Monday, December 6, 2010

வைரத்தை அறுக்கும் வைரம்


 

   கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.(சங்-111:10).
  
 ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், தேவன் அவன்மேல் கூட்டினார்.
 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்
 போட்டால் ஜீவபுஸ்தகத்திலிருந்தும்,பரிசு
த்த நகரத்திலிருந்து,இந்தப் புஸ்தகத்தில் எழுதப்
 பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.(வெளி-22:18,
19).
 
இந்தக் கடுமையான எச்சரிக்கை வெளிப்படுத்தின விசேஷத்திற்கான எச்சரிக்கை மட்டுமல்ல.
பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பெற்று வேதபுத்தகத்தின் இறுதியில் வைக்கப்பட்டு இருப்பதனால்
இந்த அறிவிப்பு வேத புத்தகம் முழுவதற்குமே உரியதாகும்.பரிசுத்த ஆவியானவரால் ஏவப்
பட்டவர்களால், இப்படியே தள்ளப்பட வேண்டியவை தள்ளப்பட்டு,வேதாகமம் ஆவியோடும்,
உண்மையோடும் தொகுக்கப்பட்டது. இந்த வேதாகமத்தில் இருக்கிற ஒவ்வொரு எழுத்தும்
உண்மை என்பதே ஓர் அதிசயம் ஆகும். அதனால்தான் எதையும் கூட்டவும் குறைக்கவும்
கூடாது என்ற கடுமையான எச்சரிக்கை தரப்பட்டுள்ளது.

ஒருமுறை தமிழில் உள்ள மிக அரிய இலக்கியக் கருவூலமான திருக்குறளை ஒருவர்
வேறு மொழிபெயர்த்தார். நல்ல இலக்கிய சேவைதான். கூடவே அவர் வேறொன்றையும்
செய்த்தார்.அதாவது எழுதியவர் என்ற இடத்தில் திருவள்ளுவர் என்று போடாமல்,தன்
பெயரையே போட்டுக்கொண்டார்.ஆக, சில நேரங்களில் மனிதன் எது வேண்டுமானாலும்
செய்வான்.தேவவார்த்தைகளை அவன் புரட்டிவிடக் கூடாது என்பதற்காகத் தான் இந்த
எச்சரிக்கை. அப்படியே வேத எழுத்துக்கள் ஒவ்வொன்றும் உருட்டுகள் இல்லாமல்
காலங்காலமாக கட்டுப்பாட்டுடன் காப்பாற்றப்பட்டு வருகின்றன.உள்ளதை உள்ளதென்றும்
சொல்லுங்கள்(மத்.5:37) என்று இயேசுவானவர் கூறியபடி,வேதாகமத்தில் உள்ளபடியே நாம்
விசுவாசிக்க வேண்டும்.இயற்கை,விஞ்ஞானக் கருத்துக்களுக்கு சில வேதாகம உண்மைகள்
மாறி இருப்பதாகத் தோன்றுவதால் சிலர் புதிய புதிய விளக்கங்களை வகுத்தும் தொகுத்தும்
கூற முற்படுகின்றனர். இது தேவை அற்றது.

விஞ்ஞானம் ஒவ்வொரு கணமும் வளர்ச்சியுற்றுக் கொண்டே வருவதாகும்.அணு பிளக்க
முடியாதது என்பது டால்டனின் அணுக்கொள்கை.பின் அது பிளக்கப்பட்டது.மனித அறிவு
முற்று முடிந்த முழுமை பெற்றதல்ல.என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல.(ஏசா-55:8).
என்று தேவன் தீர்க்கமாகக் கூறுகிறார்.இன்று முரண்பாடாகத் தோன்றினாலும்,போதிய அறிவு
வளர்ச்சி பெற்ற பின்,வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது உண்மை என்று மனிதன் அறிந்து கொள்வான்.

ஆதியாகமம் 5-ஆம் அதிகாரத்தில் நமது மூதாதையர்கள் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக
வாழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.இது இயற்கைக்கு முரணான கட்டுக்கதை என்று கருத்ப்பட்டது.
வேதம் உண்மையைத் தவிர வேறு எதையும் கூறுவதில்லை என்று நம்பிய,அறிந்த வேத
அறிந்த வேத அறிந்த வேத அறிஞர்கள் கூட இந்த இடத்தில் தடுமாற்றம் அடைந்தனர்.
இவை வெறும் குறியீடுகளே என்று கருதினர்.உதாரணமாக,ஏனோக்கின் வயதாகிய 365,
ஒரு வருடத்தின் மொத்த நாட்கள்--அதாவது முழுமையானா ஆயுளை குறிக்கிறது என்றும்
லாமேக்கின் வயதான 777 என்பது முற்றுப்பெற்றதை குறிக்கிறது என்றும் (7-முழுமை எண்)
விளக்கம் அளித்தனர்.

சரித்திரகாலத்தில் விழும் இடைவெளியை ஈடுகட்ட,தனிமனிதனின் வயது கூட்டிக்காட்டப்படுகிறது
என்றார்.இதற்கு சான்றாக பத்து சுமேரியஅரசர்கள் 72,000 ஆண்டுகள் ஆண்டதாகக் கூறப்படும்
புராணத்தைச் சுட்டிக் காட்டினார்.ஆனால் "எவ்வளவேனும் பொய்யுரையாத" (எபி.6:18).
தேவன் அருளிய வேதம் சத்தியம் என்று பலர் விசுவாசித்தனர்.இன்றைய செய்தி என்ன?
விஞ்ஞானம், வேதம் உண்மை என்று நிருபிக்கும் ஆதாரங்கல்ளைக் கொடுக்க
ஆரம்பித்துள்ளது.

சமீபத்திய மரபணுக்கள் பற்றிய ஆராய்ச்சியில் தெரிவது என்ன? நமது உடலில் உள்ள
உயிரணுக்கல் இருக்கும் குரோமோசோம்களில் உள்ள ஜீன்களே ஒரு மனிதனின் உயிர்
வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. இவற்றின் உயிர்க்குறியீடுகளே வாழ்நாள்,முதுமை,மரபு
சார்ந்த வியாதிகள்,குணநலன்கள்,பால். போன்றவற்றைக் கட்டுப்படுத்துகின்றன.இவற்றை
மறுதிட்டப்படுத்துவதின் மூலம் ஒரு மனிதனை 1000 ஆண்டுகள்கூட வாழவைக்க
முடியும் என்று இன்று விஞ்ஞானம் நம்புகிறது. இந்த ஜெனிடிக் குறியீடுகளைப்
படித்துவிட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் மூலம் இதுவரை கடவுளுக்கு
மட்டுமே தெரிந்த இரகசியத்தை இவர்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகின்றனர்.

இந்த விஞ்ஞானிகளின் அறிக்கையை நன்கு கவனிக்க வேண்டும். "இதுவரை
கடவுளுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்" என்று தங்களை அறியாமலே இவர்கள்
வாயில் இருந்தே உண்மையான அறிக்கை வெளிவந்து விட்டது.ஜெனிடிக் குறியீடுகளைக்
கட்டுப்படுத்துவதின் மூலம் வாழ்நாளை கூட்டவோ குறைக்கவோ முடியும் என்பது
விஞ்ஞான ரீதியாக சாத்தியம் என்ற கோட்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததே.
இந்த ஆராய்ச்சியின் இறுதி வெற்றிக்கு நீண்டகாலமாகும். ஆனால் முடியும்.

எது எப்படி இருந்தாலும், மனித உடலின் வாழ்வியல் தன்மை மரபுக்குறியீடுகள் மூலம்
மரபணுக்களால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பது அறிவியல் உண்மை இதனை மனிதன்
தன்னாலேயே மாற்றி அமைக்க முடியும் என்று கருதுகிறான் என்றால் தேவனால் ஏன்
முடியாது என்பதே நமது கேள்வி. இந்த வெளிச்சத்திலேயே 900 ஆண்டு ஆதிப்பெற்றோர்கள்
 வாழ்ந்தார்கள் என்ற உண்மையை மேலும் ஆராய்வோம். மனிதனின் வாழ்நாள்ஆயிரம்
ஆண்டுகள் என்றே (ஆதாமின் பாவத்திற்குப் பின்) ஆதியில் தேவன் வகுத்தார்.
    * கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம் போலவும்
      ஆயிரம்வருஷம் ஒருநாள் போலவும் இருக்கிறது.(2 பேது.3:8)

    * ஆயிரம் வருட அரசாட்சி(வெளி.20:6)
      * ஏழுநாள் படைப்பு (ஆதி. 1-ஆம் அதிகாரம்).

 என்பனவற்றின் ஆழ்பொருள் நுட்பங்களை தொகுத்தால் விரியும்.மனிதனின்
பாவங்கள் காரணமாக தேவன் மனஸ்தாபப்படுகிறார். அப்பொழுது கர்த்தர்:
என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதிக்லை.அவன் மாம்சந்தானே,
அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்(ஆதி.6.3)
(நோவா காலத்து வெள்ளம் இது கூறி 120 வருடம கழித்து வந்ததையும்
இது குறிப்பிடலாம் என்பர் சில ஆய்வாளர்கள்.

இதைத்தொடர்ந்து தரப்படும் வம்சவரலாற்றில் மனிதனின் ஆயுட்காலம்
படிப்படியாகக் குறைந்து வருவதைக் காண்கிறோம்.(ஆதி.11:10-32)--நோவா 950,
சேம் 600, அர்பக்சாத் 438,சாலா 433,ரெகூ 239,நாகோர் 148, தேராத் 205, ஆபிரகாம் 175).
நோவாவுக்கு முன் உள்ள பரம்பரையினரின் வயது 900 சுற்றி சுழல்வதையும்,
நோவாவுக்குப் பின் ஒரு கிரமமாக அது குறைந்து வருவதையும் காண்கிறோம்.
(அதாவது 1000 ஆண்டுகள் 120ஆண்டுகளை நோக்கிக் சுருங்குகிறது).
தேவன் மறுபடியும் மனிதனின்  ஆயுட் காலத்தைத் திட்டமிட்டார் என்பதற்கு
இதுவே சான்று. பாவத்தினால் ஏற்பட்ட சாபத்தினால் பூரண வயதான 1000 ஆண்டுகளை
மனிதன் இழந்து வெறும் 120 ஆண்டுகளுக்கு ஆயுள் குறைந்தது. எங்கள் நாட்களெல்லாம்
உமது கோபத்தால் போய்விட்டது (சங்.90:9). என்று சங்கீதக்காரன் புலம்புவது, இதற்குக்
கூட பொருத்தமாகத்தானே இருக்கிறது. கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப்
பெருகப்பண்ணும் (நீதி. 10-27).

மேற்கண்ட வசனங்கள் ஒன்றை உறுதிப்படுத்துகின்றன. தெய்வ பயமும்,தேவ கோபமும்
நமதுவாழ்நாளை நிர்ணயிக்கின்றன என்பதே. இதற்கான அடிப்படை நமது பாவமே.
எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும்,
அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே(சங்.90-10) மனிதனின் வாழ்நாளை
120 ஆண்டுகள் என்ற மேல் எல்லையில் இருந்து, "பாவம்" மேலும் குறைத்து வ்ட்டதைக்
காண்கிறோம். எனவே பாவமே ஆயுளைக் குறைக்கிறது என்று அறிகிறோம்.

விஞ்ஞானம் வளர வளர, இதுவரை முரண்பாடுகள் போல் தோன்றிய உண்மைகள்
முரண்பட்டதல்ல என்று நிறுவப்படுகின்றன.
வேதாகம உண்மைகள் அறிவியலுக்கு எதிரானவை அல்ல.வேதக் கருத்தை விளக்கும்
அளவுக்கு விஞ்ஞானம் வளரவில்லை என்றே அர்த்தம்.ஆயுள் காலத்தைப் பொறுத்தவரையில்
வேதம் கூறும் 1000 ஆண்டுகள் உண்மையே. ஆதாம் முதற்கொண்ட ஆதி பிதாக்கள் பாவம்
பரவாத பூமியில் நீண்ட நாள் வாழ்ந்தனர்.இது கட்டுக் கதை அல்ல என்று இன்று விஞ்ஞானம்
மெய்ப்பிக்கிறது.

அதிசய வேதம் புத்தகத்திலிருந்து...............

No comments:

free web counter