
அமெரிக்காவின் தெற்கிலுள்ள ஒரு மாகாணம் டெக்சாஸ். இம்மாகாணத்தின் ஆளுநராக இருக்கும் ரிக் பெர்ரி (Rick Perry) கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்ற விரும்பும் ஒரு நல்ல கிறிஸ்தவர். இவர் சமீபத்தில் ஆகஸ்டு 6-ம் தினத்தில் தேசத்துக்காக உபவாசம் இருந்து ஜெபிக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இவர் தன் அறிக்கையில் கூறும் போது, “தேசம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது அத்தேசத்தின் அதிகாரிகள் தேவனிடத்தில் தங்களை தாழ்த்தி ஒப்புக்கொடுத்து தேசத்தை நல்ல திசையில் நடத்த ஞானத்தையும் தேவ இரக்கத்தையும் பெற்றுக் கொள்ளவேண்டும். யோவேல் 2-ம் அதிகாரம் 15,16ம் வசனங்கள் போல நான் தேவனிடத்தில் விண்ணப்பிக்கவும் உபவாசிக்கவும் நான் உங்களை அழைக்கிறேன். அந்த வசனங்கள் இப்படியாக சொல்கிறது,சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள். ஜனத்தைக் கூட்டுங்கள், என்கிறது. இயேசு யோவான் 11:41-42-ல் எல்லாருக்காகவும் பொதுவெளியில் விண்ணப்பித்தது போல நாமும் நம் விசுவாசத்தை வெளிப்படுத்தவேண்டும்” எனக்கூறி ”A Day of Prayer and Fasting for Our Nation” -க்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

யாத்திராகமம் 15:1 கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.
II கொரிந்தியர் 2:14 கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
http://governor.state.tx.us/news/proclamation/16247/


http://www.thewayofsalvation.org/2011/08/6.html
2 comments:
.............
கீர்த்தனைகள் MP3 (keerththanaikal mp3)
.......
கீர்த்தனைகள் MP3 (keerththanaikal mp3)
Post a Comment