Wednesday, December 8, 2010

விசுவாசம்

    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVyMUIU0WNBDjTOTJovDHKq32nikZGUikVT7WE4HgHF3d7TDGqZoRbrUgKN4_Ncqi05YrEy0A3HennkXivMJAeRE1WyQJxtZdsll5I57oP9KqV1czExSZ22i5Lj5foG4_kKnBiVDXAvrM/s320/JC003211.jpg
 
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும்
காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது (எபி.11:1).

வேதாகமம் விரித்துக் கூறும் எண்ணிமுடியாத அதிசயங்களைத் தரிசிக்கவும் வல்லமைகளை விவரித்துக் கொள்ளவும் வாக்குத்தத்தங்களைப் பெற்றுக் கொள்ளவும் உடன்படிக்கைகளுக்குப்பங்குதாரர் ஆகவும் தேவனுடன் முகமுகமாய்ப் பேசவும் மனிதனுக்காக தேவன் அளித்துள்ள
அதிசயமான திறவுக்கோலே "விசுவாசம்". விசுவாசம் என்னும் நுழைவுச் சீட்டு இல்லாதவர்களால்
பரிசுத்த வேதாகமத்தின் 'அறியாததும் எட்டாததுமான பெரிய காரியங்களை' காணமுடியாது(எரே.33-3).
விசுவாசம் இல்லாதவனிடம் இருக்கும் வேதாகமம் வெறும் ஒரு புத்தகமே.

அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக
(யாக்.1-7). என்று பரிசுத்த வேதாகமம் சந்தேகப்படுகிற இருமனமுள்ள இதன் வழிகளில் எல்லாம் நிலையற்றவனுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

ஒரு பக்தன் இப்படி எழுதுகிறார்:

  நிரூபிக்கும் முன்னரே நம்புவதும் முடியும் என்று நிச்சயிப்பதற்கு முன்னரே தாவுவதும்
அனைத்து உண்மையும் வந்து அடையும் முன்னரே பதில் அளிப்பதும் எல்லாப் பிரச்சினைகளையும்
தீர்க்கும் முன்னரே முடிவெடுப்பதும் சரியான முயற்சிதான் என்று தெளிவதற்கு முன்னரே
ஈடுபடுவதுமே விசுவாசம் ஆகும்.

நிரூபணம் சாத்தியம் இல்லை என்கின்ற போதுதான் விசுவாசம் சாத்தியம் ஆகிறது.இது இவ்வளவு கடினமான விஷயம் என்பதால்தான் ஓர் ஆவியின் வரமாக அருளப்படுகிறது. வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும்...அளிக்கப்படுகிறது(1 கொரி.12:9இ10).

இது தேவனிடம் கேட்டுப்பெற்றுக் கொள்ளவேண்டிய வரங்களில் ஒன்று.மனிதனின் சுயமுயற்சியால்
கூடாதது என்று அறிந்து கொள்ள வேண்டும்.

ஒருநாள் இரவு ஒரு மனிதன் ஒரு மலைப்பாங்கான பகுதியில் பயணம் செய்து கொண்டு இருந்தான்.
திடீரென கால்வழுக்கி மலைச்சரிவில் உருண்டுவிட்டான்.விழும்போது ஒரு மரக்கிளை கையில்
பிடிபட்டது.அதை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு தொங்கினான்.கீழே ஒரே இருள்.ஒன்றுமே
தெரியவில்லை.எவ்வளவு ஆழமான பள்ளமோ?
 
  'கடவுளே காப்பாற்றுஇ'கதறினான். "கீழே குதித்து விடுஇகாப்பாற்றுகிறேன்இ"
  இறைவனிடம் இருந்து உடனடியாக பதில்வந்தது. தொங்கினவன் நம்பவில்லை.
  'குதிப்பதா?'நடுங்கினான்.ஆனால் கைவலி பயங்கரமாக இருந்தது.
  மீண்டும் கதறி அழுதான்.ஐயோ கடவுளே! காப்பாற்றும் அப்பா'
 கீழே குதித்துவிடுஇ நிச்சயமாய் காப்பாற்றுவேன்.'அவனுக்கு விசுவாசம் இல்லை.
 பயந்தான். இரவெல்லாம் எப்படியோ வலியைப் பொறுத்துக் கொண்டு தொங்கினான்.

விடியத் தொடங்கியது.மங்கலான ஒளி பரவியது. கீழே பார்த்தவன் அதிர்ச்சி அடைந்தான்.
அவனது காலுக்குக் கீழே மூன்று நான்கு அடியில் நல்ல சமமான தரை.விசுவாசம்
இருந்திருந்தால்இ இந்த வேதனை உண்டா?ஆனால் இது இலேசான காரியம் இல்லை.
இத்தகைய சூழ்நிலைகளில் அகப்பட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே அந்த அசாத்தியம் புரியும்.



இந்த விசுவாசத்தை வளர்த்துக்கொள்வது எப்படி என்பதை ஆபிரகாமின் வாழ்க்கை நமக்கு
காட்டுகிறது:
      
   தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு
  நிறைவேற்ற நமபிஇதேவனை மகிமைப்படுத்திஇ(ஆபிரகாம்) விசுவாசத்தில்
  வல்லவனானான்(ரோம.4:21).

தேவ வார்த்தைகளாம் வேதத்தைஇ வசனத்தை முழுநிச்சயமாய் நம்புங்கள். தேவனை
இடைவிடாது இருதயத்திலும்இ சபையிலும் ஆராதித்து மகிமைப்படுத்துங்கள்.

ஆபிரகாமைப் போல விசுவாசத்தில் வல்லவர் ஆவீர்கள்.விசுவாசத்தால் மட்டுமே
வேதம் கூறும் அதிசயங்களைக் கண்டு உணர்ந்துஇதரிசிக்க முடியும்.உங்கள்
வாழ்க்கையும் அதிசயமாய் மாறும்.    

அதிசய வேதம் புத்தகத்திலிருந்து...............

No comments:

free web counter