Thursday, December 10, 2009

ஏன் கிறிஸ்மஸ்?

 

கிறிஸ்து இல்லாமல் கிறிஸ்மஸ் இல்லை. நத்தார் தினத்திற்காய் பிறந்தவர் அல்ல.

அவர் உலகத்தின் பாடுகள் எத்தனை எத்தனையோ?

அத்தனையும் மீட்க பாடுபட்டவரே கிறிஸ்து!

 

கி - கிறுக்கப்பட்ட உன்  பெயரை சீர்படுத்தினார்.

றி - றிமாண்டில் இருந்த உன்னை விடுதலையாக்கினார்

ஸ் - ஸ்தலம் இல்லாத உனக்கு ஸ்தானம் தந்தார்.

து - துதிக்க வைத்தார் உன்னை தகுதியாக்கினார்.

 

அவர் தாம் உனக்காக பிறந்த கிறிஸ்து இரக்கமுள்ள;யேகோவா, உன் சுமைகளை உன்னை விட்டு அகற்றினார். இவர்தான் இ-யே-சு.

 

கிறிஸ்துவோ உலகில் பிறந்தார் வாழ்ந்தார் உயிர்த்தார் மரணம் அவரை ஆட்கொள்ள முடியவில்லை.இயேசு வெறும் மனிதனாக மாத்திரம் இருந்திருந்தால்,அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருப்பார். அவருடைய சரீரம் கல்லறையிலே இருந்து அழுகி அழிந்து போயிருக்கும். எமக்கு நித்தியஜீவனை அளிக்கும்படி தம்மை ஜீவனோடு எழும்பினார். அவர் ஜீவனை கொடுத்து எமககு ஜீவன் அளித்தர். (அப் 2:24) அநேகருக்ககு ஜீவன்அளிப்பவரான கிறிஸ்து எல்லா நாமங்களுக்கும் மேலான நாமமானார். இதனால் வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரத்தையும் பெற்றவர்(மத் 28:18 ) எமக்கு அந்த அதிகாரங்களை கொடுதிதுள்ளார். பெரிய பெரிய மகான்கள், சர்வாதிகாரிகள் ஜசுவரியவான்கள் உலக புகழை தேடியம், மரித்து தம் நாமத்தை பிரஸ்தாபப்படுத்தி ஜீவனை இழந்து போனார்கள்.

 

"கிறிஸ்மஸ் எமக்கு பெற்றோல் மக்ஸ் அழியாத எரிபொருள்  ஆன பரிசுத்த ஆவியின் வெளிச்சத்தை எம் ஜீவியத்தில் கொண்டுவரும் மக்ஸ்" ஆகும்.

 

கிறிஸ்துவின் பிறப்பு ஒரு மனிதனின் பழைய கால இறப்பு

கிறிஸ்துவின் இறப்பு ஒரு மனிதனின் ஆவியின் பிறப்பு

''கிறிஸ்மஸ்" இன்று உங்களுக்குள் பிறக்கட்டும்.

ஆமென்!!

 

Pastor. Jenny Sinnadurai


http://www.nlm-tv.com/Christmas%20Main.htm

உண்மையான தொழுகை

 

 

  "தொழுகை" என்பது, ஒரு நாணயத்தைப் போன்றது. நாணயத்தின் ஒரு புறமோ,அதன் பெறுமதியைக் குறிக்கிறது..அதை நாம் அறிந்திருக்கிறோம். நாணயத்தின் மறு பக்கமோ, மிகவும் முக்கியமான ஒருவருடைய சின்னம்,அல்லது ஒருவரின் தலை அடையாளமாய் இருக்கும்.தொழுகையும்,ஒரு விதத்தில் அப்படித்தான்.நாணயத்தை நாம் கையில் எடுக்கும் போது அதிகமாய் அதன் சின்னத்தையல்ல,அதன் பெறுமதியையே நாம் கவனிக்கிறோம். இதே போலவே நாம் எல்லேரும்,  சபையில் எப்படியாக கர்த்தரைத் தொழுது கொள்ள வேண்டும் என அறிந்துள்ளோர்! ஆயினும் நாணயத்தின் மறு பக்கத்தைக் குறித்து,அக்கறை இல்லாமல் அசதியாய் இருந்து விடுகிறோம். உலகத்தின் பல பாகங்களிலும் தேவனுடைய மக்கள், பரிசுத்த ஆவியானவரின் அநுகிரகத்தைப் பெற்று, தேவனுக்குள் புதுப்பிக்கப்பட்டும், பெலப்படுத்தப்பட்டும், வருகின்றனர்.{அப்போ3:19-21} இந்நாட்களில் சபையானாது கர்த்தருடைய .இளைப்பாறுதலில் பிரவேசிக்கும் படிக்கு, பரிசுத்தவான்களும், மனம் திரும்ப வேண்டும்.என கர்த்தர் அழைக்கிறார். சபையின் சரித்திரத்திலேயே, நாமும் வாழும் இந்நாட்களோ, மிகவும் பரபரப்பாய் இருக்கிறது. குணப்பட்ட சபையில் கர்த்தர், தம் எழுப்புதலை இறக்கி தொழுகையை, தமக்காய் இந் நாட்களில் தம் சபைகளில் மீட்டு வருகிறார். அநேகர் தொழுகையை எப்படி விளங்கிக்கொள்கிறார்கள் எனில் மூன்றோ, நான்கு பாடர்களைப் பாடி,ஒரு பாட்டின் கடைசி வரிகளை திரும்பத், திரும்பப் பாடி, கைகளை உயர்த்தி, கண்களை மூடி சிறிது நேரம் செலவிடின்,அதுவே தொழுகை என!உண்மை தான்,ஒரு வகையில் தொழுகையின் ஒரு சிறிய பாகமாகவே ஆராதனையின்போது செய்யும் தொழுகையாக இருக்கிறது.

1    .கீழ்ப்படிவின் தொழுகை

அத் தொழுகை தேவனுக்கு மிகவும் பிரியமானதொன்று.இப்பேற்பட்ட தொழுகை, பரலோகத்திற்கு நற்கந்த வாசனையை எழுப்புகிறதாக இருக்கிறது.பரலோகத்திலிருந்தும் பூமிக்கு," அவரை அறியும் அறிவு "என்கிற சுகந்த வர்க்க வாசனையைக் கொண்டு வந்து கீழ்ப்படிவோரை, வெற்றி சிறக்கப்பண்ணுகிறது. {11 கொரி 2:14 } ஆபிரகாமின் வாழ்க்கை,இப்பேற்பட்ட தொழுகைக்கு,ஆரம்ப பிதாவாய் இருந்தது.{ஆதி 22:5 } ஆபிரகாம் தன்னுடைய வேலைக்காரரை நோக்கி,"நீங்கள் இங்கே காத்திருங்கள் நானும்,பிள்ளையதண்டானும் அவ்விடம் மட்டும்போய்,தொழுது கொண்டு உங்களிடத்திற்கு திரும்பி வருவோம் என்றான் " என காண்கிறோம். இங்கு நாம் இரண்டு காரியங்களை கவனிக்கலாம்.

1     முதலாவது, ஆபிரகாம் தேவன் சொன்னபடி கீழ்ப்படிந்து, ஈசாக்கோடு கூட, பலியிடும் ஆயுதங்களுடன் மோரியா மலையை நோக்கி புறப்படுகிறான்.

2      இரண்டாவது, தனக்குண்டானது எல்லாம் தனக்கிருந்த ஒரே ஒரு மகன் ஈசாக்குத் தான்,என ஆபிரகாம் அறிந்தும்,தேவனுக்கு பலியிட ஆயத்தமானான். அவ்வேளையில்,தேவன் குறுக்கிடவில்லையாயின் ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிட்டிருப்பான்.இது தான் உண்மையான தொழுகையாகும்.

ஆகவே இது தான் நாணயத்தின் மறு பக்கம்! தொழுகையின் உண்மையான நிலை!தேவனை தொழ வரும்போது, எமக்குண்டான எல்லாமே, எம்மை சிருஷ்டித்தவருக்கு உரியது, என்ற உணர்வோடு வருவோமாயின், கீழ்ப்படிவின் சரணாகதி நிலைக்கு நாம் வருவதை, எந்த சக்தியால் தடுக்க முடியும்? ஆபிரகாம் ஈசாக்கைத் தன் சொந்த குமாரன் என்றும் பாராமல், தொழுகைக்கு என ஒப்புக்கொடுத்ததால் அல்லவா, கிறிஸ்துவிற்குள் பிறந்த அனைவருக்கும் அவன் தகப்பனானான்!  ஆபிரகாமிடம் இருந்து நாம் கற்கும் காரியம் என்ன? ஒரு தனிப்பட்டவரின் கீழ்ப்படிவினால், "பூரண ஒப்புக்கொடுத்தலின்" தொழுகையின் மாதிரியைத்தான். ஆபிரகாம் தேவனைக்  கனப்படுத்தினான். தேவன் ஆபிரகாமை கனப்படுத்தினார். தொழுகையானது பரபரப்பானது.

 

ஆனால் கீழ்ப்படிவோ கிரயம் கொடுக்க வேண்டியதொன்றாக உள்ளது. ஆகவே பூரண கீழ்ப்டிவுள்ள தொழுகையே,பரபரப்பை உண்டு பண்ணக் கூடியது. உண்மையான தொழுகையோ, தேவனை மையமாக கொண்டதும்,  தேவனை நோக்கியதுமாக இருக்கிறது. "கிரயம்" என்னும் பொழுது நாம் கிரயத்திற்கு கொள்ளப்பட்டோம். ஆகவே நாம் இனி கிரயம் கொடுக்க வேண்டியதில்லை.

ஆயினும் கீழ்ப்படிவு என்னும் பொழுது எமக்குண்டான யாவையும்,  தேவனுக்காய் கொடுக்கூடிய, அந்த விதமான  சரணா கதியான நிலைதான். சிலருக்குக் :" கிரயமாக"  இருக்கும். அதாவது தொழுகையின் இரகசியத்தை அறிந்த ஒருவர், கர்த்ரை பிரியப்படுத்த அறிந்தவர். இவர் எப்பேற்பட்ட சூழ்நிலையிலும், எதையம் விட்டு, தொழுகைக்கு முதலிடம் கொடுப்பார். 

 

2    ஜீவபலி

பவுல் அப்போஸ்தலன், தன் வாழ்க்கையின் முக்கிய பகுதியாகவே ,கர்த்தரை தொழுவதில் வாஞ்சை உள்ளவராக இருந்தார்.எந்தவொரு போராட்டமான சூழ்நிலையோ, நிர்ப்பந்தமான நிலையோ, அவமானங்களோ, கர்த்தரை தொழவோ, அவருடைய நாமத்தை துதிக்கவோ, பவுலிற்கு தடையாக இருக்கவில்லை. பவுல் சபைகளிற்கு எழுதிய நிருபங்களை வாசிக்கும் போது அக் கடிதங்களில், திடீரென கர்த்தரை தொழுது கொள்ளுவதையும், தேவனைக் குறித்து வர்ணிப்பதையும் காண்கிறோம். {ரோமர் 11 : 33-36} தேவனைப் பூரணராயும், அவர் இருக்கிறபடியே அவரை பவுல் அடையாளம் கண்டதாலும், எப்பொழுதும் வாயில் துதியும்,அவர் ஆவியிலும், தன் சரீரத்திலும், தேவனை தொழுது கொண்டே இருந்தார் {ரோ12:1} பவுல் சொல்லும் காரியம், புத்தியுள்ள ஆராதனைக்கு சரீரமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கப்படவேண்டும். என. பவுலின் சொல்லும்,  வேண்டுகோளும் என்னவாய் இருக்கிறது எனின், நாம் இப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேசந் தரியாதவர்களாய், மனம் புதிதாகி மறுரூபமாக வேண்டும் என்பதையை!

அப்பேற்பட்ட நிலைக்கு நாம் வந்தாலே தவிர,ஆவியில் நாம் தேவனைத் தொழுது கொள்வது என்பது கூடாத காரியம்.நாம் எதைத்தான் தேவனுக்குக் கொடுக்கப்போகிறோம். ? சிந்தித்துப்பாருங்கள்! பாதாளத்திலிருந்து எம்மை மீட்ட அந்த அன்பருக்கு உங்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பதை விட, எதைத்தான் கொடுக்கப் போகிறீர்கள்? "ஜீவபலியாக" எம்மைக் கொடுத்து தொழுது  கொள்வது என்பதன் உண்மையை, நாம் சரியாக அறிந்து உணர்வடைந்துள்ளோமா?   எங்களுடைய சபை ஆராதனையில், நாம் தொழுகையில் மிகவும் கெச்சிதமாய், வழி நடத்தலாம். வழி நடத்தப்படலாம். ஆயினும் எமது வாழ்க்கை முறை கர்த்தரை தொழுது கொள்ளுகிறதா? சபையில் துதி, தொழுகையை செய்வோர் மாத்திரமல்ல, எல்லா தேவ பிள்ளைகளையுமே, கர்த்தர் தொழுகைக்குரிய ஜனங்களாய் அழைத்துள்ளார்.

 

ஆகவே எங்களுடைய முறை தேவனைத் தொழுது கொள்கிறதா? உண்மையான தொழுகை தேவனை மகிமைப்படுத்தும். தேவனுடைய நாமத்தை பிரஸ்தாபப்படுக்கங்கள் ஆகவே தேவனை தொழுது கொள்ளும் நோக்கம் முதலாவது, சரியாக இருக்க வேண்டும்.வேறொரு எந்தக் காரணத்திற்காயும் தேவனை தொழுது கொள்ளக் கூடாது. இயேசு சொன்னார் " பரலோகத்தலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப் படுத்தும்படி ,உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது" என .{மத் 5 : 16 } பவுல் சொல்லுகிறார் { 1 கொரி 10 : 31} ஆகையால் நீங்கள் புசித்தாலும் , குடித்தாலும்  எதைச் செய்தாலும் தேவனுடைய மகிமைக்கு என்றே செய்யுங்கள். தொழுகையானது, சபையோடு நின்று விடும் ஒரு காரியமல்ல, அது உங்களுடைய வேலை இடங்களிற்கும், சமையல் கூடங்களிற்கும், உங்கள் படுக்கை அறைகளிற்கும், உங்கள் நண்பர்களிடத்திலும், உங்கள் குடும்பத்திற்கும், எடுத்துச் செல்லப்பட வேண்டியது. அப்பொழுது கர்த்தரை அறிந்து கொள்ளும் படியாக கர்த்தர் எங்களிற் கூடாகக் கிரிகை செய்வார்.

*     மனைவிமார் புருசரிற்குக் கீழ்ப்படிதலும், "தொழுகையே"


*     கணவன்மார் தம் மனைவிமாரின் மேல், சபையில் கிறிஸ்து அன்பு கூருவது போல அன்பு கூருவதில் கீழ்ப்படிவதும்"தொழுகையே"


*    பிள்ளைகள் கர்த்தருக்குள் பெற்றேருக்குக் கீழ்ப்படிவதும், "தொழுகையே "


*        தகப்பன்மார் தம் பிள்ளைகளை சிட்சித்து, அப்பிள்ளைகள் செல்ல வேண்டிய வழியில் பயிற்றுவிப்பதும், தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிதலே, அதுவும் "தொழுகையே"


*    ஊழியர்கள் தம் எஜமானிற்குக் கீழ்ப்படிவதும், கிறிஸ்துவின் முன்மாதிரி, இதுவும் "தொழுகையே"


*    எஜமான்கள் தம் ஊழியர்களை, மதித்து இரக்கம் காட்டி அன்பு கூருவதும், "தொழுகையே"


* கொலோ 3:18-24 ,எபே 5:22 ,  6 : 9 }

 

ஆபிரகாமைப் போல எம்முடைய வாழ்க்கையும், பூரண கீழ்ப்படிவு உடையதாக இருக்கட்டும்.அப்பொழுது எமது பரலோக பிதாவும், எம்மில் பிரியப்படுவார். கர்த்தரை அறியாதோர், கிறிஸ்துவை எம்மில் காண்பார்கள் ஆகவே  நாணயத்தின் ஒரு புறத்தை சபையும்,  மறு புறத்தையோ உலகமும் காண்கிறது. ஆகவே சபையில் மாத்திரமல்ல,விசுவாசிகளின் வட்டத்திற்கு வெளியேயும் , நாம்  முன்மாதிரியாய் இருக்கும் பொழுது,  அது தேவனுக்கு உகந்த தொழுகையாக இருக்கும்!

 

இயேசுவே சர்வத்துக்கும் மேலான தேவன்!

 

 

யேகோவா என்ற இயேவசுவின் சில நாமங்கள்!

தேவனுடைய நாமங்கள் மொத்தமாக 272 நாமங்கள் உள்ளன.

அவற்றில் பழைய எற்பாட்டில் ஒரே தேவனை எபிரெய பாஷையில் இப்படி அழைத்தார்கள்.

 

யேகோவா-ஏலோஹெக்கா     உன் தேவனாகிய கர்த்தராய் இருக்கிற நான் அல்லது கர்த்தருடைய  யாத் 20:2,5,7

யேகோவா- மெக்கடெஷ்        கர்த்தர் பரிசுத்தர்  யாத் 31:13, லேவி 20:8

யேகோவா-ஷாபோத்           சேனைகளின் கர்த்தர்   1 சாமு 1:3

யேகோவா-கோசீன்னு          நம்மை உண்டாக்கின கர்த்தர் சங் 95:6

யேகோவா-ஏலோகீம்           கர்த்தரே நம்முடைய தேவன் சங் 95:7 , 100:3

யேகோவா-நக்கா               கர்த்தர் நித்தமும் உன்னை நடத்துவார் ,

                                                                      கர்த்தர் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்குவார்  ஏசா 58:11

யேகோவா-யீரே                கர்த்தர் காண்கிறார்  ஆதி 22:13-14

யேகோவா-றாப்ஹே {றோபா}     கர்த்தர் உன் பரிகாரி யாத் 17:26

யேகோவா-நிசி                 கர்த்தர் என் விருதுக்கொடி  யாத் 17:15

யேகோவா-ஷாலோம்           கர்த்தர் என் சமாதானம் நியா 6:24

யேகோவா-ஷம்மா              கர்த்தர் அங்கே இருக்கிறார்  எசே 48:35

யேகோவா-ஜிட்கேனு            நமது நீதியாயிருக்கிற கர்த்தர்  எரே 23:6

யேகோவா-றோஷி              கர்த்தர் என் மேய்ப்பர் சங் 23:1

யேகோவா-கமுவா              தேவனாகிய கர்த்தர் நிச்சயமாக பதில் அளிப்பவர்  எரே 51:56

யேகோவா-மெக்கா              நான் கர்த்தர்  எசே 7:9

யேகோவா -ஏல்யோன்          தேவன் நீதியுள்ள நியாயாதிபதி  சங் 7:17,9,11

யேகோவா -ஏலோகே           என் தேவனாகிய கர்த்தர் வருவார் சக 14:5

யேகோவா-ஏலோஹீனு         கர்த்தர் -என்பரிசுத்தர் - மன்னிக்கிறவர்    சங் 99:5,8.,9

யேகோவா-அடோனை           கர்த்தர் நானே, கர்த்தர் என் கேடகமும்,என் மகா பெரிய பலனுமானவர்  ஆதி15:1,7

யேகோவா-கெட்மா              நான் உன் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி விடுவிக்கிற சகாயர்   உபா 33:7,17 சங் 46:1

ஏல்ஷாடாய்                     சர்வ வல்லமையள்ளவர்   ஆதி 17:1,28:3  யாத் 6:3

ஏல்எலியோன்                   உன்னதமான தேவன் ஆதி 14:18,  சங் 82:6

அடோனாய்                      ஆண்டவர்   எசா 6:11 , 21:6

யேகோவா-சபாயோத்            சேனைகளின் கர்த்தர்  ஏரே 46:18

ஆகவே இயேசுவாகிய பிதா.

பிதாவின் குமாரனாகிய இயேசு.

பிதாவிற்கும் இயேசுவிற்கும் உள்ளே இருந்து புறப்படுகிறவர் பரிசுத்த ஆவியானவர்.

பிதா குமாரன் பரிசுத்த ஆவி இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்.

தேவனே இயேசு இயேசுவே யேகோவா யேகோவாவே இயேசுவாய் இருக்கிறார்.  ரோமர் 9:5

பிதாக்கள் அவர்களுடையதே மாமிசத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே

இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்டவர் சர்வத்துக்கும் மேலான தேவன்.

 

http://www.nlm-tv.com/Jesus%20sarvathukkum.htm

Friday, October 16, 2009

தருமை ஆதீன விவாதமும் தமிழர்சமயத்திற்கு கிடைத்த வெற்றியும்

இயேசு தீபாவளி - அகத்தின் அசுரனை ( தீமையை) அழித்த கொண்டாட்டம்

 

இயேசு தீபாவளி - அகத்தின் அசுரனை ( தீமையை) அழித்த கொண்டாட்டம்

இது இந்து, ஜெயின், சீக்கிய மதத்தினர் கொண்டாடும் பண்டிகை. இப்பண்டிகை 3 அல்லது 4 நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடப்படும். அந்நாட்களில் தீமையை நன்மை வென்றதை குறிக்க வீடுகளில் தீபங்கள் ஏற்றப்படும். தீபாவளி தினம் கொண்டாடத்தின் உச்சகட்டம். அன்றை தினத்தில் குடும்பமாக சேர்ந்து எண்ணெய் ஸ்நானம் செய்து, பலகாரங்களும் பரிசுகளும் பரிமாறி, அதன் பின் குடும்பமாக சேர்ந்து பட்டாசு கொளுத்துவது வழக்கம். அதுகாலையிலே வெடிவெடிக்க ஆரம்பித்து நாள்முழுவதும் தொடரும். தீபாவளி பண்டிகையின் கொண்டாட்டத்தையும் குதுகூலத்தையும் சொல்லி மாளாது.

அதை அனுபவத்தவருக்கு மாத்திரம் புரியும்.நம்முடைய பாரம்பரியக் கதைகளில் நன்மை தீமையை வென்றதை குறித்து அநேக கதைகள் உண்டு. அவை பெரும்ப்பாலும் அசுரன் ( அரக்கன்) அழிவதாகவே அமையும். தீபாவளி பண்டிகை இராமர் வனவாசம் சென்று வந்ததையோ அல்லது கிருஷணன் நரகாசுரனை வென்றதையோ மையமாக வைத்து கொண்டாடப்படும். நிறைய இடங்களில் பட்டாசு வெடிகள் நிறைந்த இராவண உருவம் கொளுத்தப்பட்டு அழிக்கப்படும்.

கிழக்கத்திய மனமும் கூட இதை சித்தரிக்கும் வகையில் நமக்குள் உள்ள தீமையை ஒழித்து நன்மையை நிலைநாட்ட தன்னைத்தானே ஆராய்ந்து பார்ப்பதை வலியுறுத்தும். நிறைய திரைப்பட கருத்துகளும், நாகரீக போதகங்களும் இராவணனை( தீமையை) ஒழித்து இராமரை (நன்மையை) நிலைநாட்டும் கருத்தை பிரதிபலிப்பதாகவே அமைகின்றது. கொண்டாட்டங்களை எல்லாம் ஒருபுறமாக ஒதுக்கி வைத்துவிட்டு சற்றுநேரம் நாம் யோசிப்போம். நமக்குள் இருக்கின்ற தீமையை ஒழிக்க நாம் முயற்சித்திருக்கிறோமா?. நமக்குள் உள்ள இந்த தீமையை முற்றிலும் அழித்திருக்கிறோமா? இந்த தீமையை மேற்கொள்ள மனிதனுடைய முயற்சிகள் மாத்திரம் போதுமா?. நீங்கள் எதுவரை சென்றிருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியாது. அது உங்களுக்கும் கடவுளுக்கும் இடையே நிர்ணயிக்கப்பட வேண்டிய காரியம். பல வருடங்களாக என்னை நானே ஆராய்ந்து சோதித்து பார்த்ததில் நான் இன்னமும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதையே உணருகிறேன். எனக்கு முன்பாக இந்த பாதையில் நடந்த ஒரு சிலரை நான் பார்த்தப்போது அவர்களும் என் நிலையில் இருந்ததையே அறிந்தேன்.

இன்றைய சரித்திரத்தில் அக தூய்மையை தேடின உன்னதமான ஒரு மனிதனை நாம் எடுத்து கொள்வோம். அவருக்கு கொடுக்கப்பட்ட பட்டம் மகாத்மா காந்தி. மகாத்மா காந்தி ஒரு உன்னதமான வாழ்க்கையை வாழ்ந்தார்.. அகதூய்மை தேடி அவர் எடுத்த முயற்சிக்களுக்காக அவரை எண்ணி வியந்திருக்கிறேன். 'சத்திய சோதனை' என்னும் அவருடைய சுய சரிதையில் வழியனுப்புதல் என்ற தலைப்பின் கீழ் அவர் எழுதியது, " உண்மையான தூய்மை ஒருவனுக்கு வேண்டுமானால் அவன் தன் ( விருப்பங்களை தியாகம் செய்து ) எண்ணம், பேச்சு, செயல் எல்லாவற்றிலும் விருப்பு வெறுப்புகளை உதறிவிட்டு தன்னை எதிர்த்து நிற்கும் அன்பு மற்றும் வெறுப்பு, ஒட்டுதல் மற்றும் விடுத்தல் ஆகிய அலைகளை எதிர்த்து எழும்ப வேண்டும். இந்த முப்பரிமாண தூய்மையை நான் ஓயாமல் தொடர்ந்தாலும் அந்நிலையை நான் இன்னும் அடையவில்லை. ஆனாலும் எனக்கு முன்பாக ஒரு கடினமான பாதை உண்டு என்பதை நான் அறிவேன்".

"மகா ஆத்துமா" என்ற பட்டதை வென்ற மகாத்மா காந்தி இவ்வார்த்தைகளை சொல்வாரானால் நீங்களும் நானும் எம்மாத்திரம். உங்களுக்கும் எனக்கும் எவ்வளவு எதிர்பார்ப்பு உண்டு?. நமக்குள் இருக்கின்ற அசுரனனை முழுவதுமாக வீழ்த்த உங்களாலும் என்னாலும் முடியுமா? இதற்கு மாற்றுப்பதை உண்டா?. ஒரு நற்செய்தி என்னவென்றால் நமக்குள் இருக்கின்ற அசுரனை நம்முடைய சுய பலத்தினால் அல்ல. ஆனால் கடவுளுடய பலத்தினால் வெல்ல வழி உண்டு. இந்த காரியத்தை நம்முடைய வாழ்க்கையில் கடைபிடிப்பது தான் நமக்கு இன்றைய தீபாவளி பரிசாக அமையும். இந்த புதிரை விடுவித்து விளக்கி கொள்வோம்,

அகதீமை புறம்பானதை காட்டிலும் சிக்கலானது. நிலையான் விடுதலை வேண்டுமானால், தேவன் நம்முடைய கடந்த கால கர்மத்தில் தலையிட்டு தீமையை கண்டு தொடர்ந்து போகிற மனதை ஜெயிக்க பெலன் கொடுக்கவேண்டும். இயேசு நம்முடைய கடந்தகால தீமைக்காக தன்னை அர்ப்பணித்து நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை தன்மேல் சுமக்கும் போது நாம் இந்தக் கடந்த கால வாழ்க்கையிலிருந்து விடுதலை பெறுகிறோம். இயேசு உயிர்த்தெழுந்த போது தேவனுடைய (பவித்ர ) ஆத்மா நமக்குள் வந்து தங்க செய்தார். தேவனுடைய ஆத்மா நமக்குள் தங்கி வாசம் செய்யும் போது தேவன் நமக்கு அகத்தின் குருவாக இருந்து தீமையை எல்லா சூழ்நிலையிலும் வெல்லத்தக்கதான பெலத்தை நமக்கு அளிக்கிறார். நம் அகத்தில் உள்ள குருவின் ஆலோசனைக்கு சரணடையும் போது அகத்தில் உள்ள அசுரனை எல்லா சூழ்நிலையிலும் வெற்றி கொள்கிறோம். தேவன் நம்முடைய வாழ்க்கையில் நுழையும் போது தீமை எல்லா சூழ்நிலையிலும் வெல்லக்கூடிய பெலத்தோடு நாம் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்குகிறோம். தேவன் நம் மேல் எவ்வளவாய் அன்பு கூறுகிறபடியால் இந்த நாளிலும் கூட நமக்கு அகத்தில் உண்மையான தீபாவளி கொடுக்க சித்தமாயிருக்கிறார்.மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு நடைபெறும் தீபாவளி பண்டிகையை விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லாமற் போகும்போது நித்தியத்துக்கும் நிலைக்கும் இயேசு தீபாவளியை விவரிக்க எவ்வாறு முடியும். இந்த ஞானத்தை புரிந்துகொள்ள நமக்கு இருக்கும் இயலாமையினால்தான் தேவன் நமக்கு அவருடைய வார்த்தையை கொடுத்து "இயேசு தீபாவளி" என்று நான் உரிமையோடு சொல்லகூடிய இந்த தினத்தை உங்களோடு கூட பகிர்ந்து கொள்கிறேன்.

நம்மை வழி நடத்தும் பரிசுத்த ஆவிக்கு நாம் சரணடையும்போது "இருளிலிருந்து வெளிச்சம் பிரகாசிக்கட்டும்" என்று தேவன் சொன்ன வார்த்தையை ஏற்று, தேவனுடைய ஒளி இயேசுவின் ரூபத்தில் நம் இதயங்களில் பிரகாசிப்பதை உணர முடிகிறது. தேவனுடைய இந்த பொக்கிஷமானது களிமண் பாண்டங்களில் வைக்கப்பட்டு, எல்லா வல்லமையும் தேவனிடத்திலிருந்து வருகிறது என்பதை வெளிப்படுத்த வைக்கிறது.

தீபாவளி பண்டிகையை இருந்து அனுபவித்து அறிந்து கொள்வது போலன்றி இயேசு தீபாவளி அனுபவிக்க இயேசவை நம் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் உள்ளார்ந்தமாக இயேசுவை ( ஒளியை ) வரவேற்று, இயேசு தீபாவளியை நமக்குள் பிரகாசித்து அனுபவிக்க வேண்டும். அகதீபாவளியை பொருத்த மட்டில் நாம் எல்லோரும் களி மண்ணால் செய்யப்பட்ட விளக்குகள் போல நம்மிடத்தில் சுய ஒளி இல்லாமல் இருக்கிறோம். ஆனால் இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருடைய ஒளியில் பிரகாசிக்கிறோம். அந்த ஒளி நம் இருதயத்தில் சுடர்விடும் போது இந்த அனுபவத்தை பெறுகிறோம். இவ்வொளி இருளிலும் பிரகாசிக்கும்.

இருள் அதனை மேற்கொள்வதில்லை.தீபாவளி நல் வாழ்த்துக்கள். எல்லோரும் வந்து அகத்தில்

உள்ள அசுரனை அழிக்க உங்களையும் அழைக்கிறோம்.
 

Thursday, November 20, 2008

நகைச்சுவைகள்

இந்த நகைச்சுவை http://www.nlm-tv.com/ என்ற வலைதளத்தில் இருந்து எடுத்து இங்கு பதிவு செய்கிறேன்.

பிச்சைக்காரன்: ஐயா! போதகரையா நீங்கள் பெரிய கொடைவள்ளல், இந்த ஏழை கோப்பி குடிக்க இருபது ரூபாய பிச்சை போடுங்கள்.


போதகர்: ஏனப்பா இருபது ரூபாய் கேட்கிறாய்? கோப்பி ஐந்து ரூபாய்தானே!


பிச்சைக்காரன்: ஐயா! குறை நினைக்காதேயுங்கோ. கோப்பி குடிச்ச உடனே எனக்கு சினிமா பாக்கணும் போன்ற உணர்வு வந்திடும், அதுதான்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

டாக்டர்: பல் பிடுங்கியதற்கு அறுநூறு ரூபாய் தாருங்கள்


பாஸ்டர்: என்ன டாக்டர், பல்லுப் பிடுங்க வழமையாய் நூறு ரூபாய் தானே வாங்குவீர்கள்.


டாக்டர்: ஆமாம் நூறு ரூபாய்தான். ஆனால் உங்களுடைய பல்லைப் பிடுங்கும்போது நீங்கள் போட்ட கூச்சலாலும் அலறலாலும், பல்லுப்பிடுங்க வந்திருந்த ஐந்துபேரும் எழும்பி ஓடிவிட்டார்கள். அதனால்தான் அறுநூறு ரூபாய்.


ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

மணி: எப்பபார்த்தாலும் எனக்கு ஒரே தூக்க மயக்கமாயிருக்குது. எனக்காக ஜெபியுங்கோ பாஸ்ரர்.


பாஸ்ரர்: இரவில் தூங்கியபின் நீர் எப்பொழுது விழித்துக்கொள்வீர்?


மணி: ஜன்னல் வழியே சூரியனின் கதிர்கள் என்மேல் விழும்போது விழித்துக்கொள்வேன்.


பாஸ்ரர்: ஆகா! அது நல்லது விடியற்காலையிலேயே எழும்பும் பழக்கம் உம்மிடமுள்ளது.


மணி: நான் நித்தரைகொள்ளும் அறையின் ஜன்னல் மேற்குப்பக்கம் பார்த்தபடி உள்ளது. அதனால் பின்னேர வெய்யிலின் கதிர்கள்தான் என்மேல்பட வாய்ப்பிருக்கிறது.

பாஸ்ரர்: நம் மகன் நல்ல புத்திசாலியாய் இருக்கறான். இந்த மூளையை நம்மிடமிருந்துதான் பெற்றிருக்கிறான்.


மனைவி: உங்களிடமிருந்துதான் அவன் பெற்றிருக்க வேண்டும். என்னுடைய மூளை என்னிடமே இருக்கிறது.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

நாதன்: நீங்கள் என் காதுகேட்பதற்காக இனி ஜெபிக்கவேண்டியதில்லை. மிக விலையுயர்ந்த காதுகேட்கும் கருவியொன்றை வாங்கியுள்ளேன்.

எவ்வளவு மெதுவாகக் கதைத்தாலும், என் காது கேட்கும்.


பாஸ்ரர்: எந்த கம்பனித் தயாரிப்பு உந்தக் கருவி


நாதன்: எட்டு மணி ஆகிறது.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

சோதி: அந்தப் பாஸ்ரர் மூன்று மாதத்திலே என்னை நடக்க வைப்பதாகச் சொல்லி, எனக்காக n ஜபித்தார். அவர் சொன்னபடியே இப்பொழுது நான் நடந்து

திரிகிறேன்.
பூபதி: ஆச்சரியமாயிருக்குதே!


சோதி: வியாதியாய் கிடந்த அந்த மூன்று மாதத்திற்குள் பட்ட கடனை அடைப்பதற்காய் என் காரை விற்றுவிட்டேன். இப்பொழுது பொடி நடைதான். பாஸ்ரர் சொன்னபடியே என்னை நடக்க வைத்துவிட்டார்.


---------------------------------------------------

சோதி: அந்தப் பாஸ்ரர் மூன்று மாதத்திலே என்னை நடக்க வைப்பதாகச் சொல்லி, எனக்காக ஜெபித்தார்.

அவர் சொன்னபடியே இப்பொழுது நான் நடந்து திரிகிறேன்.

பூபதி: ஆச்சரியமாயிருக்குதே!

சோதி: வியாதியாய் கிடந்த அந்த மூன்று மாதத்திற்குள் பட்ட கடனை அடைப்பதற்காய் என் காரை விற்றுவிட்டேன்.

இப்பொழுது பொடி நடைதான். பாஸ்ரர் சொன்னபடியே என்னை நடக்க வைத்துவிட்டார்.
--------------------------------------------------------

நாதன்: நீங்கள் என் காதுகேட்பதற்காக இனி ஜெபிக்கவேண்டியதில்லை. மிக விலையுயர்ந்த காதுகேட்கும் கருவியொன்றை வாங்கியுள்ளேன்.

எவ்வளவு மெதுவாகக் கதைத்தாலும், என் காது கேட்கும்.

பாஸ்ரர்: எந்த கம்பனித் தயாரிப்பு உந்தக் கருவி?

நாதன்: எட்டு மணி ஆகிறது.
-----------------------------------------------------

பாஸ்ரர்: நம் மகன் நல்ல புத்திசாலியாய் இருக்கறான். இந்த மூளையை நம்மிடமிருந்துதான் பெற்றிருக்கிறான்.

மனைவி: உங்களிடமிருந்துதான் அவன் பெற்றிருக்க வேண்டும். என்னுடைய மூளை என்னிடமே இருக்கிறது.
-----------------------------------------------------------------

மணி: எப்பபார்த்தாலும் எனக்கு ஒரே தூக்க மயக்கமாயிருக்குது. எனக்காக ஜெபியுங்கோ பாஸ்ரர்.

பாஸ்ரர்: இரவில் தூங்கியபின் நீர் எப்பொழுது விழித்துக்கொள்வீர்?

மணி: ஜன்னல் வழியே சூரியனின் கதிர்கள் என்மேல் விழும்போது விழித்துக்கொள்வேன்.

பாஸ்ரர்: ஆகா! அது நல்லது விடியற்காலையிலேயே எழும்பும் பழக்கம் உம்மிடமுள்ளது.

மணி: நான் நித்தரைகொள்ளும் அறையின் ஜன்னல் மேற்குப்பக்கம் பார்த்தபடி உள்ளது.

அதனால் பின்னேர வெய்யிலின் கதிர்கள்தான் என்மேல்பட வாய்ப்பிருக்கிறது.

-------------------------------------------------------------


டாக்டர்: பல் பிடுங்கியதற்கு அறுநூறு ரூபாய் தாருங்கள்

பாஸ்டர்: என்ன டாக்டர், பல்லுப் பிடுங்க வழமையாய் நூறு ரூபாய் தானே வாங்குவீர்கள்.

டாக்டர்: ஆமாம் நூறு ரூபாய்தான். ஆனால் உங்களுடைய பல்லைப் பிடுங்கும்போது நீங்கள் போட்ட கூச்சலாலும் அலறலாலும்,

பல்லுப்பிடுங்க வந்திருந்த ஐந்துபேரும் எழும்பி ஓடிவிட்டார்கள். அதனால்தான் அறுநூறு ரூபாய்.

-----------------------------------------------------------------------------------------


பிச்சைக்காரன்: ஐயா! போதகரையா நீங்கள் பெரிய கொடைவள்ளல், இந்த ஏழை கோப்பி குடிக்க இருபது ரூபாய பிச்சை போடுங்கள்.

போதகர்: ஏனப்பா இருபது ரூபாய் கேட்கிறாய்? கோப்பி ஐந்து ரூபாய்தானே!

பிச்சைக்காரன்: ஐயா! குறை நினைக்காதேயுங்கோ. கோப்பி குடிச்ச உடனே எனக்கு சினிமா பாக்கணும் போன்ற உணர்வு வந்திடும், அதுதான்.


பிரசங்கி: கேளுங்குகள் தரப்படும். தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்கள் என்ற இயேசு சொன்னார்.

கடன் கொடுத்தவர்: ஜயா நானும்தானே அனுதினமும் உங்களை தேடுகிறேன் என்னை கண்டவுடனே

ஓடி ஓளிச்சிக்கறீங்க! அடிக்கடி உங்கள் வீட்டுக் கதவை தட்டினேன்!எத்தனை தடவை தந்த காசைத் திருப்பித்தரும்படி கேட்டிருப்பேன்!???

பிரசங்கி: தம்பி! பிரசங்கத்திலை "" இயேசு சொன்னார்'' என்று தானே சொன்னேன்.:நான் சொல்கிறேன்" என்று சொன்னேனா?

கடன் கொடுத்தவர்: ??? எதுக்கும் வீட்டை போய் {1 தீமோத் 4: 16} ஜ வாசியுங்கோ.

----------------------------------------------------

பேரன்: தாத்தா, உங்கட பென்சன் காசுல 10,000 ரூபா தர முடியுமா?

தாத்தா: நிச்சயமாக தாரன், ஆனா நீ எப்ப திருப்பி தருவாய்

பேரன்: எனக்கு பென்சன் கிடைத்ததும் தருகிறேன் தாத்தா

தாத்தா:-------????

{சொல்லப்படுத் எல்லா வார்த்தையையும் கவனியாதே கவனித்தால் உன் வேலைக்காரன்

உன்னை நிந்திப்பதை கேள்விப்பட வேண்டியதாயிருக்கும். பிர 7:21

----------------------------------------

பால்பாண்டி: நான் தீப்பெட்டி கடைக்காரனுடைய மகளை கட்டினது தப்பா போச்சு

நண்பன்: ஏன்டா அப்படி சொல்லுராய் பாண்டி?

பால்பாண்டி : எதுக்கு எடுத்தாலும் எரிஞ்சு விழுகிறா.

-----------------------------------------------

ஆசிரியர் : பீட்டர் இமய மலை எங்குள்ளது என்று சொல்லு பாப்பம்?

பீட்டர் : தெரியாது சார்!!

ஆசிரியர் : மேசை மேல் ஏறி நில்லு

பீட்டர் : மேசை மேல் ஏறினால் தெரியுமா சேர்?

ஆசிரியர் : --------------????

Tuesday, April 8, 2008

உலகளாவிய தமிழர் சமயம்-சீர்காழி சிவ.சந்திரசேகரன்.

தமிழ்நாட்டில் வளர்ந்த தமிழர் சமயங்களான சைவமும்,வைணவமும் உலகளாவிய தமிழர் சமயத்தின் தமிழகக் கிளைகளாகும்.

"தென்னா டுடைய சிவனே போற்றி!

எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி!"

என்பது மணிவாசகரின்(மாணிக்கவாசகரின்) திருவாக்கு.

தென்னாட்டில் சிவன் என்ற பெயரால் வழங்கப்படும் முழு முதற் கடவுள்தென்னாட்டிற்கு மட்டும் உரியவரல்ல; அனைத்து நாடுகளுக்கும் உரியவர் என்னும் கருத்து இதனுள் அடங்கி உள்ளது.

ஆகவே,சிவன்,விஷ்னு பற்றிப் பாடியுள்ள சைவ,வைணவ பாடல்களில் உள்ள ஆழத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் உலகளாவிய மதங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.

உலகளாவிய மற்ற மதங்களைப் பற்றி முழுமையாக அறியாதவர்களுக்கு சிவனைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ளல் முடியாத ஒன்றாகும்.

இந்த நோக்கில் திருமூலர் எழுதியுள்ள திருமந்திரத்திற்கும்,கிறிஸ்தவ வேத நூலாகிய பைபிளுக்கும் உள்ள தொடர்புகள் இங்கு ஆராயப் படுகின்றன,திருமந்திரம் ஆராயப்படும்போது,திருமந்திரத்தின் கருத்துத் தொடர்பான மற்ற சைவ நூல்களும் முழுமையான கருத்துத் தெளிவிற்காக அதாவது எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பைபிளும் திருமந்திரமும்

தொடர்-1

மையக்கருத்து:இறைவன் பூமியில் மனிதனாகப் பிறந்து வந்து மனிதர்களின் பாவத்தைப் போக்கினார்.

பைபிள்: எல்லாரும் பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்துபோயினர்.(ரோமர் 3:23)

இரத்தம் சிந்தி மனிதருடைய பாவத்துக்கு கழுவாய்

(பரிகாரமாய்) ஆகுமாறு இயேசுவைக் கடவுள் நியமித்தார்(ரோமர் 3:25)

..........தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்.மனித உருவில் தோன்றி..........

கீழ்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார்

(பிலிப்பியர் 2:7-8)

பாவங்களை நீக்கவே அவர் தோன்றினார்.பிள்ளைகள் மாமிசத்தையும்,இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க,அவரும் அவர்களைப் போல மாம்சத்தையும்,இரத்தத்தையும் உடையவரானார்.(எபிரேயர் 2:14)

நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரை பாவ நிலை ஏற்கச் செய்தார்.(2 கொரிந்தியர் 5:21)

விண்ணின்று இழிந்து வினைக்குஈடாய் மெய்கொண்டு

தண்ணின்ற தாளை தலைக்காவல் முன்வைத்து

உண்நின்று உருக்கிஓர் ஒப்பிலா ஆனந்தக்

கண்நின்று காட்டிக் களிம்புஅருத் தானே

-திருமந்திரம் 113.

பத உரை:

விண்ணின்று இழிந்து- பரம்பொருள் விண்ணுலகை விட்டிறங்கி,மண்ணுலகை வந்து அடைந்து.

வினைக்கு ஈடாய் மெய் கொண்டு-வினைக்கு இடமான மனித உடம்பு எடுத்து

தண்ணின்ற தாளை-குளிர்ச்சி பொருந்திய திருவடிகளை

தலைக்காவல் முன்வைத்து-ஆன்மாக்களுக்குப் பாதுகாவலனாக வைத்து,

உண்ணின்று உருக்கி-உள்ளத்துள்ளே தன் திருவருள் புகச் செய்து,

ஓர் ஒப்பிலா ஆனந்த-ஒப்புவமை கூற இயலாத பேரானந்தப் பெருவெள்ளம் பெருக்கெடுத்தோட

கண்நின்று காட்டி-கண்கள் அருள் ஓளி கண்டுகளிக்க செய்து

களிம்பு அறுத்தானே-பாச தளைகளை,பாவ வினைகளை அறுத்தெறிந்தான்.

பரம்பொருள் விண்ணுலகை விட்டு இறங்கி,மண்ணுலகை வந்து அடைந்து,மனித உடம்பு எடுத்து,ஆன்மாக்களின் உள்ளத்தில் தன்

திருவருளைப் புகச்செய்து,கண்கள் அருள் ஒளியைக் கண்டு இன்பமடையச் செய்து,பாவத்தை போக்கினான்.

இக்கருத்தையே மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் தெளிவாக விளக்குகிறார்.

அருபரத் தொருவன் அவனியில் வந்து

குருபரனாகி அருளிய பெருமையைச்

சிறுமை என்று இகழாதே.

-திருவாசகம்,போற்றித் திரு அகவல்.

பிரபஞ்சத்துக்கு அப்பால் உயர்ந்த இடத்தில் இருக்கின்ற பரமன், பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாகிய இந்த நில உலகில் பரமகுருவாய் வந்து

என்னை ஆண்டுகொண்டது அவனுடைய பெருமைக்கோர் எடுத்துக் காட்டன்றோ!

இறைவனின் இச்செய்கையை வெகு சாதரணமாக எண்ணிவிடக் கூடாது.

மெய்தரு வேதியனாகி வினைகெடக்

கைதரவல்ல கடவுள் போற்றி.

-போற்றித் திரு அகவல்

புண்ணியன் மண்ணிடை வந்துதோன்றிப்

பேதம் கெடுத்தருள் செய்பெருமை

அறியவல்லார் எம்பிரான் ஆவாரே

-திருவார்த்தை 7

புண்ணியனாகிய இறைவன் இம்மண்ணில் வந்து தோன்றி,பேதம் கெடுத்தான்.(இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இருந்த பிரிவினையை அகற்றினார்.)

இக்கருத்தையே

இறவா இன்பத்து எமை இருத்த வேண்டிப்

பிறவா முதல்வன் பிறந்தான்.

போற்றிப்பஃறொடை69

என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது.

'அவதார்' என்று சமஸ்கிருதச் சொல்லிற்கு 'இறங்கி வருதல்' என்பது பொருள் .இதன் தமிழ் வடிவமே 'அவதாரம்' என்பது ஆகும்.

இறங்கி வருதல் என்று கூறினால்,

-யார் இறங்கி வந்தார்?

-எங்கிருந்து இறங்கி வந்தார்?

-எங்கு வந்தார்?

-எவ்வடிவத்தில் இறங்கி வந்தார்?

-ஏன் இறங்கி வந்தார்?
என்ற கேள்விகள் எழுவது இயல்பு.

1,யார் இறங்கி வந்தார்?

பரம்பொருள்-அருபரத்தொருவன்-புண்ணியன்-கடவுள்-பிறவா முதல்வன்.

2,எங்கிருந்து இறங்கி வந்தார்?

விண்ணின்று இழிந்து-அருபரத்திலிருந்து.

3,எங்கு வந்தார்?

அவனியில் வந்தார்-மண்ணிடை வந்தார்.

4,எவ்வடிவத்தில் இறங்கி வந்தார்?

வினைக்கு ஈடாய் மெய்கொண்டு வந்தார்.குருவாக வந்தார்,பிறந்து வந்தார்.

5,ஏன் இறங்கி வந்தார்?

களிம்பு(பாவம்)அறுக்க வந்தார்.வினை கெட வந்தார்.பேதம் கெடுத்து அருள் செய்ய வந்தார்

இறவா இன்பத்து எமை இருத்த வந்தார்.

-(இன்னும் வரும்)

திராவிட சமயம் இதழ் ஏப்ரல் 2008

free web counter