Monday, December 6, 2010

வைரத்தை அறுக்கும் வைரம்


 

   கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.(சங்-111:10).
  
 ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், தேவன் அவன்மேல் கூட்டினார்.
 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்
 போட்டால் ஜீவபுஸ்தகத்திலிருந்தும்,பரிசு
த்த நகரத்திலிருந்து,இந்தப் புஸ்தகத்தில் எழுதப்
 பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.(வெளி-22:18,
19).
 
இந்தக் கடுமையான எச்சரிக்கை வெளிப்படுத்தின விசேஷத்திற்கான எச்சரிக்கை மட்டுமல்ல.
பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பெற்று வேதபுத்தகத்தின் இறுதியில் வைக்கப்பட்டு இருப்பதனால்
இந்த அறிவிப்பு வேத புத்தகம் முழுவதற்குமே உரியதாகும்.பரிசுத்த ஆவியானவரால் ஏவப்
பட்டவர்களால், இப்படியே தள்ளப்பட வேண்டியவை தள்ளப்பட்டு,வேதாகமம் ஆவியோடும்,
உண்மையோடும் தொகுக்கப்பட்டது. இந்த வேதாகமத்தில் இருக்கிற ஒவ்வொரு எழுத்தும்
உண்மை என்பதே ஓர் அதிசயம் ஆகும். அதனால்தான் எதையும் கூட்டவும் குறைக்கவும்
கூடாது என்ற கடுமையான எச்சரிக்கை தரப்பட்டுள்ளது.

ஒருமுறை தமிழில் உள்ள மிக அரிய இலக்கியக் கருவூலமான திருக்குறளை ஒருவர்
வேறு மொழிபெயர்த்தார். நல்ல இலக்கிய சேவைதான். கூடவே அவர் வேறொன்றையும்
செய்த்தார்.அதாவது எழுதியவர் என்ற இடத்தில் திருவள்ளுவர் என்று போடாமல்,தன்
பெயரையே போட்டுக்கொண்டார்.ஆக, சில நேரங்களில் மனிதன் எது வேண்டுமானாலும்
செய்வான்.தேவவார்த்தைகளை அவன் புரட்டிவிடக் கூடாது என்பதற்காகத் தான் இந்த
எச்சரிக்கை. அப்படியே வேத எழுத்துக்கள் ஒவ்வொன்றும் உருட்டுகள் இல்லாமல்
காலங்காலமாக கட்டுப்பாட்டுடன் காப்பாற்றப்பட்டு வருகின்றன.உள்ளதை உள்ளதென்றும்
சொல்லுங்கள்(மத்.5:37) என்று இயேசுவானவர் கூறியபடி,வேதாகமத்தில் உள்ளபடியே நாம்
விசுவாசிக்க வேண்டும்.இயற்கை,விஞ்ஞானக் கருத்துக்களுக்கு சில வேதாகம உண்மைகள்
மாறி இருப்பதாகத் தோன்றுவதால் சிலர் புதிய புதிய விளக்கங்களை வகுத்தும் தொகுத்தும்
கூற முற்படுகின்றனர். இது தேவை அற்றது.

விஞ்ஞானம் ஒவ்வொரு கணமும் வளர்ச்சியுற்றுக் கொண்டே வருவதாகும்.அணு பிளக்க
முடியாதது என்பது டால்டனின் அணுக்கொள்கை.பின் அது பிளக்கப்பட்டது.மனித அறிவு
முற்று முடிந்த முழுமை பெற்றதல்ல.என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல.(ஏசா-55:8).
என்று தேவன் தீர்க்கமாகக் கூறுகிறார்.இன்று முரண்பாடாகத் தோன்றினாலும்,போதிய அறிவு
வளர்ச்சி பெற்ற பின்,வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது உண்மை என்று மனிதன் அறிந்து கொள்வான்.

ஆதியாகமம் 5-ஆம் அதிகாரத்தில் நமது மூதாதையர்கள் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக
வாழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.இது இயற்கைக்கு முரணான கட்டுக்கதை என்று கருத்ப்பட்டது.
வேதம் உண்மையைத் தவிர வேறு எதையும் கூறுவதில்லை என்று நம்பிய,அறிந்த வேத
அறிந்த வேத அறிந்த வேத அறிஞர்கள் கூட இந்த இடத்தில் தடுமாற்றம் அடைந்தனர்.
இவை வெறும் குறியீடுகளே என்று கருதினர்.உதாரணமாக,ஏனோக்கின் வயதாகிய 365,
ஒரு வருடத்தின் மொத்த நாட்கள்--அதாவது முழுமையானா ஆயுளை குறிக்கிறது என்றும்
லாமேக்கின் வயதான 777 என்பது முற்றுப்பெற்றதை குறிக்கிறது என்றும் (7-முழுமை எண்)
விளக்கம் அளித்தனர்.

சரித்திரகாலத்தில் விழும் இடைவெளியை ஈடுகட்ட,தனிமனிதனின் வயது கூட்டிக்காட்டப்படுகிறது
என்றார்.இதற்கு சான்றாக பத்து சுமேரியஅரசர்கள் 72,000 ஆண்டுகள் ஆண்டதாகக் கூறப்படும்
புராணத்தைச் சுட்டிக் காட்டினார்.ஆனால் "எவ்வளவேனும் பொய்யுரையாத" (எபி.6:18).
தேவன் அருளிய வேதம் சத்தியம் என்று பலர் விசுவாசித்தனர்.இன்றைய செய்தி என்ன?
விஞ்ஞானம், வேதம் உண்மை என்று நிருபிக்கும் ஆதாரங்கல்ளைக் கொடுக்க
ஆரம்பித்துள்ளது.

சமீபத்திய மரபணுக்கள் பற்றிய ஆராய்ச்சியில் தெரிவது என்ன? நமது உடலில் உள்ள
உயிரணுக்கல் இருக்கும் குரோமோசோம்களில் உள்ள ஜீன்களே ஒரு மனிதனின் உயிர்
வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. இவற்றின் உயிர்க்குறியீடுகளே வாழ்நாள்,முதுமை,மரபு
சார்ந்த வியாதிகள்,குணநலன்கள்,பால். போன்றவற்றைக் கட்டுப்படுத்துகின்றன.இவற்றை
மறுதிட்டப்படுத்துவதின் மூலம் ஒரு மனிதனை 1000 ஆண்டுகள்கூட வாழவைக்க
முடியும் என்று இன்று விஞ்ஞானம் நம்புகிறது. இந்த ஜெனிடிக் குறியீடுகளைப்
படித்துவிட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் மூலம் இதுவரை கடவுளுக்கு
மட்டுமே தெரிந்த இரகசியத்தை இவர்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகின்றனர்.

இந்த விஞ்ஞானிகளின் அறிக்கையை நன்கு கவனிக்க வேண்டும். "இதுவரை
கடவுளுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்" என்று தங்களை அறியாமலே இவர்கள்
வாயில் இருந்தே உண்மையான அறிக்கை வெளிவந்து விட்டது.ஜெனிடிக் குறியீடுகளைக்
கட்டுப்படுத்துவதின் மூலம் வாழ்நாளை கூட்டவோ குறைக்கவோ முடியும் என்பது
விஞ்ஞான ரீதியாக சாத்தியம் என்ற கோட்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததே.
இந்த ஆராய்ச்சியின் இறுதி வெற்றிக்கு நீண்டகாலமாகும். ஆனால் முடியும்.

எது எப்படி இருந்தாலும், மனித உடலின் வாழ்வியல் தன்மை மரபுக்குறியீடுகள் மூலம்
மரபணுக்களால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பது அறிவியல் உண்மை இதனை மனிதன்
தன்னாலேயே மாற்றி அமைக்க முடியும் என்று கருதுகிறான் என்றால் தேவனால் ஏன்
முடியாது என்பதே நமது கேள்வி. இந்த வெளிச்சத்திலேயே 900 ஆண்டு ஆதிப்பெற்றோர்கள்
 வாழ்ந்தார்கள் என்ற உண்மையை மேலும் ஆராய்வோம். மனிதனின் வாழ்நாள்ஆயிரம்
ஆண்டுகள் என்றே (ஆதாமின் பாவத்திற்குப் பின்) ஆதியில் தேவன் வகுத்தார்.
    * கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம் போலவும்
      ஆயிரம்வருஷம் ஒருநாள் போலவும் இருக்கிறது.(2 பேது.3:8)

    * ஆயிரம் வருட அரசாட்சி(வெளி.20:6)
      * ஏழுநாள் படைப்பு (ஆதி. 1-ஆம் அதிகாரம்).

 என்பனவற்றின் ஆழ்பொருள் நுட்பங்களை தொகுத்தால் விரியும்.மனிதனின்
பாவங்கள் காரணமாக தேவன் மனஸ்தாபப்படுகிறார். அப்பொழுது கர்த்தர்:
என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதிக்லை.அவன் மாம்சந்தானே,
அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்(ஆதி.6.3)
(நோவா காலத்து வெள்ளம் இது கூறி 120 வருடம கழித்து வந்ததையும்
இது குறிப்பிடலாம் என்பர் சில ஆய்வாளர்கள்.

இதைத்தொடர்ந்து தரப்படும் வம்சவரலாற்றில் மனிதனின் ஆயுட்காலம்
படிப்படியாகக் குறைந்து வருவதைக் காண்கிறோம்.(ஆதி.11:10-32)--நோவா 950,
சேம் 600, அர்பக்சாத் 438,சாலா 433,ரெகூ 239,நாகோர் 148, தேராத் 205, ஆபிரகாம் 175).
நோவாவுக்கு முன் உள்ள பரம்பரையினரின் வயது 900 சுற்றி சுழல்வதையும்,
நோவாவுக்குப் பின் ஒரு கிரமமாக அது குறைந்து வருவதையும் காண்கிறோம்.
(அதாவது 1000 ஆண்டுகள் 120ஆண்டுகளை நோக்கிக் சுருங்குகிறது).
தேவன் மறுபடியும் மனிதனின்  ஆயுட் காலத்தைத் திட்டமிட்டார் என்பதற்கு
இதுவே சான்று. பாவத்தினால் ஏற்பட்ட சாபத்தினால் பூரண வயதான 1000 ஆண்டுகளை
மனிதன் இழந்து வெறும் 120 ஆண்டுகளுக்கு ஆயுள் குறைந்தது. எங்கள் நாட்களெல்லாம்
உமது கோபத்தால் போய்விட்டது (சங்.90:9). என்று சங்கீதக்காரன் புலம்புவது, இதற்குக்
கூட பொருத்தமாகத்தானே இருக்கிறது. கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப்
பெருகப்பண்ணும் (நீதி. 10-27).

மேற்கண்ட வசனங்கள் ஒன்றை உறுதிப்படுத்துகின்றன. தெய்வ பயமும்,தேவ கோபமும்
நமதுவாழ்நாளை நிர்ணயிக்கின்றன என்பதே. இதற்கான அடிப்படை நமது பாவமே.
எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும்,
அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே(சங்.90-10) மனிதனின் வாழ்நாளை
120 ஆண்டுகள் என்ற மேல் எல்லையில் இருந்து, "பாவம்" மேலும் குறைத்து வ்ட்டதைக்
காண்கிறோம். எனவே பாவமே ஆயுளைக் குறைக்கிறது என்று அறிகிறோம்.

விஞ்ஞானம் வளர வளர, இதுவரை முரண்பாடுகள் போல் தோன்றிய உண்மைகள்
முரண்பட்டதல்ல என்று நிறுவப்படுகின்றன.
வேதாகம உண்மைகள் அறிவியலுக்கு எதிரானவை அல்ல.வேதக் கருத்தை விளக்கும்
அளவுக்கு விஞ்ஞானம் வளரவில்லை என்றே அர்த்தம்.ஆயுள் காலத்தைப் பொறுத்தவரையில்
வேதம் கூறும் 1000 ஆண்டுகள் உண்மையே. ஆதாம் முதற்கொண்ட ஆதி பிதாக்கள் பாவம்
பரவாத பூமியில் நீண்ட நாள் வாழ்ந்தனர்.இது கட்டுக் கதை அல்ல என்று இன்று விஞ்ஞானம்
மெய்ப்பிக்கிறது.

அதிசய வேதம் புத்தகத்திலிருந்து...............

Wednesday, December 1, 2010

எண்ணிமுடியாத அதிசயங்கள்


ஆராய்ந்து முடியாத பெரியகாரியங்களை எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார். (யோபு 5-9). நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால்,உம்மைத் துதிப்பேன்(சங்.139-14). அவரைத் துதிக்க வேறு காரணங்கள் பல இருந்தாலும் இது ஒன்றே போதும் என்பது சங்கீதக்காரனின் தெளிவான முடிவு. தேவனின் கிரியைகள் அதிசயமானவை (சங்.145-5)
என்பதற்கு நம்மில் நாமே மிகப்பெரிய சான்று.
அதனால் அவர் அருளிய வேதமும் அதிசயமானதாகவே இருக்க முடியும்.சற்று நேரம் சிந்தியுங்கள்.
நம்முடைய உடல்,அறிவு,உயிர் எத்தனை பிரமிக்கத்தக்க அதிசயமாய் இருக்கிறது? தேவனின்
அதிசயங்களுக்கு உதாரணத்தைத் தேடி அலைய வேண்டிய அவசியமே இல்லை.வானங்கள்
தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது (சங்.19-1).என்று எவ்வளவு பொருத்தமாகக்
கவிஞன் விளக்குகிறான்.



ஆகாய விரிவும், விண் மீன்களும்,அவற்றைச் சுற்றியோடும் கோள்களும் அவற்றின் கோடி கோடியான தொகையும்,வகையும் வகையும்,வண்ணமும்,வனப்பும்,வடிவங்களும்--அவர் ஆலோசனையில்
ஆச்சரியமானவர் (ஏசா.28-29) என்பதை விளக்குகின்றன. நமது அறிவுக்கு எட்டாத அற்புதங்களை அற்புதங்களை
ஆற்றுகிற தேவனின் வசனமும,வார்த்தைகளும் அடங்கிய பரிசுத்த வேதாகமத்தின் உள்ளுறைந்த அதிசயங்கள்
எண்ணி முடியாதவைகள்.


இப்படிப்பட்ட பரிசுத்தமான வேதாகமத்தை நாம் ஏதோ கடமைக்காகப் படித்து சென்று விடுகிறோம்.சில
வசனங்களை மட்டும் படிக்கிறோம்.சில அதிகாரங்களை மட்டும் படிக்கிறோம். ஒருசிலர் ஆதியாகமத்தில்
இருந்து வெளிப்படுத்தின் விசேஷம் வரை வாசித்து செல்கின்றனர். பல வசனங்களை மனப்பாடம்
செய்துகொள்வோரும் உண்டு. இவை எல்லாம் நல்ல நடைமுறைகளே. ஒருசிலரே நன்கு தியானித்து
ஆராய்ச்சி செய்வதுண்டு. இது மிக முக்கியமானதாகும்.


வேதத்தை ஆராய்ச்சி செய்யக் கூடாது என்று தவறாக வாதிடுவோரும் உண்டு. பைபிளை மட்டுமே
படிக்க வேண்டும் என்றும், வேறு நூல்களைப் படித்து ஒப்பிடக் கூடாது என்றும் கூறுவோர் உண்டு.
வேதகமத்தில் கேள்விகளே எழுப்பக் கூடாது என்றும் சிலர் உரைப்பார். கலிலேயோ என்ற விஞ்ஞானி
உலகம் உருண்டையானது என்று கூறினார். அவரை அக்கால ரோம சபை துன்புறுத்தி சிறையில்
அடைத்தது. உலகம் தட்டையானதுதான் என்று எழுதியும் வாங்கிக்கொண்டது. இக்காரணங்களினாலேயே
வேதம் விஞ்ஞானத்துக்கு எதிரானது என்ற கருத்தைப் பரப்பத் தொடங்கினர். சபை ஒரு விஞ்ஞானி
உண்மையைக் கூறியதற்காகத் துன்புறுத்தியது ஏன்? எதற்காக? பூமி தட்டையானது என்று வேதம்
எங்காவது கூறுகிறதா? பூமி உருண்டையானது என்றே வேதாகமம் விளக்குகிறது.

அவர் பூமி உருண்டையின் மேல் வீற்றிருக்கிறவர் (ஏசா- 40:22)."பூச்சக்கரம்" என்று அதனை சுற்றியோடும்
இரு தன்மைகளையும் (சூரியனை, தன்னைத்தானே) குறித்தல்லவா வேதம் விளங்குகிறது.


வேதாகமத்தைக் காப்பதாகக் கூறி, தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளவே சிலர் உண்மை கூறிய
விஞ்ஞானிகளைத் துன்புறுத்தி உள்ளனர்.


நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும் படியாகவும், அவருடைய ஆலயத்தில்
ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய
ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். (சங் -27:4).

என்றும், அவருடைய அதிசயங்களை விவரிப்பதற்காக தேவனுடைய பீடத்தைச் சுற்றி வருவதாகவும்
தாவீது எழுதுகின்றார். ஆலயத்தில் தங்கி இருந்து பீடத்தைச்சுற்றிம்வந்து ஆராய்ச்சி செய்தல்லவோ
எண்ணிமுடியாத அதிசயங்களைக் காணமுடியும்.

இஸ்ரவேல் தேசம் விடுதலை பெற்றபோது வெறும் பாழாய் கிடந்தது. உலகெங்கும் சிதறிக்கிடந்த
யுதர்கள் திரண்டு வந்து சேர்ந்தவண்ணம் இருந்தனர்.நாட்டைப் புதுப்பிக்கத் திட்டம் இட்டனர்.
ஆனால் எப்படி எங்கிருந்து ஆரம்பிப்பது. அப்போது இஸ்ரவேல் விஞ்ஞானிகள் ஓர் அரிய
காரியத்தை செய்தனர். அவர்கள் வேதத்தை முதன்முதலாக ஆராய ஆரம்பித்தனர். எங்கு என்ன
விளையும், நீர் எங்கு கிடைக்கும், கனிமத்தாதுக்கள் கிடைக்கும் எது? இப்படி வேதத்தை அலசி ,
அந்தப் புள்ளி விவரங்களைக் கொண்டு தேசத்தை நிர்மாணித்தார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்
சுதந்திரம் பெற்ற நாடுகள் அழிவை நோக்கிப் பின்னேறும் போது, இஸ்ரவேல் நாடு எல்லாவற்றிலும்
முன்னேறி புகழ்பெற்று ஓங்குகிறது.

ஒரு தேசத்துக்கே வழிகாட்டிய வேதம், நமது வாழ்க்கைக்கு வழிகாட்டுவது எவ்வளவு நிச்சயம்?
இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங் -1:2 ).

பற்றி எரியும் தீயை, கிட்ட நெருங்கி, உற்றுப்பார்த்தால் தான் மோசேக்கு அதிசயம் விளங்கிற்று.
வேதாகமத்தை நுணுகி ஆராய்ந்த அப்போஸ்தலருக்கு சுவிசேசத்தின் அற்புதம் பிடிபடலாயிற்று.


அதிசய வேதம் புத்தகத்திலிருந்து...............

Tuesday, November 23, 2010

அறியாமலிருக்கும் அற்புதங்கள்

 

இவர்கள் நம் இந்தியாவிற்கு அருகில் உள்ள தற்போதைய மியான்மர், அந்நாளின் பர்மா தேசத்தில் வசித்து வருகிற மலைஜாதி மக்களாவர். கரண்  (Karen) என்று அழைக்கப்படுகிற இவர்கள் அத்தேசத்தின் ஜனத்தொகையில் 7% க்கும் அதிகமாக இருப்பவர்கள் என்பது ஒரு விசேஷம். அங்கு மட்டுமல்ல தாய்லாந்திலும் கூட இக்கூட்ட மக்கள் ஏராளமாய் உண்டு.



    ஒரு வினோதமான விஷயம் என்னவெனில் இந்த பழங்குடி மக்களுக்கும், அவர்களோடு எப்போதும் வசித்து வரும் பர்மியர்களுக்கும் எப்போதுமே சுமுக உறவுகள் இருந்ததில்லை. இந்த உறவுச் சிக்கல் சமீப காலங்களில் வேறுவித வடிவம் எடுத்திருப்பது பற்றி கடைசியில் நாம் பார்க்கப் போகிறோம்.       
    மானுடவியலாளாரன டான் ரிச்சர்ட்சன் (Don Richardson) இவர்களைப் பற்றி தன்னுடைய நூலில் குறிப்படும் பொழுது, இந்த சுவாரசியமான சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.     

                     
    கி.பி. 1795ல் பர்மாவில் உள்ள ரங்கூனின் ஒரு கிராமம். இருக்கும் கடும் வெய்யிலுக்காக தொப்பி அணிந்திருந்த ஒரு ஆங்கிலேயரைக் கூட்டிக் கொண்டு அந்த கிராமப் பகுதிகளுக்குப் போகிறான் ஒரு பர்மிய வழிகாட்டி. ஆர்வத்துடன் கேட்டார் அந்த ஆங்கிலேயர்.                           
    "இந்த கிராமத்தில் உள்ளவர்கள் எல்லாம் பர்மியர்கள் இல்லை என்றால், இதோ இருக்கிற இவர்களை என்னவென்று சொல்ல வேண்டும்?"   

Karen women at Kyaikkami Ye-Le Pagoda.jpg
    "கரண் (Karan) என்று வழிகாட்டி பதில்தர,அதை சரிவர உச்சரிக்கக் கூட முடியவில்லை அவருக்கு. "உள்ளே போய் அவர்களை எல்லாம் பார்க்க வேண்டும்" என்று ஆங்கிலேயர் சொல்லவும், போனார்கள். ஆனால் அவருடைய ஆர்வத்தை விடவும், அவரைப் பார்க்கவென்று திரண்ட கரண் குடி மக்களின் ஆர்வம் அதிகமாய் இருந்தது. முதல் தடவையாக ஒரு வெள்ளைக்காரரை பார்ப்பது அவர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். விளக்கை, விட்டில் பூச்சிகள் மொய்ப்பதைப் போல அந்த ஆங்கிலேயரைச் சுற்றிக் கொண்டார்கள். சிலர் அவரை மெல்ல தொட்டுத் தொட்டு பார்க்கத் துவங்கினர். கூட வந்திருந்த பர்மிய வழிகாட்டி அவரிடம் மிகுந்த பொறுமையுடன் "இந்த ஆட்களிடம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த மலை ஜாதி மக்கள் திருடுவதிலும், சண்டை போடுவதிலும் சமர்த்தர்கள்" என்று அங்கலாய்த்திருக்கிறான். ஆனால் உண்மை அதுவல்ல. கரண் பழங்குடிகள் பர்மாவில் அப்போதிருந்த பிற பழங்குடி மக்களை விடவும் பல வழிகளிலும் முன்னேற்றமடைந்தவர்கள் தாம்.ஆனால் பல விதங்களில் அநேகரால் சுரண்டப்பட்டு, தவறாக கையாளப்பட்டு, சொல்லப்போனால் வீணான இந்த பழிச்சொல்லுக்கு தள்ளப்பட்டார்கள் எனலாம்.    பர்மிய பௌத்தர்கள் இந்த சிறுபான்மையினராய் இருந்த கரண் குடிகளை வெறுக்க இன்னொரு காரணமிருந்தது. பொறுத்த மதத்திற்கு அவர்களைச் சுற்றி இருந்த பலரும் மாறிக் கொண்டிருந்த சூழலில், இந்தக் குடிகள் மட்டும் தங்களின் மத h{தியான நம்பிக்கைகளை மிகவும் பிடிப்புடன், பிடிவாதத்துடன் பற்றிக் கொண்டிருந்துதான் அந்த காரணம். ஆனால் அந்த ஆங்கிலேயரோ பர்மிய வழிகாட்டியின் எச்சரிக்கையை கண்டுகொள்ளவில்லை. களங்கமில்லாமல், அந்த கரண் குடிகள் தன்னைச் சூழ்ந்து கொண்டு, தொடர்பு கொள்ள முயன்றது அவருக்குப் பிடித்திருந்தது.

ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என அனைவரும் மலர்ந்து புன்னகை மாறாதவர்களாய் இருந்தது அவரைக் கவர்ந்தது. ஏனோ ஆங்கிலேயர்கள், அந்நியர்கள் என்றாலே ஒதுங்கி நின்று சந்தேகமாய்ப் பார்க்கிற பிற பர்மிய மக்களோடு ஒப்பிட்டு பார்க்க வைத்தது அவரை.  அதற்குள் அந்த வழிகாட்டியிடம், பர்மிய மொழி பேசத் தெரிந்த ஒரு கரண் மனிதர் எதையோ விவரிக்க, அவன் ஆச்சர்யத்துடன் அந்த ஆங்கிலேயரிடம்… "ஐயா… இவன் சொன்னது மிகவும் சுவாரசியமானதொன்று, பாருங்களேன், இந்த பழங்குடி மக்கள் தற்போது என்ன நினைக்கிறார்கள் என்றால்,அவர்கள் காலகாலமாய் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிற 'வெள்ளைக்கார' சகோதரர் நீங்கள் தானோ என்று கேட்கிறார்கள்".       
    அந்த ஆங்கிலேயருக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை."என்ன வினோதம் இது? அவர்கள் அந்த வெள்ளைக்கார சகோதரன் என்ன கொண்டு வருவார் என்று அப்படி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்களாம்?"   
    "அவர் ஒரு புத்தகத்தை கொண்டு வருவராம். அந்த புத்தகம் அவர்களின் முன்னோர்கள் முன்நாட்களில் தவற விட்டு விட்டதாம். அதை ஒரு சமயம் நீங்கள் கொண்டு வந்திருப்பீர்களோ என்று மிகவும் பதைபதைப்புடன் கேட்கிறார்கள்". இப்பவும் புரியவில்லை அந்த ஆங்கிலேயருக்கு. "இந்த படிப்பு வாசனையே இல்லா இந்த மக்களை அந்த அளவிற்கு கவர்ந்திருக்கிற அந்த புத்தகத்தை எழுதியவர் யார் என்று தெரியுமா என்று கேள்" என்று வழிகாட்டியிடம் சொல்ல, அவர்கள் சொல்வதை மொழிபெயர்த்து சொல்ல ஆரம்பித்தான்.     "எல்லாவற்றையும் படைத்த கடவுளான 'லுறய'தான் அந்த புத்தகத்தை எழுதியவராம்…" என்று துவங்கின பர்மிய வழிகாட்டியின் முகம், அவர்கள் அடுத்து பேசினதைக் கேட்டதும் வெளிறிப்போயிற்று. என்றாலும் தடுமாற்றத்துடன் சொன்னான். "அந்த புத்தகத்தின் மூலமாக, தங்களை அடக்கியாண்டு கொண்டிருக்கிற எல்லாவற்றிலும் விடுதலை பெற முடியுமாம்".

    உண்மையில் வந்த ஆங்கிலேயர் யாரெனில் பர்மியர்களுக்கும், பிரிட்டனுக்கும் உள்ள கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்க்க வந்த குழுவில் ஒருவராகும். பர்மியர்களுக்கு, பிரிட்டன் தங்களின் மகாசாம்ராஜ்ளத்திற்குள் பர்மாவை இணைத்துக் கொண்டு விடுமோமென்கிற பயங்களிருந்த காலமது. இந்த சூழலில் கரண் குடிகளில் ஒருவர் இப்படிச் சொன்னால் எப்படி இருந்திருக்கும்? ஏதோ வலிய பிரிட்டனை வந்து எடுத்துக்கொள்ள சொல்வதைப் போல் இருக்குமல்லவா? பர்மிய வழிகாட்டி முகம் வெளிறிப் போனதில் வியப்பில்லைதான். நிலைமையைப் புரிந்துகொண்ட அந்த ஆங்கிலேயர் யோசிக்கலானார். அவசரமாய்ச் சொல்லி விடுகிற எந்த ஒரு வார்த்தையுமே பெரிய கலவரத்தையும், குழப்பத்தையுமே ஆரம்பித்து விடுலாம் என்றெல்லாம் யோசித்து விட்டு பிறகு கூறினார் வழிகாட்டியிடம்…         "அவர்களிடம் சொல்லுங்கள் உடனடியாக…" என்று உறுதியான குரலில் ஆரம்பித்தார். "எனக்கும் அசர்கள் சொல்கிற கடவுளான'Ywa'விற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அது பற்றி சிறிதளவும் கூட தெரியாது. அவர்கள் எதிர்பார்த்திருக்கிற " வெள்ளைக்கார சகோதரர் எவர் கூட எதுவும் தெரியாது" என்று கூறிவிட்டு, வழிகாட்டியுடன் அந்த கிராமப் பகுதியில் இருந்து புறப்பட்டுப் போவதை கூடியிருந்த நூற்றுக்கணக்கான கரண் பூர்வ குடிகள் மிகவும் ஏமாற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்களாம். நெடுகாலமாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தொன்று இப்போதுமே பொய்த்துப் போனதில் மிகுந்த ஏமாற்றமே அவர்களுக்கு.     "ஒருவேளை நம் முன்னோர்கள் தவறாக இப்படிச் சொல்லி இருப்பார்களோ" என்றான் கரண் இளைஞன் ஒருவன்.        "இலலை.கவலைப்படாதே.ஒரு நாள் நிச்சயம் அவர் வருவார். எந்த தீர்க்கதரிசனங்கள் நடக்காமல் போனாலுமே இது மட்டும் பொய்த்து போகாது" என்றார் கண் முதியவர் வரண்ட புன்னகையுடன்.                   
    கி.பி.1819 ஒரு முஸ்லீம் பயணி, நகரை விட்டு ஒதுக்குப் புறமாய் இருக்கிற இந்த கரண் குடிகளின் கிராமப் புறங்களுக்கு போக நேர்ந்த பொழுது, உள்ளே வருகிற ஒவ்வொரு அந்நியரையும் ஆவலுடன் எதிர்பார்க்கிற கரண் குடிகள் இவரையுமே சுற்றி வளைத்துக் கொண்டார்கள்.குறிப்பாக, தங்களைவிட சற்று நிமாக வருகிற எவரையும், தாங்கள் எதிர்பார்த்திருக்கிற "வெள்ளைக்கார சகோதரரோ" என்று தேடுகிற அவர்கள், சற்றே நிறமாய் உள்ள இந்த முஸ்லீம் பயணியிடமும், "புத்தகம்" பற்றிக் கேட்க அவரும் ஒரு புத்தகம் தன்னிடத்தில் உண்டு என்றும் அதில் கடவுள் கூறின எழுத்துக்கள் அடங்கியிருக்கிறது என்று கூறி ஒரு புத்தகத்தை அவர்களிடம் கொடுத்தாராம்.               
    அவர்கள் வெகு பரவசமாய் அந்த புத்தகத்தை வாங்கிப் பார்ப்பதைக் கண்ட அவர், அதை அந்தகரண் குடிகளுக்கு தம் பரிசாகக் கொடுத்து விட்டார். அந்த புத்தகத்தைத் தொழுது கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னதாக ஒரு சேதி பரவிற்று. ஆனால் ஒரு முஸ்லீம் அப்படியான ஒரு யோசனையை கூறியிருப்பாரா என்பது சந்தேகமே. ஒரு சமயம் அப்புத்தகத்தை பவித்தரமாக வைத்து கொள்வது பற்றி கூறிவிட்டு, பிறகொரு நாள் வேறு ஏதாவது போதகர் வந்து அதைப் பற்றி விளக்கிக் கூறலாம் என்று சொல்லியிருக்கக்கூடும்.அங்கிருந்து சென்ற பயணி பின்பு திரும்பி வரவே இல்லை. ஆனால் புத்தகத்தை வாங்கிக் கொண்ட கரண் முதியவர் அந்த புத்தகத்தை ஒரு அழகான மஸ்லின் துணியால் சுற்றி அதற்கென்று ஒரு அழகான கூடையை தயார் செய்து அதில் வைத்தாராம்.போகப் போக பல கரண் மக்கள் அதைக் கனப்படுத்தவென்று அநேகம் சடங்குகளை செய்யத் துசங்கினது வேறு கதை.    இது ஒரு பக்கமிருக்க கரண் குடிகள் இருக்கும் கிராமங்களில் புக்கோஸ் (Bukhos)  என்றழைக்கப்படுகிற போதகர்கள் இருந்தார்கள். இவர்கள் தம்மை எல்லாவற்றையும் படைத்த கடவுளான'Ywa' வின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்வதுண்டு. கரண் குடி மக்களுமே கூட இவர்களை 'Ywa' கடவுளின் தீர்க்கதரிசிகளாக பெரிதும் மதித்து வந்தார்கள்.'கூ ~ழழி' பற்றியும், அவர் வழிகளைப் பற்றியும் ஒரு புறம் போதித்து'Ywa'  வின் வழிகள் கெட்ட ஆவிகளின் வழிகளைப் போன்றதல்ல, மக்கள் தங்களின் தீய வழிகளை விட்டு முழுமையாக 'லுறய' விடம் திரும்ப வேண்டும் என்று போதிப்பார்களாம்.        
              
    அவர்கள் சில பாடல்களைப் பார்க்கும் பொழுது நமக்கு பெரிதும் ஆச்சர்யமே. முன்பு நாம் பார்த்த "இன்கா" சாம்ராஜ்யத்தில் வருகிற தெய்வமான "விரகோச்சா"விற்கான "பச்சக்குட்டியின்"பாடல்களின் சாயல், தன்மை இப்பாடல்களிலும் தெரிகிறது.'Ywa'  எப்படி ஒரே முழு முதல் கடவுளென பல தெய்வங்களைக் கொண்டிருக்கிற நாட்டுப்புற மத நம்பிக்கைகளில் ஒன்றாக பலர் கருதி "கரணின்" நம்பிக்கையை எத்தனை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.பயத்தோடும், பக்தியோடும் இந்த 'Ywa'  பற்றின சேதிகள் கரண் குடிமக்களிடம் கானப்படுகின்றன.அதில ஒரு பாடலைப் பார்க்கலாமா… 'யார் இவ்வுலகை ஆதிநாட்களில் உருவாக்கினது 'Ywa' தான் இவ்வுலகை துவக்கத்தில் உருவாக்கினது. 'லுறய'வே சகலத்தையும் நியமித்தார் 'Ywa' வே ஆராய்ந்து முடியாதவர்.                       

    இப்படி பாடல்களில் சர்வ வல்ல ஒரே கடவுளின் தன்மை, பெருமை சிலாகிக்கப்கடுகிறது.                                   
   கரண் குடிகளின் நடுவே அநேக வருஷங்கள் வாழ்ந்த அனுபவத்தை உடையவர் எழுத்தாளர் Alonzo Bunker. 19வது நூற்றாண்டின் இறுதிகளில் அப்படி இருந்தவர்அவர், தன் அனுபவங்களைப் பதிவு செய்யும் பொழுது, ஒரு மாலை நேரக் கூடுகையில் அவர்களில் ஒரு 'புக்கோஸ்' (போதகர்) நடத்தின் விதத்தைப் பற்றி இப்படி எழுதுகிறார்.                       

    'இந்த கூடுகையில் கூட இருக்கிற கரண் குடி மக்களின் பக்தி, ஒழுங்கு விவரிக்க முடியாத அளவிற்கு அருமையானது. வயது முதிர்ந்த பெரியவர்கள் தம் கடவுளான 'கூ}ழழி' பற்றி பேசும் பொழுது குழந்தைகளிலிருந்து, பெரியவர்கள் வரை காட்டுகிற கவனிப்பு சிலிர்க்க வைக்கிறதொனறாகும். அப்படி எழும்பி பேசுகிறவர் பேசிக் கொண்டிருக்கும்பொழுது, இடையில் விழுகிற சில மௌன கணங்களில் மூங்கில்கள் காற்றில் உரசுகிற சப்தம் கூடத் துல்லியமாகக் கேட்கும். ஒருமுறை ஒருவர் இப்படியாகப் பேசினாராம்.       
    கரண் குடிகளின் பிள்ளைகளே, குழந்தைகளே 'Ywa' உங்களை, நம் கரணின் தேசத்தை எல்லாவற்றுக்கும் மேலாக நேசிக்கிறார். ஆனால் முன்நாட்களில் நம் மக்கள் வழி தவறி, மாறி அவருடைய கட்டளைகளை மீறி நடந்து கொண்டார்கள். அப்போதுதான்'Ywa' நம்மை சபிக்கவேண்டியதாகிப் போனது. விளைவு நம்மின் இப்போதைய நிலைமை. நூம் அவரின் வழிநடத்துதலைச் சொல்கிற புத்தகம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம். ஆனால் இப்போதும் நம்பிக்கை உண்டு. 'Ywa' நம் பேரில் மறுபடி இரக்கம் காட்டப் போகிறார். நம்மை மறுபடியும் மிக அதிகமாக நேசிக்கப் போகிறார். நம்மை மீட்டெடுக்கப் போகிறார். நம்மின் இந்த நிலைக்கு காரணம் நாம் மு கா லி (Mu Kaw Lee) சாத்தானின் வார்த்தைகளைக்கு செவி கொடுத்தது தான் காரணம்… அவரின் காந்த வார்த்தைகளில் மயங்கிப் போனவர்களைப் போல கூட இருந்தவர்கள் எல்லோரும் இருந்தார்களாம்… அவர் தொடர்ந்து பேசினதாய் பதிவு செய்தவைகயைக் கேட்கும்பொழுது, நமக்குள் வியப்பு ஏற்படுவதை நம்மால் அடக்க இயலாது தான். அந்த பேசின் பெரியவரின் விவரிப்புகளில் ஆதியகாமத்து சாயல் அப்படியே வெளிப்பட்டதுதான். அதைச் சுருக்கமாகப் பார்க்கலாம். 'எல்லாவற்றையும் படைத்த கடவுளான 'Ywa' ஆதியில் Tha – nai ஐயும்,Eeuவையும் ஆணும்,பெண்ணுமாகப் படைத்தாராம். அவர்கள் வசிக்க ஒரு தோட்டத்தையும் தந்து,அதில் ஏழு வகைக் கனிகள் உள்ள ஏழு மரங்களையும் வைத்து இருந்தாலும், அதில் உள்ள ஒரே ஒரு மரத்தின் கனியை மட்டும் புசிக்கக் கூடாதென்றும், புசித்தால் வயது முதிர்ந்து, நோய்வாய்ப்பட்டு, இறக்க நேரிடும் எச்சரித்திருந்தாராம்.               
    ஆனால் சாத்தானாகிய Mu Ku Lee  வந்து அவர்களிடம் தந்திரமாகப் பேசி, அந்த தடை செய்யப்ப்டடிருந்த கனியைப் புசிக்க வைத்து…       
    பிறகு அவர்களை சந்திக்க'Ywa'  கடவுள் வந்து, அவர்கள் தம் கட்டளையை  மீறினதில் கோபம் கொண்டு  சபித்து  அந்த  தோட்டத்தை விட்டு துரத்தி விட்டாராம்.
(நம் வாசககர்களுக்கு, போன இதழில் சந்தால் குடிகளின் முதியவர் ஒருவர் சொன்ன ஆதியாகமத்தின்சாயலைக் கொண்ட அந்த சம்பவக் கதையை விட இது இன்னும் நெருங்கி இருப்பதை கவனித்திருக்கலாம். ஆனால், சற்று மாறுபடுவது இனிமேல் தான்…)                           
சாபத்தை பெற்றுக் கொண்ட Tha – naiயும் Eeuவும் மறுபடி சாத்தான் Mu Kaw Lee அணுகிப் பேச அவனும், தன் பேச்சுக்குத் தொடர்ந்து கீழ்படிய ஆரம்பித்தால் அவர்களுக்கு உதவுவதாகக் கூறி, ஒவ்வொரு பிரச்சனை, நோய்க்கும் அவனுடைய கெட்ட ஆவிகளுக்கு(nuts)காணிக்கை கொடுத்தால் பிரச்சனைகள் தீருமென்று ஆலோசனை சொல்வதாக…கதை போகிறது…   
என்றாலுமே, அதே எழுத்தாளர் பதிவு செய்துள்ள கரண் குடிகளின் 'நம்பிக்கையின் பாடல்' எனப்படுகிற இன்னெபரு பாடல் 'Ywa' திரும்ப வந்து தங்களையெல்லாம் காப்பாற்ற எதிர்பாhடத்திருக்கிற நம்பிக்கையை பிரதிபலித்தது. ஒரு விசேஷம் என்னவெனில், இந்த கரண் குடிகளைப் பற்றி குறிப்பிட்டாக வேண்டியது, தொடர்ந்து விடாமல் பரவி வந்த பௌத்த மதத்தின் எவ்வித பாதிப்பும், விக்கிரக வணக்கமும், அவர்கள் மத்தியிலே இருந்த இவர்களைத் தொற்றிக் கொள்ள முடியாமலே போனது தான். மட்டுமல்ல, மற்ற எல்லா பழங்குடிகளை விடவும் இவாகளை நம் வேதாகமத்துக்கு நெருங்கி இருந்தவாகளாய் நினைக்க இடமுண்டு.    இவர்களின் வாழ்க்கையின் பல காரியங்கள் இவர்கள் எருசலேமை விட்ட 6000 கி.மீக்கும் அப்பால் இருந்தாலுமே வியப்பூட்டுகிற வகையில் சில ஒற்றுமைகளைக் காணலாம். யூதர்களுக்கு'Ywah' கரண் குடிகளுக்கு 'Ywa' உலகம் உருவாகி, மனிதன் வந்து பாவம் செய்த இடம் வரை இவர்களின் விவரிப்புகளுக்கும், ஆதியாகம விவரிப்புகளுக்கும் உள்ள நெருக்கம் ஆச்சர்யமே. ஆக யூத, கிறிஸ்துவத்தின் பாதிப்புகளை இந்த கரண் குடிகளிடம் மறைமுகமாக நாம் காணமுடியும்.   
ஒரு கோணத்தில் பார்த்தால் 'Ywa'அதாவது முழுமுதல் கடவுளைப் பற்றின கருத்துகள், யூத, கிறிஸ்துவ சமயங்களுக்கும் முற்பட்டதாய் இருக்கலாமோவெனில்,இருக்கவும் வாய்ப்புண்டு என்றே சொல்லலாம். ஆனால்ஒரு சிறப்பு என்னவெனில் அவர்கள் தங்கள் நம்பிக்கைகளின் முழுமையின்மையை பூரணமாக உணர்ந்து, அதை முழுமைப்படுத்த வல்லவைகளை எதிர்நோக்கிக் காத்திருந்தது தான்.அவர்கள் பாடல் ஒன்றின் வரிகள் இப்படிளாக இருக்கின்றன…  'Ywa'வின் புதல்வர்கள் - அந்த வெண்ணிற அந்நியர்கள்   
அவர்களே 'Ywa'வின் வார்த்தைகளை பெற்றுக் கொண்டனர் வெண்ணிற அந்நியர்கள் 'Ywa'வின்    புதல்வர்களே       
ஆதிநாட்களிலேயே 'வார்த்தை'களை பெற்றுக் கொண்டார்கள்    இப்படியாக இருந்த இந்த கரண் குடிகளின் மத்தியில் முதலில் ஊழியம் செய்ய வந்தவர் அருட்திரு. ஜார்ஜ் போர்ட்மேன் என்பவர்,இவர் புகழ்பெற்ற ஊழியரான அடோனிராம் ஜட்சினின் உடன் ஊழியராவார்.                        இவர்களின் ஊழியத்தின் முதல் கிறிஸ்தவாரான கரண் குடியினரின் பெயர் கோ தா பயு ;Ko Tha Byu'இவரே பின் நாட்களில் கரண் குடியினரின் ஊழியக்காரராக மாறி, அவர் ஊழியம் செய்த 12 வருட காலத்திற்குள் 1270 மக்களை ஆண்டவருக்குள் வழிசடத்தினார் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. ஆனடறைய கால கட்டத்தில் இது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இன்றைக்கும் கரண் குடிகள் உள்ள பகுதியில் நிறைய ஆலயங்கள் உண்டு.
நல்ல விசுவாசிகளாய் மாறின அநேக கரண் குடிகளை அவர்களின் இந்த விசுவாகத்திற்காக ஒடுக்குவதும், துன்புறுத்தப்படுவதும் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பது ஒரு சோகமான விஷயமாகும். முந்தைய நாட்களில் கரண் குடிகளோடு மற்றவாகளுக்கு சுமுக உறவு இல்லாமல் இருந்ததை இந்த கட்டுரையின் துவக்கத்தை நாம் கூறி இருக்கிறோம. இப்போதும் அது ரூபத்தில் தொடர்வதை என்னவென்று சொல்ல.                       
பலர், இவர்களை இப்படியாக ஒடுக்கப்படுவதற்கு சொல்கிற காரணம், இவர்கள் மேற்கத்தியர்களின் கைக்கூலியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்களாம். அவர்கள் மதத்தின் பெயரால் நாட்டை பிளவுபடுத்த செய்கிற சதிக்கு இவர்கள் உடன்பட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்…எத்தனை முரண்பாடுகள் இல்லையா.    ஏப்படி இருந்தாலும், அந்த நாட்களில் யார் யூகித்தார்களோ என்னவோ நமக்குத் தெரியாது.ஆனால் இப்போது கரண் குடிகளின் இந்த எல்லா காரியங்களையும் பார்க்கும்பொழுது அவர்களின் பழக்கவழக்க பிண்ணனிகள் எதை நெருங்கி வருகின்றன, எதை உணர்த்துகின்றன என்பதை நம்மால் யூகித்து விட முடியுமென்றே நம்புகிறோம்.
ஆம்! ஆண்டவரின் திட்டங்கள், செயல்பாடுகள் பற்றி அறிய வரும் பொழுது அவரை மகிமைப்படுத்துவதல்லாமல் வேறு வழியில்லை நமக்கு.   


இவை உன்னத சிறகுகள் என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது


Thursday, November 4, 2010

இயேசு தீபாவளி - அகத்தின் அசுரனை ( தீமையை) அழித்த கொண்டாட்டம்

 
 

இயேசு தீபாவளி - அகத்தின் அசுரனை ( தீமையை) அழித்த கொண்டாட்டம்

இது இந்து, ஜெயின், சீக்கிய மதத்தினர் கொண்டாடும் பண்டிகை. இப்பண்டிகை 3 அல்லது 4 நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடப்படும். அந்நாட்களில் தீமையை நன்மை வென்றதை குறிக்க வீடுகளில் தீபங்கள் ஏற்றப்படும். தீபாவளி தினம் கொண்டாடத்தின் உச்சகட்டம். அன்றை தினத்தில் குடும்பமாக சேர்ந்து எண்ணெய் ஸ்நானம் செய்து, பலகாரங்களும் பரிசுகளும் பரிமாறி, அதன் பின் குடும்பமாக சேர்ந்து பட்டாசு கொளுத்துவது வழக்கம். அதுகாலையிலே வெடிவெடிக்க ஆரம்பித்து நாள்முழுவதும் தொடரும். தீபாவளி பண்டிகையின் கொண்டாட்டத்தையும் குதுகூலத்தையும் சொல்லி மாளாது.

அதை அனுபவத்தவருக்கு மாத்திரம் புரியும்.நம்முடைய பாரம்பரியக் கதைகளில் நன்மை தீமையை வென்றதை குறித்து அநேக கதைகள் உண்டு. அவை பெரும்ப்பாலும் அசுரன் ( அரக்கன்) அழிவதாகவே அமையும். தீபாவளி பண்டிகை இராமர் வனவாசம் சென்று வந்ததையோ அல்லது கிருஷணன் நரகாசுரனை வென்றதையோ மையமாக வைத்து கொண்டாடப்படும். நிறைய இடங்களில் பட்டாசு வெடிகள் நிறைந்த இராவண உருவம் கொளுத்தப்பட்டு அழிக்கப்படும்.

கிழக்கத்திய மனமும் கூட இதை சித்தரிக்கும் வகையில் நமக்குள் உள்ள தீமையை ஒழித்து நன்மையை நிலைநாட்ட தன்னைத்தானே ஆராய்ந்து பார்ப்பதை வலியுறுத்தும். நிறைய திரைப்பட கருத்துகளும், நாகரீக போதகங்களும் இராவணனை( தீமையை) ஒழித்து இராமரை (நன்மையை) நிலைநாட்டும் கருத்தை பிரதிபலிப்பதாகவே அமைகின்றது. கொண்டாட்டங்களை எல்லாம் ஒருபுறமாக ஒதுக்கி வைத்துவிட்டு சற்றுநேரம் நாம் யோசிப்போம். நமக்குள் இருக்கின்ற தீமையை ஒழிக்க நாம் முயற்சித்திருக்கிறோமா?. நமக்குள் உள்ள இந்த தீமையை முற்றிலும் அழித்திருக்கிறோமா? இந்த தீமையை மேற்கொள்ள மனிதனுடைய முயற்சிகள் மாத்திரம் போதுமா?. நீங்கள் எதுவரை சென்றிருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியாது. அது உங்களுக்கும் கடவுளுக்கும் இடையே நிர்ணயிக்கப்பட வேண்டிய காரியம். பல வருடங்களாக என்னை நானே ஆராய்ந்து சோதித்து பார்த்ததில் நான் இன்னமும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதையே உணருகிறேன். எனக்கு முன்பாக இந்த பாதையில் நடந்த ஒரு சிலரை நான் பார்த்தப்போது அவர்களும் என் நிலையில் இருந்ததையே அறிந்தேன்.

இன்றைய சரித்திரத்தில் அக தூய்மையை தேடின உன்னதமான ஒரு மனிதனை நாம் எடுத்து கொள்வோம். அவருக்கு கொடுக்கப்பட்ட பட்டம் மகாத்மா காந்தி. மகாத்மா காந்தி ஒரு உன்னதமான வாழ்க்கையை வாழ்ந்தார்.. அகதூய்மை தேடி அவர் எடுத்த முயற்சிக்களுக்காக அவரை எண்ணி வியந்திருக்கிறேன். 'சத்திய சோதனை' என்னும் அவருடைய சுய சரிதையில் வழியனுப்புதல் என்ற தலைப்பின் கீழ் அவர் எழுதியது, " உண்மையான தூய்மை ஒருவனுக்கு வேண்டுமானால் அவன் தன் ( விருப்பங்களை தியாகம் செய்து ) எண்ணம், பேச்சு, செயல் எல்லாவற்றிலும் விருப்பு வெறுப்புகளை உதறிவிட்டு தன்னை எதிர்த்து நிற்கும் அன்பு மற்றும் வெறுப்பு, ஒட்டுதல் மற்றும் விடுத்தல் ஆகிய அலைகளை எதிர்த்து எழும்ப வேண்டும். இந்த முப்பரிமாண தூய்மையை நான் ஓயாமல் தொடர்ந்தாலும் அந்நிலையை நான் இன்னும் அடையவில்லை. ஆனாலும் எனக்கு முன்பாக ஒரு கடினமான பாதை உண்டு என்பதை நான் அறிவேன்".

"மகா ஆத்துமா" என்ற பட்டதை வென்ற மகாத்மா காந்தி இவ்வார்த்தைகளை சொல்வாரானால் நீங்களும் நானும் எம்மாத்திரம். உங்களுக்கும் எனக்கும் எவ்வளவு எதிர்பார்ப்பு உண்டு?. நமக்குள் இருக்கின்ற அசுரனனை முழுவதுமாக வீழ்த்த உங்களாலும் என்னாலும் முடியுமா? இதற்கு மாற்றுப்பதை உண்டா?. ஒரு நற்செய்தி என்னவென்றால் நமக்குள் இருக்கின்ற அசுரனை நம்முடைய சுய பலத்தினால் அல்ல. ஆனால் கடவுளுடய பலத்தினால் வெல்ல வழி உண்டு. இந்த காரியத்தை நம்முடைய வாழ்க்கையில் கடைபிடிப்பது தான் நமக்கு இன்றைய தீபாவளி பரிசாக அமையும். இந்த புதிரை விடுவித்து விளக்கி கொள்வோம்,

அகதீமை புறம்பானதை காட்டிலும் சிக்கலானது. நிலையான் விடுதலை வேண்டுமானால், தேவன் நம்முடைய கடந்த கால கர்மத்தில் தலையிட்டு தீமையை கண்டு தொடர்ந்து போகிற மனதை ஜெயிக்க பெலன் கொடுக்கவேண்டும். இயேசு நம்முடைய கடந்தகால தீமைக்காக தன்னை அர்ப்பணித்து நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை தன்மேல் சுமக்கும் போது நாம் இந்தக் கடந்த கால வாழ்க்கையிலிருந்து விடுதலை பெறுகிறோம். இயேசு உயிர்த்தெழுந்த போது தேவனுடைய (பவித்ர ) ஆத்மா நமக்குள் வந்து தங்க செய்தார். தேவனுடைய ஆத்மா நமக்குள் தங்கி வாசம் செய்யும் போது தேவன் நமக்கு அகத்தின் குருவாக இருந்து தீமையை எல்லா சூழ்நிலையிலும் வெல்லத்தக்கதான பெலத்தை நமக்கு அளிக்கிறார். நம் அகத்தில் உள்ள குருவின் ஆலோசனைக்கு சரணடையும் போது அகத்தில் உள்ள அசுரனை எல்லா சூழ்நிலையிலும் வெற்றி கொள்கிறோம். தேவன் நம்முடைய வாழ்க்கையில் நுழையும் போது தீமை எல்லா சூழ்நிலையிலும் வெல்லக்கூடிய பெலத்தோடு நாம் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்குகிறோம். தேவன் நம் மேல் எவ்வளவாய் அன்பு கூறுகிறபடியால் இந்த நாளிலும் கூட நமக்கு அகத்தில் உண்மையான தீபாவளி கொடுக்க சித்தமாயிருக்கிறார்.மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு நடைபெறும் தீபாவளி பண்டிகையை விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லாமற் போகும்போது நித்தியத்துக்கும் நிலைக்கும் இயேசு தீபாவளியை விவரிக்க எவ்வாறு முடியும். இந்த ஞானத்தை புரிந்துகொள்ள நமக்கு இருக்கும் இயலாமையினால்தான் தேவன் நமக்கு அவருடைய வார்த்தையை கொடுத்து "இயேசு தீபாவளி" என்று நான் உரிமையோடு சொல்லகூடிய இந்த தினத்தை உங்களோடு கூட பகிர்ந்து கொள்கிறேன்.

நம்மை வழி நடத்தும் பரிசுத்த ஆவிக்கு நாம் சரணடையும்போது "இருளிலிருந்து வெளிச்சம் பிரகாசிக்கட்டும்" என்று தேவன் சொன்ன வார்த்தையை ஏற்று, தேவனுடைய ஒளி இயேசுவின் ரூபத்தில் நம் இதயங்களில் பிரகாசிப்பதை உணர முடிகிறது. தேவனுடைய இந்த பொக்கிஷமானது களிமண் பாண்டங்களில் வைக்கப்பட்டு, எல்லா வல்லமையும் தேவனிடத்திலிருந்து வருகிறது என்பதை வெளிப்படுத்த வைக்கிறது.

தீபாவளி பண்டிகையை இருந்து அனுபவித்து அறிந்து கொள்வது போலன்றி இயேசு தீபாவளி அனுபவிக்க இயேசவை நம் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் உள்ளார்ந்தமாக இயேசுவை ( ஒளியை ) வரவேற்று, இயேசு தீபாவளியை நமக்குள் பிரகாசித்து அனுபவிக்க வேண்டும். அகதீபாவளியை பொருத்த மட்டில் நாம் எல்லோரும் களி மண்ணால் செய்யப்பட்ட விளக்குகள் போல நம்மிடத்தில் சுய ஒளி இல்லாமல் இருக்கிறோம். ஆனால் இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருடைய ஒளியில் பிரகாசிக்கிறோம். அந்த ஒளி நம் இருதயத்தில் சுடர்விடும் போது இந்த அனுபவத்தை பெறுகிறோம். இவ்வொளி இருளிலும் பிரகாசிக்கும்.

இருள் அதனை மேற்கொள்வதில்லை.தீபாவளி நல் வாழ்த்துக்கள். எல்லோரும் வந்து அகத்தில்

உள்ள அசுரனை அழிக்க உங்களையும் அழைக்கிறோம்.
 

Monday, August 23, 2010

பிரார்த்தனை செய்தால் நோய்கள் தீரும்

 


 
வாஷிங்டன்: நோயாளிக்கு மிக நெருக்கமாக அமர்ந்து பிரார்த்தனை செய்தால், நோய்கள் குணமாகும் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. பிரார்த்தனைகளால், நோய்கள் குணமாகுமா என்பது குறித்து, மருத்துவர்கள், மத குருமார்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று அண்மையில் ஆய்வு நடத்தியது. அதில், நோயாளிக்கு நெருக்கமாகவும், அவரது உடலை தொட்டபடியும் பிரார்த்தனை செய்தால், அந்த நோயாளியின் பிரச்னைகள் தீரும் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

இது குறித்து, இண்டியானா பல்கலைக்கழக இறையியல் பேராசிரியர் கேண்டி பிரவுன் தலைமையில் இந்த ஆய்வு நடந்தது.  மொசாம்பிக் நாட்டில் உள்ள சில கிராமங்களை சேர்ந்த, பார்வை குறைபாடுகள் உள்ள 11 பேரும், காது கேளாமை குறைபாடுகளை கொண்டிருந்த 14 பேரும் இந்த ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பெந்தேகோஸ்தே பிரிவு கிறிஸ்தவ பிரார்த்தனை குழுக்கள் அந்த நோயாளிகளுக்காக, பிரார்த்தனை செய்தனர். இந்த பிரார்த்தனைகளுக்கு பின்னர் அவர்களை ஆய்வு செய்த போது, அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு, உடல் நிலையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

 

முற்றிலும் காது கேளாமல் இருந்த இரண்டு பேருக்கு, 50 டெசிபல் அளவுக்கான ஒலியை கேட்கும் திறன் ஏற்பட்டிருந்தது. மேலும், பார்வையின்மையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த 3 பேருக்கு, பார்வை தெரிய ஆரம்பித்துள்ளது. இந்த ஆய்வு தொடர்பான விரிவான அறிக்கை அடுத்த மாதத்தில் வெளியாக உள்ளதாக, ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்

 dinamalar:15:08:10


http://epaper.dinamalar.com/DM/COIMBATORE/2010/08/15/ArticleHtmls/15_08_2010_004_008.shtml?Mode=1
--
http://thamilislam.tk

Monday, July 19, 2010

சகோதரர் தாயப்பன் அவர்களின் உயிருள்ள சாட்சி-This is a wonderful testimony

This is a wonderful testimony of a person who was a retired IAF Officer and a guru of Actor Delhi Ganesh of Tamil Cinema. Here he is taking about how he found his relation with Jesus Christ. His witness for Jesus is simple but impressive. We enjoyed a lot by listening this testimony. Please here for yourself. (Sorry, this is available in Tamil, but you can read this testmony by clicking this link

http://www.ipaseattle.org/thayappan.pdf

சகோதரர் தாயப்பன் அவர்களின் உயிருள்ள சாட்சியை நாம் கண்டிப்பாக கேட்க வேண்டும் என்பதற்காக இங்கு தருகிறேன்
















Sunday, January 17, 2010

ப‌ரினாமக் கொள்கையும் என் சொந்த அனுபவங்களும்,

 

 

அன்பானவர்களே, மிக நுட்பமான விசயங்களை நாம் ஆராய்வதற்கு முன்பு நாம் நாம் தினமும் சந்திக்கும் மிகச் சாதாரணமான காரியங்களைக் கொண்டு நாம் இன்று பரினாமக் கொள்கையினை ஆய்வு செய்யலாம். என்னுடைய‌ அனுப‌வ‌ங்க‌ளையே நான் இங்கே ஆய்வு செய்கிறேன்.

விலங்குகள் தோற்றம் அடிப்படியிலான ஆய்வு
நான் சுமார் 8 அல்ல‌து 10 வ‌ய‌து இருக்கும் போது, நாங்க‌ள் ஒரு நாய் குட்டி ஒன்றை வ‌ள‌ர்த்து வ‌ந்தோம், அந்த‌ நாய் என்னோடு மிக‌வும் பாச‌மாக‌ இருக்கும், குழைந்து கொண்டு வ‌ந்து எதேதோ த‌ன் மொழியில் பேசி, த‌ன் அன‌பைக் கூறும், அப்போது அந்த‌ நாயை கவ‌னித்த‌ போது; என‌க்குள் ப‌ல‌ கேள்விக‌ள் தோன்றின. இந்த நாய்க்கு ம‌னித‌ர்க‌ளுக்கு இருக்கும் உறுப்புக‌ளான முக‌ம், காதுக‌ள், மூக்கு, க‌ண்க‌ள், என அனைத்தும் சிறு சிறு மாற்றங்களுடன் இருக்கிறதே, இந்த நாய் மட்டுமல்ல, பூனை, ஆடு, மாடு, கழுதை, என எல்லாமே, தங்கள் உருவங்களில் ஒரு சில மாற்றங்களோடு, மேற்சொன்ன அவயவங்களைக் கொண்டு இருக்கின்ற‌ன‌வே ஏன்? என்று தோண்றிய‌து, இது என் ம‌ன‌துக்குள் எப்போதெல்லாம் இந்த‌ வில‌ங்குக‌ளைப் பார்க்கின்றேனோ அப்போதெல்லாம் என் ம‌ன‌ம் அந்த‌ இர‌க‌சிய‌த்தை அறிந்து கொள்ளத் துடித்த‌து

சில‌ ஆண்டுக‌ள் க‌ழித்து நான் ஆறாம் வ‌குப்பு ப‌டிக்கையில் அறிவிய‌ல் பாட‌த்தில் சார்ல‌ஸ் டார்வினின் ப‌ரினாம‌க் கொள்கை ப‌ற்றி அறிந்து கொண்ட‌போது, என‌க்கு இத‌ற்கான‌ விடை என‌க்குக் கொடுக்க‌ப்ப‌ட்ட‌து, 

தாவ‌ர‌ங்க‌ளின் த‌ன்மை அடிப்ப‌டியிலான‌ ஆய்வு
நான் சிறுவ‌ய‌து முத‌ல் சிறு சிறு தாவ‌ர‌ங்க‌ளை சேக‌ரித்து, அவைக‌ளை மிக‌வும் நேசித்து வ‌ள‌ர்த்து வ‌ருவேன், நாங்க‌ள் அப்போது வ‌சித்த‌ ப‌குதியில் இருந்த சின்னச் சின்ன தோழர்களும், தோழிகளும், விடுமுறைக்காலங்களில், தோட்டம் அமைந்திருக்கும் வீடுகளை கூட்டமாக முற்றுகையிட்டு பூக்களையும், செடிகளின் அழகையும் ஆராய்வோம், மேலும் அந்த வீட்டு உரிமையாளரிடம் எங்களைக் கவர்ந்த செடிகளின் நாற்ருக்களைக் கேட்டுப் பெறுவோம், அவைகளை எங்கள் வீட்டுத் தோட்டங்களில் வைத்து, யார் செடி செழிப்பாக வளர்கிறது? யார் செடியில் அதிகம் பூப் பூத்திருக்கிறது என்று எங்களுக்குள்ளாகப் போட்டி நடத்திக்கொள்வோம், மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் அவை, 

இந்த ஆர்வம், நாளுக்கு நாள் வளர்ந்தது, பிறகு தாவரங்கள் விற்கும் பண்ணைகளுக்குச் சென்று தென்னை வாழை, முருங்கை, என வகை வகையான மரங்களை வாங்கி வந்து ஆர்வமாக வளர்த்துவேன், இதற்கு என் தந்தை ஊக்கமும் உதவியும் செய்வார், 


சரி இப்போது விசயத்திற்கு வருவோம், நான் அப்படி வாங்கி வளர்த்த செடிகளில் ஒட்டு வகைகளும் உண்டு, அவை சப்போட்டா, ரோஜா, மல்லி, கொய்யா ஆகியவை, நான் முதன் முதலாக ஒட்டுச் செடிகள் வாங்கி வைத்த போது எனக்கு அவைகளை எப்படி நட வேண்டும் என்று தெரியாததால் செடிகளின் ஒட்டு மன்னுக்கு வெளியே இருக்கும் படி நட்டு விட்டேன், செடிகள் நன்றாக செழித்து வளர்ந்தன, ஆனால் சில மாதங்களில் ஒரு செடியாக வளர்ந்து வந்த ஒட்டுச் செடியின் வேர்ப் பகுதிச் செடியின் ஒட்டுக்குக் கீழ் இருக்கும் பாகத்திலிருந்து புதியதாகக் குறுத்துகள் வந்து அந்தச் செடி முற்றிலும் மாறுபட்ட வகையைச் சார்ந்ததாக அந்தக் குறுத்து வளர்ந்தது, குறிப்பாக சப்போட்டா மரத்தைப் பற்றி எழுதியே ஆக வேண்டும், ஆம் அதன் வேர்ப்பகுதியில் இருந்து வளர்ந்த புதியகிளை பாலை மரத்தின் கிளை எனக்கு மிகவும் கோபமாகிவிட்டது நர்சரி நடத்தும் அந்த சகோதரியிடம் போய்க் கேட்டபோது, விரைவாகக் காய்க்க வேண்டும் என்பதற்காகச் சப்போட்டாவை பாலைச் செடியில் ஒட்டுக்கட்டுவதாக அந்த சகோதரி சொன்னார், மேலும் நான் அந்தச் செடியை நட்டியதில் நடந்த தவறு பற்றியும், ஒட்டுச் செடிகளை ஒட்டுக்க்கட்டப்பட்ட பகுதி மண்ணில் நன்றாகப் புதையும் வகையில் நட்டால் இந்த பிரச்சனை வராது என்று சொன்னார்,

மேலும் அந்த‌ ஒட்டுச்செடியின் விதைக‌ளை நான் சேக‌ரித்து என் ந‌ண்ப‌ர்க‌ள‌து தோட்ட‌த்தில் ந‌ட்ட‌போது, அது ஒட்டுக்க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ செடி போல‌ அல்லாம‌ல் மிக‌ச் சாத‌ர‌ண‌ வீரிய‌ம் உள்ள‌தாக்வே இருந்த‌து, பின்பு ஒட்டுக்க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ செடியின் வீரிய‌ம் அந்த‌ச் செடியில் ம‌ட்டுமே வீரிய‌த்தை உண்டாக்கும் என்றும், அந்த‌க் காய்க்கும் திற‌ன் ம‌ர‌ப‌னு மூல‌ம் விதைக‌ளில் ப‌ர‌வாது என்றும், மீண்டும் ஒட்டுக் க‌ட்டிய‌ செடிக‌ளை வாங்கி ந‌ட்டால் ம‌ட்டுமே அந்த‌ காய்க்கும் வீரிய‌ம் வ‌ரும் என்றும் அறிந்து கொண்டேன், இந்த‌ ப‌டிப்பினை என‌க்கு ஏதோ ஒரு விச‌ய‌த்தை ம‌வுன‌மாக என‌க்குச் சொல்லிக்கொண்டிருந்த‌து.



க‌ர‌ப்பான் பூச்சிப் பாட‌ம்
12 ஆம் வ‌குப்புப் ப‌டிக்கும் போது க‌ர‌ப்பான் பூச்சி ப‌ற்றிய‌ பாட‌த்தில், இந்த‌ பூச்சி உருவான‌ நாளில் இருந்து எந்த‌ வித‌மான‌ மாற்ற‌மும் அடையாம‌ல், அதாவ‌து ப‌ரினாம‌ வ‌ள‌ர்ச்சிய‌டையாம‌ல், இருக்கிற‌து என்று ஆசிரிய‌ர் சொல்லிக் கொண்டிருந்தார், இதைக்கேட்ட‌ என‌க்கு மிக‌வும் அதிர்ச்சி அப்ப‌டியானால் அது அமீபா பாக்டீரியா போன்று மிக‌ எளிமையான உயிரினாமாக‌ அல்ல‌வா இருக்க‌வேண்டும்? எப்ப‌டி க‌ண்கள், காது, உண‌ர்கொம்புக‌ள், நெஞ்சு, வ‌யிறு, இன‌ப்பெருக்க உறுப்புக‌ள், ஆண் பெண் வித்தியாசம்?,(இப்போதும் கரப்பான் பூச்சியைப் பற்றிய பாடம் மேல் நிலைப் பள்ளியின் விலங்கியல் பாடப் பிரிவில் கறிபிக்கப் படுகிறது) ப‌ரினாம‌ வ‌ள‌ர்ச்சியின் உச்ச‌ம் என்று நாம் சொல்லும் ம‌னித‌னுடைய சிக்க‌லான‌ உறுப்புகள், எப்ப‌டி பரினாம‌ வ‌ள‌ர்ச்சியில்லாத பூச்சி என்று அறிவிய‌லில் சொல்ல‌ப்ப‌டும் க‌ர‌ப்பான் பூச்சியில் வ‌ந்த‌து எப்ப‌டி? 

அப்ப‌டியானால் ஒரு செல் உயிரிக‌ளான‌ அமிபா, பாக்டிரியாக்க‌ளில் இருந்து க‌ர‌ப்பான் பூச்சி தோன்ற‌வில்லை என்றால்? ம‌னித‌ன் ம‌ட்டும் எப்ப‌டி அமீபா பாக்டீரியா போன்ற‌ ஒரு செல் உயிரின‌த்தில் இருந்து தோன்ற‌ முடியும்? என்று ஆசிரிய‌ரைக் கேட்டேன். அவ‌ர் என‌க்கு சொன்ன‌ ப‌தில் திருப்தியாக‌ இல்லை, இந்த‌ கேள்வி என‌க்கு இட‌ர‌லாக‌ இருன்தாலும், நான் ப‌ரினாம‌க் கொளையினை ந‌ம்பிக்கொண்டுதான் இருந்தேன்,

பைபிள் விடை கொடுத்தது
கார‌ண‌ம் நான் பைபிளைப் ப‌டிக்க‌வில்லை, அப்போதெல்லாம் பைபிள் யாரோ எப்போதோ எழுதிய‌ க‌ட்டுக்க‌தை தான் பைபிள் என்று உள‌ரிக்கொண்டிருன்தேன், ஆனால் நான் கிறிஸ்துவை முழும‌ன‌தோடு ஏற்றுக்கொண்ட‌ போது, பைபிளை வாசிக்க‌ ஆர‌ம்பித்த‌ போது, சில வ‌ருட‌ங்க‌ளாக என‌க்குள் இருந்த‌ அந்த‌ முர‌ண்ப‌ட்ட‌ கேள்விக்கு பைபிள் மூல‌மாக ஆவியான‌வ‌ர், என‌க்கு ப‌தில் சொன்னார்,

எப்ப‌டி?
வில‌ங்குக‌ளின் தோற்ற‌ அமைப்பு ப‌ரினாம‌த்தால் உண்டான‌து அல்ல‌, அவைக‌ள் தோற்ற‌ ஒற்றுமையோடு இருக்க‌க் கார‌ண‌ம்; இந்த‌ பூமியில் அவைக‌ள் வாழ‌ அந்த‌ உறுப்புக‌ள் அவ‌சியம், ஆக‌வேதான் இந்த‌த் தோற்ற‌ ஒற்றுமை,

எப்ப‌டி எனில் ஒரு மீனைப் பிடித்துத் தரையில் விட்டால் அத‌ற்கு காற்றை உட்கொள்ளும் நுரையீர‌ல் இல்லாத‌தால் விரைவில் இற‌ந்து விடும், அதேபோல‌ ஒரு பூனையைப் பிடித்து நீரில் மூழ்க‌டித்தால் அது த‌ண்னீரில் சுவாசிக்க முடியாம‌ல் இற‌ந்து விடும், அதே போல‌ ஒரு செடியை நிலத்திலிருந்து பிடிங்கி த‌ரையில் போட்டால் அது வில‌ங்குக‌ள் போல‌ உண‌வை தேடிசெல்ல முடியாம‌ல் இற‌ந்து விடுகிற‌து, அது போல‌ ஒரு வில‌ங்கைப் பிடித்துச் செடியைப் போல‌ கால்க‌ளைப் புதைத்து ந‌ட்டி வைத்தால், அந்த‌ வில‌ங்கின் காலில் வேர் தோன்றி அந்த வில‌ங்குக்கு உண‌வை ஈட்டிக்கொடுப்ப‌தில்லை மாறாக‌, சில‌ நாட்க‌ளிலேயே தாக‌த்தாலும் ப‌ட்டினியாலும், மாண்டு விடுகின்ற‌ன‌, இப்ப‌டி ஒரு சில‌ நாட்க‌ள் கூட மாற்றுச் சூழ்னிலையைத் தாக்குப்பிடிக்க‌ முடியாம‌ல் வில‌ங்குக‌ளும் தாவ‌ர‌ங்க‌ளும் இறந்து அழுகி மக்கிப் போய்விடும் போது எப்ப‌டி இல‌ட்ச‌க்க‌ணக்கான‌ ஆண்டுக‌ளில் மாற்ற‌ம் அடைந்திருக்க‌ முடியும்?

அதே போல ஒட்டுச் செடி த‌ன்னிட‌ம் உள்ள த‌ன்மையை மாற்றிக்கொள்ளாம‌ல் எப்ப‌டி தன் மூதாதைக‌ளின் ம‌ர‌ப‌னுவையுடைய விதைக‌ளை ம‌ட்டுமே உருவாக்குகிற‌து?

இதைத்தான் பைபிள் மிக‌த்தெளிவாக‌ச் சொல்லுகிற‌து: ஆதியாக‌ம‌ம் 1:11. இப்படிச் சொல்லுகிறது "தேவன்:பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று." மேலும் இதே அதிகார‌த்தில் 25ஆம் வ‌ச‌ன‌ம் வரை வாசித்துப்பாருங்க‌ள், உங்க‌ளுக்கு க‌ர‌ப்பான் பூச்சி ப‌ற்றி அறிவிய‌ல் சொல்லும் ஆதார‌ம் புரியும்,

இனி வ‌ரும் ப‌திவுக‌ள், பைபிள் சொல்லும் ப‌டைப்பின் நாட்க‌ளுக்கு அறிவிய‌ல் ரீதியான ஆதார‌ங்க‌ளை வ‌ரும் நாட்க‌ளில் ஆராய்வோம், காத்திருங்க‌ள்....

 

free web counter