Showing posts with label இயேசு. Show all posts
Showing posts with label இயேசு. Show all posts

Friday, January 18, 2008

கண்ணதாசன் கண்ட இயேசு


மங்களம்
(கவியரசு கண்ணதாசன்)



தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
யூத நிலத்தினிலே!

சத்திய வேதம் நின்று நிலைத்தது
தரணி மீதினிலே!


எத்தனை உண்மை வந்து பிறந்தது
இயேசு பிறந்ததிலே!


இத்தனை நாளும் மானிடன் வாழ்வது
இயேசுவின் வார்த்தையிலே!




எத்தனை கோடி செய்திகளோ இங்கு
இயேசுவைப் பற்றிவரும்


அத்தனை கோடியில் முத்துக் குளித்தோம்
ஆசையில் கற்றவரும்!


இத்தனை வந்தது மாலை தொடுத்தோம்
இதிலொரு சக்திவரும்!


தத்துவம் ஏதும் விட்டு விட்டிருந்தால்
தயவுடன் பொறுத்தருளும்!



நாடு விளங்கிட வீடு துலங்கிட
நல்லவர் பாவிகளும்


கேடு மறைந்திட கீழ்நிலை மாறிட
கேட்டதும் ஓடிவாரும்!


பாடுபவர் இதை படிப்பவர்க் க்எல்லாம்
பரமனின் வீடு வரும்!


கூடுகளில் அவன் ஆவி புகுந்து
நன்மைகள் கோடிவரும்!




வாழிய சூசை வாழிய மரியாள்
வாழிய இயேசு பிரான்!


ஆழியும் வானும் உள்ள வரைக்கும்
வாழிய தேவபிரான்!


ஏழைகள் பாவிகள் இரட்சக ராக
எங்கும் நிறைந்தபிரான்!


ஆழ்தமி ழாலே அவர்புகழ் சொன்னேன்
துன்பங்கள் சேரவிடான்!




மண்ணிடை இயேசு மறுபடி வருவார்
என்பது சத்தியமே!


புண்கள் இருக்கும் வரையில் மருந்து
தேவை நித்தியமே!


விண்ணர சமையும் உலகம் முழுவதும்
இதுதான் தத்துவமே!


எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே
இயேசுவை நம்புவோமே!


(கவியரசு கண்ணதாசன் அவர்கள்,தாம் எழுதிய "இயேசுகாவியம்"என்ற நூலின் முடிவுரையாக மேற்கண்ட பாடலை "மங்களம்"என்ற தலைப்பில்(பக்கம் 398-399)எழுதியுள்ளார்கள்.)

Monday, November 12, 2007

பிறவா முதல்வன் யார்?

தென்னாட்டுக்கு ஒரு சிவன் வட நாட்டுக்கு ஒரு சிவன் உலகில் உள்ள மற்ற எல்லாருக்கும் ஒரு சிவன் என்பது போல் ஒரு மாயையான தோற்றத்தை எற்படுத்தி உள்ளது நமது புராணங்கள்.

ஆனால் உண்மை என்ன சிவம் என்றால் அன்பு. அன்பே உருவான தெய்வம் சிவம் என்று அழைக்க பட்டால் அது தவறல்ல.

தமிழ் பாடல் ஒன்று உள்ளது

இறவா இன்பத்துள் எனை இருத்தல் வேண்டி

பிறவா முதல்வன் பிறந்தான்

போற்றிப்பற்றொடை

இதில் அன்பே உருவான தெய்வம் பிறக்க வேண்டிய அவசியம் இல்லாதவன் மனிதனாக பிறந்தது எதற்காக என்றால் நம்மை நீடிய வாழ்வுக்குள் அழைத்து செல்ல அவன் பிறந்தான் என்று சொல்கிறது.

இதையே இன்னொரு தமிழ் பாடல் சொல்கிறது

"அருபரத்தொருவன் அவனியில் வந்து

குருபரனாகி அருளிய பெருமை

சிறுமையென்றிகழாதே"

அதாவது உருவம் இல்லாத இறைவன் போதகனாக உலகில் அவதரித்து நமக்காக அருளிய நன்மைகளை கேவலமாக எண்ண வேண்டாம்.

அன்பு நெஞ்சங்களே நீங்கள் அப்படி செய்கிறீர்களா?

நமக்கு நீடிய வாழ்வுதர இறைவன் உலகில் மனிதனாக வந்தார்.அவர் இரத்தம் சிந்தி தீமையகிய சாத்தானை காலின் கீழ் மிதித்து போட்டார்.இதற்காக இறைவன் கபாலஸ்தலம் என்னும் இடத்தில் ஆனந்த கூத்தாடினார்.

இந்த தியாகத்தை கேவலமாக எண்ண முடியுமா.

இதனையே தயுமானவர் சுவாமிகள் இப்படிப்பாடினார்கள்

"தன்னைத் தந்து என்னைத் தடுத்தாட் கொண்ட நின் கருணைக்குஎன்னைத் தந்து என்ன பயன் -எந்தாய் பராபரமே"-தாயுமானவர் (கிபி 1706 - 1744)

நாம் சிந்திப்போமா?

free web counter