Tuesday, August 9, 2011

ஆகஸ்ட் 6 தேசத்துக்கான உபவாச ஜெப தினமாக டெக்சாஸ் கவர்னர் பிரகடனம்



அமெரிக்காவின் தெற்கிலுள்ள ஒரு மாகாணம் டெக்சாஸ். இம்மாகாணத்தின் ஆளுநராக இருக்கும் ரிக் பெர்ரி (Rick Perry) கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்ற விரும்பும் ஒரு நல்ல கிறிஸ்தவர். இவர் சமீபத்தில் ஆகஸ்டு 6-ம் தினத்தில் தேசத்துக்காக உபவாசம் இருந்து ஜெபிக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இவர் தன் அறிக்கையில் கூறும் போது, “தேசம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது அத்தேசத்தின் அதிகாரிகள் தேவனிடத்தில் தங்களை தாழ்த்தி ஒப்புக்கொடுத்து தேசத்தை நல்ல திசையில் நடத்த ஞானத்தையும் தேவ இரக்கத்தையும் பெற்றுக் கொள்ளவேண்டும். யோவேல் 2-ம் அதிகாரம் 15,16ம் வசனங்கள் போல நான் தேவனிடத்தில் விண்ணப்பிக்கவும் உபவாசிக்கவும் நான் உங்களை அழைக்கிறேன். அந்த வசனங்கள் இப்படியாக சொல்கிறது,சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள். ஜனத்தைக் கூட்டுங்கள், என்கிறது. இயேசு யோவான் 11:41-42-ல் எல்லாருக்காகவும் பொதுவெளியில் விண்ணப்பித்தது போல நாமும் நம் விசுவாசத்தை வெளிப்படுத்தவேண்டும்” எனக்கூறி ”A Day of Prayer and Fasting for Our Nation” -க்கு அறைகூவல் விடுத்துள்ளார். அமெரிக்க மாகாண கவர்னர் ஒருவரே தைரியமாக இதனை பிரகடனம் செய்ததை காணச் சகிக்காத சில குழுவினர் பிசாசினால் ஏவப்பட்டு இதனை தடைசெய்ய முழு முயற்சிமேற்கொண்டு வருகிறார்கள். இந்த ஜெப கூடுகைக்கு வரும் ஆதரவை விட எதிர்ப்புகளே அதிகம்.Federal Lawsuit-களும் போய் கொண்டிருக்கின்றன. கூடவே ஏகப்பட்ட பரிகாசங்களும் நிந்தனைகளும். யெகோவா யீரே- வெற்றி தரும் கர்த்தர் இந்த தடைகளை இழி சொற்களையெல்லாம் கடந்து அந்த உபவாச ஜெபம் மாபெரும் வெற்றி பெறவும், அதன் மூலம் சாத்தானின் கோட்டைகள் முற்றிலுமாக தகர்க்கப்படவும் நீங்களெல்லாரும் ஜெபிக்க நாம் வேண்டிக்கொள்கிறோம்.

யாத்திராகமம் 15:1 கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.
II கொரிந்தியர் 2:14 கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

http://governor.state.tx.us/news/proclamation/16247/




http://www.thewayofsalvation.org/2011/08/6.html

Friday, July 8, 2011

எதை நாடுகிறோம்?

எதை நாடுகிறோம்? 
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். -  (மத்தேயு 6:33).

 


நம் ஒவ்வொருவருடைய விருப்பங்களும் நமது வயதுக்கும், நாம் இருக்கும் நிலவரத்திற்கும் தக்கதாக வேறுபடுகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள நல்ல மதிப்பெண்கள் பெற்று தங்களுக்கு நல்ல வேலையை பெற்று தரக்கூடிய தொழிற்கல்வி கற்க்க விரும்புகின்றனர். படித்து முடித்தவர்கள் அதிக வருமானத்தை தரக்கூடிய நல்ல வேலையில் சேர பிரும்புகின்றனர். நல்ல வேலையில் சேர்ந்தவர்கள் வெளிநாடு சென்று அதிக பணம் சம்பதிக்க விரும்புவர். இப்படி நல்ல வேலை, நல்ல வாழ்க்கை துணை, நல்ல வீடு என்று நம்முடைய விருப்பங்கள் விரிந்து கொண்டே போகின்றன. 'எனக்கு' இவையெல்லாம் வேண்டும் என்று இன்னும் பல விருப்பங்கள் நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் உண்டு.

 

ஆனால் 'என்னில்' இவையெல்லாம் வேண்டுமென்று நாம் எவற்றை எல்லாம் விரும்புகிறோம்? தாவீது கொல்கிறார், 'தேவனே சுத்த இருதயத்தை 'என்னிலே' சிருஷ்டியும். நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். ஈசோப்பினால் என்னை சுத்திகரியும்' என்று தாவீது தன்னிலே பெற்று கொள்ள வேண்டியவற்றிற்காக ஜெபிக்கிறார். ஆனால் அவர் பாவத்தில் விழுந்து விட்டபின்பே இந்த ஜெபத்தை ஏறெடுத்தார். நாம் பாவத்தில் விழுந்து விடாதபடிக்கு அனுதினமும் காலையில் எழுந்தவுடன் இந்த ஜெபத்தை ஏறெடுக்க பழகி கொண்டால்  நம்மை பாவத்தில் விழாதபடி தேவன் காத்து கொள்வார்.

 

நம்முடைய ஜெபத்திலே அதிக பாரத்தையும், நேரத்தையும் எடுப்பது 'எனக்காகவா' அல்லது 'என்னிலே' மாற்றம் கொண்டு வாரும் என்று ஜெபிப்பதற்காகவா? என் கடன் பாரம் தீர வேண்டும், என் வீடு கட்டி முடிக்க உதவும், என் பிள்ளை நன்றாக படிக்க வேண்டும், என் கணவருக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும், எனக்கு நல்ல துணை கிடைக்க வேண்டும் என்பது தானே நம் ஜெபத்தில் அதிகம்! ஆனால் தாவீதை போல தேவனே என்னில் மாற்றம் தாரும் என ஜெபிப்பவர்கள் வெகு சிலரே. என்னில் தாழ்மையை தாரும், பொறுமையாயிருக்க செய்யும், அன்பு நிறைந்த உள்ளத்தை என்னிலே சிருஷ்டியும் என நமக்குள் ஏற்பட வேண்டிய மாற்றத்திற்காக நாம் அதிகமாக ஜெபிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நமது ஒவ்வொரு அவயவங்களையும் கர்த்தருடைய பலிபீடத்தில் வைத்து அவர் நம்மை பரிசுத்தப்படுத்தும்படி மன்றாடுவோம். அந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும் ஆண்டவரின் நினைவாய் இருக்க ஜெபிப்போம். நம் வாயின் வார்த்தைகளெல்லாம் பிறர் காயம் ஆற்ற கூடியதாக இருக்க ஜெபிப்போம்.

 

பிரியமானவர்களே, அன்று சாலொமோன் ராஜா இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்த ஞானமுள்ள இருதயத்தை மட்டும்தான் கேட்டான். ஆனால், தேவன் அவன் கேளாத மற்ற எல்லா ஐசுவரியங்களையும் அவனுக்கு கொடுக்கவில்லையா? அதுபோல நமது எண்ணமும் 'எனக்கு எனக்கு' என்றிராதபடி 'என்னிலே' என்று ஜெபிக்கிறவர்களாய் மாறுவோம். சுத்திகரிக்கப்பட்ட பாத்திரத்திலே எவரும் பாலை ஊற்றுவார்கள். இல்லாவிட்டால் பாத்திரத்திலுள்ள அசுத்தம் பாலை கெடுத்து விடும். அதுபோல நம்மை சுத்தமாக காத்து கொள்வோமானால், நமக்கு வேண்டிய ஆசீர்வாதங்கள் தானாய் வந்து நம் வாழ்வை நிரப்பும். நமது சரீரத்திற்காக அல்ல, ஆத்துமாவிற்காக கவலைப்படுவோம். சரீரத்தின் தேவைகளை தேவன் பார்த்து கொள்வார். ஆமென் அல்லேலூயா!

 

என் ஆத்துமாவும் சரீரமும்

என் ஆண்டவர்க்கே சொந்தம்

இனி வாழ்வது நானல்ல

என்னில் இயேசு வாழ்கின்றார்

..

கர்த்தாவே உம் கரத்தில்

நான் களிமண் போலானேன்

உந்தன் இஷ்டம்போல் வனைந்திடும்

என்னை எந்நாளும் நடத்திடும்

  


ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் எங்கள் சரீர தேவைகளுக்காக மாத்திரம் ஜெபிக்கிறவர்களாக இல்லாதபடி, எங்கள் ஆத்தும ஈடேறும்படியாக ஜெபிக்கிறவர்களாக எங்களை மாற்றும். எங்கள் உள்ளான மனிதன் பெலப்படும்படியாக, ஆவியின் கனி எங்களில் காணப்படும்படியாக நாங்கள் எங்கள் ஆத்துமாவை ஒவ்வொரு நாளும் உம்முடைய கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறவர்களாக எங்களை மாற்றும். முதலாவது தேவனுடைய ராஜயத்தை தேடுங்கள், மற்றவை கூட கொடுக்கப்படும் என்றீரே, முதலாவது உமது ராஜ்யத்திற்கடுத்தவைகளை தேட கிருபை தருவீராக. அதினால் சரீர தேவைகளை பெற்று கொள்ள கிருபை செய்வீராக.   எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


http://www.anudhinamanna.net/

Saturday, April 30, 2011

தேவனே நமக்கு கேடகமானவர்


தேவனே நமக்கு கேடகமானவர் 
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

அவர் என் தயாபரரும், என் கோட்டையும், என் உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என் கேடகமும், நான் நம்பினவரும், என் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாயிருக்கிறார். - (சஙகீதம் 144:2).

 
1962-ம் வருடம் பிப்ரவரி மாதம் 20ம் தேதி சரியாக காலை 9:47 மணியளவில் விண்வெளி ஊர்தி கொழுந்து விட்டு எரியும் நெருப்பின் நடுவில் புகையை கக்கி கொண்டு, ஜான் கிலன் (John Glenn)  என்ற விண்வெளி ஆராய்ச்சியாளரை ஏந்தி கொண்டு கிளம்பியது. அந்த ஊர்தியில் அவர் மட்டும் தனித்து பயணம் செய்தார்.

 

அந்த விண்வெளிகலம்  பூமியை மூன்று முறை சுற்றி, நான்கு மணி நேரத்தில் 80,000 மைல்களை கடந்து வந்து படங்களை எடுத்துவிட்டு, பூமிக்கு திரும்ப ஆரம்பித்தது. அந்த ஊர்தி கீழே வந்து கொண்டிருந்தபோது, அதை கன்ட்ரோல் செய்து கொண்டிருந்த ஹுஸ்டனில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை அந்த ஊர்தியிலிருந்து கிடைத்தது. அதன்படி, அந்த ஊர்தியில் இருந்த அக்கினி கேடகம் அதை விட்டு தனியே கழன்றுகொண்டு இருக்கிறது என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்படி அது கழன்று வந்தால், முழு ஊர்தியும் எரிந்து போய் விடும். அதிலிருந்த ஜானும் எரிந்து போய் விடுவார்.

 

இதை விண்வெளியிலிருந்து சரி செய்ய இப்போது முடியாது. ஆனால் அந்த கலம் பூமியை நோக்கி விரைவாக வந்து கொண்டிருந்தது. என்ன செய்வது என்று விஞ்ஞானிகள் யோசித்து கொண்டிருந்த அதே நேரத்தில் திடீரென்று அந்த விண்வெளிகலத்திற்கும் கீழே அதை இயக்கி கொண்டிருந்த ஆராய்ச்சியாளர்களுக்கும் இடையில் தொடர்பு அற்று போனது. அதை Black Hole என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எந்தவித தொடர்பும் என்ன நடக்கிறது என்று அறியாமலும் இருக்கும்போது இந்த நிலைமை ஏற்படும்.

 

நிமிடங்கள் வேகமாக கடந்து சென்று கொண்டிருந்தது. நாசா விஞ்ஞானிகள் இயக்குகிற அறையிலிருந்து என்ன செய்வது என்று தவித்து கொண்டிருந்தனர்.  ஐந்து நிமிடங்கள் கழித்து, ஜானின் குரல் அவர்களுடைய ரேடியோவில் கேட்டது 'இது ஜான்' என்று. ஜான் பூமியை நோக்கி பத்திரமாக வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்களின் மத்தியில் ஏற்பட்ட சந்தோஷம் அளவில்லாதது!

 

பின்னர் தான் தெரிந்தது, அது தவறான ஒரு சிக்னல் என்று! ஜான் பத்திரமாக வந்து தரையிறங்கினார். அவர் அந்த Black Hole லில் இருந்த அந்த நிமிடங்கள் மிகவும் அதிர வைக்கத்தக்கதாக இருந்தது.

 

வேதத்தில் யோசேப்பும் அப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்தார். அவருடைய சகோதரர்கள் அவரை தூக்கி ஒரு குழிக்குள் போட்டு விட்டார்கள். யாருடனும் அவருக்கு தொடாபில்லாமல் போய் விட்டது. அவர் போட்ட சத்தங்கள் யார் காதிலும் கேட்கவில்லை. பின்னர் அவரை முன்பின் தெரியாத வியாபாரிகளிடம் விற்று போட்டார்கள். அவர் அநேக பாடுகளினூடே சென்றார். ஆனால் ஒரு நாள் வந்தது. கர்த்தர் அவரை எல்லாருக்கும் மேலாக உயர்த்தினார். யோசேப்பு எதிர்பாராத உயர்வு அவருடைய வாழ்க்கையில் வந்தது.

 

ஒருவேளை நீங்களும் Black Hole என்று சொல்லப்படும் கடும் பாடுகளுக்கு நடுவில் சென்று கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் படும் பாடுகளை அறிவார் யாரும் இல்லையோ? நீங்கள் கூப்பிடும் சத்தம் கர்த்தருக்கும் கேட்கவில்லை என்று நினைக்கிறீர்களோ? உங்கள் வாழ்க்கை உங்களையும் மீறி போய் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறீர்களோ? தேவன் என்னை கைவிட்டார் என்று நினைத்து கொண்டிருக்கிறீர்களோ? Black Hole அனுபவம் உங்களை தனிமையாக்கிற்றோ?

 

நம்முடைய தனிமை மற்றும் துன்பமான நேரங்களில் நம்மை விட்டு தேவன் தூர போனார் என்று நாம் நினைத்தாலும், நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை என்று சொன்ன தேவன் நம்மை விட்டு விலகாமல் நம் கூடவேதான் இருக்கிறார். நம்மை காக்கும் கேடகமாக நம்மை சுற்றிலும் இருக்கிறார். உங்களுக்கு ஏற்படும் அக்கினி போன்ற சோதனைகளிலும் உங்களை சுற்றி கேடகமாக அவர் உங்களை காத்து கொண்டுதான் இருக்கிறார். நீங்கள் அவரோடு இன்னும் ஆழமான உறவு வைத்து கொள்ள அவர் உங்களுக்கு இந்த பிரச்சனைகளை அனுமதித்திருக்கலாம். அவரையே பற்றி கொள்ளுங்கள். நீங்கள் கர்த்தருடைய பிள்ளையாயிருந்தால், ஒன்றை ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை விட்டு விலகுவதேயில்லை என்று. யோபுக்கு அநேக துன்பங்கள் வந்தது, பிரச்சனைகள் வந்தது, ஆனால் ஒரு நாள் வந்தது, பிரச்சனைகள் மாறிப்போனது. இரட்டிப்பான நன்மைகள் யோபுவை வந்தடைந்தது. உங்கள் கண்ணீரையும், புலம்பலையும் காண்கின்ற தேவன் ஒருவர் உண்டு. அதற்கு பதில் கொடுக்கிறவரும் அவரே. அவரை பற்றி கொள்ளுங்கள். அவர் உங்களை மறப்பதில்லை! அவரே நமக்கு கேடகமும் நம்மை விடுவிக்கிறவருமானவர். ஆமென் அல்லேலூயா!

 

பயப்படாதே வலக்கரத்தாலே

பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்

பாசம் என்மேல் நீர் வைத்ததினால்

பறிக்க இயலாதெவருமென்னை

..

உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்

தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்

அக்கினியின் மதிலாக

அன்பரே என்னைக் காத்திடுமே

 

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, எங்களுக்கு கேடகமாக, அக்கினியின் மதிலாக எங்களை பாதுகாக்கிற உமது தயவிற்காக உமக்கு நன்றி. எங்களுக்கு வரும் பிரச்சனைகளினால் எல்லாரும் எங்களை கைவிட்டார்கள், என் தேவன் கூட என்னை மறந்தார் என்று நினைக்கும் நேரங்களிலும் நீர் எங்களுடனே எப்போதும் கூடவே இருக்கிற தேவன் என்பதை நினைத்து உம்மை சார்ந்து ஜீவிக்க எங்களுக்கு பெலனை தருவீராக. பிரச்சனைகளை மாற்றுவீராக. யோபை போலவும், யோசேப்பை போலவும் உயர்த்துவீராக.   எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு


எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, சகோதரி சாந்தகுமாரியின் மாணவர் சதிஷ்குமார் விபத்தில் சிக்கி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொள்ளும் அவருக்கு எடுத்து கொள்ளும் சிகிச்சைகள் நல்ல பலன் கொடுக்க ஜெபிக்கிறோம்.  நடந்து கொண்டிருக்கும் யுனிவர்சிட்டி பரிட்சைகளில் கலந்து கொள்ளும்படியாக கிருபை செய்யும். அவருடைய சகோதரனும் சென்னையில் அப்பொல்லோ ஆஸ்பத்திரியில் இருப்பதால் அவருக்கும் பரிபூரண சுகத்தை கொடுக்கும்படியாக ஜெபிக்கிறோம்.

.

சகோதரன் தேவநேசன் கொடுத்திருக்கிற ஜெப விண்ணப்பத்தையும் உம்முடைய சமுகத்தில் வைக்கிறோம். கிரேஸி, அன்பு, ஜார்ஜ் என்னும் மூன்று சகோதர சகோதரிகளுக்கும் வயதாகி கொண்டே போகிறபடியால் அவர்களுடைய திருமண காரியங்கள் சீக்கிரமாய் அமையத்தக்கதாக தேவன் கிருபை செய்வீராக.  கர்த்தர் இரங்கி கிருபை செய்வீராக. ஜெபங்களுக்கு பதிலை தருவீராக. உமக்கே எங்கள் துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுத்து கிறிஸ்துவின் இனிய நாமத்தில் எங்கள் ஜெபங்ளை ஏறெடுக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள தகப்பனே ஆமென்.





http://www.anudhinamanna.net/

Thursday, January 13, 2011

தேவனுக்கு துரோகம் செய்யும் கிறிஸ்தவ ஊழியக்காரர்

 
 http://www.yourmaxliving.com/wordpress/wp-content/uploads/DisappointedMan1.jpg

''நீங்களோ, சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவ தூதர்களிடத்திற்கும், பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேரானவர்களின் சர்வ சங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளிடத்திற்கும், புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலின் இரத்தம் பேசினதைப் பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்'' (எபிரேயர் 12 : 22-24)

மேலே தேவனுடைய வசனத்தில் காணப்பட்ட மகா மகத்துவமும், உன்னதமுமான நிலைக்கு வந்து சேர்ந்த கர்த்தருடைய ஊழியக்காரர் பலர் அந்த உன்னத நிலையை உதறித் தள்ளிவிட்டு இன்று உலகம் கொடுக்கக் கூடிய அநித்தியமானஆஸ்தி, ஐசுவரியம், செல்வம், பெயர், புகழ், சொகுசு வாழ்க்கை மற்றும் உலக மேன்மையை நாடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். இந்த மக்களுடைய ஒரே குறிக்கோளெல்லாம் இந்த உலகத்தில் கோடிகளைக் குவிப்பதுதான். இந்த ஊழியக்காரர் இன்று உலக மக்களின் பார்வையில் ''இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள்'' (அப் 16 : 17) என்ற ஸ்தானத்தில் இல்லாமல் உலக கோடீஸ்வரர்களின் வரிசையில் வைத்து அடையாளம் காணப்படுகின்றனர். ஒரு சமயம் ஒரு இந்து வாலிபன் என்னைப் பார்த்து ''உங்கள் தேவ ஊழியர்கள் பில் கேட்ஸ் (உலகின் முதன்மை ஸ்தானத்திலுள்ள மிகப் பெரிய ஐசுவரியவான்) போன்ற கோடீஸ்வரர்களின் கோடிகளுக்கு வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள்'' என்று என்னிடம் கூறினான். எத்தனை வேதனையான காரியம்!

''உலகம் என் பின்னே, சிலுவை என் முன்னே, பின் நோக்கேன் நான்'' என்ற முழுமையான அர்ப்பணிப்போடு தேவனுக்கு ஊழியம் செய்ய களம் இறங்கிய தேவஊழியன் உலக மாயை என்ற சிவப்பான பயற்றங்கூழை (ஆதி 25 : 32) கண்டதும் தனது உன்னதமான அழைப்பை அசட்டை செய்து காற்றில் பறக்கவிட்டு விட்டு ''பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும், ஒலிவத் தோப்புகளையும் திராட்சத் தோட்டங்களையும், ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் திரும்பிவிட்டான்'' (2 இரா 5 : 26) ''நான் உலகத்தானல்லாதது போல அவர்களும் உலகத்தாரல்ல'' (யோவான் 17 : 16) என்று ஆண்டவர் தமது அடியார்களைக் குறித்து எத்தனை அருமை பெருமையாக தமது பிதாவிடம் கூறினார். ஆனால், இன்று தேவ ஊழியன் முதல்தரமான உலகத்தானாக, உலக மனிதன் அனுபவிப்பதைக் காட்டிலும் உலகத்தை அத்தனை அதிகமாகவும், முழுமையாகவும் ருசித்துப் புசித்து ஆனந்தித்து வருகின்றான். தேவ ஊழியனுக்கு எத்தனை ஆடம்பரமான வாழ்க்கை வசதிகள், எத்தனை ஆடம்பரமான பிரயாணங்கள், உலக ஐசுவரியவான்கள், ஆளுகையில் உள்ள உயர்மட்ட உலக அரசியல்வாதிகள் போன்றவர்களோடு இவர்களுடைய நெருக்கமான ஐக்கிய சிநேகங்கள், சமுதாயத்தில் மினுக்கான வஸ்திரம் தரித்திருப்போருக்கு இவர்கள் கொடுக்கும் முதலிடங்கள், இவர்கள் வாயிலிருந்து புறப்படும் பெருமையான வார்த்தைகள், இவர்கள் பார்க்கும் மேட்டிமையான பார்வைகள். யார் இவர்களை தேவ ஊழியராக அடையாளம் காண முடியும்?

இவர்கள் பிரசங்கிக்கும் ஆண்டவர் பரம ஏழையாக இருந்து இந்த உலகத்தைக் கடந்து சென்றார். அவர் சிசுவாக இருந்தபோது அவருடைய பெற்றோர் அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்க எருசலேம் தேவாலயத்திற்குக் கொண்டு சென்றபோது ஒரு சிறிய ஆட்டுக்குட்டியை வாங்கி பலி செலுத்த பண வசதி இல்லாத அத்தனை ஏழ்மை நிலையில் ஒரு ஜோடு காட்டுப் புறாவையாவது இரண்டு புறாக் குஞ்சுகளையாவது பலியாக செலுத்தியதாக நாம் காண்கின்றோம். தம்முடைய அடியார்களை ஊழியங்களுக்கு அனுப்பிய சமயத்தில் ''பணப்பை, சாமான்பை, பாதரட்சைகள் இல்லாமல்'' அனுப்பிய (லூக்கா 22 : 35) அத்தனையான தரித்திர நிலை. வரிப்பணம் செலுத்தக்கூட கையில் பணம் இல்லாமல் அன்பின் ஆண்டவர் பேதுருவினிடத்தில் கடலில் தூண்டில் போட்டு மீன் பிடித்து அதன் வாயைத் திறந்து பார்த்து அங்கிருக்கும் பணத்தைக் கொண்டு தனக்கு வரி செலுத்தும்படியாக கூறுகின்றார். ''நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்கு கூடுகளும் உண்டு, மனுஷ குமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை'' (மத் 8 : 20) என்ற வசனத்திலிருந்து அவர் எத்தனை ஏழையாக உலகத்தில் வாழ்ந்தார் என்று நாம் பார்க்கின்றோம். ஏசாயா 53 ஆம் அதிகாரம் 9 ஆம் வசனத்தில் நாம் பார்க்கும்போது ''ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்'' என்ற வசனத்திலிருந்து அவர் தமது பூவுலக நாட்கள் முழுமையிலும் தரித்திரனாக வாழ்ந்ததாகவும் மரித்த போதுதான் ஐசுவரியவானோடு அவர் இருந்ததாகவும் நாம் கவனிக்க முடியும்.

ஆண்டவருடைய அன்பின் அடியார்கள் அனைவரும் தங்கள் போதகரைப் போல இந்த உலகத்தில் தரித்திரராக வாழ்ந்து கடந்து சென்றார்கள். ''வெள்ளியும், பொன்னும் என்னிடத்தில் இல்லை'' (அப் 3 : 6) என்று அலங்கார வாசலண்டை அமர்ந்திருந்த பிச்சைக் காரனிடத்தில் பேதுரு அப்போஸ்தலன் சொல்லுவதை நாம் பார்க்கின்றோம். ''தரித்திரர்கள்'' ''ஒன்றுமில்லாதவர்கள்'' என்று அவர்கள் அறியப்பட்டிருந்தார்கள் என்பதை தேவனுடைய வார்த்தையில் நாம் வாசிக்கின்றோம் (2 கொரி 6 : 10) ''இந்நேரம் வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாக இருக்கின்றோம்'' (1 கொரி 4 : 11) என்ற தேவ வார்த்தை அப்போஸ்தலர்களின் மிகவும் நிர்ப்பந்தமான ஏழ்மை நிலையை நமக்குத் தெளிவாகக் காண்பிப்பதாக இருக்கின்றது.

ஆனால் இன்றைய தேவ ஊழியர்களின் நிலை முற்றும் நேர்மாறானது. உலகம் அவர்களை கோடீஸ்வரர்களாக மாத்திரமல்ல ''கிறிஸ்தவ வியாபாரிகள்'' ''தொழிலதிபர்கள்'' என்றும் அடையாளம் கண்டு கொண்டிருக்கின்றது. மனந்திரும்புதலையும், பாவ மன்னிப்பையும், மறு பிறப்பையும், மனிதனை நினையாமல் சடுதியாக சந்திக்கும் மரணத்தையும், தேவனுடைய நியாயத் தீர்ப்பையும், எரி நரகத்தையும், நித்திய ஜீவனையும், பரிசுத்தத்தையும், இயேசுவைப்போல மாற வேண்டியதன் அத்தியந்த அவசியத்தையும், முடிவில்லாத நித்தியத்தையும் தேவ ஜனத்திற்கு பிரசங்கிக்க வேண்டிய ஊழியக்காரன் நிலையில்லா சரீர சுகத்தையும், 100 ஆண்டு காலம் நோய் நொடியின்றி வாழும் வகையையும், இந்த உலகத்தில் தொட்டதெல்லாம் பொன்னாகும் இரகசியத்தையும் மக்களுக்குப் பிரசங்கிக்கின்றான். இந்தச் செழுமையின் உபதேசத்தை (ஞசடிளயீநசவைல ழுடிளயீநட டிக ழநயடவா யனே றநயடவா) கடந்த கால பரிசுத்த பக்த சிரோன்மணிகள் தங்கள் கரங்களினால் தொடக்கூட அஞ்சி நடுங்கினார்கள். மருத்துவ மனையில் மிகவும் சுகயீனமாக படுத்திருந்த தங்கள் பையனுக்காக ஜெபிக்க வரும்படியாக மிகவும் வருந்தி அழைத்த ஒரு அன்பான பெற்றோருடைய வேண்டுகோளைக்கூட பரிசுத்த பக்த சிரோன்மணி சாது சுந்தர்சிங் அவர்கள் மிகவும் நடுக்கத்தோடும், தயக்கத்தோடும் ஏற்றுக் கொண்டதுடன், இனி தன்னை அப்படிப்பட்ட காரியங்களுக்கு திட்டமாக அழைக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டதாகவும் நாம் வாசிக்கின்றோம். காரணம், சரீர சுகத்தை நாம் பிரசங்கித்தால் அவர்களின் விலையேறப்பெற்ற ஆத்துமாவின் இரட்சிப்பைக் குறித்த காரியத்தில் மக்கள் கவனமும், கவலையும், முக்கியத்துவமும் கொடுக்கத் தவறிவிடுவார்கள் என்று அவர்கள் அஞ்சினார்கள்.

இந்த உலகத்தைக் கடந்து சென்ற பூர்வ காலத்து பரிசுத்த பக்தர்களின் வாழ்க்கை வரலாறுகளை நீங்கள் உங்கள் கரங்களால் எடுத்துப் படித்துப் பாருங்கள். ஆ, அவர்கள் எல்லாரும் நஷ்டப்பட்ட பாவிகள் சென்றடையப்போகும் முடிவில்லாத நித்திய எரி நரகத்தைக் குறித்தே பிரசங்கித்தார்கள். எந்த ஒரு நிலையிலும் மக்கள் அந்த தேவ கோபாக்கினையின் தீச்சூழைக்குச் செல்லாமல் விழிப்போடு தங்களைக் காத்துக் கொள்ள கண்ணீரோடும், அழுகையோடும் தேவ ஜனத்தை மன்றாடி எச்சரித்தார்கள். 18 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வாழ்ந்த ராட்சத தேவ பக்தரான யோனத்தான் எட்வர்ட்ஸ் என்பவர் ''கோபமுள்ள தேவனுடைய கரத்தில் பாவிகள்'' (ளுinநேசள in வாந hயனேள டிக யn யபேசல ழுடின) என்ற தமது பிரசங்கத்தை உபாகமம் 32 : 35 ஆம் தேவ வசனத்தின் பேரில் தாட்களில் எழுதி மங்கலான மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் தமக்கு முன்பாக அமர்ந்திருந்த மக்களுக்கு வாசித்தார். உடன்தானே, எழுப்புதலின் தீ பற்றி எரிந்தது. மக்கள் தேவாலயத்தின் தூண்களை கட்டிப்பிடித்தவர்களாக தங்கள் கால்கள் இப்பொழுதே நரக அக்கினிக்குள் இருப்பதாகக் கூறி கதறி அழுதார்கள். நரக அக்கினியிலிருந்து தாங்கள் காக்கப்படும் பொருட்டாக தேவனுடைய இரக்கத்துக்காகவும், பாவ மன்னிப்புக்காகவும் அவர்கள் கெஞ்சி கதறினார்கள்.

பரிசுத்த பக்தன் ஹட்சன் டெயிலருடன் சேர்ந்து மிஷனரியாக சீனா தேசத்திற்குச் சென்ற மற்றொரு பெரிய தேவ மனிதர் வில்லியம் சால்மர்ஸ் என்பவர் சிறுவனாக இருந்தபோதே தெருக்களில் மக்கள் நடந்து செல்லுவதைக் காண்கையில் அவர்களின் கால்கள் எரி நரகத்துக்கு நேராகச் சென்று கொண்டிருக்கின்றதே என்று அழுது கண்ணீர் சிந்தினதாக அவரைக் குறித்து எழுதப்பட்டிருக்கும் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடப் பட்டிருக்கின்றது.

மேல் நாட்டுப் பரிசுத்த பக்தர்களின் காரியங்கள் அப்படியிருக்க தமிழ் நாட்டின் ஒரு பிரபலமான தேவ ஊழியரை ஒரு சமயம் மக்கள் அணுகி ''தேவனுடைய அன்பை மட்டும் மக்களுக்குப் பிரசங்கிக்காமல், மனந்திரும்புதல், பாவ மன்னிப்பு, தேவனுடைய நியாயத்தீர்ப்பு, நித்திய எரி நரகம், நித்திய ஜீவன் போன்ற காரியங்களையும் தன்னுடைய பிரசங்கத்தில் குறிப்பிடும்படியாகக் கேட்டுக்கொண்டபோது , அந்த மக்களிடம் அவர் ''தேவனுடைய அன்பைப் பற்றிச் சொல்லவே தனது வாழ்நாட் காலம் போதாது என்றும் மற்ற காரியங்களைக் குறித்துப் பேச தனக்கு காலம் இல்லை'' என்றும் சொன்னதாக நான் கேள்விப்பட்டேன். உண்மைதான், மனந்திரும்புதல், பாவ மன்னிப்பு, மரணம், தேவனுடைய நியாயத்தீர்ப்பு போன்றவற்றைப் பேசினால் மக்கள் அதை ஒருக்காலும் விரும்பவேமாட்டார்கள் என்றும், அந்தச் செய்திகளுக்கு மக்கள் கூட்டம் நிச்சயமாக வரவே வராது என்றும் தங்களுக்குக் காணிக்கைகள் கட்டாயம் கிடையாது என்றும் அவர்களுக்கு நன்கு தெரியும்.

அதுமட்டுமல்ல, மேய்ப்பனாயிராதவனுக்கு ஆடுகள் மேல் கவலையும், அக்கறையும், அன்பும் எங்கிருந்து வரும்? அவனுக்கு வேண்டியதெல்லாம் மந்தையைக் கொண்டு கூலி மாத்திரமே. எப்படியோ தங்களுக்கு காணிக்கை கிடைத்தால் போதுமானது. மந்தை நித்திய அக்கினிக்குச் சென்றால் என்ன? அல்லது அது எரி நரகத்துக்குச் சென்று அக்கினியும், கந்தகமும் கலந்து எரியும் எரி மலைக் குழம்பான அக்கினி கடலில் யுகாயுகமாக துடிதுடித்து வெந்து கொண்டிருந்தால் என்ன? தேவ மைந்தன் தனது மானிடாவதார காலம் முழுமையிலும் எரி நரகத்துக்குச் செல்லும் தமது ஆடுகளுக்காக கண்ணீரையே வடித்துக் கொண்டிருந்தாரே (லூக்கா 19 : 41) ஆடுகளையும் தங்கள் ஆத்துமாக்களுக்காக அழுது நரக அக்கினிக்கு தப்பிக்கொள்ள கேட்டுக் கொண்டாரே (லூக்கா 23 : 28) தேவ மைந்தன் தனது வாழ்வில் சிரித்ததை யாருமே பார்க்கவில்லை என்றும் அவர் அழுததையே பலரும் பல சந்தர்ப்பங்களிலும் பார்த்ததாக ஒரு ரோமன் எழுதியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

ஒரு தேவ ஊழியர் சமீபத்தில் கர்த்தருடைய செய்தியை கொடுப்பதற்காக ஒரு சபைக்குச் சென்றதாகவும், அந்த சபையின் பாஸ்டர் அந்தப் பிரசங்கியாரைப் பார்த்து ''எனது சபை மக்கள் வாரம் முழுவதும் பாடுபட்டு உழைத்து களைத்து சோர்ந்து போய் உற்சாகமான ஒரு பிரசங்கத்தை வாரக் கடைசியில் கேட்க எதிர்நோக்கி இங்கு வந்து கூடியிருக்கின்றார்கள். எந்த ஒரு நிலையிலும் பாவம், மனந்திரும்புதல், மரணம், நியாயத் தீர்ப்பு, நரகம் போன்ற எதைக் குறித்தும் நீங்கள் அவர்களுக்குப் பேசாமல் மக்கள் சிரித்து மகிழும்படியான ஒரு உற்சாகமான பிரசங்கத்தை மட்டும் செய்துவிட்டுச் செல்லுங்கள்'' என்று கூறினதாக அந்த தேவ ஊழியர் மிகவும் வேதனையுடன் என்னிடம் சொன்னார்கள். இதில் நாம் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. மக்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல் செவித்தினவுள்ளவர்களாகி தங்கள் சுய இச்சைக்கேற்ற போதகர்களை தங்களுக்கு திரளாகச் சேர்த்துக் கொண்டு சத்தியத்தை விட்டு விலகி கட்டுக் கதைகளுக்கு சாய்ந்து போவார்கள் என்பதை பரிசுத்த ஆவியானவர் முதலாம் நூற்றாண்டிலேயே நமக்கு தெரிவித்துவிட்டார் (2 தீமோ 4 : 3 - 4) அதுமட்டுமல்ல, தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளுக்குச் செவிசாய்க்க மனதில்லாத மக்கள் பொய்யை விசுவாசித்து அழிந்து போகும்படியாக கொடிய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்கு அனுப்புவார் என்ற பயங்கர வார்த்தையும் கர்த்தருடைய வசனத்தில் உண்டு (2 தெசலோ 2 : 10 - 12) அந்தக் காட்சியைக் காணத்தான் இன்று பெருங்கூட்டம் மக்கள் ஆசீர்வாதப் பிரசங்கிமார்களின் மனதை மயக்கும் வார்த்தைகளைக் கேட்க (தீத்து 1 : 10) அவர்களின் பின்னால் பட்டணங்கள் தோறும் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்.

தேவ ஊழியர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுகின்றவர்கள் பொய்யான வெளிப்பாடுகளையும், பொய்யான தீர்க்கத்தரிசனங்களையும் மக்களுக்குக் கூறி வெகு துரிதமாகவே பெருஞ் செல்வந்தர்களாக மாறிவிடுகின்றனர். ஒரு தேவ ஊழியர் தனது ஊழியத்தை மிகவும் எளிமையாக ஒரு கிறிஸ்தவ கிராமத்தில் ஆரம்பித்தவர், நாளடைவில் ஒரு குறிப்பிட்ட பட்டணத்திலுள்ள ஐசுவரியமுள்ள கிறிஸ்தவ வியாபாரிகள் பலரிடம் போக்குவரத்துமாக இருந்து அவர்களுக்கு தீர்க்கத்தரிசனங்கள், வெளிப்பாடுகளை கூறி சீக்கிரமாகவே பணக்காரனாகி இப்பொழுது தனது சொந்த ஊரில் மாடி வீடு கட்டி வீட்டுக்கு முன்பாக சில லட்சங்கள் மதிப்புள்ள ஒரு காரை வாங்கி நிறுத்தி, தனது பணத்தை திருடர்கள் திருடிக் கொண்டு போய்விடாதபடி இருக்க வீட்டுக் காவலுக்குக் கடித்துக் குதறக்கூடிய ஒரு பெரிய அல்சேஷன் நாய் ஒன்றை தனது வீட்டின் பிரதான நுழை வாயிலில் கட்டிப் போட்டிருக்கின்றார் என்று அந்த தேவ ஊழியரின் ஊருக்கு வெகு அருகாமையில் வசிக்கும் ஒரு சகோதரன் சமீபத்தில் என்னிடம் விசனத்துடன் சொன்னார்கள்.

''செம்மறியாட்டுத் தோல்களையும், வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக் கொண்டு திரிந்து குறைவையும், உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள். உலகம் அவர்களுக்குப் பாத்திரமாக இருக்கவில்லை'' (எபிரேயர் 11 : 27 - 28) அன்று தேவ மக்களுக்கு உலகம் பாத்திரமாக இருக்கவில்லை. ஆனால் இன்றுள்ள நிலை வேறு. தேவ ஊழியன் முழு உலகத்தானாக வாழ்ந்து உலகத்தை முழுமையாக ருசித்து ஆனந்திக்கின்றான். தன் ஜீவனை இரட்சிக்க தன் முழு பெலத்தோடும் போராடி உலக வாழ்வில் சவுலைப்போல ஜெயஸ்தம்பம் நாட்டுகின்றான். சுவிசேஷத்தினிமித்தம் ஜீவனை இழந்து போகும்படியாக (மாற்கு 8 : 35) ஆண்டவர் அவர்களுக்கு கட்டளையிட்டார். ஆனால், ஊழியக்காரன் தேவனுடைய மகிமையின் சுவிசேஷத்தை உலகப் பொருளுக்காக பண்டமாற்று செய்து அவனை அழைத்த அன்பின் ஆண்டவர் முகத்தில் உமிழ்ந்து, கரியைப் பூசி அனுப்பி விட்டான்.

இன்று தேவ ஊழியம் முதல்தரமான வியாபாரமாக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் அந்த வியாபாரம் செழித்தோங்கி வளர்ந்து கொண்டிருக்கின்றது. பணம் சம்பாதிக்க மிகவும் சுலபமான வழி, வெகு துரிதமாக ஐசுவரியவானாக உயர்வதற்கு வெகு நிச்சயமான பாதை தேவ ஊழியமாகும். ஆனால் அதைப் போன்ற ஆபத்து வேறு எதுவும் கிடையாது என்று ரிச்சர்ட் பாக்ஸ்டர் என்ற பூர்வ காலத்து பரிசுத்தவான் மக்களை கடும் வன்மையாக எச்சரிக்கின்றார். ''தேவ ஊழியத்தை நீ ஒரு உலகப்பிரகாரமான தொழிலாக உனது கரங்களில் எடுப்பாயானால் நீ தொலைந்தாய்'' என்று அவர் கொதித்தெழுந்து குமுறுகின்றார். ஆனால், அவருடைய தேவ ஆலோசனைகளை எல்லாம் இன்றைய மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை.

ஏராளமான கூட்டமும், பெரும் காணிக்கையும் எந்த ஊழியர்கள் கூட்டங்களில் சேருகிறதோ அந்த ஊழியர்களின் நடபடிகளை புதிதாக ஊழிய வியாபாரம் ஆரம்பித்திருக்கும் இளைய தலை முறையினர் அப்படியே காப்பி அடித்து அவர்களைப் போல பிரசங்கித்து, அவர்களைப் போல ஜெபித்து, அவர்களைப்போல சைகைகளைக் காட்டி, அவர்களைப்போல தீர்க்கத்தரிசனம் உரைத்து அவர்களைப் போலவே பிரசங்க மேடைகளில் நடிக்கின்றனர். ஆ, எத்தனை பயங்கரமான காரியம் பாருங்கள். ''கண்ணை உருவாக்கினவர் காணமாட்டார் என்றும் மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியார்'' (சங் 94 : 9, 10) என்றும் இவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பொல்லாத ஊழியர்களின் தந்திரங்களிலேயே தேவன் அவர்களைப் பிடிப்பார். தேவன் எப்படிப்பட்டவர் என்பதைக் காலப்போக்கில் இந்த மக்கள் இரத்தக் கண்ணீர் வடித்து கண்டு கொள்ளுவார்கள். கர்த்தர்தான் இந்த மக்களுக்கு இரங்கவேண்டும், இவர்களுடைய கண்களைத் திறக்க வேண்டும்.

கடந்த கால பூர்வீக கர்த்தருடைய பரிசுத்த பக்தர்கள் நஷ்டப்பட்ட ஒரு ஆத்துமா முடிவில்லாத நித்திய காலமாக நரக அக்கினியில் அனுபவிக்கக் கூடிய சொல்லொண்ணா அகோர வேதனைகளை எண்ணி தேவ சமூகத்தில் கண்ணீர்விட்டு கதறி அழுது மக்கள் எப்படியாவது ஆண்டவர் இயேசுவை அண்டிக்கொள்ள வேண்டுமென்று ஜெபித்தார்கள். ''ஸ்காட்லாந்து தேசத்தை எனக்குத் தாரும், அல்லது நான் சாகிறேன்'' என்று ஜாண் நாக்ஸ் என்ற மாபெரும் தேவ பக்தன் தனது நாட்டின் மக்களுக்காக மனதுருகி மன்றாடினார். ஆத்துமாக்களின் மனந்திரும்புதலுக்காக வாரக்கணக்கில் பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்து மற்றொரு மாபெரும் தேவ மனிதரான ஜியார்ஜ் விட்ஃபீல்ட் என்பவர் அழுது புரண்டதாக நாம் வாசிக்கின்றோம். இப்படி ஆத்தும பாரத்தோடு தேவ ஊழியர்கள் கர்த்தருக்காக கடந்த காலங்களில் ஊழியம் செய்திருக்க இந்த நாட்களில் பெரும்பாலான தேவ ஊழியர்கள் பணத்தை மட்டுமே தங்கள் குறிக்கோளாக வைத்து கர்த்தருடைய உன்னதமான தேவ ஊழியங்களை முதல் தரமான வியாபாரமாக்கி கர்த்தருக்கு துரோகம் செய்து அவருடைய பரிசுத்த நாமத்தை புறமதஸ்தர் தூஷிக்கும்படியாக வகை செய்து வைத்திருக்கின்றனர்.

''பரலோகத்தில் அதிக மேன்மையும், நிலையுள்ளதுமான சுதந்திரம் தங்களுக்கு உண்டென்று அறிந்து பூர்வத்தில் தங்கள் ஆஸ்திகளை எல்லாம் தேவ மக்கள் சந்தோசமாகக் கொள்ளையிடக் கொடுத்தார்கள்'' (எபி 10 : 34) என்று வேதாகமத்தில் நாம் பார்க்கின்றோம். ஆனால், இன்று தேவ ஊழியன் தந்திரமான தனது சுய ஆதாயத்துக்கான திட்டங்களைப் போட்டு தேவ ஜனத்தை அதிசய அற்புதமாகக் கொள்ளையிடுகின்றான். ''எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும், நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன்'' (லூக்கா 1 : 71) என்ற உன்னத தேவனின் எதிர்பார்ப்பு, பரிசுத்த வாஞ்சை எல்லாம் பணத்தை நாடிய பொல்லாத தேவ ஊழியனால் நொறுங்கித் தகடு பொடியாயிற்று.
      மேலே

தேவ ஜனமே, தேவ ஊழியரே,
ஆண்டவருக்கு துரோகம் செய்யாதீர்கள்

நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கின நமது அன்பின் ஆண்டவரை உங்கள் பரிசுத்தமான வாழ்க்கையின் மூலமாகக் கனம் பண்ணுங்கள். உங்கள் கிறிஸ்தவ வாழ்வில் நீங்கள் இன்னும் மனந்திரும்பி ஆண்டவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் உங்கள் பாவங்களுக்காக மனங்கசந்து அழுது கண்ணீர் சிந்தி மறு பிறப்பின் நிச்சயமான அனுபவத்துக்குள் உடனே வாருங்கள். இந்த பரிசுத்த மாற்றம் இல்லாமல் நீங்கள் ஒருக்காலும் ஆண்டவருடைய பரம ராஜ்யத்துக்குள் பிரவேசிக்க முடியாது (யோவான் 3 : 3) (2 கொரி 5 : 17) என்பதை திட்டமாக உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள் (1 பேதுரு 1 : 15) உங்கள் உலகப்பிரகாரமான பணி இடங்களில் துப்புரவுள்ளவர்களாக இருங்கள். பணி செய்யும் காலங்களில் பரிதானம், லஞ்சங்களை வாங்கிக் குவித்து பணி ஓய்வு காலங்களில் அதைக் கொண்டு நிம்மதி, சமாதானத்தோடு வாழலாம் என்று கனவில் கூட நினைத்து விடாதீர்கள். அது உங்களுக்கு சமாதானத்துக்குப் பதிலாக வேதனைகளையும், சாபத்தையும், கொடிய நோய் பிணிகளையும் கொண்டு வரும். வெறும் கஞ்சை மாதத்திரம் குடிக்கும் வறுமையில் நீங்கள் இருந்தாலும் பரவாயில்லை, பரிதானத்துக்கு உங்கள் கரங்களை நீட்டிவிடாதீர்கள். தேசாதிபதிகளும், பிரதானிகளும் தானியேல் தீர்க்கனிடத்தில் எந்த ஒரு முகாந்தரத்தையும், குற்றத்தையும் கண்டுபிடிக்க முடியாமல் போனதோ அதேவிதமாக தேவனுக்கு முன்பாக உண்மையுள்ளவர்களாயிருங்கள். தேவன் அருளிய வேத வசனங்களின் வெளிச்சத்தில் நடந்து ஆண்டவருடைய வசனங்களுக்கு கீழ்ப்படிந்து நடவுங்கள். மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக் கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்ததினால் தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாக இருந்த பெரேயா பட்டணவாசிகளைப் போல தினந்தோறும் வேதவாக்கியங்களை முழங்கால்களில் நின்று ஆராய்ந்து தியானித்து வாருங்கள். கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். ''இந்த நியாயப் பிரமாண புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக, இதில் எழுதியிருக்கிறவைகளின்படி யெல்லாம் நீ செய்ய கவனமாயிருப்பாயாக, அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்து கொள்ளுவாய்'' (யோசுவா 1 : 8)

''நீங்களே என் சாட்சிகள்'' (ஏசாயா 44 : 8) என்று நம்மைத் தமக்கு சாட்சிகளாக வைத்த ஆண்டவருக்கு பரிசுத்த அப்போஸ்தலரைப் போல ''நாங்கள் அவருக்கு சாட்சிகளாயிருக்கிறோம்'' (அப் 5 : 27) என்று குரல் கொடுப்போம். நமது பரிசுத்தமான வாழ்வின் மூலமாக அதை நம்மைச் சுற்றிலுமுள்ள மக்களுக்கு உறுதிப்படுத்திக் காண்பிப்போம்.

கர்த்தருக்கு ஊழியம் செய்வோரே, ஆத்தும பாரத்தோடும், கண்ணீரோடும் உங்களைத் தம்முடைய பரிசுத்தமான ஊழியத்திற்குத் தகுதியுள்ளவர்கள், உண்மையுள்ளவர்கள் (1 தீமா 1 : 12) என்று எண்ணி அழைத்த கர்த்தருக்கு உண்மையோடும், உத்தமத்தோடும் ஊழியம் செய்யுங்கள். ''வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும் கர்த்தரைச் சேவித்தேன்'' (அப் 20 : 19) என்ற பரிசுத்த பவுல் அடிகளாரின் வார்த்தைகளே உங்கள் ஊழியத்தின் நிலைக்கால் சட்டமாயிருப்பதாக. மிகுதியான ஜெபம், உபவாசம் உங்கள் ஊழியங்களுக்கு அலங்காரமாயிருப்பதாக. எந்த ஒரு சூழ்நிலையிலும் மனுஷ புகழ்ச்சிக்காக மாம்சத்தின்படி ஊழியம் செய்யாமல், மற்ற தேவ ஊழியர்கள் எப்படி ஊழியஞ் செய்கின்றார்களோ அப்படியே நானும் ஊழியம் செய்வேன், அவர்கள் எப்படி கோடிகளைக் குவிக்கின்றார்களோ அப்படியே நானும் கோடிகளைக் குவிப்பேன் என்று எண்ணி அவர்களைப் பின்பற்றாமல் ''ஆண்டவரே, நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்? '' (அப் 9 : 6) என்ற பரிசுத்த பவுல் அப்போஸ்தனைப் போல ஆண்டவர் உங்களுக்காக வைத்திருக்கும் ஊழியத்தை அவரிடம் கேட்டு அடையாளம் கண்டு அதையே செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையும், உங்கள் ஊழியமும் உங்களை தமது இரத்தக் கிரயத்துக்காகக் கொண்ட உங்கள் அருமை இரட்சகர் இயேசுவை கனப்படுத்தி, மகிமைப்படுத்துவதாக இருப்பதாக.

பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும் தேவ ஜனத்தைக் கண்டித்து உணர்த்துங்கள். உங்கள் ஆண்டவரும், போதகருமாகிய கர்த்தரைப் போல உங்களுடைய பிரசங்கங்களில் எல்லாம் எரி நரகத்தைப் பிரசங்கியுங்கள். நித்திய எரி நரகத்துக்குச் செல்லும் ஆத்துமாக்களை எப்படியாவது தேவன் கிருபையாகச் சந்திக்கும்படியாக உபவாசித்து ஜெபியுங்கள். ஆத்தும பாரத்தோடும், வியாகுலப் புலம்பலோடும் கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள். ''தினந்தோறும் சில லட்சம் பேர் ஒருபோதும் வெளியேற முடியாத நித்திய நரக அக்கினியில் விழுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நீ அழாதிருப்பாயானால் உன் மனச்சாட்சி எப்பேர்ப்பட்டது?'' என்று ஒரு தேவ பக்தன் நம்மைப் பார்த்துக் கேட்கின்றார். உங்களுடைய உண்மையும், உத்தமமுமான தேவ ஊழியத்தின் மூலமாக கர்த்தருடைய பரிசுத்தமுள்ள நாமம் மகிமைப்படட்டும். ''இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள்'' (அப் 16 : 17) என்று மக்கள் நம்மை அடையாளம் கண்டு கொள்ளட்டும். ''லித்தாவிலும், சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லாரும் பேதுருவைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்'' (அப் 9 : 35) என்ற தேவனுடைய வசனத்தின்படி நம்முடைய பரிசுத்தமான வாழ்க்கை, நமது ஆத்தும பாரம் நிறைந்த தேவ ஊழியத்தினைக் கண்டு மக்கள் ஆண்டவராகிய இயேசுவினிடத்தில் திரும்பட்டும்.

''வாருங்கள், என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள்'' (மத்தேயு 25 : 34) என்ற நம் அருமை ஆண்டவரின் குரல் கேட்கும் ஆனந்த நாளை எதிர் நோக்கியவர்களாக நமது அழைப்பின் பாதையிலே பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்ளத்தக்கதாக நாம் உண்மையோடும், உத்தமத்தோடும் ஓடுவோம். அதற்கான கிருபைகளை ஆண்டவர்தாமே உங்களுக்கும் எனக்கும் தந்தருள்வாராக. ஆமென்

http://www.devaekkalam.com/401112/index.htm#drogam1

Thursday, December 16, 2010

தன் தவறுகளை உணர்ந்துகொள்பவன் பாக்கியவான்




தன் முதுகு தனக்கேதான் தெரியாது என்ற ஒரு பழமொழி உண்டு. ஆம். நம்முடைய தவறுகள் நமது மனதிற்கும், கண்களுக்கும் தெரியாமல் போய்விடும். மனம் ஒரு குரங்கு. அந்த மனதிற்கு தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதில் ஒரு அலாதியான பிரியம் உண்டு.

இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தனது தவறுகளை உணருவானேயானால், இந்த உலகம் ஒரு பரலோகமாக மாறிவிடும். தன் தவறுகளை உணரக்கூடிய இருதயம் ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கப்படுமானால், நீதிமன்றங்களே தேவையில்லை, வழக்கறிஞர்களுக்குவேலையே இல்லாமற்ப்போய்விடும். ஒவ்வொரு குடும்பத்திலுள்ள அப்பா, அம்மா, பிள்ளைகள், கணவன், மனைவி ஒவ்வொருவரும் தங்களது தவறுகளை உணர்ந்தால், நமது இல்லம் ஒரு குட்டி பரலோகமாக மாறிவிடும். நமது சபையிலுள்ள பிஷப், போதகர், கமிட்டி அங்கத்தினர், சபை மக்கள்ஒவ்வொருவரும் தங்களது தவறுகளை உணர்ந்து அதைத் திருத்திக்கொள்ள முன்வருவார்களானால், இந்த உலகத்தில், சபைகளில் மாபெரும் எழுப்புதல் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

உண்மையில் பார்க்கப்போனால், மக்களின் தவறுகளை அவர்களுக்கு உணர வைப்பதுதான் உண்மையான எழுப்புதல்.

இந்த மாதம் நான் எடுத்திருக்கிற தலைப்பு "நமது தவறுகளை நாமாகவே உணருவது". நமது தவறுகளை உணருவது மிகக்கடினமான செயல், கசப்பான அனுபவம். நமது எதிரிகளின் தவறுகளைக் கண்டுபிடிப்பது மிக எளிதானது, இன்பமானது. ஆனால் நமது தவறுகளை நாம் ஒத்துக்கொள்வதுமிகக்கடினம். நமது தவறுகளை நாமாகவே உணருவது ஒரு உன்னதமான குணம், உன்னத அனுபவமும் ஆகும். நாமாகவே உணரமுடியாவிட்டாலும் நமது தவறுகளை யாராவதுசுட்டிக்காட்டினால் அதற்கு செவிமடுத்து அதைத் திருத்திக்கொள்ளவாவது நாம் முன்வரவேண்டும். வேதத்தில் பலரது தவறுகளைப் பல தீர்க்கதரிசிகளும், மற்றவர்களும் சுட்டிக்காண்பித்தபோது, பலர்கோபப்பட்டிருக்கிறார்கள். சிலர் குற்றத்தை ஒப்புக்கொண்டுமிருக்கிறார்கள். உதாரணமாக தாவீது தனது தவறை நாத்தான் தீர்க்கதரிசி சுட்டிக்காட்டியபோது தாவீது ஒத்துக்கொண்டான். ஆனால்சவுலின் தவறைச் சாமுவேல் தீர்க்கதரிசி சுட்டிக்காட்டியபோது அதை சவுல் ஒத்துக்கொள்ளாமல் பூசி மெழுகுகிறான். உலகம் முழுவதும் காணப்படும் பிரச்சனையும் இதுதான்.

உசியா இராஜா (2 நாளா 26:19) செய்த தவறை (பலிபீடத்தில் பலியிடுவது) அசரியா ஊழியக்காரன் சுட்டிக்காட்டியபோது, அவன் கோபமடைந்து அந்த ஊழியக்காரனை தாக்க முற்ப்பட்டபோது, உசியா இராஜாவின் நெற்றியில் குஷ்டரோகம் திடீரெனத் தோன்றியது. அதுவே அவனது இராஜ வாழ்க்கைக்கு முடிவாகவும், முற்றுப்புள்ளியாகவும் மாறியது.

யெரோபயாம் என்ற (1ராஜா 13:4) இஸ்ரவேலின் (முதல்) இராஜா செய்த தவறையூதாவிலிருந்து வந்த தீர்க்கதரிசி சுட்டிக்காட்டியபோது, அந்த இராஜா அவனைக் கைதுசெய்யக் கையை நீட்டினான். ஆனால் இராஜாவின் கை மரத்துப்போயிற்று. இந்தநிலையில் உடனே ராஜாதான் யாரைக் கைது செய்யும்படி கையை நீட்டினானோ, அவனைப் பார்த்து, தயவுசெய்து எனக்காக ஆண்டவரிடத்தில் வேண்டுதல் செய் என்று கெஞ்சிக்கேட்டான். உடனே தீர்க்கதரிசியும் வெறுப்படையாமல் இராஜாவிற்காக ஜெபிக்கிறான். இராஜாவின் கை முன்போல மாறிவிடுகிறது. இந்த இராஜா முதலில் கோபப்பட்டாலும், உடனே தனது தவறை உணருகிறான்.

இதுபோலவே, உசியா ராஜாவும் மன்னிப்புக்கேட்டிருந்தால், அவனுக்கு வந்த குஷ்டரோகம் அவனைவிட்டுப் போயிருக்கும். ஆனால், அவன் தனது தவறை உணரவோ, அறிக்கையிடவோ,திருத்திக்கொள்ளவோ முன்வராத ஒரே காரணத்தால் வாழ்நாள் முழுவதும் குஷ்டரோகியாகவே பாளையத்துக்கு புறம்பே வாழ்ந்து மரித்தான். என்ன பிடிவாதம்! என்ன பரிதாபம்! தன் தவறுகளை ஒப்புக்கொண்டு திருத்திக் கொள்ளாத எந்த மனுஷனுக்கும் இதே முடிவுதான் ஏற்படும். இது நம் எல்லாருக்கும் ஒரு சிவப்பு அடையாள எச்சரிக்கை ஆகும்.

உலகப்புகழ்பெற்ற புற்றுநோய் ஆராய்ச்சியாளரான டாக்டர்.ராபர்ட் என்பவரைப்பற்றி ஒரு சுவாரஸ்யமான செய்தி உண்டு. தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் யாராவது தவறு கண்டுபிடித்தால், அதை அவர் மனப்பூர்வமாக வரவேற்று, தனது தவறை உடனே திருத்திக்கொள்வாராம்.

தனது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் மனிதனை வேதம் (நீதி 9:7-9) ஞானமுள்ளவன்என்றும் அதற்கு மாறாக தனது தவறுகளை சுட்டிக்காண்பிக்கப்படும்போது கோபமடைகிறவனைவேதம் முட்டாள் என்றும் அழைக்கிறது. மற்றவர்கள் நமது தவறுகளை சுட்டிக்காண்பிக்கும்போது அதற்கு நாம் செவிமடுப்போமானால் நாம் ஞானத்தின் பாதையில் நடக்கிறவர்களாக காணப்படுவோம். ஆம்! எல்லோரும் தவறு செய்திருக்கிறோம், பாவம் செய்திருக்கிறோம். இதை வாசிக்கிற நீங்களும், இதை எழுதுகிற நானும், இதை அச்சடிக்கிற அச்சகத்தாரும், இதை போஸ்ட் பண்ணுகிறவர்களும் - எல்லோரும் தவறு செய்தவர்கள்தான். மனிதன் செய்யும் தவறுகளைப்பற்றி ஒருவர் இப்படியாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார். நாம் ஒரு தவறு செய்துவிட்டால், அதை உணர்ந்து அந்த தவற்றின் மூலமாக ஒரு வாழ்க்கைப் பாடத்தை நாம் கற்றுக்கொள்வோமானால் அது ஒரு தவறு அல்ல, மாறாக அது ஒரு வழிகாட்டியாக, ஒரு ஆசானாக மாறிவிடுகிறது. ஆனால் நாம் செய்த தவறு மூலமாக பாடம் எதுவும் நாம் கற்றுக்கொள்ளத் தவறும்போதுதான், அந்தத் தவறு ஒரு உண்மையான தவறாக மாறுகிறது.

இப்போது நாம் செய்த தவறுகளை நாம் உணருவதற்கு என்ன செய்யவேண்டும் என்று நாம் ஆராயப் போகிறோம். இது ஒவ்வொருவருக்கும் கொஞ்சம் கசப்பாக இருக்கும். அதை ஜீரணிப்பது கஷ்டம்தான். என்ன செய்வது நமது வியாதியைப் போக்குவதற்கு டாக்டர்கள் கொடுக்கும் சில மருந்துகூடக் கசப்பாகத்தான் இருக்கிறது. அதைச் சாப்பிட்டால்தானே குணமடையமுடியும். நமது தவறுகளை நமக்கு உணர்த்துவதற்கு ஆண்டவர் பல ஏதுக்களை பல வழிமுறைகளை இந்த உலகத்தில் ஏற்படுத்தி வைத்திருக்கிறார். இந்த ஏதுக்கள் நமது தவறுகளை உணர உதவும் கண்ணாடிகள். நமது முகத்திலுள்ள சில அழுக்குகளை அடையாளம் கண்டுபிடித்து, அதை நீக்குவதற்குக் கண்ணாடி நமக்கு உதவுபதுபோல் இந்த ஏதுக்களும் நமது அக அழுக்குகளை நீக்க உதவுகிறது. அதுபோல ஒரு மாணவனின் குறைகளை ஒரு ஆசிரியர் கண்டுபிடித்து சுட்டிக்காண்பிப்பதுபோல, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சில ஆலோசனைகளை, நமது தவறுகளை நாம் அறிந்துக்கொள்ள உதவும் ஆசிரியர்களாகச் செயல்படுகின்றன.

இவைகளில் சிலவற்றைக் கீழே கொடுக்கிறேன். கவனமாய் வாசியுங்கள்.
1. முதலில் நமக்கு கற்றுக்கொள்ளவிரும்பும் மனப்பக்குவம் நமக்கு தேவை. (25:4,5)

2. காலமும், நமது வயதும் நமது தவறுகளை காட்டும் கண்ணாடிகள். (தீத்து2:2, யோபு 32:7).

3. நம்மோடு பழகுபவர்களும், நமது சூழ்நிலைகளும் நமது தவறுகளை சுட்டிக் காட்டுகின்றன.

4. வேதவசனம் (எபி 4:12) நமது தவறுகளை எடுத்துரைக்கும் ஒரு உரைகல்.

5. நமது இருதயம் (1யோ 3:20) நமது உள் மனதில் உள்ள சாட்சிக்கூண்டு - நீதிமன்றம் ஆகும். விமானத்தில் உள்ள கருப்புப்பெட்டி (Black box) போல.

1. கற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்:
கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும், உம்முடைய பாதைகளை எனக்கு போதித்தருளும் (சங் 25:4).

தவறுவது மனித சுபாவம் (To error is human) - என்னென்ன தவறு என்று நான் இங்கே பட்டியல் போட்டுக் காண்பிக்கவிரும்பவில்லை. இருப்பினும் மேலோட்டமாக, பொதுவாக சில தவறுகளை நாம் அனைவரும் அடிக்கடி செய்கிறோம். சிலருக்கு முன்கோபம் அடிக்கடி வருகிறது. கோபத்தில் ஏதேதோ பேசிவிடுகிறோம். அவசரத்தில் ஒரு பொய் சொல்லிவிடுகிறோம். பேசக்கூடாத சில வார்த்தைகளைப்பேசக்கூடாத சமயத்தில் பேசிவிடுகிறோம். இப்படி மனிதன் செய்யும் தவறுகளுக்கு எல்லையே கிடையாது. நாம் செய்யும் தவறுகள் என்னென்ன என்பது நமக்கு நன்கு தெரியும். அந்த தவறுகளை நாம் களைய வேண்டுமானால் அதற்கு முதல்படி என்ன தெரியுமா?

மினி ஆன்மீக ஆப்ரேஷனுக்கு உங்கள் சம்மதம் தேவை.
என் வாழ்க்கையில் என்னிடத்தில் காணப்படும் தவறுகளை நான் களைய விரும்புகிறேன் என்ற விருப்பம் நமது இருதயத்தில் இருக்கவேண்டும். மருத்துவர்கள் சில ஆப்ரேஷன் செய்யவேண்டுமானால் அந்த நோயாளி தனது டாக்டரோடு ஒத்துழைக்கவேண்டும். அந்த நோயாளி எனக்கு ஆப்ரேஷன் வேண்டாம் என்று அடம் பிடித்து, சண்டை போடுகிறவராக இருப்பாரானால் மருத்துவரால் அந்த ஆப்ரேஷனை வெற்றிகரமாக முடிக்க இயலாது. இந்த ஆப்ரேஷன் உங்கள் சரீரத்திற்குள் காணப்படும் சில கோளாறுகளை, சில வேண்டாத உறுப்புகளை நீக்கி, உங்கள் சரீரம் சீராகச் செயல்பட உதவுகிறது. அதுபோலவே உங்களது உள்ளான மனிதனிடத்தில் காணப்படும் சில தவறுகளை இங்கே சுட்டிக் காட்டப்படுவதற்கும் அதை அகற்றுவதற்கும் உங்களது ஒத்துழைப்பு மிகமிக அவசியம். உங்கள் வாழ்க்கையில் காணப்படும் சில தவறுகள், உங்கள் அன்றாட வாழ்க்கையின் அணுகுமுறையிலும், பழக்கவழக்கத்திலும், பேச்சிலும், செயலிலும் காணப்படும் தவறுகளையும், கோளாறுகளையும் அகற்ற முயலுவதும் ஒரு மினி ஆன்மீக ஆப்ரேஷன்தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

இதற்கு நீங்கள் சம்மதம் தெரிவித்து, மனரீதியாக ஒப்புதல் அளித்து, ஒத்துழைக்கவேண்டும். தன் தவறுகளை உணருகிறவன் யார்? என்ற தாவீது (சங் 19:12)ல் ஆச்சரியப்படுவதிலிருந்து ஒரு உண்மை புலப்படுகிறது. அதாவது, தன் தவறுகளை உணருகிற மனப்பக்குவம் கொண்டவர்கள் இந்த உலகத்தில் வெகு சிலரே, அந்த சிலரில் நீங்களும் ஒருவராக இருங்கள்.

என்னிடத்தில் என்ன தவறு இருக்கிறது? நான் ஒரு பூரண புருஷன் என்று சிலர் வாதிப்பார்கள் அல்லது மனதிற்குள் எண்ணிக்கொண்டிருப்பார்கள். தங்களது தவறுகளை அறிந்துக்கொள்ள எல்லோரும் விரும்பமாட்டார்கள். ஒரு சிலருக்குத்தான் அப்படிப்பட்ட மனப்பக்குவம் இருக்கும். இதை வாசிக்கும் நீங்கள் எப்படியோ, எனக்கு தெரியாது. இச்செய்தியைத் தொடர்ந்து வாசிப்பதை நிறுத்தினாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன். ஆனால் நீங்கள் தொடர்ந்து இச்செய்தியைப் படிப்பீர்களானால் அதற்காக வருத்தப்படமாட்டீர்கள் என்று உறுதியளிக்கிறேன்.

சாக்ரட்டீஸின் கூற்று:
உன்னை நீயே அறிவாய் என்ற சாக்ரடீசின் அறிவுரையில் உனது உண்மையான பெலத்தைமாத்திரமல்ல. உனது தவறுகளையும் பெலவீனங்களையும் சேர்த்து நாம் அறிவோம் என்ற ஆலோசனை இதில் மறைந்து காணப்படுகிறது. நம்முடைய தவறுகளை அறிய விரும்பாமல் இருப்போமானால், அதுவே மிகப்பெரிய தவறாக மாறிவிடும். நமது தவறுகளை நாம் அறிந்துக்கொள்வதின் நோக்கம் என்ன? அந்த தவறுகளுக்காக ஆண்டவர் நம்மைக் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தி சிறையில் அடைக்கப்போகிறாரா? இல்லவே இல்லை.

அந்தத் தவறுகளைக் களைந்து ஆண்டவர் தமது இருதயத்திற்கு ஏற்றவர்களாய் நம்மை மாற்றி, எஜமானனுக்கு உபயோகமுள்ள நல்ல பாத்திரமாக நம்மை உருவாக்க விரும்புகிறார். தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் அந்தத் தவறை உணர்ந்து அதை திருத்திக்கொண்டு ஆம் இந்த விஷயத்தில் நான் தவறு செய்துவிட்டேன் என்று உள்ளூர உணர்வதுதான் நமக்குள் மறைந்து கிடக்கும் தெய்வீகத் தன்மையின் ஒரு பகுதியாகும். ஒரு நல்ல மனிதனுக்கும், கெட்ட மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். நல்ல பண்புள்ள மனிதன் தனது தவறை உணருகிறான். ஆனால் கெட்ட மனிதனோ அந்த தவறை உணர மறுக்கிறான்.

சவுல், தாவீது இந்த இரண்டு பேர்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். இருவருமே தவறுசெய்தார்கள். உண்மையிலேயே பார்க்கப்போனால் சவுல் செய்த தவறைப் பார்க்கிலும் தாவீது செய்த பாவம் மிகப்பெரியது. சவுல் கொள்ளையின்மேல் ஆசை வைத்து ஆண்டவர் தனக்குக் கொடுத்த கட்டளையை மீறினான். ஆனால் தாவீதோ இன்னொருவனுடைய மனைவியைக் கெடுத்தான். அதன்பின்பு அந்தப் பெண்ணை அடைவதற்காக அவளது கணவனையும் திட்டமிட்டுக்கொன்றான். தாவீது செய்தது பயங்கரமான பாவம் ஆகும்.

தாவீது Vs சவுல்:
ஆனால் இந்த இருவருக்குமுள்ள வித்தியாசம் சவுல் தான் செய்த சிறிய தவறை (தாவீது செய்த தவறோடு ஒப்பிடும்போது) சவுல் உணரவோ, ஒத்துக்கொள்ளவோ மறுத்தான். ஆனால் தாவீதோ தான் செய்த இமாலயத் தவறை - ஒத்துக்கொண்டு, அறிக்கையிட்டு, தான் செய்த தவறை உணர்ந்தான். இதன் விளைவு இந்த இருவரது முடிவுகளும் நேர்மாறாக இருந்தது. சவுல் ஆண்டவரால் கைவிடப்பட்டவனாக யுத்தகளத்தில் சாகடிக்கப்பட்டான். மாறாக, தாவீது ஆண்டவரது இருதயத்திற்கு ஏற்றவனாக ஒரு பூரண வாழ்க்கையை வாழ்ந்து முடித்தான்.

விளையாட்டு வீரர்களின் பயிற்சியாளரின் முதல் வேலை என்ன?
நமது தவறுகளை நாம் அடையாளம் கண்டுபிடித்து அந்தக் குறையைக் களைய முயற்சிப்பது நமது வாழ்க்கையில் நாம் முன்னேறுவதற்கு நாம் எடுத்து வைக்கவேண்டிய முதல்படி என்று நான் கூறினால் மிகையாகாது. டென்னிஸ், கிரிக்கெட், ஹாக்கி-விளையாட்டு வீரர்களைப் பயிற்றுவிக்கும் பயிற்சியாளர்களைக் (Coach) கேட்டுப்பாருங்கள். விளையாட்டு வீரர்களின் திறமையை மேம்படுத்துவதற்கு அவர்கள் எடுக்கும் முதல்படி - ஒவ்வொரு விளையாட்டு வீரரின் தவறுகள், குறைகள், பெலவீனங்கள் என்ன என்பதைத்தான் முதலாவது அலசி ஆராய்ந்து பார்ப்பார்கள். அதைக் கண்டுபிடித்து அவர்களுக்கு அறிவிப்பார்கள். இதை வாசிக்கிற நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரது சமூகத்திற்கு முன்பாக நம்மைத் தாழ்த்தி, ஆண்டவரே, என்ன ஆராய்ந்து பாரும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று சோதித்துப்பாரும், ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தடையாக இருக்கிற தவறுகளை, பெலவீனங்களை அகற்றிப்போடும் என்று ஒப்புக்கொடுக்க முன்வரவேண்டும்.

2. காலம் - நமது வயது:
முதியோர் பேசட்டும், வயது சென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும் (யோபு 32:7). மகன் தான் செய்த தவறுகளை அவன் அப்பாவாக மாறும்போதுதான் தெரியவரும். சில தவறுகளை நமக்கு வயது வரும்போதுதான் உணரமுடிகிறது. சிறுவயதில், வாலிபப் பிராயத்தில் நாம் செய்த சில தவறுகள் - நாம் அந்தத் தவறுகளை நடப்பித்த காலகட்டத்தில் சரியாகத்தான் தோன்றியது. ஆனால் காலம் கடந்த பின்புதான் சரியென்று தோற்றமளித்த பல செயல்கள் உண்மையாகவே அவைகள் தவறுதான் என்று இப்பொழுது தெரிகிறது. இப்போது உணரமுடிகிறது. மகன் செய்யும் தவறு அந்த மகன் அப்பாவாக மாறும்போதுதான் புரியும். அந்த தந்த வயது வரும்போதுதான் சில விஷயங்களில் நமக்குத் தெளிவு ஏற்படுகிறது. நமது பார்வை சரியான கோணத்தை அடையமுடிகிறது. ஆம்! காலம் ஒரு நல்ல ஆசிரியர்.

இந்தக் கருத்தைத்தான் பவுல் அப்போஸ்தலன் இப்படியாக எழுதுகிறார். நான் குழந்தையாக இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போல சிந்தித்தேன், யோசித்தேன். (ஆனால்)நான் புருஷனானப்போதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன். நான் குழந்தையாக இருந்தபோது, நான் குறைந்த அறிவுள்ளவனாக இருந்தேன். அப்பொழுது எல்லா விஷயங்களையும் கண்ணாடி மூலமாக ஒரு நிழலைப்போல பார்த்தேன். ஆனால், நான் பெரியவனான போது, எல்லா விஷயங்களையும் நேரில் முகமுகமாய்ப்பார்த்து, ஒன்றை எப்படி அறியவேண்டுமோ, அந்தப் படியே அதை அறிந்துக்கொள்ளும் பக்குவம் எனக்கு ஏற்பட்டது என்று எழுதுகிறார் (1கொரி 13:11,12).

இளங்கன்று (கடவுளுக்குப் பயப்படும்) பயமறியாது:
இளங்கன்று பயமறியாது என்றொரு பழமொழி என் நினைவிற்கு வருகிறது. இதனுடைய இன்னொரு அர்த்தம். இளம்வயதில், நாம் எது நல்லது, எது கெட்டது? எது பாவம்? எது புண்ணியம்? என்று அறிய இயலாது என்று நாம் கூறலாம். நான் பள்ளியில் படிக்கும்போது ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். அப்பொழுது என் வாயிலிருந்து நிறைய மோசமான, முரட்டுத்தனமான, அசிங்கமான வார்த்தைகள்தான் வரும். அந்த வயதில் இப்படிப் பேசுவது தவறு என்பதை நான் கொஞ்சம்கூட உணரவில்லை. படிப்பில் என் வகுப்பில் முதல் மாணவனாக இருந்தேன். அதுபோலவே குறும்பு பண்ணுவதிலும் முதலாவதாக இருந்தேன்.

அந்த வயதில் பள்ளிக்கூடத்தில் பலமுறை தண்டனையாக நான் பெஞ்சின்மேல் ஏறி நின்றிருக்கிறேன். காரணம், இது தவறு என்று நான் அப்பொழுது உணரவில்லை. பின்பு ஒரு நாள் என் உறவினர் ஒருவர் மூலமாகவும், இன்னொரு நண்பன் மூலமாகவும் இப்படிச் செய்வது தவறு என்று உணர்த்தப்பட்டேன். நன்றாகப் படிப்பதைக் காட்டிலும் நல்ல மாணவன் என்று பெயர் வாங்குவதுதான் முக்கியம். கெட்ட பையன் என்று பெயர் வாங்குவது சுலபம். ஆனால் நல்ல பையன் என்று பெயர் வாங்குவது மிகக் கடினம் என்ற ஆலோசனை என் கண்களைத் திறந்தது.

என் பெயரைக் குறிப்பிட்டு நீ பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குப்போனால், இந்த மாதிரி நீ பேசக்கூடாது, அது நாகரீகம் அல்ல என்ற என் நண்பனின் வார்த்தைகள். சாதாரணமாக அவன் சொன்ன அந்த சில வார்த்தைகள்தான் என் தவறை உணரச் செய்தது. அப்பொழுது எனக்கு வயது 15. பின்பு எனது 16வது வயதில் கல்லூரியில் பி.யு.சி படிக்க ஆரம்பித்தபோது, என் பேச்சு, என் பழக்கவழக்கம், அணுகுமுறை தலைகீழாக மாறியது. கெட்ட வார்த்தைகள், முரட்டுத்தனமான வார்த்தைகள் பேசுவதை நிறுத்திவிட்டு, கண்ணியமாக நடக்க ஆரம்பித்தேன். காரணம், யாரோ ஒருவர் என் தவறைச் சரியான நேரத்தில், என் இளம் வயதின் தவறுகளைச் சுட்டிக்காண்பித்தார்கள். இதை வாசிக்கிற நீங்கள் சிறுவயதாக இருக்கலாம். வாலிபராக இருக்கலாம். நடுத்தர வயதாக இருக்கலாம். வயதில் உங்களுக்கு மூத்தவர்கள் உங்களது சில தவறுகளைச் சுட்டிக்காண்பிக்க இடம் கொடுங்கள்.

நல்ல மாட்டிற்கு ஒரு சூடு, ஆனால் ஏலியின் மகன்களுக்கு பல சூடு:
ஏலியின் குமாரர்கள்: ஏலி ஒரு பிரதான ஆசாரியன். அதாவது இன்றைய பிஷப்பிற்குச் சமானம்.ஆனால் ஏலியின் குமாரர்கள் கர்த்தருக்கென்று படைக்கப்படுகிற காணிக்கையை துஷ்பிரயோகம் செய்தார்கள். இந்த ஏலியின் குமாரர்களின் பாவம் கர்த்தருடைய சந்நிதியில் மிகவும் பெரியதாயிருந்தது என்று வேதம் கூறுகிறது (1சாமு 2:17). ஏலியின் மகன்கள் காணிக்கையை கொள்ளையடித்தது மாத்திரமல்ல, ஆசாரிப்புக் கூடாரத்தில் கூடிவரும் பெண்களோடு தவறாகவும் நடந்துக்கொண்டார்கள். இதைக் கேள்விப்பட்ட ஏலி தன் பிள்ளைகளை அழைத்து என் குமாரரே, இது வேண்டாம் என்று ஆலோசனை சொன்னான். ஆனால் அவர்களோ தகப்பன் ஆலோசனைக்குச் செவிகொடுக்க மறுத்தார்கள். அதன் விளைவு அவர்களைச் சங்கரிக்கக் கர்த்தர் தீர்மானித்தார். நல்ல மாட்டிற்குத்தானே ஒரு சூடு.

இதை வாசிக்கிற வாலிபனே, வாலிப சகோதரியே! உன்னைப் பெற்றெடுத்த அப்பா, அம்மா பேச்சை, அவர்களது ஆலோசனையை உதாசீனம் செய்கிறாயா? அவர்கள் உன் நலனுக்காகத்தான் சொல்கிறார்கள்.நன்றாகப் படி, ஊர் சுற்றாதே, கெட்ட பிள்ளைகளோடு பழகாதே, வீட்டிற்கு லேட்டாக வராதே, சினிமாவிற்குப் போகாதே, புகைப் பிடிக்காதே, மதுபானம் அருந்தாதே, கெட்ட புத்தகங்களைப் படிக்காதே, கெட்ட வார்த்தைகளைப் பேசாதே, இச்சையைத் தூண்டும் வீடியோ படங்களைப் பார்க்காதே, ஏதாவது வேலைக்குப் போ, வீட்டில் சும்மா உட்கார்ந்து பொழுதை போக்கடிக்காதே, ஆலயத்திற்குப் போ, ஜெபக்கூட்டத்திற்குப் போ, பணத்தை அனாவசியமாகச் செலவழிக்காதே, பொறுப்பாக நடந்துக்கொள். இப்படியெல்லாம் உனக்கு நல்ஆலோசனைகள் கொடுக்கப்படுகிறது. அதை அசட்டை பண்ணாதே! நான் மேலே எழுதிய இதே ஆலோசனையைத்தான் சாலமோனும் கூறுகிறார்.வாலிபனே, உன் மனதை நல்வழியில் நடத்து, மதுபானப்பிரியன், குடிகாரன், போஜனப்பிரியன் இவர்களோடு சேராதே - உன்னைப்பெற்ற தகப்பனுக்கும், தாயிற்கும் செவிகொடு - அவர்களது ஆலோசனைகளை அசட்டை செய்யாதே (நீதி 23:19-22). இப்படிப்பட்ட ஆலோசனைகளுக்கு நீ செவி கொடுத்தால் உன் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையும்.

ரெகொபெயாம் செய்த தவறு :
சவுல், தாவீது, சாலமோன் - இவர்கள் மூவரின் ஆட்சிக்காலத்தில் இஸ்ரவேலின் 12 கோத்திரங்களும் ஒரே தேசமாக இருந்தது. ஆனால் சாலமோனின் மகன் ரெகொபெயாம் ஆட்சிக்கு வந்தபோது 12 கோத்திரங்களும் இரண்டாகப் பிரிந்தது. அதற்கு மூலக்காரணம் ரெகொபெயாமின் வாலிப நண்பர்கள்.தேசத்தில் அரசாங்க வரிப்பளுவைக் குறைக்கவேண்டுமென்று - மக்கள் குரல் எழுப்பியபோது, மக்களின்மீது விதிக்கப்பட்டுள்ள வரியைக் குறைக்கலாமா? வேண்டாமா? என்பதை ரெகொபெயாம் ராஜாமுதியோரிடத்திலும், தன் வயதுள்ள வாலிபர்களிடமும் இரு சாராரிடத்திலும் ஆலோசனை கேட்டான்.முதியோர் வரியைக் குறைத்துவிடு என்றும், வாலிபர்கள் வரியைக் குறைக்கக் கூடாது என்றும் ஆலோசனை சொன்னார்கள். காரணம், வரியின் வலி முதியோர்களுக்குத்தான் தெரியும் - வாலிபர்களுக்கு அல்ல. முதியோர் ராஜாவாகிய தனக்குத் கொடுத்த நல்ல ஆலோசனையைத் தள்ளிவிட்டு, தன்னோடு வளர்ந்த வாலிபர்களின் ஆலோசனையைக் கேட்டு, என் தகப்பன் உங்களைச்சவுக்கினால் தண்டித்தான். நான் உங்களை தேள்களினால் தண்டிப்பேன் என்ற கடினமான பதிலை மக்களுக்குக் கொடுத்தான். இந்த ஒரே காரணத்தினால் ஒன்றாயிருந்த ராஜ்யம் இஸ்ரவேல், யூதா என்று இரண்டு தேசமாகப் பிரிந்தது. (ஒன்றாயிருந்த இந்தியக் துணைக்கண்டம் இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டாகப் பிரிந்ததுப்போல).

வாலிபப் வயசுக்கோளாறு :
பல வாலிபர்களை நான் கவனித்திருக்கிறேன். அந்த வயதில் வாலிபப் முறுக்கில் - அவர்கள் தங்களது அப்பா, அம்மா சொல்லும் யோசனையைக்காட்டிலும், தன் நண்பர்கள் கொடுக்கும் ஆலோசனையைத்தான் வேதவாக்காகக் கருதுவார்கள். இதைத்தான் சிலர் வயசுக்கோளாறு என்று அழைக்கிறார்கள். கெட்ட குமாரனுடைய கதையில் (லூக் 15:13) இந்த வயசுக்கோளாறினால்தான் இளையமகன் அப்பாவின் வீட்டைவிட்டு வெளியேறி தான்தோன்றித்தனமாய் வாழ்ந்து, பணத்தையெல்லாம் செலவழித்துவிட்டு இறுதியில் பன்றியை மேய்த்து, அந்தப் பன்றியின் தவிடுகூடக் கிடைக்காமல் அவதிப்படுகிறான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எல்லோராலும் கைவிடப்பட்டுத் தெருவில் அலையும்போதுதான் அவனுக்குப் புத்தி தெளிகிறது. தன் அப்பாவின் வீட்டை நினைக்கிறான். வெயிலில் அலைந்தால்தான் நிழலின் அருமை தெரியும். கெட்டபின்புதான் எட்டு புத்தி வரும் என்பார்கள். இதை வாசிக்கிற வாலிபனே! இந்தச் செய்திஉனக்குத்தான் - வாலிப முறுக்கத்தில் வயசுக்கோளாறினால் - நீ தற்சமயம் பல தவறுகளைச்செய்து கொண்டிருக்கிறாய். அந்தத் தவறுகளினால் உன் குடும்பத்தின் சமாதானம்குலைந்துவிட்டது. உன் வீட்டின் பெருமை, தன்மானம் அழிந்துகொண்டுயிருக்கிறது என்பதை உணருகிறாயா? உன் பெற்றோரின் ஆலோசனைகளுக்கு நீ செவிகொடு. அவர்கள் உனக்கு நல்லதைத்தான் சொல்லுவார்கள். உன்னைக்காட்டிலும் அவர்கள் வயதில் மூத்தவர்கள் அவர்கள் பேச்சைக்கேள். சாலமோனின் மகன் ரெகொபெயாம் பெரியவர்களின் ஆலோசனையைத் தள்ளிவிட்டு, வாலிபர்களின் ஆலோசனையைக் கேட்டதினால்தான் தாவீது ஆண்ட ராஜ்ஜியம் இரண்டாக உடைந்தது. அதுபோல உன்னுடைய நண்பர்களின் ஆலோசனையின் படி தொடர்ந்து நீ நடப்பாயானால் உன் குடும்பம்கூட இரண்டாகப் பிரியும் ஒரு அபாயகரமான சூழ்நிலை உருவாகலாம். உன் குடும்பம் என்ற தாவீதின் ராஜ்ஜியத்திற்கு நீ ஒரு ரெகொபெயாமாக மாறிவிடாதே!

ஒரு சிலபிள்ளைகள் இருக்கிறார்கள். தனது திருமணத்திற்கு முன்பாகவே அப்பாவைப் பார்த்து - எனக்குரிய பங்கைத் தனியாக - இப்பொழுதே பிரித்துக்கொடுத்துவிடுங்கள் - நானாகவே - தனியாக வியாபாரம் - தொழில் செய்துக்கொள்கிறேன் என்று பிடிவாதம் பிடிப்பார்கள். அப்பா! தம்பி, உனக்குத் திருமணம் ஆகட்டும், தங்கையின் படிப்பு, திருமணம் முடியட்டும் - அதுவரை பொறுத்திரு என்று கூறும் ஆலோசனையைக் கேட்க மாட்டார்கள். இது குடும்பத்தின் சமாதானத்தைக் குலைக்க வழிவகுக்கிறது. அப்பா சொத்தை யார் அள்ளிக்கொண்டு போகப்போகிறார்கள். அது உனக்குத்தான் வரும், அவசரப்படாதே!

உன் தகப்பனையும், உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது, தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்று வேதம் நம்மை கடுமையாக எச்சரிக்கிறது. (மாற்கு 7:10).

3. சூழ்நிலைகளும், நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களும்:
கழுதை வழியைவிட்டு வயலிலே விலகிப்போயிற்று, கழுதையைப் பிலேயாம் திரும்பவும் அடித்தான். கழுதை சுவர் ஓரமாய் ஒதுங்கி, பிலேயாமின் காலைச்சுவரோடு நெருக்கிற்று, திரும்பவும் பிலேயாம் கழுதையை அடித்தான் (இறுதியாக) கழுதை விலக வழியில்லாத இடுக்கமான இடத்தில் கழுதை படுத்துக்கொண்டது (எண் 22:23-27).

நமது வாழ்க்கையின் சூழ்நிலைகளை ஆண்டவர் அலாரமாக பயன்படுத்துகிறார்.
சில சந்தர்ப்பங்களில் சூழ்நிலையின் வாயிலாக ஆண்டவர் நமது தவறைச் சுட்டிக்காண்பிக்கிறார் - என்ற உண்மைக்கு பிலேயாமின் கழுதை நமக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு. நம்மை எச்சரிப்பதற்கு, நமது தவறுகளைச் சுட்டிக்காண்பிப்பதற்கு ஆண்டவர் நம்மைச் சுற்றிலும் இருக்கிற சூழ்நிலைகளை ஒரு தூதனாக அனுப்புகிறார். வானில் கருமேகங்கள் வருமானால் விரைவில் மழை வரப்போகிறது என்று நாம் அடையாம் கண்டுக்கொள்கிறோம். அதுபோலவே நம்மை எச்சரிப்பதற்கு நமது சூழ்நிலைகள் ஆண்டவரது அலாரமாக மாறுகிறது.

எனது நண்பர் ஒருவர் ஒரு சோகமான சம்பவத்தை என்னோடு பகிர்ந்துக்கொண்டார். நடுத்தர வயதுள்ள ஒரு சகோதரனும், சகோதரியும் ஏதோ அவசரமாக ஊருக்குப் புறப்பட்டு சென்றார்கள். அதுவும் மோட்டார் சைக்கிளில் இருவரும் 100 கி.மீ. தொலைவிலுள்ள ஒரு ஊருக்கு இரவு 7 மணிக்குமேல் -அவசரமாக புறப்பட்டார்கள். அருகிலுள்ள நண்பர்கள் - பலர் - அவர்களை இந்த இரவு நேரத்தில் போக வேண்டாம். அடுத்தநாள் காலையில் போகலாம் என்று தடுத்தனர். இப்படி அநேகர் தடுத்தும் புறப்பட்டுச்சென்ற அவர்கள் வழியில் ஒரு விபத்தில் சிக்கி இருவருமே விபத்து நடந்த இடத்திலேயே இறந்து போனார்கள். மரித்துப்போன அந்த தம்பதியினருக்கு பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் 2 பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள். அவசரக்காரனுக்கு புத்திமட்டுமல்ல ஆயுசும் மட்டு.

பலர் ஒரு ஆலோசனை கொடுத்தால் அதை உதாசீனம் செய்வது - ஆபத்தில் முடியும்.விபத்தில் சிக்கி மாண்டுப்போன அந்த குறிப்பிட்ட தம்பதியினரை ஆண்டவர் இரவு என்ற சூழ்நிலையைக் குறித்து நண்பர்கள் என்ற தூதர்கள் - வாயிலாக எச்சரித்தார். தவறு செய்யாதீர்கள் என்று ஆண்டவர் அலாரம் அடித்தார். ஆனால் அந்த எச்சரிப்பை அவர்கள் இருவரும் உதாசீனம் செய்தார்கள். அதன் விளைவு மரணம் - பிள்ளைகள் அனாதைகளானார்கள். என்ன பரிதாபம். ஒரு காரியத்தை நாம் செய்யும்போது அது பலருக்குத் தவறாகத் தோன்றுமானால், அதை தவிர்க்க முடியுமானால் அதை தவிர்த்துவிடுவது மிகவும் நல்லது. பலர் ஒரு விஷயத்தை தவறு என்று நமக்கு ஆலோசனை சொன்னால் அது நிச்சயம் தவறாக இருக்கவேண்டும் என்பது சட்டமல்ல, ஆனால் அக்கூற்றில் உண்மையில்லாமல் இல்லை, அது உண்மையிலேயே தவறாக இருப்பதற்குப் பல சாத்தியக்கூறுகள் உண்டு. அதை யாராலும் மறுக்கமுடியாது. சூழ்நிலை - நண்பர்கள் - உறவினர்கள் - இந்த ஏதுக்கள் மூலம் ஆண்டவர் இன்றைக்கும் நம்மோடு பேசுகிறார்.

பிலேயாம் தீர்க்கதரிசியை எடுத்துக்கொள்ளுங்கள். இஸ்ரவேல் மக்களைச் சபிக்கும்படி பாலாக் என்ற மோவாபிய ராஜா பிலேயாமைக் கேட்டுகொண்டான். யாரையுமே, ஏன் நமது எதிரியைக்கூட நாம் சபிப்பது நல்ல செயலல்ல. இது யாவரும் அறிந்த உண்மை. இந்தச் சாதாரண விஷயம் பிலேயாம் என்ற தீர்க்கதரிசிக்குத் தெரியவில்லை என்பது ஆச்சரியமாயிருக்கிறது. காரணம், இந்தப் பிலேயாம், பண ஆசையினால் உந்தித் தள்ளப்படுகின்றான்.

பாலாக் ராஜா கொடுக்கும் பணத்திற்கு ஆசைப்பட்டு, இஸ்ரவேலைச் சபிப்பதற்குச் சம்மதித்துப் புறப்படுகிறான். தன் எஜமான் எடுத்துள்ள முடிவு தவறானது என்பதைப் புரிந்துக்கொண்ட அவனது கழுதை தன் எஜமானனைத் தடுப்பதற்குப் பல எத்தனங்களையும், யுக்திகளையும் கையாள்கிறது. தன் எஜமானனுடைய கால்களைச் சுவரில் கொண்டுபோய் உரசுகிறது. அவனது கால் நசுங்குகிறது. பின்பு மிகவும் இடுக்கமான பாதை வழியாய்ச் செல்லுகிறது. ஆனாலும் கழுதையின் எல்லா முயற்சிகளும் தோல்வியடைகிறது. இவனாகவே உணருவான் என்று கர்த்தர் நினைத்தார் - அவன் இருதயம் கடினப்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலை வாயிலாக ஆண்டவர் உரத்த குரலில் பிலேயாமோடு பேசினார். ஆனால் அவனது செவியோ மந்தமாகிவிட்டது.

பிலேயாமிற்கு ஆண்டவர் கழுதையின் மூலமாகப் பேசியதுபோல நமக்கும்கூட சில மிருகங்கள் மூலமாக அல்லது சில நண்பர்கள் மூலமாக கர்த்தர் பேசுவார். அதற்கு நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும். நாகமான் என்ற சீரியா தேசத்து இராணுவ தளபதிக்கு அவன் வீட்டில் எடுபிடி வேலை செய்து கொண்டிருந்த ஒரு வேலைக்காரப் பெண் மூலமாக ஆண்டவர் பேசினார்.

அதுமாத்திரமல்ல, யோர்தான் நதியில் போய் நீ மூழ்கு என்று எலிசா சொன்னபோது, இந்த சீரியா தேசத்து தளபதிக்குப் பயங்கரமான கோபம் வந்து, இதற்காகவா நான் இவ்வளவு தூரம் பிரயாணம் செய்து வந்தேன். எங்கள் தேசத்தில் இந்த யோர்தானைக் காட்டிலும் பெரிய நதிகள் இல்லையா? என்று கோபமடைந்து எலிசாவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிய மறுத்தான்.

அந்த சமயத்தில் நாகமானின் படைவீரரில் ஒருவன் நாகமானைப் பார்த்து, தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி நீர் ஒரு பெரிய காரியத்தைச் செய்ய (உதாரணமாக 10 மலைகளைத் தாண்டி, 7 கடலைத் தாண்டி, 7 குகைகளுக்குள் சென்று ஒரு செடியின் இலையைப் பறித்துக்கொண்டுவா. இப்படிப்பட்ட கதை களைப்போல) சொல்லியிருந்தால் அதைச் செய்திருப்பீரல்லவா? அவர் சொன்னபடி யோர்தான் நதியில் போய் ஸ்நானம் பண்ணித்தான் பாருங்களேன்! இந்த எளிதான காரியத்தைச் செய்ய தயவுசெய்து தயங்கவேண்டாம் என்ற அருமையான ஆலோசனையைக்கூறி, இந்த நாகமான் செய்யவிருந்த ஒரு பெரிய தவறைத் தடுத்துவிட்டான்.

தக்க சமயத்தில் சொல்லப்பட்ட வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழத்திற்கு சமானம் (2ராஜா 5:1,14).

இங்கே, பார்த்தீர்களா! ஒரு பெரிய தேசத்தின் Chief of Army இராணுவ தளபதியின் தவறை ஒரு சாதாரண சிப்பாய் Soldier சுட்டிக்காட்டுகிறான்.

தாவீதின் தவறை சுட்டிக்காட்டிய அபிகாயில்:
தாவீது சவுலுக்குத் தப்பியோடி வனாந்திரங்களிலும், காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்து கொண்டிருந்தான். அந்தக்கால கட்டத்தில் தாவீது அநேகருக்கு கூர்கா வேலை செய்து தன் பிழைப்பை நடத்திவந்தான். அவர்களில் நாபால் என்பவனும் ஒருவன். நாபாலின் ஆடுகளையும், மாடுகளையும் கொள்ளைக்காரக் கும்பலிருந்து இரவும், பகலும் பாதுகாத்தான். அதற்குக் கூலி கேட்டு சிலரை நாபாலிடம் அனுப்பினான். ஆனால் அந்த நாபால் கூலி கொடுப்பதற்குப் பதிலாக அவர்களைக் கேவலமாகப் பேசி, திட்டி, வெறுங்கையோடு திருப்பி அனுப்பிவிட்டான்.

அதைக் கேட்ட தாவீது கோபமடைந்து, வில்லிலிருந்து புறப்பட்ட அம்புபோல நாபாலின் வீட்டை நோக்கி, அவனைப் பூண்டோடு அழிக்க வேகமாக வந்துகொண்டிருந்தான். இதைக் கேள்விப்பட்டநாபாலின் மனைவி அபிகாயில், ஞானமுள்ள ஸ்தீரி தன் வீட்டைக்கட்டுகிறாள் என்ற வசனத்தின்படி தன் வீட்டிலுள்ள சில பொருட்களையும், பணத்தையும் எடுத்துக்கொண்டு தாவீதின் கோபத்தைத் தணிக்கப் புறப்பட்டாள். அவனை வழிமறித்து அவன் காலில் விழுந்து தன் கணவன் செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்டு காணிக்கை படைத்தாள். அன்றைய நாளில் தாவீது செய்யவிருந்தமாபெரும் இமாலயத் தவறை அவள் தடுத்துவிட்டாள். கோபக்காரனுக்கு (ஆத்திரகாரனுக்கு) புத்திமட்டு, கோபம் கண்களை மூடும். இப்படிப்பட்ட சூழ்நிலைகள் தாவீதிற்கு மாத்திரமல்ல, நமக்கும் அடிக்கடி நடக்கும். அந்தசமயத்தில் தாவீது அபிகாயிலைப் பார்த்து, என்னைச் (எச்சரிக்க)சந்திக்கஉன்னை அனுப்பிய இஸ்ரவேலின் தேவனுக்கு நன்றி. தேவையற்ற இரத்தம் சிந்தி, பழிவாங்காமல் என்னைத் தடைசெய்த நீ ஆசீர்வதிக்கப் படுவாயாக(1சாமு 25:2-35) என்று சொல்லி நன்றி கூறுகிறான். 32ம் வசனத்தில் நன்றியை கர்த்தருக்கும் கூறுகிறதை கவனியுங்கள். தன் பெரும் தவறிலிருந்து காப்பாற்ற ஒரு பெண்ணை அனுப்பி ஆலோசனை கொடுத்தது கர்த்தர் என்று தாவீது அறிந்துக்கொண்டான்.

நீ கோபமாயிருக்கையில் உங்கள் மனைவி ஏதாவது ஆலோசனை சொன்னால், அதைப் பொறுமையோடு கேளுங்கள். அந்த ஆலோசனை உங்கள் பணம், பிரயாசம் வீணாக விரயமாவதைத் தடுக்கமுடியும். ஏற்ற சமயத்தில் சொல்லப்பட்ட வார்த்தை வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட பொற்பழத்திற்கு சமானம். மெதுவான, சாந்தமான, பொறுமையான பதில், உக்கிர கோபத்தைத்தணிக்கும் என்ற சாலமோனின் வார்த்தை (நீதி 15:1) அபிகாயில் - தாவீதின் சந்திப்பில் 100க்கு 100 அப்படியே நிறைவேறியது. இதை வாசிக்கிற நீங்களும்கூட கோபத்தின் உச்சியில் செய்யவிருக்கும் இதுபோன்ற உங்கள் இமாலயத் தவறுகளை மற்றவர்கள் சுட்டிக்காண்பிப்பதற்குத் தயவுசெய்து இடங்கொடுங்கள். எவரது யோசனையையும் கேட்பதற்கு நான் தயாராக இல்லை - என்று கூறவேண்டாம். அப்படி நீங்கள் சொன்னால் நீங்களே உங்கள் தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொள்வதற்குச் சமானம் - என்பதை மறக்கவேண்டாம்.

தாவீதின் தவறைச் சுட்டிக்காட்டிய நாத்தான் தீர்க்கதரிசி:
தாவீது செய்த இன்னொரு பெரிய தவறு - உரியாவின் மனைவியை அடைவதற்காக, திட்டமிட்டு அவளது கணவனை யுத்தகளத்தில் மர்மமான முறையில் கொன்றுவிட்டான். இந்தத் தவறைச் சுட்டிக்காண்பிக்க நாத்தான் என்ற தைரியமுள்ள தீர்க்கதரிசி, தாவீதின் அரண்மனையை நோக்கிப் புறப்பட்டான். அங்கு தாவீதிற்கு ஒரு உவமையைக்கூறிவிட்டு, நீயே அந்த மனுஷன் என்று கூறுகிறான். கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்புச் செய்தாய். ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை அடைவதற்கு அவனை யுத்தகளத்தில் கொன்றுபோட்டாய். பட்டயம் உன் வீட்டை விட்டு விலகாது.அடுத்தவன் மனைவியை நீ ஒளிப்பிடத்தில் கெடுத்தாய். அதேபோல உன் மனைவிகளை இன்னொருவன் சூரிய வெளிச்சத்திலே, இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகக் கெடுப்பான் என்று சாபமிடுகிறான். என்ன பயங்கரமான வார்த்தைகள் இது! ஒரு சாதாரண தீர்க்கதரிசி ஒரு மாபெரும் மன்னனைப் பார்த்து அவனது தவறுகளைப் பகிரங்கமாக, பச்சை பச்சையாக எடுத்துச் சொல்கிறான். அதுமட்டுமல்லாமல், அவனுக்கு தண்டனையை சாபமாக அறிவிக்கிறான். என்ன துணிச்சல் இது! இந்த நாத்தானுக்கு என்ன தைரியம்! இந்த இடத்தில் நாத்தான் தீர்க்கதரிசி மார்டின் லூத்தரையும்மிஞ்சிவிட்டார்.

இந்த மாதிரிப் பெரிய பதவியில் இருப்பவர்களது தவறுகளைப் பகிரங்கமாக யாராவது சுட்டிக்காட்டினால் அவர்களை இரகசியமாக கொன்றுவிடுவார்கள் அல்லது வேலையிலிருந்து நீக்கிவிடுவார்கள். ஆனால் தாவீதோ அப்படிச் செய்யவில்லை. இந்த மாதிரிச் சூழ்நிலைகளில்தான் யாராவது நாம் செய்த உண்மையான தவறுகளைச் சுட்டிக்காண்பிக்கும்போதுதான் - அந்த மனிதனின்உண்மையான குணம் - மறைந்து கிடக்கும் சுபாவங்கள் வெளிப்படுகிறது. இங்கே தாவீது நாத்தானின் கடினமான வார்த்தைகளைக் கேட்டவுடனே தனது தவறுகளை உணருகிறான், ஒத்துக்கொள்கிறான், உடனே தாமதிக்காமல் மன்னிப்பு கேட்கிறான்.

இதுதான் தாவீதிற்கும் - சவுலுக்குமுள்ள வித்தியாசம். சவுல் செய்த தவறைக் காட்டிலும் தாவீது செய்த தவறு மகாப் பெரியது. ஆனால் தாவீது தனது தவறை ஒத்துக்கொண்டான். மாறாக சவுலோ தனது தவறை ஒத்துக்கொள்ள மனமில்லாமல் தவறை நியாயப்படுத்துகிறான். அமலேக்கியரோடு யுத்தம் செய்து எல்லாவற்றையும் பூண்டோடு அழிப்பதற்குப் பதிலாக முதல் தரமான ஆடுகளையும், மாடுகளையும் தப்பவிட்டான். அவைகள் ஆண்டவருக்குக் காணிக்கை கொடுப்பதற்கு என்று கூறி தனது தவறைப் நியாயப்படுத்த முயற்சிக்கிறான்.

நீங்களும் நானும் எப்படி இருக்கிறோம்? சவுலைப் போலவா? அல்லது தாவீதைப் போலவா? நமது தவறுகளை உணர்ந்து, ஆண்டவரிடம் மன்னிப்புக் கேட்டு நமது வாழ்க்கையில் முன்னேறுவோம். உங்களது தவறை உங்கள் நண்பர்களோ, உறவினரோ, மனைவியோ, போதகரோ சுட்டிக்காட்டினால், அதை ஒத்துக்கொள்ளுங்கள். அது மாத்திரமல்ல, உங்கள் சூழ்நிலையின் மூலமாகக்கூட ஆண்டவர் உங்களது தவறுகளைச் சுட்டிக்காண்பிக்க முடியும். அதற்கும் கீழ்படிய இடம் கொடுங்கள்.

4. வேதவசனம் நமது தவறுகளை உணர்த்தும்:
இந்த வார்த்தைகளை மக்கள் கேட்டபோது, அவர்கள் இருதயத்திலே குத்தப்பட்டார்கள் (அப் 2:37).

நீதியைக் குறித்தும், இச்சையடக்கத்தைக் குறித்தும் பவுல் பேசியபோது, பேலிக்ஸ் பயந்துபோய், இப்பொழுது நீ போகலாம். எனக்குச் சமயம் கிடைக்கும்போது உன்னை அழைப்பேன் என்றான். (அப் 24:25).

அப்பொழுது பேதுரு, சேவல் கூவுகிறதற்கு முன்பு, நீ என்னை 3 தடவை மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வார்த்தைகளை நினைத்து, வெளியே போய் மனங்கசந்து அழுதான். (மத் 26:75).

வேதவசனம் ஒருமுகம் பார்க்கும் கண்ணாடி, நமது முகத்தில் இருக்கும் வடுக்களை, அழுக்குகளை நாம் பார்க்க வேத கண்ணாடி நமக்கு உதவுகிறது. அதை உடனே நீக்க நாம் முயலவேண்டும். ஆண்டவரது வார்த்தையானது முகம் பார்க்கும் கண்ணாடி என்ற உண்மையில் மற்றொரு உண்மை மறைந்திருக்கிறது. அதாவது கண்ணாடியில் நமது முகத்தை நாமாகவே பார்க்கிறோம். மற்றவர்கள் சொல்லி அல்ல.

வீட்டில், ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுக் கை கழுவும்போது, கடைகளில் இப்படி பல இடங்களில் வைக்கப்பட்ட கண்ணாடியில் நமது முகத்தை, தோற்றத்தை நாமாகவே பார்க்கிறோம். இது எதைக் குறிக்கிறது? நாமாகவே வேத வசனத்தை நமது வீட்டில் தனியாக வாசிக்கும்போது, தியானிக்கும்போது, அந்த வசனங்கள் மூலமாக நமது தவறுகளை உணருவது, இது நல்லதொரு பழக்கம். நாமாகவே வேத வசனத்தை வாசித்து அதன் மூலமாக நமது தவறுகளை உணருவது மிக உன்னதமானது.

ஒரு சீனா தேசத்துப் பெண்மணி வேதத்தை வாசித்துவிட்டு "ஐயோ, இதை நான் வாசிக்கும்போது அது என்னை உதைக்கிறது" என்று கூறினாள்.

நாஸ்திகனை மாற்றியது ஆண்டவரது வார்த்தை:
தன் வாழ்நாள் முழுவதும் நாஸ்திகனாக வாழ்ந்த எட்வின் ரஷ்வோர்க் என்ற மனிதன் ஒருநாள் வேதாகமத்தை வாசிக்க முடிவு செய்தானாம். ஒரு மணி நேரம் படித்துவிட்டு, தன் மனைவியைப் பார்த்து, இந்த பைபிள் உண்மையாய் இருக்குமானால், நாம் அனைவருமே தவறு செய்தது உண்மை. இன்னும் சில நாட்கள் படித்துவிட்டு, நாம் அனைவருமே தவறு செய்தவர்கள் மாத்திரமல்ல, நம் எல்லாருக்கும் தண்டனை உறுதி என்று கதறினானாம். அதன்பின் சிலநாள் கழித்து இன்னும் சிலநாட்கள் வேதத்தை படித்துவிட்டு, தன் மனைவியைப் பார்த்து, இந்த பைபிள் உண்மையாயிருக்குமானால் நாம் அனைவருக்கும் ஒரு நம்பிக்கை உண்டு. நம்மை ஆண்டவர் இரட்சிக்கமுடியும் என்று மகிழ்ச்சியோடு கூறினானாம். பார்த்தீர்களா? வேதவசனம் எப்படி மனிதர்களோடு படிப்படியாக கிரியை செய்கிறது?

நமது வீட்டில் மாத்திரமல்ல, நாம் ஆலயத்திற்கோ அல்லது இன்னொரு வீட்டிற்கோ, பைபிள் சம்பந்தமான இன்னொரு இடத்திற்கோ நாம் செல்லும்போது அங்கு தொங்கவிடப்பட்டிருக்கும் வேத வசனங்கள், பைபிள் காலண்டர்கள் - இவைகள் மூலமாகக்கூட (ஹோட்டலில் கைகழுவும் இடத்தில் கண்ணாடியில் பார்ப்பதுபோல) நமது முகத்தை, சாயலை, நமது அழுக்கைப் பார்க்கமுடியும். நமது வீட்டை நாமாகவே துடைத்து சுத்தமாக்கிக் கொள்ளுகிறோம். நமது பாத்திரங்களை கழுவிக்கொள்ளுகிறோம். துணிமணிகளை சலவை செய்துக்கொள்கிறோம். இவை அனைத்துமே நம்மை நாமே - சுத்தம் செய்துக்கொள்ளும் ஒரு வழக்கம். அதுபோலவே நமது ஆன்மாவையும்,வேதவசனத்தின் மூலமாக நாமே வாசித்து, தியானித்து நம்மை சுத்தம் செய்துக்கொள்வது நல்லதொரு பழக்கம். நீங்களாகவே உங்கள் தவறுகளை பைபிள் மூலமாகப் பார்க்கத்தவறினாலோ அல்லது தவறுகளை களைவதற்குச் சண்டித்தனம் பண்ணினாலோ, நமது தவறுகளைக் களைவதற்கு ஆண்டவர்மாற்றுவழிகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அடுத்தவர்களது பிரசங்கத்தின் வாயிலாக ஆண்டவரது வசனம் வல்ல சம்மட்டியாக வெளிப்பட்டு நம்மை அடித்து நொறுக்க ஆரம்பித்துவிடும்.

வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே (சங் 119:9).

உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும், உம்முடைய வசனமே சத்தியம் (யோ 17:17).

5. நமது இருதயமே நம் தவறுகளை உணர்த்தும்:
நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடையஇருதயத்தைப் பார்க்கிலும் பெரியவராயிருக்கிறார் (1யோ 3:20). நமது தவறுகளை நமக்கு உணர்த்துவதற்கு ஆண்டவர் உபயோகப்படுத்தும் இன்னொரு உபகரணம் (Instrument) நமது மனசாட்சி. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் - என்ற பழமொழி இதற்கு ஒருசாட்சி. பல சந்தர்ப்பங்களில் யாருமே நம்மைப் பார்க்காதபோது நமது தனிமையில் நமது மனசாட்சி படும் பிரசவ வேதனைகளை மனசாட்சி நிமித்தம் நாம் வாதிக்கப்படும் காட்சிகளை யாராலும் பார்க்கமுடியாது. மனசாட்சியை கேமரா மூலம் காவல்துறையினர் படம்பிடிக்க முடியுமானால் இன்றைக்கு நீதிமன்றங்களே அவசியமில்லாமற் போய்விடும். நமது சரீரத்தில் ஓடும் இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதற்கு ஆண்டவர் நமது இருதயத்தில்தமணி என்ற நரம்பு உறுப்பை வைத்திருக்கிறார். நாம் சுவாசிக்கும் காற்றைச் சுத்தப்படுத்த நுரையீரலைவைத்திருக்கிறார். இதுபோல நமது சரீரத்தில் ஏற்படும் பல கோளாறுகளை, தவறுகளைச் சரிசெய்வதற்கு ஆண்டவர் பல உறுப்புகளை நமது சரீரத்திற்குள்ளேயே உண்டாக்கி, இத்தவறுகள் அனைத்தும் தானாகவே களையப்பட்டு சரி செய்துகொள்ளும் ஒரு இயந்திரத்தை (Self Correcting Mechanism) நமது சரீரத்திற்குள்ளே வைத்திருக்கிறார். அதுபோல செயல்படும்படியாகத்தான் மனிதன் தான் செய்யும் தவறுகளை, பாவங்களைச் சரிசெய்யும் நோக்கத்தோடுதான் இந்த மனச்சாட்சியையும் ஆண்டவர் மனிதனுக்குள் சிருஷ்டித்தார். ஆனால் மனிதன் இந்த மனச்சாட்சியை ஒரு பொம்மையாக, கைப்பாவையாக மாற்றிவிட்டான். ஒரு மனிதன் உலகம் முழுவதையும் ஏமாற்றலாம். ஆனால் அவனது மனச்சாட்சியை ஏமாற்றமுடியாது.

ஆண்டவர் மனிதனைச் சிருஷ்டித்தபோது அவனுடைய மனுஷீகத் தன்மையுடன் தமது தெய்வீகத் தன்மையையும் கலந்து உருவாக்கினார். மனுஷனுக்குள் ஆண்டவர் தனது தெய்வீகத் தன்மையில் கொஞ்சத்தை கடன் கொடுக்க எண்ணி, அவனுக்குள் மனச்சாட்சி என்ற தனது தெய்வீக முத்திரையைப் பதித்துவிட்டார். வெளி உலகிற்கு அவன் பச்சோந்தியைப்போல பல வேஷங்களைப் போட்டாலும், அந்த மாறுவேடங்கள் வெளி உலகிற்குத்தான். ஆனால் அவனது உண்மையான சுயரூபம் என்ன என்பது அவனது மனச்சாட்சிக்கு நன்கு தெரியும். மற்றவர்களை ஏமாற்றலாம். முடிந்தால் உலகத்தையே ஏமாற்றலாம். ஆனாலும் அவனது உண்மையான மனச்சாட்சியை ஒரு மனிதனால்கூட ஏமாற்றவே முடியாது. இந்த மனச்சாட்சி என்பது விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள Black Box-போல, விமானம் விபத்துக்கு உள்ளாகிவிட்டால், இந்த Black Box-ற்குள் விபத்திற்கு சற்றுமுன் என்னென்ன நடந்தது என்பதை அது பதிவு செய்து வைத்திருக்கும், அதை யாராலும் தொடமுடியாது. விபத்திற்குப்பின்பு அதை எடுத்து அதற்குள் பதிவுசெய்யப்பட்டுள்ள விஷயங்களின் அடிப்படையில் விசாரணை நடக்கும். அதுபோல ஆண்டவர்கூட ஒவ்வொரு மனிதனையும் நியாயம் விசாரிக்கும்போது, ஒவ்வொரு மனிதனுடையமனச்சாட்சி - என்ற Black Box-ஐ வைத்துக்கொண்டு விசாரணை நடத்துவாரோ என்று நான் யோசிக்கிறேன். நமது மரணத்திற்குப்பின்பு, அந்த மனிதன் என்ற விமானத்திற்குள் இருந்த மனச்சாட்சிஆண்டவரது கரத்தில் ஒப்படைக்கப்படும் என்று நம்புகிறேன்.

விபச்சாரத்தில் ஈடுப்பட்ட ஒரு பெண்ணை கையும் களவுமாகப் பிடித்து பரிசேயரும், சதுசேயரும் இயேசுவினிடத்தில் கொண்டு வருகிறார்கள். இந்த பெண்ணைப்பற்றி என்ன சொல்லுகிறீர்? என்று தன்னைக் கேள்வி கேட்டு நச்சரித்த அந்த மனிதர்களைப் பார்த்து இயேசு, உங்களில் பாவம் இல்லாதவன் முதலில் இவள்மேல் கல்லெறியட்டும் என்று கூறுகிறார். இந்த வார்த்தையைக் கேட்டவுடனே, அவர்களது மனச்சாட்சியால் குத்தப்பட்டு பெரியோர் தொடங்கி சிறியோர்வரை ஒவ்வொருவராக அந்த இடத்தைவிட்டுக் கடந்து போய்விட்டார்கள் (யோ 8:3-9). இந்த சம்பவத்திலும் ஒவ்வொரு மனிதனும்தனது மனச்சாட்சியினால் கடிந்துக்கொள்ளப்பட்டு, தனது தவறுகளை உணர்ந்துபோய்விட்டார்கள்என்பது குறிப்பிடத்தக்கது.

நாபால் இருதயம் வாதிக்கப்பட்டது:
நாபால் தான் தாவீதிற்கு செய்நன்றி மறந்த துரோகச்செயலை எண்ணி எண்ணி, அவனது மனம்அவனைப் பத்து நாட்களாக வாதித்தது. அவனது இருதயம் அவனை வாதித்த காரணத்தினால் அவன் இறுதியாக செத்துப்போனான் (1சாமு 25:38). இச்சம்பவத்தில் இன்னொரு உண்மையையும் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். இந்த நாபால் தனது இருதயத்தில், தான் தாவீதிற்குச் செய்தது தவறு என்று இவன் உணர்ந்தபோது, இவன் என்ன செய்திருக்கவேண்டும்? எழுந்து தாவீதினிடத்திற்குச் சென்று,என்னை மன்னியும் என்று அவனிடம் மன்னிப்புக் கேட்டிருந்தால், நிச்சயமாகத் தாவீது அவனை மன்னித்திருப்பான். அவன் செத்திருக்கமாட்டான். அதற்கு மாறாக அவனது இருதயத்தைக் கடினப்படுத்தி, கல்லாக மாறியபோது அவன் மாரடைப்பினால் செத்துப்போனான். சிலருக்கு தன் குற்ற மனச்சாட்சியினால் வாதிக்கப்பட்டு என் மனைவிக்கு அல்லது என் புருஷனுக்கு துரோகம் செய்துவிட்டேனே என்று கவலைபட்டு அதனால் மாரடைப்பு ஏற்பட்டு மரித்தவர் பலர். இதுபோலவே, நாம் சில தவறுகளைச் செய்த பின்பு, சில நாட்கள் கழித்து நாம் செய்தது தவறு என்று நமது இருதயம் கடிந்துக்கொள்ளுமானால், உடனே நாம் எழுந்து சென்று யாரிடம் தவறு செய்தோமோ அவர்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்கக்கூடாது. இதை விரைவில் செய்யவேண்டும். அதை நாம் செய்யத் தவறும்போது, அடிக்கடி கடிந்துக்கொள்ளப்பட்டும் தனது இருதயத்தைக் கடினப்படுத்துகிறவன், சடுதியில் சகாயமின்றி நாசமடைவான். (நீதி 29:1) என்ற வேதவாக்கியம் நம்மில் நிறைவேறிவிடும்.சடுதி மரணம் ஜாக்கிரதை! இயேசுவே என்று கூப்பிடக்கூட நேரம் கிடைக்காது. சடுதி மரணம் என்று வேதம் எச்சரிக்கிறது. ஜாக்கிரதை! இதுதான் நாபாலின் வாழ்க்கையிலும் நடந்துவிட்டது. அவனது இருதயம் கல்லைப்போலாகிச் செத்துவிட்டான். அதாவது அவனுக்கு இருதய மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்டு இறந்துவிட்டான். இப்படிப்பட்டவர்களின் மனச்சாட்சியை சூடுண்ட மனச்சாட்சி என்று வேதம் கூறுகிறது. (1தீமோ 4:1). அதாவது திருந்துவதற்கு மனமில்லாமல் ஆண்டவரிடத்தில் சூடு வாங்கியவர்கள். அதற்கு மாறாக நமது மனச்சாட்சி கடிந்துகொள்ளப்பட்டு (யோ 8:9) பின்பு நமது தவறுகளைத் திருத்திக்கொண்டு நல்மனசாட்சியுள்ளவர்களாய் (அப் 23:1) வாழ நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

செய்தி சுருக்கம்:
நமது தவறுகளை நாம் அடையாளம் கண்டுபிடித்து, அதை திருத்திக் கொள்ளவேண்டும் என்ற செய்தியை இதுவரை சிந்தித்தோம். இதில் 5 வழிகளைப்பற்றி ஆராய்ந்தோம்.

முதலாவது, நமது தவறுகளை நாம் அறிந்துக்கொள்ளும் விருப்பம் நமக்கு இருக்கவேண்டும்.

இரண்டாவதாக காலமும் நமது வயதும் நமது தவறுகளை எடுத்துச் சொல்லும் என்பதை மறந்துவிடாதீர்கள். முதியோரின் ஆலோசனைக்குச் செவிமடுக்க உங்களை ஒப்புக்கொடுங்கள். நீங்கள் வாலிபராக அல்லது வயதில் சிறியவராக இருப்பின், உங்கள் தவறுகளைத் தவிர்க்க, உங்களது பெற்றோரின் ஆலோசனையைக் கேளுங்கள். வாலிபர்களின் ஆலோசனையைக் கேட்டு ராஜ்ஜியத்தையே இரண்டாகப் பிரித்த ரெகொபெயாம்போல நீங்களும் போய்விடவேண்டாம்.

மூன்றாவதாக உங்களது தவறுகளை அடையாளம் கண்டுபிடிக்க உதவும் உபகரணம் உங்களோடு இருப்பவர்கள், உங்களோடு பழகுபவர்கள், உங்களது சூழ்நிலைகள், பிலேயாமின் காலை கழுதை சுவற்றில் நசுக்கியதை மறக்கவேண்டாம். சூழ்நிலையின் மூலம் வரும் தடைகளில் எது ஆண்டவர் போடும் தடை, எது பிசாசு போடும் தடை என்று பகுத்தறியப் பழகுங்கள். நெகேமியா அலங்கத்தைக் கட்டியபோது சூழ்நிலைகள் பயங்கரத் தடையாக இருந்தது. இப்படிப்பட்ட தடைகள் போலித்தடைகள் - பிசாசின் தடைகள், ஆனால் பிலேயாம் இஸ்ரவேல் மக்களை சபிக்கச் சென்றபோது கழுதையின் மூலமாக வந்த தடை பிலேயாமிற்கு அவனது தவறுகளை உணர்த்துவதற்கு ஆண்டவர் அனுப்பிய உண்மையான தடை.

நான்காவதாக ஆண்டவர் வசனத்தை நாம் வாசிக்கும்போது ஆண்டவர் நமது தவறுகளை உணர்த்துவார். இயேசு தன்னிடம் சொன்ன வார்த்தைகளை நினைவு கூர்ந்து, பேதுரு மனங்கசந்து அழுதான். கர்த்தருடைய வார்த்தை இருபுறமும் கருக்குள்ள பட்டயம், வல்ல சம்மட்டி.அடுத்தமுறை வேதத்தை வாசிக்கும்போது, ஆண்டவரே, என் தவறுகளை எனக்கு வசனத்தின்மூலம்உணர்த்தும் என்று ஜெபியுங்கள்.

கடைசியாக உங்கள் தவறுகளை அறிவதற்கு வேறு எங்கும் அலையாமல், உங்களுக்குள்ளே குடியிருக்கும் மனச்சாட்சியைக் கேளுங்கள். உங்கள் மனச்சாட்சி நீங்கள் செய்யப்போகும் ஒரு செயலையே தவறு என்று சிவப்பு வெளிச்ச அடையாளத்தைக் காண்பித்தால் அதைச் செய்யாதீர்கள். அப்படிப்பட்ட நல்மனச்சாட்சியை உங்களுக்கு கொடுக்கும்படியாக ஆண்டவரிடத்தில் கேளுங்கள்.

நம்மைநாமே நிதானித்து அறிவோமானால் நாம் நியாயந்தீர்க்கப்படமாட்டோம் (1கொரி 11:31).

நான் சில சமயத்தில் முட்டாளாக நடந்திருக்கிறேன் என்று ஒப்புக்கொள்கிறவர்கள்தான் உண்மையான ஞானிகள். நம்முடைய தவறுகள் நமது ஆசிரியர்களாக மாற இடம் கொடுங்கள்.

தன் பிழைகளை உணருகிறவன் யார்? (சங் 19:12).

என் சகோதரரே, நாம் எல்லோரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம் (யாக் 3:1,2).

நான் எதிலே தவறினேனோ அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள். எனக்கு உபதேசம் பண்ணுங்கள். (அப்பொழுது) நான் மவுனமாயிருப்பேன். (யோபு 6:24).


சத்திய வார்த்தை

- S.பன்னீர் செல்வம்

free web counter