Tuesday, December 7, 2010

புனித தோமா செய்த நற்செய்திப் பணியின் விளைவும் இப்பொழுது இருக்கும் போப்பாண்டவரும் ஒரு வரலாற்றுப் பார்வை


தமிழகத்தில் புனித தோமா செய்த நற்செய்திப் பணியின் விளைவும் இப்பொழுது இருக்கும் போப்பாண்டவரும்
ஒரு வரலாற்றுப் பார்வை

முன்னுரை

இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்கள் வழியாக உலகில் பரவிய நற்செய்தியில், பேதுருவின் தலைமையில் எருசலேமைச் சுற்றிப் பரவிய நற்செய்தி இன்று "கிறிஸ்தவ மதம்" என்னும் பெயராலும், தோமா வழியாக, தமிழகத்தில் பரவிய நற்செய்தி இன்று "இந்து மதம்" என்னும் பெயராலும் அழைக்கப்படுகின்றன என்பதை முதலில் உள்ளத்தில் கொள்ள வேண்டும். கிறிஸ்தவ மதம் கி.பி.4-ஆம் நூற்றாண்டு முதல் ஐரோப்பியர்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பதைப் போன்று, இந்து மதம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு முதல் படிப்படியாக, பிராமணர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. இதனால் அடிமைப்பட்டுள்ள இவை இரண்டும் ஒன்றையொன்று அடையாளம் காண்பதில் பல சிக்கல்களைச் சந்திக்கின்றன. இச்சிக்கல்கள் நீக்கப்பட்ட வரலாற்றை நோக்குவோம்.

ஐ. புனித தோமா தமிழகம் வந்தாரா?

1. "புனித தோமா தமிழகத்தில் 20 ஆண்டுகள் நற்செய்திப் பணி செய்தார்" என்று இந்தியக் கிறிஸ்தவ வரலாற்றை எழுதும் அனைவரும் தவறாமல் குறிப்பிடுகின்றனர்.

2. "சின்னமலையில் ஈட்டியால் குத்தப்பட்டார்" என்றும், "புனித தோமா மலையில் உயிர் நீத்தார்" என்றும், "சாந்தோமில் அடக்கம் செய்யப்பட்டார்" என்றும் இடங்களைத் தவிர, உலகில்  வேறு எங்கும் எந்த இடமும், இதுவரை யாராலும் சுட்டிக் காட்டப்படவில்லை.

3. இவ்வாறு, புனித தோமா இறந்த இடம், அடக்கம் செய்யப்பட்ட இடம் என்று இந்த இடங்களைத் தவிர, உலகில் வேறு எங்கும் எந்த இடமும், இதுவரை யாராலும் சுட்டிக் காட்டப்படவில்லை.

4. மேலே கூறப்பட்டுள்ள 3 இடங்களிலும் அவரின் நினைவாக 3 ஆலயங்களைக் கட்டி வழிபாட்டை நடத்தி வருகின்றனர்.

5. அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள சாந்தோம் ஆலயம் பேராலயமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

6. இப்பேராலயம் புனித தோமாவின் பெயரால் அகில உலகப் புனித நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
7. உலகம் முழுவதிலிருந்தும் வரும் மக்கள் இப்புனித நினைவுச் சின்னங்களைப் பார்வையிட்டும் இறை வேண்டுதல் செய்தும் செல்லுகின்றனர்.

8. கிறிஸ்தவர்களின் அகில உலகத் தலைவராகிய போப்பாண்டவர் இரண்டாம் ஜான் பால் 5.2.1986இல் புனித தோமா அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்து, அந்த இடத்தில் புனித தோமாவின் பெயரால் இறை வேண்டுதல் செய்தார்.
ஐஐ. விளைவு என்ன ஆயிற்று?

1. எண்ணிப் பார்க்கவில்லை?

புனித தோமா 20 ஆண்டுகள் தமிழகத்தில் செய்த நற்செய்திப் பணியின் விளைவு என்ன ஆயிற்று? என்று அறிந்து கொள்ள, இதுவரை உலகிலுள்ள கிறிஸ்தவத் திருச்சபைப் பிரிவுகள் எதுவும் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. அதாவது, இதற்கென ஒரு குழுவை அமைத்து எந்தத் திருச்சபைப் பிரிவும் ஆராய முன்வரவில்லை.
தமிழக வரலாற்றில் சிறப்பாகப் போற்றப்படும் சங்க காலத்தில் 20 ஆண்டுகள். தமிழ்நாட்டில், தமிழ் மக்களிடையே, தமிழ் மொழியில், தமிழ்ப் பண்பாட்டில் புனித தோமா நற்செய்திப் பணியாற்றி, தமிழ் நாட்டில் இரத்தச்சாட்சி மரண மடைந்ததன் விளைவு என்ன ஆயிற்று என்று தமழகத்திலுள்ள திருச்சபைப் பிரிவுகள் கூட இதுவரை சிறிதும் எண்ணிப் பார்க்கவில்லை.

2. ஏன் எண்ணிப் பார்க்கவில்லை?

இதற்குக் காரணம் ஆசிய சமயமாகிய கிறிஸ்தவம் கி.பி.நான்காம் நூற்றாண்டு முதல் ஐரோப்பியர்களின் மண்ணர சாகிய அரசியலுக்குப் பயன்படுத்தப்பட்டு ஐரோப்பியர்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பதேயாகும்.
கிறிஸ்து வேறு
கிறிஸ்தவ மதம் வேறு என்னும் நிலையில் உலகிலுள்ள திருச்சபைப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. விண்ணரசுக்குரிய கிறிஸ்துவிலிருந்து விலகி மண்ணரசுக்குரியதாகத் திருச்சபை மாறிவிட்டது.
கிறிஸ்து உலக மதங்கள் அனைத்திற்கும் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான கடவுளரின் மகன். ஆனால், இன்று உலகிலுள்ள திருச்சபைப் பிரிவுகள் அந்தந்தப் பிரிவுகளில் காணிக்கை கொடுக்கின்றவர்கள் மட்டுமே அவற்றில் உறுப்பினராக முடியும். இது மண்ணரசுக்குரிய அடிப்படை நிலை.
இயேசு கிறிஸ்து மனமாற்றத்தின் அடிப்படையில் விண்ணரசை மண்ணில் நிறுவ வந்தார்.
ஆனால், கிறிஸ்தவத் திருச்சபைப் பிரிவுகள் ஒவ்வொன்றும் மணமாற்றத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் பிரிவுக்கு ஆள் சேர்க்கும் மத மாற்றத்தின் வழியும், மதம் மாறியவர்கள் தவறாமல் கொடுத்து வரும் காணிக்கையின் அடிப்படையிலும் இம்மண்ணில், மண்ணரசுக்கான நிறுவனங்களை உருவாக்கி, அவற்றை நிர்வாகம் செய்து வருகின்றன.

இதனால் கிறிஸ்தவத் திருச்சபையில் ஒவ்வொரு பிரிவின் தலைவர்களும் அவரவர் பிரிவுக்குக் காணிக்கை கொடுக்கும் மக்கள் குறைந்து, நிர்வாகம் சிதறிவிடாதபடி. பாதுகாக்க வேண்டிய கடமையில் இருக்கின்றார்கள். அதாவது, மண்ணரசைப் பாதுகாக்கின்றார்கள்.

இதனால் மற்ற வணிக நிறுவனங்களைப் போன்று கிறிஸ்தவத் திருச்சபைப் பிரிவுகளின் நிறுவனங்களுக்கிடையே போட்டியும், பகையும் ஏற்பட்டு ஒன்றையொன்று வெறுத்து, இயேசு கிறிஸ்துவிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்று விட்டன. இதனால் இயேசு கிறிஸ்துவைப் பற்றியோ, அவருடைய 12 சீடர்களில் ஒருவராகிய புனித தோமா பற்றியோ, அவர் 20 ஆண்டுகள் தமிழகத்தில் செய்த நற்செய்திப் பணியின் விளைவு பற்றியோ எண்ணிப் பார்க்க, கிறிஸ்துவத் திருச்சபைப் பிரிவுகள் எவற்றிற்கும் நேரம் இல்லை; அவற்றிற்குத் தேவையும் இல்லை.
ஐஐஐ. இந்த நிலைமையால் ஏற்பட்ட விளைவுகள் யாவை?

1. போப்பாண்டவரின் மறுப்பு

போப் இரண்டாம் ஜான் பால் மறைந்து புதிய போப்பாண்டவர் ஆட்சிக்கு வந்தார். "புனித தோமா தமிழகத்தில் 20 ஆண்டுகள் தமிழ் மக்களிடையே செய்த நற்செய்திப் பணியின் விளைவு என்ன? தமிழர்களில் ஒருவர் கூட தோமாவின் நற்செய்தியால் ஈர்க்கப்படவில்லையா?" என்னும் கேள்விகளுக்கு இந்தியத் திருச்சபை வரலாற்று ஆசிரியர்களால் இதுவரை சரியான பதில் கொடுக்க இயலவில்லை. கி.பி.4ஆம் நூற்றாண்டில் அடைக்கலம் தேடி தென் இந்தியாவின் சேர நாட்டில் குடியேறிய சீரியக் கிறிஸ்தவர்கள், தாங்கள் புனித தோமாவினால் சேர நாட்டில் கிறிஸ்தவர்கள் ஆனவர்கள் என்று உரிமை பாராட்டுவதற்கு அவர்களால் இன்றளவும் தக்க ஆதாரம் காட்ட இயலவில்லை.
இதனால் புதிய போப்பாண்டவர் புனித தோமா பற்றிய கருத்தைத் தெரிவிக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டபொழுது, புனித தோமா தென் இந்தியா செல்லவில்லை என்னும் தம்முடைய சொந்தக் கருத்தை வெளியிட்டார். இந்த அவருடைய சொந்தக் கருத்து உலகம் முழுவதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. தாங்களே புனித தோமா வழிக் கிறிஸ்தவர்கள் என உரிமை பாராட்டும் தென் இந்தியாவின் கேரளாவிலுள்ள சீரியக் கிறிஸ்தவர்களுக்கும், புனித தோமாவின் புனித நினைவிடங்களைத் தங்களுடையவை என உரிமை பாராட்டிப் பாதுகாத்து வரும் சென்னை மயிலை உயர்மறை மாவட்டத் தலைவர்களுக்கும் புதிய போப்பாண்டவரின் கூற்று பேரதிர்ச்சியாக அமைந்தது.

2. துள்ளிக் குதித்த கூட்டம்

அதே நேரத்தில் புதிய போப்பாண்டவரின் இந்த அறிவிப்பைக் கேட்டு ஒரு கூட்டம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. அந்தக் கூட்டம் எது?

மனுநூலின் இந்துத்துவாகக் கொள்கையின் வழி இந்து மதத்தை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆரியப் பிராமணர்களின் கூட்டமே அது.
இந்துத்துவாக் கொள்கையையுடைய ஆரியப் பிராமணர்களின் அமைப்புகளில் ஒன்றாகிய 'விஷ்வ ஹிந்து பரிஷத்' தன்னுடைய பத்திரிக்கையாகிய 'ஹிந்து மித்திரன்' 16.12.2006 நாளிட்ட ஏட்டில். 

கோவிலை இடித்துத்தான் சாந்தோம் சர்ச் கட்டப்பட்டது என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அக்கட்டுரையின் தொடக்கத்தில் "கேரளக் கிறிஸ்தவர்கள் மீதும், சென்னை ஆர்ச் பிஷப் மீதும் அணுகுண்டு ஒன்றை வீசியுள்ளார் தற்போதுள்ள போப், கேரளா, தமிழகக் கிறிஸ்தவர்கள் தலையில் குறிப்பாக நமது ஊர் வடிகட்ழன ஃப்ராடுலெண்ட் தியரிகளை உலவவிடும் தெய்வநாயகத்தின் தலையில் கல்லை பெரிய பாராங் கல்லைத் தூக்கிப் போட்டிருக்கிறார் இந்த போப்" (பக்.28) என்று எழுதியது.

இந்து மதத்தை அடிமைப்படுத்தியுள்ள இந்துத் துவாக் கொள்கையையுடைய ஆரியப் பிராமணர்களின் அமைப்புகளில் ஒன்றான விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ஹிந்து மித்திரன் ஏடு கூறும்,
1. கேரளக் கிறிஸ்தவர்கள்

2. சென்னை ஆர்ச் பிஷப்


3. கேரள, தமிழகக் கிறிஸ்தவர்கள்யார்? 

என்பது வெளிப்படையாக விளங்குகிறது. இவர்கள் தவிர, 
"குறிப்பாக நமது ஊர் வடி கட்டின ஃப்ராடுலெண்ட்
தியரிகளை உலவவிடும் தெய்வநாயகம்"
என்று இந்துத்துவாப் பிராமணர்களால் மிகுந்த கொதிப்புடன் குறிப்பிட்டுக் கூறப்படும் "தெய்வநாயகம்" என்பவர் யார்? தெய்வநாயகம் உலவவிடும் வடிகட்டின 'ஃப்ராடுலெண்ட் தியரிகள்' யாவை? என்னும் கேள்விகள் எழுகின்றன.

3. யார் இந்தத் தெய்வநாயகம்?

முனைவர் "தெய்வநாயகம்" ஒரு தனிமனிதர். கிறிஸ்தவத் திருச்சபை எதிலும் எந்தப் பொறுப்பிலும் இல்லாதவர். இந்துவாகப் பிறந்தவர். உண்மையைத் தேடி ஓடிக் கொண்டிருப்பவர். உண்மையைத் தேடி 1953இல் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். கிறிஸ்தவ மதத்தில் அவருக்கு ஏற்பட்ட 15 ஆண்டு கால அனுபவத்தில் "கிறிஸ்தவ மதம்" என்பது வேறு, கடவுளின் பிள்ளையாகிய "கிறிஸ்து" (எபிரேய மொழியில் மேசியா, கிரேக்க மொழியில் கிறிஸ்டாஸ் அல்லது கிறிஸ்து. தமிழ் மொழியில் இறைவன்) என்பது வேறு என்றும், அதாவது 'மதம் வேறு; கடவுள் வேறு' என்றும், கிறிஸ்து மட்டுமே விடுவிப்பவர் என்றும், கிறிஸ்தவ மதத்தால் ஒருவருக்கும் விடுதலையைக் கொடுக்க இயலாது என்றும், மற்ற மதங்களைப் போலவே கிறிஸ்தவ மதத்திலும் குறைகள் உண்டு என்றும், இதனால் மனம் மாறுவதே தேவையானது என்றும் மதம் மாறுவது பயனற்று என்றும், அடிப்படையான உண்மைகளை உணர்ந்தார்.
இதனால் இந்து மதத்தைக் கைவிட்டதைப் போன்று கிறிஸ்தவ மதத்தையும் 1968இல் கைவிட்டார். அதன் அடிப்படை உறுப்பினர் நிலையிலிருந்தும் விலகி மதங்களைக் கடந்த மதப் பற்றோ, மத வெறியோ இல்லாத, அதே நேரத்தில் அனைத்து மதங்களையும் அன்புடன் நோக்கும் நடுநிலையுடன் கூடிய கடவுளின் பிள்ளையாக உண்மையைத் தேடும் முயற்சியில் வாழத் தொடங்கினார்.

4. முனைவர் தெய்வநாயகத்தின் ஆராய்ச்சி

அந்த நிலையில் அவர் கடவுளால் அழைக்கப்பட்டு, புனித தோமாவின் 20 ஆண்டு கால நற்செய்திப் பணியின் விளைவு பற்றிய ஆய்வில் 1968 முதல், கடவுளால் ஈடுபடுத்தப்பட்டார்.
அதன் காரணமாக அவர் இந்த ஆராய்ச்சியில் 1968 முதல் ஈடுபட்டு.
தோமா இந்தியா வருவதற்கு முன்னர் இந்தியாவில் இருந்த, கடவுளை அறியாத, நாத்திகக் கொள்கையையுடைய, சமண பௌத்த சமயக் கொள்கைகள் நிரம்பி இருந்த இந்தியாவில் தோன்றிய

1. உலக அறிஞர்கள் போற்றும் திருக்குறள் ஒரு தோமா வழிக் கிறிஸ்தவ நூல் என்றும்,

2. தமிழகத்தில் எழுந்த கடவுளை வணங்கும் பக்தி இயக்கம் புனித தோமாவின் நற்செய்திப் பணியின் விளைவு என்றும்,

3. தமிழகத்தில் எழுந்த பக்தி இயக்கத்தின் பயனாக, தமிழகத்தில் உருவான சைவ, வைணவ சமயங்கள், தோமா வழிக் கிறிஸ்தவத்தின் கிளைகள் என்றும்,

4. தோமா வழிக் கிறிஸ்தவத்தின் கிளைகளாகிய சைவ, வைணவ சமயங்களுக்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவான புதிய, பொதுப் பெயரே 'இந்து மதம்' என்றும்,

5. இதனால் இந்துமத நாடாகிய இந்தியா, தோமா வழிக் கிறிஸ்தவ நாடு என்றும்,

6. இந்துமதமும் இந்தியாவும் ஆரியப் பிராமணர்களின் மனுநூல் கொள்கைக்கு அடிமைப்படுத்தப்பட்டுக் கிடக்கின்றன என்றும்,

7. ஆரியப் பிராமணர்களின் மனநூல் கொள்கையின் அடிமைத்தளையிலிருந்து இந்து மதத்தையும் இந்தியாவையும் விடுவிக்க வேண்டிய கடமை, தன்மானத் தமிழர்களுக்கு இருக்கிறதென்றும்,

8. கிறிஸ்தவ வரலாற்றைப் புரிந்து கொண்ட தன்மானத் தமிழர்களால் மட்டுமே இந்து மதத்தையும் இந்தியாவையும் விடுவிக்க இயலும் என்றும்,

படிப்படியாக, பல்கலைக் கழக ஆராய்ச்சி அறிஞர்களிடையேயும், மடாதிபதிகளிடையேயும், 1972 முதல் பல்வேறு ஆய்வரங்கங்களின் வழி நிலை நாட்டி வருகின்றார். அவரும் அவருடைய மாணவர்களும் இதைக் குறித்து ஏராளமான நூல்களை வெளியிட்டு வருகின்றனர். 

5. ஓடி ஒளிந்த இந்துத்துவா

இந்த ஆராய்ச்சியின் முன் நிற்க இயலாமல் இந்து மதத்தை அடிமைப்படுத்தியுள்ள இந்துத்துவா அமைப்புகள்

1. ஓடி ஒளிந்து கொண்டும்

2. பயந்து பதுங்கிக் கொண்டும்

3. மூச்சுத் திணறிக் கொண்டும்

இருந்தமை முனைவர் தெய்வநாயகத்தின் பல வெளியீடுகளிலும் குறிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒளிந்து கொண்டும், பதுங்கிக் கொண்டும், மூச்சுத் திணறிக் கொண்டும் இருந்த ஆரியப் பிராமணர்களின் இந்துத்துவா அமைப்புகளுக்கு, "புனித தோமா தென் இந்தியா வரவில்லை" என்று போப்பாண்டவர் அறிவித்தது. துள்ளிக் குதிக்கும் மகிழ்ச்சியை உருவாக்காமல் விடுமோ? அதன் விளைவே "வடிகட்டின ஃப்ராடுலெண்ட் தியரிகளை உலவ விடும் தெய்வநாயகம்" என்னும் இந்துத்துவா அமைப்பின் கொதிப்புக் கருத்து ஆகும்.

அதாவது, தோமா தென் இந்தியா வரவில்லை என்று கிறிஸ்தவத்தின் அகில உலகத் தலைவராகிய போப்பாண்டவர் அறிவித்த பின்னர், "தோமா வழிக் கிறிஸ்தவமே இந்து மதம்" என்பது ஒரு வடிகட்டின ஃப்ராடுலெண்ட் தியரிதானே" என்பது இந்துத்துவா பிராமணர்களின் கிண்டலுடன் கூடிய கொதிப்புக் கருத்து ஆகும்.
6. இந்துத்துவாவின் குற்றச்சாட்டு

மேலும் இந்துத்துவாப் பிராமணர்களின் 16.12.2006 நாளிட்ட ஹிந்து மித்திரன் ஏடு,
"தாமஸ் கேரளத்திற்கோ, தமிழகத்திற்கோ வரவே இல்லை என்று கிறிஸ்தவ மதத் தலைமைப் பீடம் பகிரங்கமாக அறிவித்து விட்டது" (பக்.28)

"சைதாப்பேட்டை சின்னமலை, மயிலை சாந்தோம் சர்ச், பரங்கிமலை ஆகிய மூன்று இடங்களிலுமே இருந்த ஹிந்துக் கோவில்களை இடித்துத்தான் போர்ச்சுக்கீசிய கத்தோலிக்க ஆக்கிரமிப்பாளர்கள் அங்கெல்லாம் சர்ச்சுகள் கட்டி அவற்றபை; பழமையானது என்று நிரூபிக்க, தாமஸோடு முடிச்சு போட்டு விட்டார்கள்" (பக்.30)
கபாலீஸ்வரர் கோயில் அழிக்கப்பட்டு சாந்தோம் சர்ச் கட்டப்பட்டது என்ற தகவலை ஊநளெரள ழக ஐனெயை-ஏழட ஐஓ Pயசவ ஓஐ என்ற நூலில் P.மு. யேஅடியைச தெரிவிக்கிறார். (பக்.31)
பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்கள், கடற்கரையில் இருந்த கபாலீசுவரர் ஆலயத்தைத் தகர்த்த ஒரு சில ஆண்டுகளுக்குள்ளேயே, மயில் நாட்டு முத்தையா முதலியார் என்பவர். தற்போதுள்ள கபாலீசுவர் கோயிலைக் கட்டினார் என்பது திரு. நாகசாமி அவர்கள் வாதம் (பக்.31) என்று எழுதி இருந்தது.

7. தமிழர் சமய உலக முதல் மாநாடு

ஹிந்து மித்திரன் ஏட்டின் இந்தக் கருத்துகள் 04.01.2007, 01.02.2007 ஆகிய இரண்டு நாட்களில் முனைவர் தெய்வநாயகத்தால் நடத்தப்பட்ட தமிழகக் கிறிஸ்தவத் தலைவர்களின் கூட்டங்களில் தலைவர்களுக்கு விளக்கப்பட்டன. இவற்றின் பயனாக, முனைவர் தெய்வநாயகம் நிறுவியிருந்த உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்கமும், சென்னை மயிலை உயர் மறை மாவட்டமும், தக்க ஒப்பந்தத்தின் வழி, தமிழர் சமய உலக முதல் மாநாட்டை, 2008 ஆகஸ்டு 14 முதல் 17 வரை பல்வேறு பல்கலைக் கழக அறிஞர்களையும் பல்வேறு சமயத் தலைவர்களையும் அழைத்து, சென்னையில் இணைந்து நடத்தின.

இந்த மாநாட்டை நடத்தக் கூடாது என, பிராமணர்களின் இந்துத்துவா அமைப்புகள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன.

8. போப்பாண்டவரின் பாராட்டு

மாநாட்டின் நிகழ்ச்சிகள் மற்றும் ஆய்வுக் கருத்துகள் தொகுக்கப்பட்டு, போப்பாண்டவருக்கு அனுப்பப்பட்டு, போப்பாண்டவரின் பாராட்டைப் பெற்றன.
தோமா தென் இந்தியா வரவில்லை என்று அறிவித்த போப்பாண்டவருக்கு இருந்த சந்தேகங்கள் இப்பொழுது நீங்கிவிட்டன.

ஐஏ. புனித தோமா வழி நற்செய்தியின் விளைவுகள்
புனித தோமாவின் 20 ஆண்டு கால நற்செய்திப் பணியின் விளைவாக உருவானதே தமிழர் சமயமாகிய இந்து மதம்.
தோமா வழிக் கிறிஸ்தவமாகிய தமிழர் சமயக் கோவிலே, சாந்தோம் பேராலயம் கட்டப்பட்டுள்ள இடத்தில் இருந்த கபாலீஸ்வரர் கோவில்.

'கபாலீஸ்வரர்' என்பது நான்கு நற்செய்தி நூல்களிலும் கூறப்பட்டுள்ள படி, 'கபால ஸ்தலம்' என்னுமிடத்தில் பலியான, ஈஸ்வரனாகிய இயேசுவைக் குறிக்கிறது.
கபாலீஸ்வரர் கோவிலே இந்தியாவின் முதல் சைவ சமயக் கோவில், பிற்காலத்தில். பிற்காலச் சோழர்களால் பொன் வேய்ந்து சிறப்பிக்கப்பட்டதே, அவர்கள் காலத்தில் தலைமைக் கோவில் எனப்படும் சிதம்பரம் கோவில்.
சங்க இலக்கியத்தில் கூறப்படும் 'கந்து' என்னும் சிவலிங்க வழிபாடு பலியுள்ளதாக இருந்தது. ஆனால் பலியில்லாத சிவலிங்க வழிபாட்டையுடைய சைவ சமயம் உருவானதற்குக் காரணம் தோமாவின் நற்செய்திப் பணியின் விளைவே என்பது வரலாறு கூறும் உண்மை.

சிந்துவெளித் தமிழர்களின் பலியுள்ள சிவலிங்க வழிபாட்டிலிருந்து, பலியில்லாத சிவலிங்க வழிபாடு தமிழகத்தில் வளர்ந்த வரலாற்றை அறிய வேண்டுமனால், முதல் மனிதனாகிய ஆதன் முதல் தமிழகம் வந்த தோமா வரையுள்ள வரலாற்றைக் கூறும் பைபிளையும், தோமா முதல் மெய்கண்டார் வரையுள்ள வரலாற்றைக் கூறும் தமிழகத்தில் தமிழ் மொழியில் எழுந்த சைவ, வைணவ நூல்களையும் படிக்க வேண்டியது இன்றியமையாததாகும். இவை (இரண்டு பகுதிகளையும் படிக்காத பக்தர்கள் அனைவரும் அந்நியர்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பார்கள்)
புனித தோமா அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் மேல் அமைந்திருந்ததே கபாலீஸ்வரர் கோவில்.
பேதுரு வழிக் கிறிஸ்தவர்களாகிய போர்த்துக்கீசியர்கள், தோமா அடக்கம் செய்யப்பட்ட இடத்தை அடையாளம் கண்டார்களேயன்றி, அதன்மீது கட்டப்பட்டிருந்த தோமா வழிக் கிறிஸ்தவமாகிய, தமிழர் சமயமாகிய இந்து மதக் கோவிலையோ, அக்கோவிலுக்குரிய, தமிழர் சமயத்தைச் சேர்ந்தவர்களையோ, அவர்களால் அடையாமல் காண இயலவில்லை. இதன் விளைவே, தோமா வழித் தமிழர் சமயக் கோவிலாகிய கபாலீசுவரர் கோவிலை இடித்துவிட்டு, பேதுரு வழிக் கிறிஸ்தவக் கோவிலாகிய சாந்தோம் பேராலயத்தைக் கட்டியமை ஆகும்.

இதனால் உலகிலேயே, பேதுரு வழிக் கிறிஸ்தவமும், தோமா வழிக் கிறிஸ்தவமும் சந்திக்கும் இடமாக மயிலாப்ப+ர் சாந்தோம் பேராலயம் விளங்கிக் கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் பேதுரு வழிக் கிறிஸ்தவத்தின் வன்முறைச் செயலுக்கும், அதனால் தோமா வழிக் கிறிஸ்தவத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்கும், சாட்சியாக சாந்தோம் பேராலயம் விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதை எவராலும் மறுத்தல் இயலாது.
ஏ. இனி செய்ய வேண்டியது என்ன?

1. போப்பாண்டவர் செய்ய வேண்டியது

இதைச் சரிசெய்ய, பேதுரு வழிக் கிறிஸ்தவமாகிய, கிறிஸ்தவமதமும், தோமா வழிக் கிறிஸ்தவமாகிய இந்து மதமும் வரலாற்று வழியில் ஒன்றிணைந்து இருப்பதை எடுத்துக்காட்டுவதுடன், உலக சமயங்கள் அனைத்தையும் வரலாற்று வழியில் ஒன்றிணைக்கும் தமிழர் சமய வரலாறும், உலக சமயங்களின் மணிமுடியாகத் திகழும் ஆன்மீகத்தை அறிவியல் வழியில் விளக்கும் தமிழர் ஆன்மவியலின் சிறப்புகளும் புனித தோமா அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தைப் பார்க்க வரும் உலக மக்களுக்கு வரலாற்றின் வழி விளக்கும் நிலையான கண்காட்சி அங்கு அமைக்கப்பட்டு, விளக்கப்படல் வேண்டும்.
(இதைச் சரியாகப் புரிந்து கொள்ள முனைவர் தெய்வநாயகம் எழுதிய "உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் சமயமும், தமிழர் ஆன்மவியலும்" என்னும் தலைப்பிலுள்ள நூலை வாசிக்கலாம்)
இதற்குரிய முயற்சிகளைப் போப்பாண்டவர் முன்னெடுத்து, அந்த நிலையான கண்காட்சியைத் திறந்து வைத்து, தோமா தமிழகத்தில் 20 ஆண்டுகள் செய்த நற்செய்திப் பணியின் விளைவை உலகுக்கு போப்பாண்டவர் அறிவிக்க வேண்டும். இவ்வாறு செய்வது உலகில் மதவெறியை நீக்கி, மதப் பயங்கரவாதம் உலகைவிட்டு அகலத் துணைபுரியும் என்பதில் ஐயம் இல்லை.
2. பொது மக்கள் செய்ய வேண்டியது

19, 20 ஆம் நூற்றாண்டுகளில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் பயனாக இமய மலைக்குக் கிழக்கே இருக்கும் சிந்து வெளி நாகரிகத் தமிழ் மக்கள், இமயமலையைக் கடந்து, இமயமலைக்கு மேற்கே சுமேரிய நாகரிகத்தை உருவாக்கிய வரலாற்றைக் கூறுவதன் வழி உலகின் முதல் மொழி தமிழ் மொழி என்பதையும், உலகின் முதல் இனம் தமிழ் இனம் என்பதையும், விளக்கிக் கொண்டிருப்பவை ஆதியாகமம் 11ஆம் அதிகாரத்திலுள்ள முதல் இரண்டு வசனங்கள். கடவுளின் மகனாகிய கிறிஸ்துவின் நற்செய்தி, புனித தோமாவின் வழி தமிழகத்தில் விதைக்கப்பட்டு, தமிழர் சமயமாக வளர்ந்துள்ளது. ஆகவே, தமிழ் மொழியும், தமிழ் இனமும், தமிழர் சமயமும் தெய்வீகத் தன்மையுடையவை. தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்யக்கூடியவை. இதன் காரணமாக இன்று தமிழர் சமயமும் சிலுவையில் மரணமடைந்த கிறிஸ்துவைப் போன்று அழிந்து கொண்டிருக்கின்றன.
இவற்றை அழிவிலிருந்து பாதுகாக்கும் ஆற்றல், அழிவிலிந்து மீண்டு உயிர்த்தெழுந்த, மதங்களைக் கடந்த கிறிஸ்துவின் பிள்ளைகளிடம் மட்டுமே இருக்கிறது. நீங்கள் ஏதாவது ஒரு மதப்பற்றிலோ, மத வெறியிலோ இருப்பீர்களானால் உங்களால் ஒன்றும் செய்ய இயலாது. நீங்கள் மதங்களைக் கடந்த, உயிர்தெழுந்த கிறிஸ்துவின் பிள்ளையா? நீங்கள் தமிழ் இனத்தில் பிறந்து தமிழ் மொழியைப் பேசுகின்றவர்களா? உங்களுக்கு அந்த ஆற்றலும் கடமையும் இருக்கின்றன. தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் தமிழர் சமயத்தையும் அவற்றின் அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டிய உங்கள் பிறவிக்க கடமையை நிறைவேற்ற நீங்கள் விரும்புகின்றீர்களா? தயவு செய்து எங்களுடன் தொடர்பு கொள்ள உங்களை அன்புடன் வேண்டுகின்றோம்.
நாம் உயிர்தெழுந்த கிறிஸ்துவினால் ஊதப்பட்டு, பரிசுத்த ஆவியைப் பெற்ற புதுப் பெலனுடன் புறப்படுவோம். அவர் வழி நடத்துகிறார் என்பதை அனுபவிப்போம். இந்த அனுபவத்தை தமிழர் ஆன்மவியலைக் கொண்டு அறிவியல் வழியில் விளக்கி, அழிந்து கொண்டிருக்கும் உலகையும் மீட்டெடுக்க ஒன்றுபடுவோம். வாரீர்.

3. வகுப்புகள்

தங்கள் பிறவிக் கடமையை நிறைவேற்ற விரும்புகின்றவர்களுக்காக, 6 மாத மாலை நேரப் பயிற்சி வகுப்புகள் 2011 ஜனவரி 6 முதல் தொடங்ககின்றன. ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வியாழன் மாலை 6.30 முதல் 8.30 வரை வகுப்புகள் நடைபெறும்.

தமிழ், மொழி, தமிழ் இனம், தமிழர் சமயம் தொடர்பான செய்திகளை அறிய "தமிழர் சமயம்" என்னும் மாத இதழை வாங்கி வாசிக்கலாம்.


தமிழர் சமயம் நவம்பர் இதழில் இருந்து...............

No comments:

free web counter