந்தேகம் தோண்றுவதும் இயல்புதானே????

இப்படி நவீன அறிவியல் யுகம், ஒரு வரலாற்றுப் பெட்டகம் என நிரூபிக்கப்பட்ட பைபிளை எப்படி பழம் கட்டுக்கதை என்று சொல்வது முற்றிலும் தவறு என்று வேத அடிப்படையில் நான் சொன்னால் நீங்கள் இதை நம்பத் தயாரா?

இன்னும் கூட இன்று அறிவியல் கண்டுபிடித்த பல உண்மைகளை பைபிள் பல ஆயிரக்கனக்கான ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டது என்று சொன்னால் நீங்கள் நம்பத்தயாரா?

இவை எல்லாவற்றிற்கும் மேலாக முற்றிலும் புதிய செய்தி ஒன்று சொல்லுகிறேன் இதை நீங்கள் கஷ்டப்பட்டு நம்பிதான் ஆகவேண்டும் அது என்ன? அறிவியலும் பைபிளும் ஒரு ஒரே நேர்கோட்டில் தான் செல்கிறது.
இன்னும் சொல்லப்போனால் அறிவியல் வருங்காலத்தில் கண்டுபிடிக்கப்போகும் சில கண்டுபிடிப்புகளையும் வேதம் மிக மிக அழகாக சொல்லியிருக்கிறது என்றும் சொன்னால் இவன் ஏதோ உளருகிறான் என்று சொல்லிவிடாதீர்கள்

வேதாகம வசன ஆதாரத்துடன் இவற்றை தெளிவாகச் சொல்ல நான் தயார் படிக்கத் தயாராகுங்கள், புதிய பரிமானத்தில் வேதத்தை நீங்கள் பார்ப்பீர்கள் என்பதும் என்னால் உறுதியாக கிறிஸ்துவுக்குள் சொல்ல முடியும், காத்திருங்கள்..........

Thursday, December 10, 2009

கடவுள் யார்? வேற்றுகிரக வாசிகள் இருப்பது உண்மையா?

கடவுள் யார்? வேற்றுகிரக வாசிகள் இருப்பது உண்மையா?


அன்பானவர்களே அருகில் உள்ள படத்தைப்பாருங்கள், (Clik image For view Larger ) பூமியின் அளவும் அதில் இருக்கும் நம்முடைய அளவும் நம் மூளையின் அளவும் எவ்வளவு சிறியவை என்று நமக்குத் தெளிவாகத் தெரியும். இதை எதர்க்காக சொல்லுகிறேன் என்றால் கடவுளின் அளவை நம்மோடு ஒப்பிட்டு அவரது பிரமாண்டத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.



கடவுள் யார்?
சரி விசயத்திற்கு உருவோம், இன்றைய அறிவியல் யுகம் வின்வெளி ஆய்வின் உச்சத்தில் இருக்கிறது, ஒரு சாமான்யனுக்குக் கூட வான் அறிவு அதிகமாக இருக்கிறது அதாவது நாம் மன்னில் இருந்து பார்க்கும் நீல வானம் ஒரு முடிவல்ல அதற்குமேல் கருமையான ஒரு வானம் இருக்கிறது அங்கே சூரியக்குடும்பத்தில் பூமியும், அந்த சூரியக்குடும்பம் ஆயிரக்கணக்கான சூரியக்குடும்பங்களும் கோடிக்கண‌க்கான சூரியன்களையும்(நட்சதிரங்கள்), உள்ளடக்கிய பால்வெளி மண்டலமும் உள்ளது என்றும், இது போல ஆயிரக்கணக்கான பால்வெளி மண்டலங்கள் வின்வெளியில் இருக்கின்றன என்பதும், இவைகள் வட திசையில் உள்ள மிகப்பெரிய மற்றும் மிகப் பிரகாசமான ஒரு பால்வெளி மண்டலத்தை மற்ற பால்வெளி மண்டலங்கள் சுற்றி வருகின்றன என்பதும் சாமான்யரும் அறிந்ததே.



அதாவது நாம் பார்க்கும் நீலவானம் (பறவைகள் விமானம் பறக்கும்) வானம் முதல் வானம், கோள்களும் சூரியன்களும் அடங்கிய பால்வெளி மண்டலங்கள் அடங்கிய வின்வெளி வானம் இரண்டாம் வானம், ஆயிரக்கணக்கான பால்வெளி மண்டலங்கள் ஒன்றாகச் சுற்றி வரும் வடதிசை பிரகாசமான பால்வெளி மூன்றாம் வானம், இதை வேதம் மிக மிக அழகாகச் சொல்கிறது(சங்கீதம் 48;2, 2கொரி 12;2,3, )





இதில் 1திமோத்தி 6;16ல் சொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ சேர‌க்கூடாத‌ ஒளியில் வாச‌ம்பன்னுகிறவரும் ஒருவரும் காணக்கூடாதவருமான‌ ஒரு ச‌க்திதான் இந்த‌ ச‌க‌ல‌த்தையும் உண்டாக்கிய‌து (யோபு38;4 ம‌ற்றும் 7) அதோடு கூட‌ நிற்காம‌ல் அவைக‌ளை பெய‌ர் சொல்லி அழைத்தார், அவைக‌ள் அவ‌ருடைய‌ வார்த்தைக்குக் கீழ்ப‌டிகின்ற‌ன‌, என்றும் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து, அவ‌ர் வார்த்த‌யாக‌ இருக்கிறார் வார்த்தையாக‌வே செய‌ல்ப‌டுகிறார் என்று யோவான் 1;1ல் சொல்லப்படுகின்றது, இவ்வளவு பெரிய வார்த்தைகளால் வருனிக்க முடியாதவர்தான் கடவுள் இவருக்குப் பெயர் இல்லை, இந்த சக்திதான் நமக்குள்ளும் (வார்த்தையாய்)வாசமாய் இருக்கிறார்( நீதிமொழிகள் 18;21), இப்படி நம்முடைய மொழிகளாலும், அறிவினாலும் விவரிக்க முடியாதவர் தான் கடவுள் அவரை பைபிள் பிதா (அப்பா, தகப்பன்) என்று அழைக்கிறது.

வேற்றுகிரக வாசிகள் இருப்பது உண்மையா?

சரி அடுத்ததாக நாம் இன்று நம்முடைய அறிவியல் யுகம் முழுமூச்சாகத் தேடிக்கொண்டிருக்கும் ஒரு காரியத்தைக் குறித்து பைபிளில் ஆராய்வோம், ஆம் அது வேற்று கிரகவாசிகள் தான், அனேகமுறை நாம் வேற்று கிரகத்தவர் பற்றிப் படிக்கிறோம், ஆர்வமுடன் பேசிக்கொள்கிறோம், அவர்கள் பூமிக்கு வருவது பற்றியும், அவர்கள் நம்மை விட அறிவியல் வளர்ர்சியில் வளர்ந்தவர்கள் என்றும் பூமிக்கு அடிக்கடி வருவதாகவும் நாம் கேள்விப்படுகிறோம், ஒரு வேளை அவர்கள் பூமியில் வந்து குடியேற முயலலாம் அதனால் அவர்களோடு போர் மூளலாம் என்றெல்லாம் ஒரு பயத்தையும், பீதியையும், சிலர் உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் கட்டுக்கதை என்பார்கள், சிலர் ஆதாரங்களைக் காட்டுவார்கள், இப்படி சர்ச்சைகள் நிலவி வருவதற்குக் காரணம் அறிவியல் முறையில் நிரூபிக்கப்படவில்லை(ஒருவேளை மறைக்கப்பட்டிருக்கலாம்) என்பதால் தான். ஆனால் பைபிள் யோபு 38ம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள் இதற்கான விடை கிடைக்கும், எப்படி பூமி உருவாக்கப்படுவதற்கு முன்னதாகவே, மற்ற நட்சத்திரங்களும் அதில் வாழும் தேவ புத்திரர்களையும் உண்டாக்கியதாகவும், பூமி உருவாக்கப்படும் போது அதில் வாழும் அவர்கள் பாடி மகிழ்ச்சியடைந்து கம்பீரித்தார்கள் என்று மிக மிகத் தெளிவாகச் சொல்லப்படிருக்கிறது, கடவுள் அவர்களை விட நம்மை (மனிதர்களை) சிறிவர்களாகினார் என்று எபிரேயர் ஆகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 




இவர்களில் பலவகைகளையும் வேதம் தெளிவாக விவரிக்கிறது, அதே போல பறக்கும் தட்டில் வந்த சில வேற்றுகிரக வாசிகள் மனிதர்களைப் பிடித்து அவர்களோடு உடலுறவு கொண்டார்கள் என்றும் சில தகவல்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், இதற்கும் வேதத்தில் ஆதாரம் உள்ளது, இது பற்றி நாம் அறிந்து கொள்ளும் முன்னதாக நாம் பிசாசு யார் அந்த நாசகாரன் எங்கிருக்கிறான்? என்பது பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம், இவைகளைப்பற்றியும், பூமியில் தொல்பொருள் கண்டுபிடிப்புகள் பற்றியும், பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் சில முரன்பட்ட தகவல்கள் பற்றியும், அடுத்துவரும் கட்டுரைகளில் விரிவாகப் பார்ப்போம். காத்திருங்கள்.........................


விசுவாசிகளுக்கு சாத்தானின் கடிதம்

கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு சாத்தானின் கடிதம்


 


அனுப்புநர்:
சாத்தான்

அக்கினி வாசல்

எரிநரகம் 666
 
பெறுநர்
விசுவாசி,

மாயமாலக்கோட்டை

சிற்றின்பசாலை

பூலோகம்

அன்பான மகனே, மகளே
உனக்குள் என் ராஜ்யத்தை ஸ்தாபிப்பது மிகவும் கடினம் என்று எண்ணினேன்.ஆனால் என் வேலையை நீ மிக சுல‌பமாக்கினாய், அதிகாலையில் எழுந்தவுடன் முழ‌ங்காற்படியிட்டு ஜெபிக்கவேண்டிய நீ ஜெபிக்காமலேயே அன்றாட கடமைகளை செய்யத் துவங்கினாய்.முதலில் எனக்கு ஏற்பட்ட இந்த வெற்றி என்னுடைய பல வெற்றிகளுக்கு வித்திட்டதை எண்ணினால், எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறது தெரியுமா

வெரிகுட் கீப் இட் அப்

சாப்பிடுவதற்கு முன் ந‌ன்றி ஜெபம், வேலைக்கு கிளம்புவதற்கு முன் பாதுகாப்பு ஜெபம்…இப்படி ஏதாவது செய்துவிடுவாயோ என பயந்திருந்தேன். ஆனால் நீயோ அடுத்தடுத்து செய்யவேண்டிய வேலைகளை நினைத்தபடி பிஸியாக இருந்தாய்.தேவனிடத்தில் ந‌ன்றியில்லாத உன் இருதய‌மும் எளிதில் ப‌த‌ற்ற‌ம‌டைகிற‌ குண‌மும் தான் உன்னிட‌த்தில் எனக்கு மிகவும் பிடிக்கும்!

ஏய்! நீ தான் எனக்குக் கிடைத்த முத்தான சொத்து!

பல ப‌ரிசுத்த ஆவிக்குரிய கூட்டங்களில் கலந்துக் கொண்டு,எத்தனையோ புத்தகங்களை வாசித்து ந‌ல்ல கருத்துகளை தெரிந்துகொண்டும் மாற்ற -மில்லாமல் நீ தொடருகிறாயே, அது தான் என்னை மிகவும் கவர்ந்த குணம்.நீ நரகத்துக்கு வந்த பிற‌கு நாம் இருவ‌ரும் சேர்ந்து வாழுவதை விட,பூமியில் சேர்ந்திருக்கிறோமே என்னை பூரிப்பாக்குகிற உண்மை இது. நான் இருக்கிற இடத்திலே உன்னை சேர்ப்பதற்கு நான் எடுக்கிற எல்லா நடவடிக்கைகளும் உன் விஷயத்தில் வெற்றியாய் அமைவதை நினைத்தால் என் இருதயம் இன்பத்தால் நிரம்பி வழிகிறது தெரியுமா?

டிவியில் வருகிற தொடர் நாடகங்கள் பார்ப்பது, அவ்வப்போது சினிமா நிகழ்ச்சிகளை ரசிப்பது, மற்றவர்களைப் பற்றி தர‌க்குறைவான வார்த்தைகளை தாராளமாய் பேசுவது, உன் தலைமை அதிகாரியை மதிக்காமல் ந‌டப்பது போன்ற‌வை எல்லாம் என்னுடைய சிறப்பான ஆற்றலால் உனக்குள் நான் புகுத்திய காரியங்கள் என்பது மட்டும் என‌க்கு மகிழ்ச்சி அல்ல,இத்தனையும் செய்துங்கூட "கிறிஸ்தவன்" என்ற போர்வைக்குள் நீ மறைந்திருக்கிறாயே அதுதான் விசேஷம்!

ஆனால் எனக்கு ஒரே வருத்தம் என்னன்னா…நீ உலக வாழ்க்கையை முடித்து என்னிடம் நிரந்தரமாய் வந்தவுடன் உன்னை சந்தோஷமாய் வைக்கமுடியாதது தான். நான் இருக்கிற இடமே அக்கினிக் கடல் தானே.அதனால் தான் உன்னை இப்பவே சிற்றின்ப சாலையில் வைத்து சந்தோஷப்படுத்துகிறேன்.கிடைக்கிற சான்ஸை விட்டுவிடாதே!

அனுபவி நன்றாக அனுபவி

மரணத்திற்கு பின்னிருக்கிற நித்திய பரலோக வாழ்வைக் குறித்து எடுத்துக் கூறி,யாராவது உன்னை என்னிடமிருந்து பிரித்துவிடுவார்களோ என முன்பு நான் பயந்தது உண்டு.ஆகவே தான் நீ என்னுடைய ஆள் என்று வெளியே பிரபலமாகாதபடிக்கு உன்னை வெளிப்படையான கிறிஸ்த‌வ‌ நடைமுறைக‌ளை‌ப் பின்ப‌ற்றச் செய்தேன்.

பாவ‌ப் ப‌ழ‌க்க‌ங்களைத் தொட‌ர்ந்து பின்ப‌ற்றிய‌தால் நீ என்னிட‌ம் நிர‌ந்த‌ர‌மாய் வ‌ந்து சேருகிற‌ நாள் ச‌மீப‌மாகிவிட்ட‌து.நீ என்னிட‌ம் வ‌ந்துவிட்டால் பூமியில் என் ப‌க்க‌மிருந்து செய‌ல்ப‌ட‌ ஆள் தேவைப்ப‌டும்.ஆக‌வே இன்னும் நீண்ட‌ நாள் வாழ‌விருக்கிற‌ சிறுபிள்ளைக‌ளுக்குள்ளும் இளைஞ‌ர்க‌ளுக்குள்ளும் கெட்ட‌ சுபாவ‌ங்க‌ள் ப‌தியும்ப‌டி அவ‌ர்க‌ளுக்கு முன்பாக‌ கோப‌ப்ப‌டுகிறாய்,கீழ்த்த‌ர‌மான‌ வார்த்தைக‌ளைப் பேசுகிறாய்,ச‌ண்டையிடுகிறாய்,இன்னும் ப‌ல‌ தீய‌ செய‌ல்க‌ளில் ஈடுப‌டுகிறாய்.இப்ப‌டியெல்லாம் நீ செய்வ‌தால் அவ‌ர்க‌ளும் என் ப‌க்க‌ம் வ‌ந்துவிடுவார்க‌ள்.
அதும‌ட்டும‌ல்ல‌ என்னிட‌ம் வ‌ருகிற‌ பிள்ளைக‌ள் த‌ங்க‌ள் இள ர‌த்தத்தின் வ‌லிமையால் மேலும் ப‌ல‌ரையும் என் ப‌ணியில் இணைத்து விடுவார்க‌ள்.உன்னைக் குறித்து என் எதிர்பார்ப்பு இதுதான்.

ப்ளீஸ்…என‌க்காக‌ இதெல்லாம் செய்ய‌க்கூடாதா என்ன‌..?

நான் எத்த‌னை முறை உன்னைக் காப்பாற்றியிருக்கிறேன்,நீ பொய் சொல்லி, திருடி மாட்டிக் கொள்ள‌ வேண்டிய‌ இட‌த்தில்,உண்மையாய் வாழுகிற‌ வேறொருவரை மாட்டிவிட்டு உன்னைத் தப்புவித்திருக்கிறேன் அல்லவா?அதையெல்லாம் நினைத்துப் பார்த்து என‌க்கு நீ க‌ட்டாய‌‌ம் இந்த‌ உத‌வியைச் செய்!என் ச‌ந்தோஷ‌த்தை பரிபூர‌ண‌மாக்கு.ந‌ர‌க‌த்தினை உன் போன்றோரால் நிர‌ப்புகிற‌ என் ப‌ணி ந‌லிவின்றி தொட‌ர‌ உன் த‌ய‌வை நாடுகிறேன்.

தேங்க்யூ பை,பை,சீ,யூ..!

இப்ப‌டிக்கு,
ச‌ங்கார‌ப் ப‌ணியில்,
சாத்தான்

நன்றி: PASTOR இறையன்பு ஜாண்


http://bibleuncle.blogspot.com/2005/01/blog-post_01.html

ஏன் கிறிஸ்மஸ்?

 

கிறிஸ்து இல்லாமல் கிறிஸ்மஸ் இல்லை. நத்தார் தினத்திற்காய் பிறந்தவர் அல்ல.

அவர் உலகத்தின் பாடுகள் எத்தனை எத்தனையோ?

அத்தனையும் மீட்க பாடுபட்டவரே கிறிஸ்து!

 

கி - கிறுக்கப்பட்ட உன்  பெயரை சீர்படுத்தினார்.

றி - றிமாண்டில் இருந்த உன்னை விடுதலையாக்கினார்

ஸ் - ஸ்தலம் இல்லாத உனக்கு ஸ்தானம் தந்தார்.

து - துதிக்க வைத்தார் உன்னை தகுதியாக்கினார்.

 

அவர் தாம் உனக்காக பிறந்த கிறிஸ்து இரக்கமுள்ள;யேகோவா, உன் சுமைகளை உன்னை விட்டு அகற்றினார். இவர்தான் இ-யே-சு.

 

கிறிஸ்துவோ உலகில் பிறந்தார் வாழ்ந்தார் உயிர்த்தார் மரணம் அவரை ஆட்கொள்ள முடியவில்லை.இயேசு வெறும் மனிதனாக மாத்திரம் இருந்திருந்தால்,அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருப்பார். அவருடைய சரீரம் கல்லறையிலே இருந்து அழுகி அழிந்து போயிருக்கும். எமக்கு நித்தியஜீவனை அளிக்கும்படி தம்மை ஜீவனோடு எழும்பினார். அவர் ஜீவனை கொடுத்து எமககு ஜீவன் அளித்தர். (அப் 2:24) அநேகருக்ககு ஜீவன்அளிப்பவரான கிறிஸ்து எல்லா நாமங்களுக்கும் மேலான நாமமானார். இதனால் வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரத்தையும் பெற்றவர்(மத் 28:18 ) எமக்கு அந்த அதிகாரங்களை கொடுதிதுள்ளார். பெரிய பெரிய மகான்கள், சர்வாதிகாரிகள் ஜசுவரியவான்கள் உலக புகழை தேடியம், மரித்து தம் நாமத்தை பிரஸ்தாபப்படுத்தி ஜீவனை இழந்து போனார்கள்.

 

"கிறிஸ்மஸ் எமக்கு பெற்றோல் மக்ஸ் அழியாத எரிபொருள்  ஆன பரிசுத்த ஆவியின் வெளிச்சத்தை எம் ஜீவியத்தில் கொண்டுவரும் மக்ஸ்" ஆகும்.

 

கிறிஸ்துவின் பிறப்பு ஒரு மனிதனின் பழைய கால இறப்பு

கிறிஸ்துவின் இறப்பு ஒரு மனிதனின் ஆவியின் பிறப்பு

''கிறிஸ்மஸ்" இன்று உங்களுக்குள் பிறக்கட்டும்.

ஆமென்!!

 

Pastor. Jenny Sinnadurai


http://www.nlm-tv.com/Christmas%20Main.htm

உண்மையான தொழுகை

 

 

  "தொழுகை" என்பது, ஒரு நாணயத்தைப் போன்றது. நாணயத்தின் ஒரு புறமோ,அதன் பெறுமதியைக் குறிக்கிறது..அதை நாம் அறிந்திருக்கிறோம். நாணயத்தின் மறு பக்கமோ, மிகவும் முக்கியமான ஒருவருடைய சின்னம்,அல்லது ஒருவரின் தலை அடையாளமாய் இருக்கும்.தொழுகையும்,ஒரு விதத்தில் அப்படித்தான்.நாணயத்தை நாம் கையில் எடுக்கும் போது அதிகமாய் அதன் சின்னத்தையல்ல,அதன் பெறுமதியையே நாம் கவனிக்கிறோம். இதே போலவே நாம் எல்லேரும்,  சபையில் எப்படியாக கர்த்தரைத் தொழுது கொள்ள வேண்டும் என அறிந்துள்ளோர்! ஆயினும் நாணயத்தின் மறு பக்கத்தைக் குறித்து,அக்கறை இல்லாமல் அசதியாய் இருந்து விடுகிறோம். உலகத்தின் பல பாகங்களிலும் தேவனுடைய மக்கள், பரிசுத்த ஆவியானவரின் அநுகிரகத்தைப் பெற்று, தேவனுக்குள் புதுப்பிக்கப்பட்டும், பெலப்படுத்தப்பட்டும், வருகின்றனர்.{அப்போ3:19-21} இந்நாட்களில் சபையானாது கர்த்தருடைய .இளைப்பாறுதலில் பிரவேசிக்கும் படிக்கு, பரிசுத்தவான்களும், மனம் திரும்ப வேண்டும்.என கர்த்தர் அழைக்கிறார். சபையின் சரித்திரத்திலேயே, நாமும் வாழும் இந்நாட்களோ, மிகவும் பரபரப்பாய் இருக்கிறது. குணப்பட்ட சபையில் கர்த்தர், தம் எழுப்புதலை இறக்கி தொழுகையை, தமக்காய் இந் நாட்களில் தம் சபைகளில் மீட்டு வருகிறார். அநேகர் தொழுகையை எப்படி விளங்கிக்கொள்கிறார்கள் எனில் மூன்றோ, நான்கு பாடர்களைப் பாடி,ஒரு பாட்டின் கடைசி வரிகளை திரும்பத், திரும்பப் பாடி, கைகளை உயர்த்தி, கண்களை மூடி சிறிது நேரம் செலவிடின்,அதுவே தொழுகை என!உண்மை தான்,ஒரு வகையில் தொழுகையின் ஒரு சிறிய பாகமாகவே ஆராதனையின்போது செய்யும் தொழுகையாக இருக்கிறது.

1    .கீழ்ப்படிவின் தொழுகை

அத் தொழுகை தேவனுக்கு மிகவும் பிரியமானதொன்று.இப்பேற்பட்ட தொழுகை, பரலோகத்திற்கு நற்கந்த வாசனையை எழுப்புகிறதாக இருக்கிறது.பரலோகத்திலிருந்தும் பூமிக்கு," அவரை அறியும் அறிவு "என்கிற சுகந்த வர்க்க வாசனையைக் கொண்டு வந்து கீழ்ப்படிவோரை, வெற்றி சிறக்கப்பண்ணுகிறது. {11 கொரி 2:14 } ஆபிரகாமின் வாழ்க்கை,இப்பேற்பட்ட தொழுகைக்கு,ஆரம்ப பிதாவாய் இருந்தது.{ஆதி 22:5 } ஆபிரகாம் தன்னுடைய வேலைக்காரரை நோக்கி,"நீங்கள் இங்கே காத்திருங்கள் நானும்,பிள்ளையதண்டானும் அவ்விடம் மட்டும்போய்,தொழுது கொண்டு உங்களிடத்திற்கு திரும்பி வருவோம் என்றான் " என காண்கிறோம். இங்கு நாம் இரண்டு காரியங்களை கவனிக்கலாம்.

1     முதலாவது, ஆபிரகாம் தேவன் சொன்னபடி கீழ்ப்படிந்து, ஈசாக்கோடு கூட, பலியிடும் ஆயுதங்களுடன் மோரியா மலையை நோக்கி புறப்படுகிறான்.

2      இரண்டாவது, தனக்குண்டானது எல்லாம் தனக்கிருந்த ஒரே ஒரு மகன் ஈசாக்குத் தான்,என ஆபிரகாம் அறிந்தும்,தேவனுக்கு பலியிட ஆயத்தமானான். அவ்வேளையில்,தேவன் குறுக்கிடவில்லையாயின் ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிட்டிருப்பான்.இது தான் உண்மையான தொழுகையாகும்.

ஆகவே இது தான் நாணயத்தின் மறு பக்கம்! தொழுகையின் உண்மையான நிலை!தேவனை தொழ வரும்போது, எமக்குண்டான எல்லாமே, எம்மை சிருஷ்டித்தவருக்கு உரியது, என்ற உணர்வோடு வருவோமாயின், கீழ்ப்படிவின் சரணாகதி நிலைக்கு நாம் வருவதை, எந்த சக்தியால் தடுக்க முடியும்? ஆபிரகாம் ஈசாக்கைத் தன் சொந்த குமாரன் என்றும் பாராமல், தொழுகைக்கு என ஒப்புக்கொடுத்ததால் அல்லவா, கிறிஸ்துவிற்குள் பிறந்த அனைவருக்கும் அவன் தகப்பனானான்!  ஆபிரகாமிடம் இருந்து நாம் கற்கும் காரியம் என்ன? ஒரு தனிப்பட்டவரின் கீழ்ப்படிவினால், "பூரண ஒப்புக்கொடுத்தலின்" தொழுகையின் மாதிரியைத்தான். ஆபிரகாம் தேவனைக்  கனப்படுத்தினான். தேவன் ஆபிரகாமை கனப்படுத்தினார். தொழுகையானது பரபரப்பானது.

 

ஆனால் கீழ்ப்படிவோ கிரயம் கொடுக்க வேண்டியதொன்றாக உள்ளது. ஆகவே பூரண கீழ்ப்டிவுள்ள தொழுகையே,பரபரப்பை உண்டு பண்ணக் கூடியது. உண்மையான தொழுகையோ, தேவனை மையமாக கொண்டதும்,  தேவனை நோக்கியதுமாக இருக்கிறது. "கிரயம்" என்னும் பொழுது நாம் கிரயத்திற்கு கொள்ளப்பட்டோம். ஆகவே நாம் இனி கிரயம் கொடுக்க வேண்டியதில்லை.

ஆயினும் கீழ்ப்படிவு என்னும் பொழுது எமக்குண்டான யாவையும்,  தேவனுக்காய் கொடுக்கூடிய, அந்த விதமான  சரணா கதியான நிலைதான். சிலருக்குக் :" கிரயமாக"  இருக்கும். அதாவது தொழுகையின் இரகசியத்தை அறிந்த ஒருவர், கர்த்ரை பிரியப்படுத்த அறிந்தவர். இவர் எப்பேற்பட்ட சூழ்நிலையிலும், எதையம் விட்டு, தொழுகைக்கு முதலிடம் கொடுப்பார். 

 

2    ஜீவபலி

பவுல் அப்போஸ்தலன், தன் வாழ்க்கையின் முக்கிய பகுதியாகவே ,கர்த்தரை தொழுவதில் வாஞ்சை உள்ளவராக இருந்தார்.எந்தவொரு போராட்டமான சூழ்நிலையோ, நிர்ப்பந்தமான நிலையோ, அவமானங்களோ, கர்த்தரை தொழவோ, அவருடைய நாமத்தை துதிக்கவோ, பவுலிற்கு தடையாக இருக்கவில்லை. பவுல் சபைகளிற்கு எழுதிய நிருபங்களை வாசிக்கும் போது அக் கடிதங்களில், திடீரென கர்த்தரை தொழுது கொள்ளுவதையும், தேவனைக் குறித்து வர்ணிப்பதையும் காண்கிறோம். {ரோமர் 11 : 33-36} தேவனைப் பூரணராயும், அவர் இருக்கிறபடியே அவரை பவுல் அடையாளம் கண்டதாலும், எப்பொழுதும் வாயில் துதியும்,அவர் ஆவியிலும், தன் சரீரத்திலும், தேவனை தொழுது கொண்டே இருந்தார் {ரோ12:1} பவுல் சொல்லும் காரியம், புத்தியுள்ள ஆராதனைக்கு சரீரமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கப்படவேண்டும். என. பவுலின் சொல்லும்,  வேண்டுகோளும் என்னவாய் இருக்கிறது எனின், நாம் இப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேசந் தரியாதவர்களாய், மனம் புதிதாகி மறுரூபமாக வேண்டும் என்பதையை!

அப்பேற்பட்ட நிலைக்கு நாம் வந்தாலே தவிர,ஆவியில் நாம் தேவனைத் தொழுது கொள்வது என்பது கூடாத காரியம்.நாம் எதைத்தான் தேவனுக்குக் கொடுக்கப்போகிறோம். ? சிந்தித்துப்பாருங்கள்! பாதாளத்திலிருந்து எம்மை மீட்ட அந்த அன்பருக்கு உங்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பதை விட, எதைத்தான் கொடுக்கப் போகிறீர்கள்? "ஜீவபலியாக" எம்மைக் கொடுத்து தொழுது  கொள்வது என்பதன் உண்மையை, நாம் சரியாக அறிந்து உணர்வடைந்துள்ளோமா?   எங்களுடைய சபை ஆராதனையில், நாம் தொழுகையில் மிகவும் கெச்சிதமாய், வழி நடத்தலாம். வழி நடத்தப்படலாம். ஆயினும் எமது வாழ்க்கை முறை கர்த்தரை தொழுது கொள்ளுகிறதா? சபையில் துதி, தொழுகையை செய்வோர் மாத்திரமல்ல, எல்லா தேவ பிள்ளைகளையுமே, கர்த்தர் தொழுகைக்குரிய ஜனங்களாய் அழைத்துள்ளார்.

 

ஆகவே எங்களுடைய முறை தேவனைத் தொழுது கொள்கிறதா? உண்மையான தொழுகை தேவனை மகிமைப்படுத்தும். தேவனுடைய நாமத்தை பிரஸ்தாபப்படுக்கங்கள் ஆகவே தேவனை தொழுது கொள்ளும் நோக்கம் முதலாவது, சரியாக இருக்க வேண்டும்.வேறொரு எந்தக் காரணத்திற்காயும் தேவனை தொழுது கொள்ளக் கூடாது. இயேசு சொன்னார் " பரலோகத்தலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப் படுத்தும்படி ,உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது" என .{மத் 5 : 16 } பவுல் சொல்லுகிறார் { 1 கொரி 10 : 31} ஆகையால் நீங்கள் புசித்தாலும் , குடித்தாலும்  எதைச் செய்தாலும் தேவனுடைய மகிமைக்கு என்றே செய்யுங்கள். தொழுகையானது, சபையோடு நின்று விடும் ஒரு காரியமல்ல, அது உங்களுடைய வேலை இடங்களிற்கும், சமையல் கூடங்களிற்கும், உங்கள் படுக்கை அறைகளிற்கும், உங்கள் நண்பர்களிடத்திலும், உங்கள் குடும்பத்திற்கும், எடுத்துச் செல்லப்பட வேண்டியது. அப்பொழுது கர்த்தரை அறிந்து கொள்ளும் படியாக கர்த்தர் எங்களிற் கூடாகக் கிரிகை செய்வார்.

*     மனைவிமார் புருசரிற்குக் கீழ்ப்படிதலும், "தொழுகையே"


*     கணவன்மார் தம் மனைவிமாரின் மேல், சபையில் கிறிஸ்து அன்பு கூருவது போல அன்பு கூருவதில் கீழ்ப்படிவதும்"தொழுகையே"


*    பிள்ளைகள் கர்த்தருக்குள் பெற்றேருக்குக் கீழ்ப்படிவதும், "தொழுகையே "


*        தகப்பன்மார் தம் பிள்ளைகளை சிட்சித்து, அப்பிள்ளைகள் செல்ல வேண்டிய வழியில் பயிற்றுவிப்பதும், தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிதலே, அதுவும் "தொழுகையே"


*    ஊழியர்கள் தம் எஜமானிற்குக் கீழ்ப்படிவதும், கிறிஸ்துவின் முன்மாதிரி, இதுவும் "தொழுகையே"


*    எஜமான்கள் தம் ஊழியர்களை, மதித்து இரக்கம் காட்டி அன்பு கூருவதும், "தொழுகையே"


* கொலோ 3:18-24 ,எபே 5:22 ,  6 : 9 }

 

ஆபிரகாமைப் போல எம்முடைய வாழ்க்கையும், பூரண கீழ்ப்படிவு உடையதாக இருக்கட்டும்.அப்பொழுது எமது பரலோக பிதாவும், எம்மில் பிரியப்படுவார். கர்த்தரை அறியாதோர், கிறிஸ்துவை எம்மில் காண்பார்கள் ஆகவே  நாணயத்தின் ஒரு புறத்தை சபையும்,  மறு புறத்தையோ உலகமும் காண்கிறது. ஆகவே சபையில் மாத்திரமல்ல,விசுவாசிகளின் வட்டத்திற்கு வெளியேயும் , நாம்  முன்மாதிரியாய் இருக்கும் பொழுது,  அது தேவனுக்கு உகந்த தொழுகையாக இருக்கும்!

 

free web counter