
உலகின் தலை சிறந்த புத்தகமாக திகழ்கின்றது பரிசுத்த வேதாகமம்.உலகிலுள்ள மற்ற புத்தகங்களிலிருந்து பல நிலைகளில் மாறுபட்டுத் தனித்தன்மை உள்ளதாக விளங்குகிறது.ஏனைய புத்தகங்கள் ஒரு சில மாதங்களுக்குள்ளாகவோ அல்லது ஒரு சில வருடங்களுக்குள்ளாகவோ எழுதப்பட்டிருக்கலாம்.ஆனால் பரிசுத்த வேதாகமம் ஆசியா,ஐரோப்பா,ஆப்பிரிக்கா என்ற மூன்று முக்கிய கண்டங்களிலிருந்து 1500 ஆண்டுகள் இடைவெளியில் பல்வேறுபட்ட பக்தர்களால் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினால் எழுதப்பட்டுள்ளது.இவ்வாறிருந்தும் அவற்றில் ஒன்றுக்கொன்று கருத்து வேற்றுமை கிடையாது.
அச்சு இயந்திரம் மூலம் அச்சடிக்கப்பட்டு உலகின் முதன் முதலில் புத்தகமாக வெளிவந்தது பரிசுத்த வேதாகமமே!உலகின் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதும் பரிசுத்த வேதாகமமே!சுமார் 1700(இந்த கணக்கு 10 வருடங்களுக்கு முந்தையது) மொழிகளுக்கு மேல் இது மொழிபெயர்கப்பட்டுள்ளது!,13 நாட்களுக்கு ஒரு முறை பரிசுத்த வேதாகமத்தின் ஒரு பகுதி ஒரு புதிய மொழியில் வெளிவருவதாக கணக்கிட்டிருக்கிறார்கள்.உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் புத்தகம் இதுதான்.
ஒரு புத்தகங்களின் கையெழத்துப் பிரதிகள் எத்தனை உள்ளதோ அதன் எண்ணிக்கையைக் கொண்டுதான் அந்தப் புத்தகத்தின் தரம் கணக்கிடப்படும்.இன்று உலகிலேயே அதிகமான கையெழுத்துப் பிரதிகளை கொண்டது திருமறையின் புதிய ஏற்பாடாகும்.அதற்கு 24,000 கையெழுத்துப் பிரதிகள் கிடைத்துள்ளன.
உலகின் புத்தகங்கள் அனைத்தும் நடந்தவற்றையும்,நடக்கின்றவற்றையும் சொல்லலாம்.ஆனால் வேதாகமம் மாத்திரமே,நடந்தவவைகளையும்,நடக்கின்றவகளையும் மட்டுமல்லாமல் நடக்கப்போகின்றவைகளையு கூறக்கூடிய தீர்க்கதரிசனங்களை உள்ளடக்கியது!.
நெல்சன் குக் என்ற புதைபொருள் ஆராய்சியாளர்,"இதுவரை 25,000-க்கும் அதிகமான இடங்களில் செய்யப்பட்ட புதைபொருள் கண்டுபிடிப்புகளில் வேத வசனத்திற்கு மாறுபட்டதாக ஒன்று கூட இருந்ததில்லை.அனைத்து கண்டுபிடிப்புகளும் வேதவசனத்தை நிருபிப்பதாகவே உள்ளது"என்று தெரிவித்து உள்ளார்.
முதன் முதலில் வானவெளிக்கலத்தில் எடுத்து செல்லப்பட்ட புத்தகமும் பரிசுத்த வேதாகமமே! வேதாகமத்தின் முதல் வசனத்தை,போர்மன் என்ற வானவெளிவீரர் 1968-ஆம் ஆண்டு வானவெளியில் கலத்தில் இருந்து வாசித்தார்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எந்தவிதமான கண்டுபிடிப்பும் வேதாகமத்திற்கு எதிராக எதையும் சாதித்துவிடவில்லை.அமேரிக்காவில் 600 விஞ்ஞானிகளும்,ஆஸ்திரேலியாவிலிருந்து புதை பொருள் ஆராய்ச்சியாளர்களும் வேதாகமத்தின் ஒவ்வொரு பகுதியையும் விஞ்ஞான ஆதாரபூர்வமாக நிருபித்து இருபத்தியோராம் நூற்றாண்டிற்கு சவால் விடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
"உம்முடைய வேதமே சத்தியம்"
(சங்.119:142)
நன்றி;நல்ல நண்பன்.
No comments:
Post a Comment